பூட்டை உடைத்து, பொருட்களை எடுத்து சத்துணவு சமையல்: போராட்டத்தை முறியடிக்க அரசு தீவிரம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க, அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், நேற்று முதல், காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளது. இப்போராட்டத்தை சமாளிக்க, அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. 
 
 
வெளி ஆட்களைக் கொண்டு, சத்துணவு சமைத்து, மாணவ, மாணவியருக்கு வழங்க ஏற்பாடு செய்யும்படி, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர்கள் சமையலர்களை ஏற்பாடு செய்தனர். சமையல் செய்ய வந்தவர்களுக்கு, 185 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில், சத்துணவு ஊழியர்கள், உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையை பூட்டி, சாவியை எடுத்து சென்று விட்டனர். எனவே, பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் எடுக்கப்பட்டன.


இதுகுறித்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், முன்னாள் பொதுச் செயலர் மேகநாதன் கூறியதாவது: கடைநிலை அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும். கடும் புகையில் வாடி, ஓய்வு பெறும்போது, குறிப்பிட்ட தொகை, ஓய்வூதியம் வழங்கினால், மேற்கொண்டு வாழ எளிதாக இருக்கும் என, அரசை வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கைகளை பரிசீலிக்கவே, அரசு தயங்குகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
 
 
'போராட்டம் தேவையற்றது':
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சத்துணவு திட்டத்தின் கீழ், முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள, 54.63 லட்சம் குழந்தைகளுக்கு, 42,619 சத்துணவு மையங்கள் மூலம், கலவை சாதம் வழங்கப்படுகிறது. இதற்கென, 1.28 லட்சம் பணியாளர், சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு அரசு பல சலுகைகளை அளித்து வருகிறது. இத்திட்டத்திற்காக, கடந்த நிதியாண்டில், 1,412.88 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஒரு சத்துணவு ஊழியர் சங்கம், நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை துவக்கி உள்ளது. இதுகுறித்து, கலெக்டர் மற்றும் இதர அலுவலர்கள் மூலம், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்டங்களில் உள்ள, அனைத்து சத்துணவு மையங்களும், நேற்று திறக்கப்பட்டு, சத்துணவு சமைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்துள்ள நிலையில், மற்ற வகுப்பு குழந்தைகளுக்கு, ருசியான கலவை சாதம் வழங்கப்பட்டது. குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்பட்ட, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் போராட்டம் தேவையற்றது. இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை


த.அ.உ.ச 2005 - புதிய ஓய்வூதிய திட்டத்தில் (CPS) உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid pension) மற்றும் பணிக்கொடை (Gratuity) வழங்கும் மத்திய அரசின் கடிதம்


அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிப்பு

தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் நிதியாண்டில் வரவு-செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் குறித்த ஒதுக்கீடு ரூ.41, 215.57 கோடியாகவும், ஓய்வூதியம், இதர ஓய்வுக்கால பலன்கள் குறித்த செலவினத்துக்கான ஒதுக்கீடு ரூ.18,678.6 கோடியாகவும் இருக்கும்.
இது வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் சம்பளம்-ஓய்வூதியம் குறித்த செலவுகள்மொத்த வருவாய்ச் செலவுகளில் 40.65 சதவீதமாகும். அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய செலவினங்களின் காரணமாக, வரும் நிதியாண்டிகளில் இதன் வளர்ச்சி விகிதம் முறையே 11, 25 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. வரும் 2017-18-ஆம் ஆண்டு முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.

குறுவள மைய பயிற்சி பயிற்சி நாட்கள்- ஈடுசெய் விடுப்பு அனுமதி -அரசாணை-62 குறித்த ஓர் விளக்கம்


கல்விதுறை செயலரை மாற்ற வேண்டும்; ஜேக்டோ பேரணியில் வலியுறுத்தல்


Popular Posts