ஈடுசெய் விடுப்பு - தகுதியுள்ள விடுப்பு அனுபவிக்க பட்டியல்


ஏப்ரல் 15 முதல் வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. சங்க மாநில செயலாளர் பேயத்தேவன் கூறியதாவது: உணவு சமைப்பதற்கான முன் மானியம் வழங்குவதில் கால தாமதம் செய்வதால் கடன் வாங்கி உணவு சமைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை ஒரு குழந்தைக்கு ரூ. 1.70 பைசா என்றும்,

6 முதல் 10 வகுப்பு வரை ரூ. 1.80 பைசாவும் வழங்குகின்றனர். பருப்பு சமைக்கும் நாட்களில் ரூ. 1.30, 1.40 என்று அனுமதிக்கப்படுகிறது. இதனை ரூ. 5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 3 கிராம் எண்ணெய் என்பதை 7 கிராமாக உயர்த்த வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் வழங்கப்படும் உருளைக்கிழங்கு ஒரு குழந்தைக்கு 16 பைசா அனுமதிக்கப்படுகிறது. 100 குழந்தைகளுக்கு ரூ. 16 வழங்கப்படுகிறது. அப்படியென்றால்ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.8 க்கு வாங்க வேண்டும். இது நடைமுறை சாத்தியமில்லாதது. ஒரு மாணவனுக்கு 60 பைசா உயர்த்த வேண்டும். தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை நிரப்பவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், மறியல், அமைச்சர் சந்திப்பு என எல்லாம் செய்து பார்த்தும் பலனில்லை. ஏப்ரல் 4 ல் சென்னையில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது. அதன் பிறகு ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஜாக்டோ முடிவு

சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம்  நடத்த ஜாக்டோ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச்30ம் தேதி ஜாக்டோ மீண்டும் கூடவுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களில் தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற இயக்குனர் உத்தரவு


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் பணிநீக்கத்துக்கு தடை


அரசாணை எண் :62 நாள்: 13.03.2015 தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சிக்கான ஈடுசெய் விடுப்பிற்கான அரசாணை வெளியீடு


வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால்...: உதவிபெறும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

வரும் 31ம் தேதிக்குள், வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும் என, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான வருமானவரிக் கணக்கை, இம்மாத இறுதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, வருமானவரித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப் பாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம், வருமானவரிக் கணக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
ஆனால், தனியார் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தங்கள் வருமானவரிக் கணக்கை, இன்னும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் வருமானவரித் துறையில் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், கடைசி கட்ட பரபரப்பை தவிர்க்க, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம், எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அனைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், தங்கள் வருமானவரிக் கணக்கை, வரும் 31ம் தேதிக்குள், வருமானவரித் துறையில் தாக்கல் செய்து, நகலை, பள்ளிக்கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும், 20 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையை, சம்பந்தப்பட்ட பள்ளிகளே, வருமானவரித் துறையில் செலுத்த வேண்டும். இதில், கல்வித்துறை தலையிடாது என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அக இ - தொடக்க நிலை / உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்து கலந்துரையாடல்" என்ற தலைப்பில் 14.03.2015 அன்று குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.


ஜேக்டோ - 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.03.2015 அன்று மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி



2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா?

உண்மை நிலவரம்
2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா???

நண்பர்களே.. இவர்கள் அனைவரும் நவம்பர் 2001ல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் D.t.ed பதிவு செய்திருந்தவர்கள். ஜனவரி 2002ல் கரூர் மாவட்டத்தில் இவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு அரசியல்வாதிகளின் துணையுடன் பணிநியமனம் வழங்கப்பட்டது.
 
இவர்கள் அனைவரும் SC, MBC பிரிவினர். இவர்கள் அனைவருக்கும் பின்னடைவு பணியிடங்கள் இருந்தும் பணிநியமனம் மறுக்கப்பட்டது. மேலும் ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் 11.1.2002ல் நடத்தப்பட்ட பணிநியமணத்திலும் இவர்களுக்கு பணியிடங்கள் இருந்தும் சான்றிதழ்கள் மட்டும் சரிபார்க்கப்பட்டு பணிநியமனம் மறுக்கப்பட்டது. பெரம்பலூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அன்றைய நாளில் பணிநியமனம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பணி வழங்கப்பட்டு இருந்திருந்தால் காலமுறை ஊதியத்தில் பழைய ஓய்வூதியத்தில் நியமனம் செய்யப்பட்டிருப்பர். இதனை தொடர்ந்து 2004ல் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை தொடர்ந்து நியமனம் பெற்ற நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 2002ல் நியமனம் வழங்கப்பட்டிருந்தால் ஓய்வூதியம் கிடைத்திருக்கும்.

இவர்கள் அனைவரும் கரூர் மாவட்ட பதிவுதாரர்கள். மற்ற மாவட்டங்களுக்கு மாறுதல்கள் பெற்று சென்றதால் அம்மாவட்டத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

10 ஆயிரம் அரசு ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற திட்டம்


தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு




Popular Posts