அரசு ஊழியர்களின் விடிவெள்ளி :


-க.ராஜ்குமார்

அப்பன் - பரதன், தமிழக அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்கள். 1970-ல் நடைபெற்ற என். ஜி.ஓ.யூனியன் தேர்தலில் தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர் சங்கத்தை சேர்ந்த தோழர் எம்.ஆர்.அப்பன் மற்றும் தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த ஜே.எஸ்.பரதன் ஆகியோர் சிவ இளங்கோவுடன் சேர்ந்து ஒரு அணியை அமைத்து தேர்தலில், அரசுக்கு விசுவாச மான தேவநாதன் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். சிவ இளங்கோ தலைவராகவும். எம்.ஆர் அப்பன் பொருளாளராகவும், புறநகர் துணைத்தலைவராக ஜே.எஸ். பரதனும் தேர்வு செய்யப்பட்டனர்.

என்.ஜி.ஓ.யூனியனில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அன்றைய முதல்வர் கருணா நிதி விரும்பவில்லை. எனவே தலைவ ராக தேர்வு செய்யப்பட்ட சிவஇளங்கோ, அரசுடன் இணக்கமாகவே இருக்க விருப் பப்பட்டார். ஆனால் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்அப்பன் மற்றும் பரதன் போன்ற வர்கள் இடதுசாரிக் கண்ணோட்டத் துடன் செயல்படுபவர்கள் என ஆட்சி யாளர்கள் கருதுவதால் இவர்களை கழட்டிவிட அவர் திட்டமிட்டார்.

என்.ஜி.ஓ. மாநாடு- சேலம்

1972-ம் ஆண்டு சேலத்தில் நடை பெற்ற மாநாட்டில் அன்றைய முதலமைச் சர் கலைஞர் கலந்துகொண்டார். இம் மாநாட்டில் கலந்துகொண்ட ஆயிரக் கணக்கான ஊழியர்கள், தங்களுக்கு ஊதியம், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என முழக்கமிட்டு பேரணி யில் வந்தனர். மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களில் கோரிக்கைகளை வலி யுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என பல மாவட்டங்கள் வலி யுறுத்தின. இவைகளுக்கு காரணம் எம்.ஆர்.அப்பனும், பரதனும்தான் என என்.ஜி.ஓ. யூனியன் தலைமை கருதியது. எனவே இவர்கள் இருவரையும் சங்கத்தி லிருந்து நீக்கிவிட தீர்மானித்தது.

இந்நிலையில் எம்.ஆர்.அப்பன் பொதுச்செயலாளராக இருந்த ஐ.டி.ஐ சங் கத்தில் துறைவாரியான கோரிக்கைக ளுக்காக வேலை நிறுத்தம் 1972 டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு என்.ஜி.ஓ.யூனி யன் ஆதரவு கிடையாது என அறிவித்த சிவஇளங்கோ, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.ஆர். அப்பனை நீக்கிவிட்டார். அதனை தொடர்ந்து என்.ஜி.ஓ.யூனியன் பொருளா ளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆதரவாக இருந்த ஜே.எஸ்.பரதனும் மாநில துணைத்தலைவர் பொறுப்பி லிருந்து நீக்கப்பட்டடார்.

நடவடிக்கைக் குழு

என்.ஜி.ஓ.யூனியனிலிருந்து நீக்கப்பட் டவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச் சியில் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ஏ.கூடலிங்கம் தலைமையில் என். ஜி.ஓ.யூனியன் நடவடிக்கைக் குழுவை துவக்கி செயல்பட்டனர். இதன் விளை வாக அரசு கடுமையான நடவடிக்கை களை மேற்கொண்டது.

தோழர் எம்.ஆர்.அப்பன் அவர்களை யும் ஐ.டி.ஐ சங்கத்தின் சில தலைவர் களையும் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 311 2(ஏ) (பி) (சி) -ன் கீழ் பணிநீக்கம் செய்ய அன்றைய கலைஞரின் அரசு ஆளு நருக்கு பரிந்துரை செய்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, ஆளுநர் அந்த கோப்பை கிடப்பில் போட்டு விட்டார். வருவாய்த்துறை அலுவலர் சங் கத்தின் மாநிலத் தலைவரும் நடவடிக் கைக் குழுவின் தலைவருமான மதுரை ஆர்.ஏ.கூடலிங்கம் ஓய்வு பெறும்வரை யிலும் (1975) தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தில் கண்காணிப்பாளராக பணி யாற்றிவந்த டி.என்.எஸ் என்கிற தோழர் சீனிவாசன், தட்டச்சராக பணி இறக்கம் செய்யப்பட்டார். நடவடிக்கைக் குழுவின் சென்னை மாவட்ட தலைவராக இருந்த கே.இரங்கநாதன் கட்டாய ஓய்வில் அனுப் பப்பட்டார். இதுபோல தமிழகம் முழு வதும் பல தோழர்கள் அரசால் பழிவாங் கப்பட்டனர். எனினும் அச்சமின்றி தோழர்கள் இயக்கங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

பொது வேலை நிறுத்தம் - 1978

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன், என்.ஜி.ஓ. யூனியன் தலைமை, ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட் டத்தை நடத்தியது. சிவ இளங்கோ திமுக அனுதாபி என்ற காரணத்தினால் அன் றைய முதல்வர் எம்.ஜி.ஆர். போராட்டங் களை அடக்க முயன்றார். 1978-ம் ஆண்டு ஜூன் 5 அன்று கோட்டையை நோக்கி சென்ற பேரணியை காவல்துறை யினர் பலப்பிரயோகம் செய்து தடுத்து நிறுத்தியதால், அதே இடத்தில் சிவ இளங்கோ வேலை நிறுத்தத்தை அறிவித் தார். ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த வேலை நிறுத்தப் போராட் டத்தில் நடவடிக்கைக் குழுவும் கலந்து கொண்டது. எனினும் சந்தர்ப்பவாத தலைமை இந்த போராட்டத்தின் இறுதி யில் அரசிடம் சரண் அடைந்தது. போராட்டக் காலத்தில் நடவடிக்கைக் குழுவின் நடவடிக்கைகள் தமிழகம் முழு வதும் அரசு ஊழியர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனை தொடர்ந்து நடந்த சங்க தேர்தலில் நடவடிக்கைக் குழு பங்கேற் பது என்ற முடிவினை எடுத்தது. நடவடிக் கைக் குழுவில் ஏற்பட்ட கருத்து வேறு பாடின் காரணமாக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மாநில தேர்தலில் தோல்வியை தழுவினாலும், வேலூர், கோவை, மதுரை போன்ற மாவட்டங் களில் நடவடிக்கைக் குழுவினர் வெற்றி பெற முடிந்தது. வெற்றி பெற்ற மாவட்டங் களில் நடவடிக்கைக் குழுவினரின் நடவடிக்கைகள் ஊழியர்களை ஈர்ப்பதை கண்ட சிவஇளங்கோ, 1984ம் ஆண்டின் துவக்கத்தில் இம்மாவட்டங்களில் சங்க தலைவர்களை நீக்கினார். இப்படி நீக்கப் பட்டவர்கள் வேலூரில் 01-04-1984-ல் கலந்து ஆலோசனை செய்து அரசு ஊழியர் சங்கத்தை துவக்க முடிவு செய்தனர்.

மதுரையில் அமைப்பு மாநாடு

மதுரையில் 1984-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதியன்று நடைபெற்ற மாநாட்டில் அரசுஊழியர் சங்கம் உதய மானது. மதுரையில் நடைபெற்ற மாநாட் டில் அரசுஊழியர் சங்கத்தின் அமைப்பா ளராக தோழர் எம்.ஆர்.அப்பன் அவர் களும். என்.எல்.சீதரன் பொருளாளராக வும் 21 தோழர்களைக் கொண்ட மாநில நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. தலைவராக கே.கங்காதரன் தேர்வு செய் யப்பட்டார். சங்கத்தின் அமைப்புச் சட்ட விதியை உருவாக்கிட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் தோழர் எப்.எம்.குத்புதீன் தலைமை யில் ஒரு குழு அமைக்கப்பட்டது

பத்தாவது மாநில மாநாடு

அரசு ஊழியர் சங்கத்தின் 10-வது மாநிலமாநாடு, கிருஷ்ணகிரியில் நவம்பர் 17,18,19 ஆகிய தேதிகளில் நடைபெற வுள்ளது. தமிழ்நாடு அரசு மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், நடைபெறும் இம்மாநாடு மக் கள் பணியாளர்களின் துயர்துடைக்க வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த 27 ஆண்டுகாலமாக செயல்பட்டுவரும் அரசுஊழியர் சங்கம், போராட்டப்பாதை யில் முன்னேறி வரும் சங்கமாகும்.

தாடியுடன் பிறந்த குழந்தை

1990-ல் கோவையில் நடைபெற்ற அகில இந்திய மாநில அரசுஊழியர் சம் மேளனத்தின் 7-வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற வெளி மாநிலத்தை சேர்ந்த அரசுஊழியர் சங்கங்களின் தலைவர்கள், 1984-ல் துவக்கப்பட்ட அரசுஊழியர் சங்கம் ஒரு குறுகிய காலத் தில் அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்துவதை கண்டு வியப்பு தெரிவித் தனர். இதுகுறித்து அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் அன்றைய பொதுச் செயலாளர் சுகுமால்சென் குறிப் பிடுகையில், தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் துவங்கி ஆறு ஆண்டுகளாயினும் அதன் முன்னோடிகள் தமிழக அரசு ஊழியர் இயக்கங்களில் நெடுங்காலம் பணியாற்றி நீண்ட அனுபவம் பெற்றவர் கள். அந்த அனுபவங்களின் முதிர்ச் சியை தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் பெற்றுள்ளது. அரசுஊழியர் சங்கம் தாடியுடன் பிறந்த குழந்தை என பாராட்டிப் பேசினார்.

அரசுஊழியர்களின் விடிவெள்ளி

அரசுஊழியர் சங்கம் தோன்றிய பிறகு தான் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைமை மேம்படுத்தப்பட்டது. பணிப் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டது. தொகுப்பூதியம் பெறும் சத்துணவு ஊழி யர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வரு வாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத் தர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் என மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஊழியர்களை ஒன்றுதிரட்டி போராட் டங்கள் நடத்தியதன் மூலமாக அவர்க ளுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் ஊதிய மேம்பாடு கிடைத்தது. அரசுஊழியர் சங்கம் இன்றும் புதிய பென் சன் திட்டத்தை எதிர்த்தும், காலிப் பணி யிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வருகிறது. அரசு ஊழியர் சங்கத்திற்கு அரசின் அங்கீகாரம் வழங்கிட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அரசு ஊழியர்களின் உரிமை களுக்காக போராடும் அரசு ஊழியர் சங்கம், தமிழக அரசுஊழியர்களின் அங்கீ காரத்தை பெற்றுள்ள சங்கமாக, விடி வெள்ளியாக திகழ்கிறது.

07.11.2011 மாநில செயற்குழு முடிவுகள்:

முன் பருவ பாடத்திட்டம் & மதிப்பீட்டு முறை: இயக்குனர் செயல்முறைகள்: 4914/11.11.11

TRB

12000 மக்கள் நலப் பணியாளர்களை தமிழக அரசு டிஸ்மிஸ்


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது


12000  மக்கள் நலப் பணியாளர்களை தமிழக அரசு டிஸ்மிஸ் செய்துள்ளதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,  விருதுநகர் மாவட்டக்கிளை  வன்மையாக கண்டிக்கிறது.

நவம்பர்-8 விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டம்:

நவம்பர்-8 விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பி.எஸ்.என்.எல்.யு, எல்.ஐ.சி ஆகிய சங்கங்கள் இன்று மாலை 5 மணிக்கு விருதுநகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 102 பேர் கலந்து கொண்டனர்.

03.11.2011 விருதுநகர் மாவட்ட ஆர்ப்பாட்டம்:

இடம்:
DEEO அலுவலகம்.

தலைமை:
வை.ச.வைரமுத்து அவர்கள்

கண்டனவுரை:
ஸ்ரீ.சங்கர்கணேஷ் அவர்கள்
ஜி. பாலசுப்ரமணி அவர்கள்

நன்றியுரை:
அ.ரமேஷ் குமார் அவர்கள்

பங்கேற்பு:

80 ஆசிரியர்கள்








ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் அரசாணை: 170 நாள் : 2.11.2011

நவம்பர் 8 ஆர்ப்பாட்டம் கடிதம்:

ஆசிரியர் / ஒய்வு பெற்ற ஆசிரியர் குறைதீர் கூட்டங்கள்:

Popular Posts