தொடக்கக் கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தொடககக்கல்வி இயக்குனர் உத்தரவு.



தொடக்கக் கல்வி - பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர் இடை நிலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டவரின் விவரம் பதவி உயர்விற்காக அரசு உத்தரவு


பிறப்பு சான்றிதழில் உள்ள பிறந்த தேதியினையே மாணவர் சேர்க்கையின் போது பதிவேடுகளில் பதிவு செய்ய தொடக்கக்கல்வி துறை உத்தரவு


பள்ளிக்கல்வி - 2003 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கினால் ஏற்படும் செலவின விவரம் கோரி இயக்குனர் உத்தரவு


பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 15.11.2011 முதல் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசு மாற்றம் செய்து உத்தரவு



CPS திட்டத்தை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் நிதித்துறை செயலாளர் ஜுன் 1ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு



மகப்பேறு விடுப்பு; புதிய வழிகாட்டு நெறிமுறை

பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு அளிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (பயிற்சி) முதன்மைச் செயலாளர் அனிதா ப்ரவீன் அனைத்துத் துறை செயலாளர்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பணியில் நிரந்தரமாக பணியாற்றும் இளம் தாய்மார்களுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால் இந்த விடுப்பினைப் பெற தகுதி படைத்தவர்கள். தாற்காலிகமாக பணியாற்றுவோருக்கும் நிபந்தனைகள் அடிப்படையில் விடுப்பு அளிக்கப்படுகிறது. மகப்பேறு காலத்தில் பாதிப்பு ஏற்பட்டு கரு கலைந்தால், அவர்களுக்கு சராசரியான ஊதியத்துடன் ஆறு வாரங்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்.
இந்த விடுப்புக் காலம் என்பது குறைந்தபட்சம் 12 வாரங்களுக்கும் அதிகபட்சம் 20 வாரங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குழந்தைகள் பிறக்கும் போதே இறந்திருந்தால், அத்தகைய தாய்மார்களுக்கு 90 நாள்கள் வரை மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும். எனவே, இத்தகைய தன்மைகளில் மகப்பேறு விடுப்புகளை துறைத் தலைவர்கள் அளிக்கலாம். மகப்பேறு விடுப்பு தொடர்பாக பல்வேறு முரண்பாடான கருத்துகள் கேட்கப்பட்டுக் கொண்டே இருந்ததால் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுவதாக அனிதா ப்ரவீன் தெரிவித்துள்ளார்.

PAY ORDER FOR SSA HEAD FOR 7979 B.T.ASSISTANT POST



Popular Posts