G.O Ms.No 142 October 14, 2009-அருந்ததியினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு திருத்தப்பட்ட 200 புள்ளி இனச்சுழற்சி முறை வெளியிடப்பட்டது- வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணிநியமனம் - முன்னுரிமை பெற்றவருக்கும், முன்னுரிமையற்றோருக்கும் இடையேயான 1 : 4 என்ற விகிதாச்சாரத்தை இனச்சுழற்சி முறையுடன் கடைப்பிடித்தல் - ஆணை

http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/par/par_t_142_2009.pdf
அரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை

http://www.tn.gov.in/gosdb/gorders/par/pargo_111_2010.pdf

தற்செயல் விடுப்பு விதிகள்






தற்செயல் விடுப்பு

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.





2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10 க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)





3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.





4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).





5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )





6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)





7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.





8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)
சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள் :



சிறப்பு தற்செயல் விடுப்பு

அ) சில சிறப்பு காரணங்களுக்காக இவ்விடுப்பு வழங்கப்படுகிறது. இதனை ஈட்டிய விடுப்பு / ஈட்டா விடுப்புகளுடன் சேர்த்துத் துய்க்கலாம்.

ஆ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்பவரின் கணவருக்கு அறுவை மருத்துவம் நடந்த நாள் முதல் ஏழு நாள்கள் வழங்கப்படும்.

இ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் ஆண் ஆசிரியருக்கு 8 நாள்களும் பெண் ஆசிரியருக்கு 20 நாட்களும் வழங்கப்படும். ஆனால் மகப்பேறு காலத்தில் அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் பெண் ஆசிரியர்க்கு இவ்விடுப்பு கிடைக்காது.

ஈ) நாடளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவோருக்கு 30 நாட்கள் வரையில் இவ்விடுப்பு வழங்கப்படும்.

உ) நாய் கடித்தவருக்கு ஏற்பளிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவம் செய்து கொள்ள இவ்விடுப்பு கிடைக்கும்.

ஊ) ஊர்க்காவல் படையில் பணிபுரிவோருக்கு அப்பணியில் ஈடுபடுத்தப்படும் காலத்திற்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.
வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் :

அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது. (அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 )

ஆ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.

இ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது. (அ.க.எண். 118727 அ.வி. III/88-1 ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)ஈ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது. ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம். (அரசுக் கடித எண். 24686 /அவி III / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)

D.A NEWS

1.7.2006 அகவிலைப்படி ஊதியம் 2%
1.1.2007 அகவிலைப்படி ஊதியம் 6%
1.7.2007 அகவிலைப்படி ஊதியம் 9%
1.1.2008 அகவிலைப்படி ஊதியம் 12%
1.7.2008 அகவிலைப்படி ஊதியம் 16%
1.1.2009 அகவிலைப்படி ஊதியம் 22%
1.7.2009 அகவிலைப்படி ஊதியம் 27%
1.1.2010 அகவிலைப்படி ஊதியம் 35%
1.7.2010 அகவிலைப்படி ஊதியம் 45%
1.1.2011 அகவிலைப்படி ஊதியம் 51%

TN GOVT G.O's TAMIL

TN GOVT G.O's ENGLISH

TN GOVT G.O's TAMIL

UNIVERSITY QUESTIONS

விருதுநகர்  மாவட்ட செயலாளர்  


மொட்டுக்கள்:





















TNPTF GREAT LEADERS

மாநில தலைவர்  திரு.தி.கண்ணன்  அவர்கள் (இடது)


மாநில முன்னாள் பொது செயலாளர் திரு.ந.பர்வதராஜன் அவர்கள்


மாநில பொது செயலாளர் திரு.முருகசெல்வராஜன் அவர்கள் பொறுப்பு

TNPTF VIRUDHUNAGAR: மத விடுப்பு-2011http://4.bp.blogspot.com/-8-OJsOLf...

TNPTF VIRUDHUNAGAR: மத விடுப்பு-2011http://4.bp.blogspot.com/-8-OJsOLf...: "மத விடுப்பு-2011 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgh-BMyZpZowmzi_g0fWqPa74txM3VE-9gHwj133z4MYjjovcncDwovgQaoGasSRhSUZnnsIIstfG5tFwzPuZ-phRUErl-4xLCLXyhKH6FAJmSNbUsp-lU8OcbGt6g7Vq4cAfykzwSY8Ww-/s1600/restricted_leave.JPG"
CPS அடிக்கடி வினவப்படும் வினாக்கள்:
இறந்த அரசு ஊழியர் CPS பெறுவதற்கான ஆணை : 
அறைகூவல்:
"ஸ்தாபனம் இல்லாத போராட்டம்  ஆயுதம் இல்லாத அசட்டுத்தனம் !   போராட்டம்  இல்லாத ஸ்தாபனம் பயன்பாடற்ற போலித்தனம்!!"


இணையதளத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்யலாம்

http://www.dinamalar.com//News_Detail.asp?Id=284739

TN PRIVATE SCHOOLS FEE STRUCTURE

TNPTF BI-LAW

Dual Degree

ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு கால அட்டவணைக்கு மட்டும்

Infermation act answer

உமக்கே எம் முதல் வணக்கம்!!!

நூறு ரூபாய் சந்தா கேட்டால் பரிகசிப்பார்கள்! என்ன செய்தது சங்கம்? என்று எதிர் உரைப்பார்கள்! கூட்டத்திற்கு வா என்றால் கும்பிடு போடுவார்கள்! அலுவலகத்தில் குனியக் குனியக் குட்டுப்படுவார்கள்! எதிர்ப்படும் சங்கத்து காரனிடம் எல்லா அடக்குமுறைகளையும் கொட்டித் தீர்ப்பார்கள்! 'எழுந்து வா' கேட்போம் என்றால் இருகை பற்றி தழுதழுப்பார்கள்! எங்கேயும் வர மாட்டார்கள் எதற்குமே இட மாட்டார்கள்! உட்கார்ந்த இடத்திலிருந்தே உரிமை கேட்பார்கள்! ஆகாத காரியங்களுக்கு அடித்து துவைப்பார்கள்! பெற்றுத் தந்த உரிமைகளை அரசே வழங்கியதாக ஆர்ப்பரிப்பார்கள்! இத்தனையும் இத்தனையும் இமை மூடிச்சகித்து மீண்டும் அவர்கள் முன் மிளிரும் புன்னகையுடன் அடுத்த கட்ட போராட்ட அழைப்போடு போய் நிற்கும் என் இயக்க முன்னணித் தோழர்களே! TNPTF பொறுப்பாளர்களே! உமக்கே என் முதல் வணக்கம்!!! நன்றி: மாநில அமைப்பு - TNPTF

Popular Posts