ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் அரசியல்

சினிமா, விளையாட்டு, இலக்கியம், அரசியல், பத்தி ரிகை என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் செயல்பாட்டுத் திறன்தான் தகவல் அறிவைவிட முக்கியமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகள் மட்டும் விதிவிலக்கு. 
அங்கே ஒருவர் சரியாக பேசத் தெரியாதவராக, திக்குவாயராக, மேடைக்கூச்சம் கொண்டவராக, அந்த கற்பித்தல் கலையில் விருப்பமோ, திறனோ இல்லாதவராக இருக்கலாம். ஆனால், எழுத்துத் தேர்வில் தேறிவிட்டால் அவருக்கு ஆசிரியராகும் தகுதி வந்துவிட்டதென அரசு அறிவித்துவிடுகிறது. இதே முறையை ராணுவத்தில் செயல்படுத்தி வெடிகுண்டு, துப்பாக்கி பற்றிய கேள்விகளுக்கு விடை அளிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து காஷ்மீர் எல்லைக்கு அனுப்பினால் என்னவாகும்?
ஆசிரியரின் அடிப்படைத் தகுதி
ஆசிரியருக்கான அடிப்படைத் திறன்களில் மிக முக்கியமானது பேச்சுத்திறன் – அதாவது, மாணவனின் மனநிலை உணர்ந்து விஷயத்தை விளக்கும் திறன். நெட், ஸ்லெட், டெட் போன்ற தகுதித் தேர்வுகள் வெறும் நினைவுத்திறன் மற்றும் எழுத்துத்திறனைச் சோதிப்பவை. 
விஷய ஞானம் உள்ள ஆனால், அதை வெளிப்படுத்தத் தெரியாத பல ஆசிரியர்களை, மாணவனாகவும் பின்னர் ஆசிரியனான பின்னரும் கண்டிருக்கிறேன். மாணவர்கள் இவர்களது வகுப்புகளைத் தொடர்ந்து புறக்கணிப்பார்கள் அல்லது கவனிக்க மாட்டார்கள். மாணவர்களை உளவியல்பூர்வமாகக் கையாளத்தெரிவது அடுத்த திறன். 70 பேர் கொண்ட வகுப்பைக் கட்டுப்படுத்தி 40 அல்லது 50 நிமிடங்கள் கேட்க வைப்பது, வேலை கொடுத்து செய்ய வைப்பதற்கு ஒரு மேலாளரின் நாசூக்கும், தலைவனின் மன உறுதியும் தன்னம்பிக்கையும் வேண்டும். 
இன்று தகவல்கள் அபரிமிதமாகக் கிடைக் கின்றன. வகுப்பில் பேசப்போகிற விஷயத்தை அதற்கு முன்னரே எளிய வடிவில் இணையத்தில் இருந்து மாணவன் பெற முடியும். இன்றைய காலகட்டத்தில் ஒரு ஆசிரியரின் மதிப்பே பாடத்தை அர்த்தப்படுத்துவதில், புதுக் கோணத்தில், ஆழத்தில் சொல்லித் தருவதில்தான் இருக்கிறது. இந்த மூன்று திறன்களையும் - பேச்சுத் திறன், மேலாண்மைத் திறன், ஆழமாக அர்த்தப்படுத்தும் அறிவுத்திறன் ஆகியவற்றை - இன்றைய எழுத்து வடிவிலான தகுதித் தேர்வுகளால் அளவிட முடியாது. 
தகவல்களை ஒப்பிக்கும் கூடம்
கடந்த சில வருடங்களில் கல்லூரி அளவில் ஒரு பிரதான மாற்றத்தைக் காண முடிகிறது. படிக்கும் காலத்திலேயே நெட் தேறிவிட்டு, பலர் ஆசிரிய அனுபவம் இன்றி அரசு வேலைபெற்று வகுப்பெடுக்கத் திணறுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், அரசு ஆசிரியர்களின் அனுபவத்தை முக்கியமற்றதாகக் கருதுவதுதான். இந்தப் பிரச்சினை பள்ளி ஆசிரியர் தேர்வையும் பாதித்துள்ளது. இதேபோல் இந்தத் தேர்வுகள் மனப்பாடத்தை ஊக்குவிப்பதால், வெறுமனே தகவல்களை மட்டும் ஜீரணித்துத் தேறிவரும் ஆசிரியர்கள், கல்வி அரங்கில் அதிகமாகி வருகிறார்கள். இவர்களுக்கு என்று குறிப்பிட்ட துறையில் ஒரு தனிப்பட்ட பார்வையோ, ஈடுபாடோ, அபிப்பிராயங்களோ இருப்பதில்லை. வெறுமனே மனப்பாடம் செய்த தகவல்களை ஒப்பிக்கும் இடமாக இன்று வகுப்பறைகள் மாறி வருகின்றன. 
சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு புத்தாக்கப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது, அங்கு வந்திருந்த 40-க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரி ஆசிரியர்களில் 5% பேர்தான் முனைவர் பட்ட ஆய்வு செய்துவருவதைக் கண்டேன். வெறும் முதுகலை படித்தாலே வேலை என்கிற நிலையில், இன்று ஆசிரியராகப் போகும் மாணவர்களின் கவனம் முழுக்க மனப்பாடத் தேர்வை நோக்கியே இருக்கின்றது. ஆய்வு மனப்பான்மை காலாவதி ஆகிவிட்டது. 
பட்டப்படிப்பு ஏன்?
இன்னொரு பிரச்சினை… இன்று பட்டப்படிப்பு களின் மதிப்பு கேள்விக்குறி ஆகிவிட்டது. இன்று எந்தப் படிப்பு படித்தாலும் ஏதாவது ஒரு தகுதித் தேர்வில் வென்றால்தான் வேலை எனும் நிலை உள்ளது. பட்டப்படிப்பு முக்கியமில்லை என்றால், எல்லோரும் 12-ம் வகுப்பு முடித்ததும் தகுதித் தேர்வுக்குத் தயாராகத் துவங்கிவிடலாமே? 
தகுதித் தேர்வுகள் ஏன் இவ்வாறு அசலான கல்வி நோக்கத்துக்கு எதிராக நடத்தப்படுகின்றன? இந்தத் தேர்வுகளின் தகவல்சார் முறை என்பது அறிவியல் பாடங்களுக்கு, ‘ஜிமேட்’ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மட்டுமே ஏற்றவை.
 கலை மற்றும் சமூகப் பாடங்களுக்கு அல்ல. ஒரு ஆசிரியரைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதானால் அவரது அனுபவம், மாணவர்களுக்கு அவர் மீதுள்ள மதிப்பு ஆகியவற்றைக் கருத்துக்கணிப்பு மூலம் அறிதல், குறிப்பிட்ட நேரத்துக்கு எந்தத் தலைப்பிலும் பேசவைத்து மதிப்பிடுதல் மற்றும் தகவல்பூர்வத் தேர்வு ஆகிய வழிகளில்தான் செய்ய வேண்டும். ஆனால், அரசு இவற்றைச் செய்வதானால் நிறைய செலவாகும். அந்த செலவைக்கூட பங்கேற்பாளரிடமிருந்து பெற்று விடலாம். அப்போதும்கூட இது சிரமமாக, சிக்கலாக இருக்கும். ஆனால், எழுத்துத் தேர்வு குறைபட்டது என்றாலும் அதை நடத்துவது எளிது, சிக்கனமானது. எழுதுபவர்களில் மிகச்சிறு சதவீதமே தேறுவதாலும், மீண்டும் மீண்டும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பணம் செலுத்தி எழுதுவதாலும், இதன் மூலம் யு.ஜி.சி. அல்லது பிற அமைப்புகள் கோடிக்கணக்கில் லாபம் சம்பா திக்கின்றன. இன்று தகுதித் தேர்வுகள் நடத்துவது ஒரு லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. 
அரசியல் உள்நோக்கம்
தகுதித் தேர்வுகளின் பின்னால் அரசியல் நோக்கமும் உள்ளது. மனப்பாடக் கிளிப்பிள்ளை \கள், பொதுவாக நிறுவனங்களுக்கும் அடங்கி நடப்பவர்களாக இருப்பர். அவர்களுக்கு என்று தனியாக ஒரு கருத்தியலோ அரசியல் லட்சியமோ இருக்காது. இந்தியாவில் பெரும் அரசியல் போராட்டங்களை மாணவர்கள்தாம் நடத்தியுள்ளனர். அரசுகள் எப்போதுமே மாணவர்கள் ஓரணியில் திரள்வதைக் கண்டு அஞ்சுகின்றன. மாணவர்களை ஒருங்கிணைப்பதில் அரசியல் நாட்டமுள்ள ஆசிரியர்களின் பங்கையும் அரசுகள் அறியும். இன்று நம் மாணவர் சமூகத்தை அரசியலற்றவர்களாக மாற்றும் மத்திய அரசாங்கத்தின் முயற்சியில் முதல் படிதான் வெறும் தகவல்களை மட்டும் கற்பிக்கிற, கருத்தியல் வலு இல்லாத, மாணவர்களுக்குத் தலைமை தாங்கும் ஆளுமையற்ற ஆசிரியர்களை அதிக அளவில் உருவாக்குவது. 
இந்தத் தேர்வின் மற்றொரு வெளிப்படையான மறைமுக நோக்கம் லஞ்சம். பள்ளி ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் சாதி ஒதுக்கீட்டை மீறி வேலையளிக்கும் போக்கு உருவாகியுள்ளது. தேர்வு மட்டுமே அளவுகோல் எனும்போது, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் அனுபவமும் பணிமூப்பும் மதிப்பிழக்கின்றன. விளைவாக, வேலைக்குத் தகுதியானவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது.
 திரையரங்கில் வரிசை நீளும்போது பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு வியாபாரம் கொழிப்பதுபோல் இங்கு அரசியல்வாதிகள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கும் லட்சக் கணக்கான பணம் லஞ்சம் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. சமீபத்தில் தமிழகத்தில் ‘ஸ்லெட்’ கல்லூரி ஆசிரியர் தகுதித்தேர்வில், எதிர்பாராத விதமாக கணிசமான அளவில் பலர் தேர்வாக்கப்பட்டது நாடாளு மன்றத் தேர்தலுக்கான பணத்தை லஞ்சம் மூலம் சம்பாதிக்கத்தான் எனக் கூறப்பட்டது. கல்லூரி ஆசிரிய வேலையின் விலை ரூபாய் 15 லட்சத்தில் இருந்து 35 லட்சம் வரை என்று பத்திரிகைக் கட்டுரை ஒன்று கூறியது. 
கல்வித் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் இப்படி ஒரு பெரும் அபத்தம் நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் திட்டப்படி மாதிரி பள்ளிகள் தமிழகத்தில் வருமா?

சென்னை : மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகள்  தமிழகத்தில் இல்லை; இந்த பிரச்னைக்கு மக்களவை தேர்தலுக்கு பின் தீர்வு ஏற்படும்  என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாதிரிப் பள்ளி திட்டத்தை செயல்படுத்தும் பணியை மத்திய அரசு 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் துவக்கியது. அப்போது கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு பொது நுழைவுத் தேர்வு உண்டு என்பதும் இந்தப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது ஆங்கில வழிக் கல்வி குறித்து  பேசும் கருணாநிதி, அப்போது ஏன் இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்தார் என்பதை தெரிவிக்க வேண்டும்.
 மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ், பொது , தனியார் பங்களிப்புடன் இந்தியாவில் முதல் கட்டமாக,  41 மாதிரிப் பள்ளிகள் துவங்கப்பட உள்ளன.

 இதில் ஒன்று கூட தமிழ் நாட்டில் இல்லை. 500 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் துவங்குவதற்கான ஒப்பந்தத்தினை மத்திய அரசு கோரியுள்ளது. இருப்பினும், இது வரையில் தமிழ்நாட்டிலிருந்து இந்த ஒப்பந்தத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது.

இந்த மாதிரி பள்ளி களை அடுத்த கல்வி ஆண்டுக்கு முன்னர் தொடங்க முடியாது;  அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் முடிவிற்குப் பிறகு ஆட்சி மாறும், தமிழக மக்களுக்கு ஏற்றம் தரக்கூடிய மாற்றம் வரும், அதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எக்ஸ்ட்ரா தகவல்

மொத்தம் 6,000 மாதிரி பள்ளிகள் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், 3,500 மாதிரி பள்ளிகள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் மாநில அரசுகள் மூலம் துவக்கப்படும். எஞ்சியவை ஏனைய வட்டாரங்களில் பொது ,தனியார் பங்கீட்டு டன் அமைக்கப்பட உள்ளது.

அரசு ஊழியர்- ஆசிரியர்களின் ஏக்கத்தை கவனிக்குமா? கருவூலகத்துறை.

உதவி கருவூலகங்களில் பட்டியல் பதிவேற்றப்பட்டவுடன் அதற்கான வவுச்சர் எண்ணை வாங்க மாவட்ட கருவூலத்திற்கு செல்ல வேண்டிய அவலம் அனைத்து சம்பளம் பெற்றுத் தரும் அலுவலகங்களுக்கும் உள்ளது. அறிவியல் எவ்வளவோ முன்னேறி தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் கூட இந்த நிலையை மாற்றாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதனால் சில நேரங்களில் தவறுதலாக பதிவேற்றப்படும் பணத்தை மீளபபெற முடியாமல் அரசு ஊழியர்கள் தவிக்க வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறு தவறாக செலுத்தப்படும் பணம் எந்த தலைப்பின் கீழ் சேர்ந்துள்ளது என்பது பரியாத புதிராகவே உள்ளது. மாவட்ட கருவூலத்தில் சென்று வவுச்சர் எண் கேட்டால் பிரிவு அலுவலர்கள் அவ்வளவு எளிதாக அதை பதிவு பண்ணிக் கொடுப்பதில்லை என்பதுதான் நிஜம். இதனால் ஊழியர்களுக்கு கால விரயம் ஏற்படுவதுடன் தேவையில்லாத மன உளைச்சலும் ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த பிரச்சணைக்கு மாநில கருவூலத்துறை தீர்வு காண முயல வேண்டும் என்பதே நமது அவா. மிஸ்ஸிங் கிரெடிட் ஆன பல கணக்குகள் திரும்ப கிடைக்க வழியில்லாமல் ஊழியர்கள் புலம்புவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட உதவி கருவூலகங்களே வவுச்சர் எண்ணை வழங்கும் நடவடிக்கையை கொண்டு வரலாம். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பயன் பெறும். சம்பளம் பெற்றுத்தரும் அலுவலகங்களுக்கும், கருவூலத்திற்கும் ஒரு நல்ல புரிந்துணர்வு வேண்டும். இன்றைய அவசர யுகத்தில், ஊழியர் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் வீண் அலைச்சல்களை போக்கும் நல்லெண்ண அடிப்படையில் சம்பந்தப்பட்ட உதவி கருவூலகங்களே வவுச்சர் எண்ணை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் மாநில கருவூலகத்துறையை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவர்களை புகைப்படம் எடுக்க அரசு உத்தரவு

தமிழகத்தில் பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவ, மாணவிகளின் போட்டோக்களை எடுத்து பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
இது குறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் போட்டோக்களை கல்வித் தகவல் மேலாண்மை முறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் சுய விபரங்களுடன் ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் போட்டோ எடுக்கப்பட்டுள்ளதா என்பது சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். 
போட்டோ எடுக்கப்படாத மாணவர்களுக்கு பொருத்தமான வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றிபோட்டோ எடுக்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். உயர் தர செல்போன் வசதி கொண்டு மாணவர்களை போட்டோ எடுப்பது, வெப் காமிரா வசதி கொண்ட கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களை போட்டோ எடுப்பது, 20பேர் அல்லது 10பேர் கொண்ட அணியாக நல்ல தரமான போட்டா கருவி மூலம் தரமான போட்டோ எடுத்து தனித்தனி போட்டேவாக மாணவர்களின் போட்டோக்களை பிரித்து எடுப்பது போன்ற முறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09.11.2013 அன்றைய டிட்டோஜாக் கூட்ட நடவடிக்கைகள்-ஒரு தொகுப்பு

 தமிழகத்தின் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அமைப்பின் அனைத்து சங்கங்களின் மாநில பொதுச்செயலர்கள்,தலைவர்கள்,பொருளாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட தொடக்கக்கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின்( TAMILNADU ELEMENTARY TEACHERS ORGANIZATION JOINT ACTION COMMITTY )பொதுக்குழு கூட்டம் 9/11/13 அன்று காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநிலஅலுவலகமான ஜே.எஸ்.ஆர்மாளிகையின் முதல் தள கூட்ட அரங்கில் கூடியது.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் சங்கங்கள்,

1.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
4.தமிழக ஆசிரியர் கூட்டணி
5.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மற்றும்
7.தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் .
ஆகியன.
 


அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது
கடந்த கால நிகழ்வுகளை மறந்து ஒற்றுமையுடன் 
"WE FOR SECONDARY GRADE TEACHERS" என்ற கோட்பாட்டின் படி இடைநிலை ஆசிரியர் வாழ்வாதாரப்பிரச்சினையான ஊதியக்குறைபாட்டினைக்களைய பாடுபடுவது என ஒருங்கிணைந்த கருத்துடன்
சுமார் இரண்டு மணிநேர கருத்துரையாடலுக்கு பின்னர்
1.இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தினை மத்திய அரசு வழங்குவதுபோல 
மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்



2.பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் 
என்ற இரு கோரிக்கைகள் மட்டும் டிட்டோ ஜாக் -ன் கோரிக்கைகளாக அனைவராலும் ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டது

அடுத்தகட்டமாக

முதலில் தொடக்கக்கல்வித்துறை சார்ந்த சங்கங்கள் இனைந்து போராட முடிவெடுத்துள்ளதை அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் முரையாக தெரியப்படுத்தும் விதமாக வரும் 13/11/13 அன்று 
மாண்புமிகு முதலமைச்சர்,
மாண்புமிகு நிதியமைச்சர்,
மாண்புமிகு கல்வியமைச்சர், ஆகியோர்களுக்கும்,

தமிழக அரசின் தலைமைச்செயலர்,
தமிழக அரசின் நிதிதுறைச் செயலர்,
தமிழக அரசின் கல்வித்துறைச் செயலர், 
மற்றும்
கல்வித்துறை சார்ந்த இயக்குனர்கள்
அனைவரையும்
7 சங்க பொறுப்பாளர்கள் ஒன்றினைந்து சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிப்பது என்றும்,
வரும் 20/11/13 அன்று
அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும், மாவட்ட ,வட்டார அளவில் டிட்டோஜாக் கமிட்டிகள் அமைப்பது குறித்தும் பேச்சுநடத்த ஏதுவாக மாநில டிட்டோ ஜாக் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகமான “முத்துசாமி அரங்கில்” நடைபெறும் என்றும் முடிவாற்றப்பட்டது,

அது சமயம் அனைத்து சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்களின் (தலைவர்,செயலர்,பொருளர்) பட்டியல் கொண்டு வரக்கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் டிட்டோ ஜாக் மாநில அமைப்பின் தொடர்பு அலுவலகமாக
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அலுவலகமே செயலாற்றஅனைவராலும் தீர்மானிக்கப்பட்டது.

தகுதி அடிப்படையில் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சமையலராக எனது தாய் பணிபுரிந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பணியிலிருக்கும் போது அவர் இறந்தார். அரசு பணியின் போது எனது தாய் இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலையை எனக்கு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். அதில், சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தேன்.

மாவட்ட ஆட்சியரும் அந்த மனுவை ஏற்றுக் கொண்டு 2009-ஆம் ஆண்டு அரசுக்கு  பரிந்துரைத்தார். ஆனால், சமையலர் அல்லது சமையல் உதவியாளர் பணியில் தான் நியமிக்க முடியும், சத்துணவு அமைப்பாளராக நியமிக்க முடியாது எனக் கூறி சமூக நலத்துறை எனது கோரிக்கையை மறுத்து விட்டது. அதனால், கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்து வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இறந்த அரசு ஊழியர்களின் பதவியைப் பொறுத்து அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கூடாது. வாரிசுகளின் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதனால், மனுதாரின் தகுதி அடிப்பைடையில் 8 வாரங்களுக்குள் அவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புகை பிடித்தால் வேலை கிடையாது : ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு

ராஜஸ்தானில், புகைபிடிப்பவர்கள், குட்கா புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, அரசு வேலை கிடையாது என, மாநில, காங்., அரசு அறிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு, அடுத்த மாதம், 1ம் தேதி தேர்தல் நடக்கிறது. 
 மாநில அரசு, சமீபத்தில் பிறப்பித்துள்ள அரசாணையில், புகைபிடிப்பவர்கள், குட்கா புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது என, தெரிவித்துள்ளது. மேலும், அரசு வேலையில் சேர்பவர்கள், புகைபிடிக்க மாட்டேன்; புகையிலை தொடர்பான பொருட்களைப் பயன்படுத்த மாட்டேன் என, உறுதிமொழி அளிக்க வேண்டியது கட்டாயம் எனவும், அந்த உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசின் இந்த முடிவுக்கு, புகையிலை எதிர்ப்பாளர்கள், வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

5.63 லட்சம் ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் எஸ்.எம்.எஸ்., திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!

கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம், இம்மாத இறுதிக்குள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: முதல்வர் உத்தரவுப்படி, பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர்களின் வருகை பதிவை, அதிகாரிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டம், கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது.
 
 இத்திட்டத்தை, முதலில், திருச்சி மாவட்டத்தில், செப்., 5ல், முதல்வர் துவக்கி வைத்தார். இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், 56,573 பள்ளிகள், 5.63 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரம், இணையதளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

இப்பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து விவரமும் ஒருங்கிணைக்கப்பட்ட பின், எஸ்.எம்.எஸ்., திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும் முறை இந்த ஆண்டு மாறலாம் எனத் தெரிகிறது.


உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலப் பதிவு மூப்புக்குப் பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாமா என அரசு பரிசீலித்து வருகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.

இதில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை மட்டுமே மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் 14,496 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளில் 12,596 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 2 ஆயிரம் காலிப்பணியிடங்களும் உள்ளன.
கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் காலிப்பணியிடங்களை விட குறைவான ஆசிரியர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்ததால் நியமன முறை அதிக முக்கியத்துவம் பெறவில்லை.
என்ன வழக்கு? இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு இரண்டிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில மாதங்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
மனுவை ஏற்று இந்த வழக்கை முடித்துவைத்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு காலாவதியாகியுள்ளது.
எனவே, இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வெயிட்டேஜ் மதிப்பெண் முறை (அரசாணை எண் 252) மூலம் நியமனம் செய்யலாமா அல்லது மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யலாமா என தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

1,743 பேரின் பணி நியமனம் கேள்விக்குறி

தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743 ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண் 153) வெளியிட்டது.
தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743 ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண் 153) வெளியிட்டது. இதில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட வேண்டியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2011 டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 
 
ஒரு மாத காலத்திலே இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பும் வெளியிட்டது. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வானவர்களின் பட்டியல் தயாராக இருந்தும் இது வரை அது வெளியிடப்படாமலே உள்ளது.

3.6.2010-ம் தேதி வெளியிடப்பட்ட அதே அரசாணை எண் 153-ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த வாரத்தில் அவர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின் மார்ச் 2012-ல் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அதில் தேர்வானவர்களுக்கு அவசர அவசரமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஒரே வாரத்தில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.

9664 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டு நிரப்ப உள்ளதாக கடந்த சில நாள்களுக்கு முன் பத்திரிகைகளில் செய்தியும் வெளியாகி உள்ளது. அப்படியானால் ஏற்கனவே காலியாக உள்ள 1743 பணியிடங்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டே நிரப்பப்படும் சூழல் உருவாகி உள்ளது. அப்படியானால், 2011 டிசம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வானவர்களின் கதி என்ன.

அவ்வாறே இவர்களை (2011 டிசம்பரில் தேர்வானவர்கள்) மீண்டும் பணி நியமனம் செய்யும்பட்சத்தில் பணிமூப்பும் பாதிக்கப்படும். எனவே அரசு தலையிட்டு, மாநில அளவில் பதிவு மூப்பில் அடிப்படையில் பணிநியமனம் வழங்க வேண்டும் என கடந்த 2011 டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிக்காக காத்திருப்பவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர், ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.


டி.இ.டி., முதல் தாள் தேர்வில், 12,596 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 14,496 பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் பணியிடங்கள் வரை, காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்க கல்வித்துறையில், 880 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 1,500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், காலியாக இருக்கின்றன. பள்ளி கல்வித்துறையில், தற்போதைய நிலவரப்படி, 10,500 இடங்கள் காலியாக உள்ளன. மே மாதம், பணி ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், மேலும், சில ஆயிரம் இடங்கள் அதிகரிக்கலாம்.
மொத்தத்தில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை கிடைக்க, அதிக வாய்ப்புகள் உள்ளன.

தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கும், இம்மாத இறுதியிலோ அல்லது, டிசம்பர், முதல் வாரத்திலோ, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அதன்பின், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு,கல்வித்துறையிடம், டி.ஆர்.பி., வழங்கும். டிசம்பர் இறுதிக்குள், புதிய ஆசிரியர், பணி நியமனம் செய்யப்படலாம். இடைநிலை ஆசிரியர் பணியை பொறுத்தவரை, தேர்ச்சி பெற்றிருந்தாலும், மாநில அளவில், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மட்டும், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுவர். எனவே, 12 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை  கிடைக்க வாய்ப்பு இல்லை.

இவர்கள், தனியார் பள்ளிகளில், ஆசிரியர் வேலையில் சேரலாம். அரசு பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், கணிசமான எண்ணிக்கையில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுவருகின்றனர். ஆனால், மாணவர் சேர்க்கை சதவீதம், சரிந்துகொண்டே வருகிறது. இதனால், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், 1:25 என்ற நிலை உள்ளது. டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் நியமனம் செய்யும்போது, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், மேலும் சரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில், ஆசிரியர் நியமனம், பெரிய அளவில் இருக்காது என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருங்கால வைப்பு நிதி முறைகேடு: கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர், "சஸ்பெண்ட்'

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்தது தொடர்பாக, கூடுதல் உதவி தொடக்கல்வி அலுவலர் திரு.வெ.சுகுமார், அலுவலக கண்காணிப்பாளர் திரு.சத்யவாணிமுத்து, எழுத்தர் திரு.ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர், மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சிவநாட்சியார் ஆரம்பப்பள்ளி  தலைமை ஆசிரியர் திரு.ஆதிநாராயணனும் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


சில மாதங்களுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூரில், தலைமை ஆசிரியை ஒருவர், தன் மகள் திருமணத்திற்காக , தன் வருங்கால வைப்பு நிதியிலிருந்து, 4.35 லட்சம் ரூபாயை எடுக்க விண்ணப்பித்தார். பணம் கிடைப்பது தாமதமானது. 
விசாரித்ததில், அவரது பணம், கருவூலத்திலிருந்து வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. விசாரணையில், வேறு நபரின் பெயரில் அப்பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.
 துறை ரீதியான விசாரணையில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி பணம், முறைகேடாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணக்கில் வரவு வைக்கப்படாமல், வேறு நபரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, மீண்டும் கடன் கேட்ட ஆசிரியரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இம்மோசடி தொடர்பாக, மேற்கண்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார கிளைக்கு நன்றி! ஆசிரியர் நலன் காக்கும் கேடயம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

TRB CUT OFF IN DETAILS

The Cutoff given by TRB is follows:
+2
Above 90%-10 mark
80 to 90 %- 8 mark
70 to 80% - 6 mark
60 to 70%- 4 mark
50 to 60% - 2 mark

UG
Above 70% - 15 mark
50 to 70% - 12 mark
Below 50%- 10 mark
B.Ed
Above 70% - 15 mark
50 to 70% - 12 mark
T.E.T
Above 90% - 60 mark
80 to 90% - 54 mark
70 to 80%- 48 mark
60 to 70%- 42 mark
Those who are getting 100 marks in tet or getting 90 in tet coming under the same category that is 42 marks out of 60
but by actual calculation, it comes a lot of difference 
so convert actual marks into 60 
don;t give slab for tet.

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா செயற்கைகோள்; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ;இஸ்ரோ சாதனை ! நீண்டநாள் கனவு நிறைவேறியது.விஞ்ஞானிகளுக்கு TNPTF-ன் பாராட்டுக்கள்!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் சரியாக 2. 38 மணிக்கு , ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. 
இதற்கென விஞ்ஞானிகள் தங்களின் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இந்த முயற்சி வெற்றிகரமாக முடிய வேண்டும் என இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் திருப்பதி சென்று வேண்டினார். விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியமைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அரசியல் தலைவர்கள் , விஞ்ஞானிகள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ரூ. 450 கோடி செலவில் இந்தியா தனது சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளது. மொத்தம் 200 மில்லியன் கி.மீ., பயணம் கொண்ட மங்கள்யான், திட்டமிடப்படி ஏவப்பட்டதால், வரும் 30ம் தேதி பூமியின் வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு, செவ்வாயை நோக்கி தனது நீண்ட பயணத்தை துவக்கும். அடுத்த 300 நாட்களில் செவ்வாயின் பாதை நெருங்கும் மங்கள்யான் அடுத்த சில தினங்களில் ( 2014 - செப் 24 ) சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இருந்து தகவல்களை பூமிக்கு அனுப்பும். இதற்கான 56 .30 மணிநேர கவுன்டவுன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் 6. 08 மணிக்கு துவங்கியது.
விண்ணில் பாய உள்ள பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மற்றும் செயற்கைகோளை கண்காணிக்க, இந்திய கடல் எல்லையில், யமுனா, நாலந்தா ஆகிய கப்பல்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சில இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
சரியான பாதையில் பயணிக்கிறது ; இஸ்ரோ சேர்மன்

குறுகிய காலத்தில் சரியான நேரத்தில் விண்ணில் செலுத்த துணை புரிந்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நான் தலைவணங்குகிறேன். விண்கலம் திட்டமிட்டபடி புவி வட்டபாதைக்கு சென்று சரியான பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது.இவ்வாறு இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். தொடர்ந்து பேசிய விஞ்ஞானிகள் கூறுகையில்; செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது உலக பெருமை சேர்த்ததில் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதா கூறினர்.
மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா? மங்கள்யான்' என்று பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோள், 1350 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தில், தண்ணீர், கனிம வளம், மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது குறித்து, ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேகமாக, ஐந்து நவீன கருவிகள் "மங்கள்யான்' செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின் எடை, 15 கிலோ.
மீத்தேன் வாயு இருக்கிறதா? செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதியில் மீத்தேன் வாயு இருக்கிறதா என்பதை இதில் பொருத்தப்பட்டுள்ள கருவி தெரிவிக்கும். உலக அளவில் இது மிக முக்கிய சோதனையாகும்.

இந்தியா 4வது நாடு : செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவதில் இந்தியா வெற்றி பெற்று உலக சாதனை பட்டியலில் இந்தியா 4 வது நாடு என்ற இடத்தை பிடிகத்தது. இது வரை ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி கழகம்ஆகியன வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியுள்ளது. இந்நாடுகள் மொத்தம் அனுப்பிய 51 விண்கலத்தில் 21 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி பிரார்த்தனையில் கை கூப்பி நிற்கும்படி கட்டாயப்படுத்த முடியாது: மும்பை உயர்நீதிமன்றம்

பள்ளியில் பிரார்த்தனையின்போது கை கூப்பி நிற்கும்படியோ அல்லது கை கட்டி நிற்கும்படியோ கட்டாயப்படுத்த முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.


மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக உள்ளவர் சஞ்சய் சால்வே. இவர் புத்த மதத்தை பின்பற்றுபவர். காலையில் பள்ளிப் பிரார்த்தனையின்போது இவர் கைகூப்பாமல் நின்றார். மேலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்போது தனது கையை முன்புறம் நீட்ட மறுத்தார். இதனை ஒழுங்கீனமாக கருதி பள்ளி நிர்வாகம் அவருக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தரவில்லை. இதனை எதிர்த்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் அவர் புகார் அளித்தார். இந்த விவகாரத்தை விசாரித்த அதிகாரி, பள்ளி நிலைப்பாட்டை நிராகரித்தார். ஆசிரியருக்கு பதவி உயர்வும் அதன் அடிப்படையில் ஊதிய உயர்வும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால் மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவை பள்ளி நிர்வாகம் நிறைவேற்றவில்லை. இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சஞ்சய் சால்வே வழக்கு தொடர்ந்தார்.

பிரார்த்தனையில் தான் தவறாமல் கலந்துகொண்டபோதிலும், அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் மதரீதியான அந்த செய்கையின்போது கை கட்டுவதில்லை என்று அவர் வாதிட்டார்.

பள்ளி நிர்வாகமும் கல்வி அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டது:

சஞ்சய் சால்வேயின் பணி ஆவணங்களை பரிசீலித்தபோது, ஆசிரியராக அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரார்த்தனையின்போது அவரது நடத்தை ஒழுங்கீனமாக கருதப்பட்டது தெரியவருகிறது.

ஆனால், பிரார்த்தனை பாடலைப் பாடுவது, கை கூப்புவதை ஆகியவற்றை கட்டாயப்படுத்த முடியாது என்ற கல்வி அதிகாரியின் முடிவு சரியானதே. அதே சமயத்தில், பள்ளியின் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை ஆசிரியரும் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

மேலும், பள்ளி நிர்வாகம் அவரது பதவி உயர்வை இறுதி செய்து, புதிய ஊதியத்தின் அடிப்படையில் அவருக்குச் சேர வேண்டிய தொகையை 2 மாதங்களில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க விரைவில் உளவியல் வகுப்பு

பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகையில், புதிய வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவில் துவங்கப்படவுள்ளன.

பள்ளி வகுப்பறையில் கவனச் சிதறல், சக மாணவர்களால் தொல்லை, பாடம் கற்பதில் நெருக்கடி, ஆசிரியர்களுடன் இணக்கம் இன்மை. உடல் வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியாமல் மிரட்சி, தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களால், பள்ளி மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். 
இந்த சூழல்களை கடந்து வரமுடியாமல் தற்கொலை முயற்சி போன்ற கொடூரமான முடிவுகளை எடுக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.
அரசு பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கி படிப்பில் கவனத்தை திருப்பும் திட்டம்தான் அது.
புதிய திட்டப்படி குறிப்பிட்ட கால அவகாச இடைவளியில் உளவியல் நிபுணர் குழு பள்ளிகளில் நேரடியாக மாணவர்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை அறிந்து உரிய அறிவுரை வழங்கும். இதற்காக உளவியல் நிபுணர்களை தேர்வு செய்யும் முயற்சியில் பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டத்தை அமல்படுத்த கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில், உளவியல் ஆலோசனை வகுப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது.
குழு அமைப்பு
இந்த திட்டத்தில் ஆலோசனை வழங்கும் குழுவில் ஓர் உளவியல் நிபுணர், ஓர் உதவியாளர் நியமிக்கப்படுவர். இவர்கள், பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ, மாணவியரை சந்திக்க உள்ளனர். இதற்கு வசதியாக பிரத்யேக வேன் தயாராகி வருகிறது. நிபுணர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் பள்ளிகளில் மாணவ, மாணவியரை சந்தித்து பொதுவான ஆலோசனை வகுப்புகளை நடத்துவர். தனிப்பட்ட ரீதியிலும் ஆலோசனை வழங்குவர்.
என்ன நடக்கும்?
இந்த வகுப்பில் கூற வேண்டிய ஆலோசனை விவரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரமாவது:
  • தேர்வு பயத்தை போக்குதல்
  • தேர்வு நேரத்தில் உடல்நிலையை பராமரித்தல்
  • உடல் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றம் சம்பந்தமான மன அழுத்தத்தை போக்குதல்
  • தற்கொலை எண்ணத்தை தவிர்த்தல்
  • தாழ்வு மனப்பான்மையை போக்குதல்
  • மாணவ, மாணவியரின் பொதுவான சந்தேகங்களை போக்குதல்
  • இந்த விவரங்கள் குறித்து, ஆலோசனை வழங்கப்படும். தேவைப்பட்டால், தொடர் பயிற்சி வழங்க குழு பரிந்துரை செய்யும்.
    வகுப்பு எப்போது?
    இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, கூறியதாவது: "காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வகுப்புகளை விரைவில் துவங்க உள்ளோம். இதற்காக, சென்னையில் பிரத்யேக வாகனம் தயாராகி வருகிறது. உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க நிபுணர்களை நியமிக்கும் பணியும் துவங்கி உள்ளது. இந்த பணி முடிந்தவுடன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வகுப்புகள் தொடங்கப்படும்." இவ்வாறு, சாந்தி கூறினார்.

    எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் "இ-வித்யா" திட்டம் அறிமுகம்

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "இ-வித்யா" திட்டம் மாநிலத்தில் முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
    மாணவர்கள் "ஆப்சென்ட்" ஆனாலோ, தாமதமாக வந்தாலோ, பெற்றோர்களின் மொபைல் போனுக்கு பள்ளியில் இருந்து தகவல் பறக்கும். 
    மேலும், ரேங்க் கார்டு வழங்குவது, பெற்றோர் சந்திப்பு கூட்டம், விடுமுறை போன்ற விபரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    சில பள்ளிகளில் மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டு பாடங்கள், தினசரி தேர்வில் எடுத்த மார்க் போன்ற தகவல்களும் எஸ்.எம். எஸ்., மூலம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    இதன்மூலம், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் "கட்" அடித்தால் உடனடியாக தகவல் தெரிந்து கண்டிக்க முடியும் என்பதால், இத்திட்டம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டத்தை அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, "இ-வித்யா" என்ற பெயரில் இந்த திட்டம் முதன் முறையாக ஏனாம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
    முதற்கட்டமாக ஏனாம் நகரப் பகுதியில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அரசு ஆங்கில உயர்நிலைப்பள்ளி, கிரையம்பேட்டாவில் உள்ள காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், "இ-வித்யா" செயல்பாட்டுக்கு வருகிறது.
    மத்திய அரசு திட்டமான சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள, "இ-வித்யா" திட்டப் பணிகளில் ஏனாமில் உள்ள தேசிய தகவல் மைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    இரு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல் போன் உள்ளிட்ட விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இரு பள்ளிகளை தொடர்ந்து ஏனாமில் உள்ள மற்ற பள்ளிகளில் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
    இதைதொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், "இ-வித்யா" திட்டத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.

    2013 நவம்பர் மாத குறுவளமையப் பயிற்சி - 40% தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 16.11.2013 அன்றும் 40% உயர்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 23.11.2013 அன்று ” Reading, Writing and Arithmetic Skills” என்ற தலைப்பில் நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டமிட்டுள்ளது


    மெல்லக் குறையுது மாணவர் எண்ணிக்கை: 1268 துவக்கப் பள்ளிகளுக்கு "பூட்டு" - Dinamalar News

    அரசு துவக்கப் பள்ளிகளில், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேநிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே இல்லாமல் போகும் என ஆசிரியர்கள் குமுறுகின்றனர். 

    தமிழக அரசு சமீப காலமாக, கல்வித்துறையில் நவீன பாட முறைகளையும், இலவச திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது; இருந்தும், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெற்றோரின் ஆங்கிலக் கல்வி மோகம், போன்றவற்றின் தாக்கமே இதற்கு காரணம். இதனால், அரசுப்பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. 
    தற்போது உள்ள 23 ஆயிரத்து 576 துவக்கப்பள்ளிகளில், 1268 பள்ளிகளை மூட அரசு முயற்சித்து வருவதாக ஆசிரியர் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறியதாவது: 
    முதல் கட்டமாக, 10 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மூடப்பட உள்ளன. இப்பள்ளிகளில், தற்போது இரண்டு ஆசிரியர்கள், ஒரு சத்துணவு மேலாளர், இரண்டு ஆயாக்கள் உள்ளனர். இப்பள்ளிகளை மூடிவிட்டு, அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்திற்கு, மூன்று முதல் நான்கு பள்ளிகள் மூடப்படும். இதே நிலை நீடித்தால், அரசுப்பள்ளிகள் இல்லாமல் போகும். இவ்வாறு கூறினர்.

    எஸ்.எஸ்.ஏ., செயல்பாடுகளை ஆவணப்படமாக்க அரசு முடிவு

    தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) செயல்பாடுகள் தொடர்பாக "ஆவணப் படங்கள்" தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. முதல் முயற்சியாக மதுரை மாவட்டத்தில் இதற்கான பணி துவங்கியுள்ளது.

    தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இதில் ஒரு பிரிவான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பகல்நேர மையங்கள், ஆதார மையங்கள் என ஒவ்வொரு ஒன்றியங்களிலும் உள்ளன. இவற்றில், காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, கை, கால் செயலிழந்த, மூளை முடக்கு வாதத்தால் பாதித்த, ஆட்டிசம் மற்றும் கற்றலின் குறைபாடால் பாதித்தவர்கள் என எட்டு வகை பாதிப்புடைய ஒன்று முதல் 18 வயது வரையிலான இயலாக் குழந்தைகள் படிக்கின்றனர். 
    இவர்களுக்கு, உடலை தூய்மையாக பராமரிப்பது, உடைகள் அணிதல், கழிப்பறையை எவ்வாறு பயன்படுத்துவது, பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி, தசைப் பயிற்சி போன்றவை சிறப்பாசிரியர்கள் மூலம் அளிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 430க்கும் மேற்பட்ட மையங்களில், 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 
    மேலும் மையங்களுக்கு தினமும் வரமுடியாத இயலாக் குழந்தைகளுக்கு, அவர்களின் வீடுகளுக்கு சென்றும் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இப்பயிற்சி மூலம் முன்னேற்றமடையும் மாணவர்கள், "ரெகுலர்" மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு இணையாக படிக்கின்றனர். 
    இத்திட்டத்தின் கீழ் தற்போது அவ்வாறு பயனடைந்த மாணவர்கள் விவரம், அவர்களின் தற்போதைய நிலைமை குறித்து விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்ட செயல்பாடு, பயிற்சி மூலம் மாணவர்கள் பெற்ற வெற்றியின் வெளிப்பாடு, பெற்றோர் உணர்வுகள், சிறப்பாசிரியர்கள் அனுபவங்கள், மைய காப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், கிராம மக்கள் கருத்துக்களை உள்ளடக்கிய ஆவணப்படங்கள் தயாரிக்க இத்திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 
    இதற்காக, முதற்கட்டமாக மதுரை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு இங்குள்ள 15 அரசு பகல்நேர மையங்கள் மற்றும் 15 ஆதார மையங்களில் தேர்வுசெய்யப்பட்ட மையங்களில் இதற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளன.
    திட்ட இணை இயக்குனர் நாகராஜ முருகன் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆவணப்படம் தயாரிப்பது மூலம் திட்ட செயல்பாடுகள், மாணவர்களுக்கு அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்தும் மக்களிடம் சென்றடையும். 30 நிமிடங்கள் வரை ஓடும் வகையில் ஆவணப்படம் தயாரிக்கப்படுகிறது. 
    மாநிலத்தில் முதன் முறையாக மதுரை மாவட்டத்தில் இப்படம் தயாரிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்ட செயல்பாடுகள் தொடர்பாகவும் ஆவணப்படங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்

    சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு 6வது அமைச்சராக தற்போது வந்துள்ளார். இதுதவிர, விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளையும் அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு புதிய அமைச்சராக விஜய பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டுமே, இதுவரை, சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை செல்வன், பழனியப்பன் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தற்போது ஆறாவது நபராக கே.சி.வீரமணி வந்துள்ளார்.
    அதேசமயம், உயர்கல்வித் துறையில் இதுவரை அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. 2011ம் ஆண்டு அரசு பதவியேற்கும்போது நியமிக்கப்பட்ட பழனியப்பன், இதுவரை அதே துறையை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    புதிய அமைச்சர் நியமனம்: 

    தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.,வான விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இத்துறையின் அமைச்சராக இருந்த வீரமணி, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக செயலாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிட்டோ-ஜாக் கூட்டம் வருகிற 9.11.2013 அன்று சென்னையில நடைபெற உள்ளது

    இதில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் 
    1. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
    2. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
    3. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
    4. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
    5. தமிழக ஆசிரியர் கூட்டணி,
    6. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
    7. தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
    ஆகிய 7 அமைப்புகளும் இதில் பங்கேற்று ஒரு மிகப்பெரிய போராட்ட அறிவிப்பனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற இயக்கங்களும் ஆதரவளித்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிகிறது.

    முக்கிய முடிவுகளை மேற்கண்ட 7 இயக்கஙகளும் இணைந்து மேற்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (RMSA) மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தருமபுரியில் 29.10.2013 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர்,திரு.ஆ.சங்கர் அவர்களும், இணை இயக்குநர் திரு.பூ.ஆ.நரேஷ் அவர்களும் சிறப்புரையாற்றினார்.
     
    அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் 29.10.2013 அன்று நடைபெற்றது.

    இப்பயிற்சி பணிமனையில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்  பணிபுரியும்  80 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மு.இராமசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

    திரு.ஆ.சங்கர், திட்ட இயக்குநர், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், சென்னை அவர்களால்  இப்பயிற்சி பணிமனையானது துவங்கி வைத்து, திட்ட செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நுணுக்கங்கள் குறித்தும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குநர் திரு.பூ.ஆ.நரேஷ் அவர்கள் தலைமையாசிரியர்கள்; ஆசிரியர்களை எவ்வாறு நல்லிணக்கப்படுத்தி மாணாக்கர்களுக்கு கல்வி கற்பிப்பது என்றும், கற்றலில் பின்தங்கிய மாணாக்கர்களை எப்படி முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வது என்றும் தலைமையாசிரியர்களுக்கு கருத்துரை வழங்கினார். வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரி நிறுவனர் திரு.வருவான் வடிவேலன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

    அனைவருக்கும் இடைநிலைக்;கல்வி இயக்க மாநில திட்ட நிர்வாக ஆலோசகர் திரு.கு.முத்துசாமி, அவர்கள் தினமும் முன்னேற்றத்தை நோக்கி வளர்ச்சிப் பாதையில் செல்வது எப்படி என ஆலோசனைகள் வழங்கினார். கிருஷ்ணகிரி  மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர்  திரு.மு.பாஸ்கரன் அவர்கள் தலைமையாசிரியர் பண்புகள் மற்றும் ஊக்குவித்தல் குறித்து பயிற்சி அளித்தார். தருமபுரி மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என்.திருநாவுக்கரசு அவர்கள் தலைமையாசிரியர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது எப்படி என பயிற்சி அளித்தார். திரு.வ.ராஜா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை), திரு.சு.ஜெயச்சந்திரன் பயிற்சி ஆலோசர் , அஇகதி, சென்னை, திரு.வி.கல்யாணசுந்தரம், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், அஇகதி, சென்னை, திரு.ஜி.ஜெயக்குமார், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், அஇகதி, கிருஷ்ணகிரி,   அரசு உயர்நிலைப்பள்ளி, பாலவாடி தலைமையாசிரியர் திரு.நடராசன் அவர்கள்  நூறு சதவீத இலக்கை அடைவது எப்படி என தன் அனுபவத்தை தலைமையாசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டார்.


    இப்பயிற்சி பணிமனை வளாகத்தில் 4 பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப கோளரங்கம் காண்பிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இக்கோளரங்கத்தை கண்டு மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இறுதியாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஆர்.தனசேகரன் அவர்கள் நன்றியுரை வழங்க இப்பயிற்சி இனிதே நிறைவுற்றது.

    "மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க": பேனர் வைத்து அழைப்பு

    மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆண்டு தோறும் "பிளக்ஸ் பேனர்" வைத்து, மாணவர்களை அழைக்கிறது, அரசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.

    கோவை மாவட்டம், சூலூரை அடுத்த தென்னம்பாளையத்தில், அரசூர் ஊராட்சி துவக்க பள்ளி சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. "அரசு பள்ளியில் சேர்ந்து படித்தால், புத்தகங்கள், நோட்டுகள், பஸ் பாஸ் மற்றும் சீருடைகள் இலவசமாக அரசால் வழங்கப்படுகின்றன. பள்ளியில் சனி, ஞாயிறு அன்று மாணவர்களின் தனித்திறமையை வளர்க்கும் விதத்தில் கராத்தே, நடனம் மற்றும் யோகா கற்றுத்தரப்படும்..." என்பது உள்ளிட்ட வாசகங்கள் பேனரில் உள்ளன.
    இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் கூறியதாவது: எங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, இது போன்று பேனர்களை கடந்த சில ஆண்டுகளாக வைத்து வருகிறோம். தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களின் தனித்திறமையை அறிந்து, பொம்மை தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறோம். 
    எங்கள் துவக்கப்பள்ளியில் தனியாக நூலகம் அமைத்து, மாணவர்களின் வாசிக்கும் திறனை வளர்த்து வருகிறோம்.படிக்க வசதியற்ற மாணவர்களை கண்டறிந்து, தனியார் தொழில் நிறுவனங்களிடம் கல்வி ஊக்கத்தொகை பெற்று தருகிறோம். 
    சேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், சிறுசேமிப்பு திட்டத்தை செயல்படுத்துகிறோம். நாட்குறிப்பு எழுதுதல், ஐ.டி., கார்டு அணியும் பழக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தி உள்ளோம். ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் தனி பயிற்சி அளிக்கிறோம். ஆசிரியைகளின் ஒத்துழைப்போடு, அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

    உரத்த சிந்தனை: காவு கேட்கும் கல்விக்கூடங்கள்

    "ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை; தேர்வில் தோல்வி அடைந்ததால், மாணவி தற்கொலை" போன்ற செய்திகளையே, சில ஆண்டுகளாக கேட்டுப் பழகியிருந்த நமக்கு, புதுவரவாக, ஆசிரியரை மாணவர்கள் கொலை செய்யும் செய்திகளும் வரத் துவங்கி விட்டன.

    கடந்த ஆண்டு, சென்னையில், ஆசிரியை ஒருவரை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவத்தை, யாரும் மறந்திருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக, தற்போது, இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ஒருவரை, மாணவர்கள், போட்டுத் தள்ளி விட்டனர்! இதில் வேடிக்கை என்னவென்றால், ஆசிரியர், மாணவனைத் தாக்கினாலும்; மாணவன், ஆசிரியரைத் தாக்கினாலும், பழி என்னவோ, ஆசிரியர்கள் மீது தான். 
    "இன்றைய ஆசிரியர்களின், அணுகுமுறை சரியில்லை" என ஆவேசப்படுவோர், ஒன்றை மறந்து விடுகின்றனர்... இன்றைய கல்வி முறை, அன்று போல் இல்லை என்பதை. அன்று, ஒழுக்கத்திற்கே முக்கியத்துவம் தந்தனர். ஆனால் இன்று? கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டது. அதனால், பள்ளியானாலும், கல்லூரியானாலும், நல்ல மதிப்பெண் எடுப்பவனுக்கே முக்கியத்துவம்; அவனே, "ஹீரோ!" அதுவே, அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும், சரியாக படிக்கவில்லை என்றால், "ஜீரோ!"
    ஆக, மதிப்பெண் ஒன்று தான், கல்வியின் குறிக்கோளாக இருக்கிறது. படிப்பு வரவில்லை என்றால், விட்டு விட வேண்டியது தானே... ஒருவனுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தால், இன்னொருவனுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும்; வேறொருவனுக்கு, தொழிற்கல்வியில் ஆர்வம் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்.அதை விடுத்து, அடுத்த வீட்டுப் பையனும், எதிர் வீட்டுப் பையனும் மதிப்பெண் பெறுகையில், நம் வீட்டுப் பையனோ, பெண்ணோ நன்றாக படிக்கவில்லையே என்ற பெற்றோரின் கவலை, பின், அவர்களது, தன்மானப் பிரச்னையாகி விடுகிறது.
    இவர்கள் பள்ளியில் முறையிட, நிர்வாகம், ஆசிரியரிடம் கட்டளையிட, அங்கே உருவாகிறது பிரச்னை. ஆசிரியர் என்ன மந்திர ஜால வித்தை செய்பவரா, "ஜீபூம்பா" சொல்லி, நிமிஷத்தில், எல்லாவற்றையும் மாற்ற... இப்படி, பெற்றோர், மாணவன், நிர்வாகம் என, ஆளாளுக்கு பாடாப் படுத்தினால், பாவம், ஆசிரியர்கள் தான் என்ன செய்வர்? அதற்காக, அத்தனை ஆசிரியர்களையும், நல்லவர்கள், வல்லவர்கள் என, போற்றிப் புகழவில்லை.
    மற்ற தொழில்களைப் போல, பணம் ஈட்டும் ஒரு தொழிலாகவே இதை நினைத்து, பணியில் சேரும் ஆசிரியர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். உண்மையை சொல்லப் போனால், மேற்குறிப்பிட்ட அசம்பாவிதங்கள் அதிகளவில் நிகழ்வதற்கும், இவர்கள் தான், முக்கிய காரணமாக இருப்பர். அதற்காக, ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறை கூறுவது, நியாயம் தானா என்பது தான் கேள்வி.
    வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், "ஹோம் ஒர்க் செய்தீங்களா.... ஒன்பதாவது, "லெசன்" எடுங்க..." என பாடங்கள் நடத்தத் தயாராகி விடுகின்றனர், ஆசிரியர்கள். முன்பு, ஆசிரியர் - மாணவன் உறவு என்பது, தந்தை - மகன் உறவாகவே இருந்தது. ஆசிரியர்கள், மாணவனை, தன் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்தனர். அன்பு, கண்டிப்பு, கவனிப்பு என, பெற்றோர் போல, பார்த்துக் கொண்டனர். கல்வி சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி, அறிவு சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். 
    ஆனால், இன்று, தேர்வில் மதிப்பெண் குறைந்தால், பள்ளி நிர்வாகத்திற்கு பதில் கூற வேண்டுமே என்ற கவலையால், &'சிலபஸ்&' தவிர, நாட்டு நடப்பு, நல்லது கெட்டது என, எதைப் பற்றியும், ஆசிரியர்கள் வாய் திறப்பதில்லை; அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமுமில்லை.
    பாடம், தேர்வு, மதிப்பெண் இதுவே அவர்களது கவலை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம்; இன்றைய கல்வியின் தாரக மந்திரமும் அது தான்!இப்படி, ஆசிரியர்-மாணவன் இடையே, நல்லுறவு இல்லாததால், அன்பு கலந்த கண்டிப்பு இல்லாமல் கொடுக்கும் தண்டனைகளே, இது போன்ற வன்முறை சம்பவங்களுக்கு காரணமாகின்றன. விளைவு, ஆசிரியர்கள் மாணவர்களையும், மாணவர்கள் ஆசிரியரையும் மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
    மாணவனின் தேர்ச்சி மட்டும் முக்கியமல்ல; ஒழுக்கம், அறிவு, வளர்ச்சி என, அனைத்தும் தான், நாளைய தலைவனுக்கு தேவை என்பதை உணர்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித் துறையோ, கைகட்டி, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.அப்படியானால், இது மட்டும் தான் பிரச்னையா... வேறெதுவும் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமில்லையா என்றால், ஏன் இல்லை...
    காணாமல் போன மாலை நேர விளையாட்டுகள், தனிக்குடித்தன வரவால் தொலைந்து போன உறவுகள், &'வீட்டுக்கு ஒரு குழந்தை&' என்றாகிப் போனதால், உடன்பிறப்பு இல்லாததால் வாட்டும் தனிமை, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், பள்ளி விட்டு வீட்டுக்கு வந்ததும், பேசக் கூட நாதியில்லாத வாழ்க்கை என, பல்வேறு காரணிகளால், இன்றைய மாணவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும், உளவியல் ரீதியான பிரச்னைகள் எண்ணிலடங்கா.
    இவை ஒரு புறம் என்றால், தொலை தொடர்பு சாதனங்கள், &'தொல்லை&' தொடர்பு சாதனங்களாகி, மாணவர்களை, பல வகையில் சீரழித்துக் கொண்டிருக்கின்றன.இவை அனைத்தின் பாதிப்பே, மாணவர் தற்கொலைகளும், கொலை பாதக செயல்களும்...
    இதற்கு தீர்வு தான் என்ன?உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு வடிகாலாக, கல்விக் கூடங்கள் இருக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம். பாடத் திட்டத்தை மட்டும் கற்றுக் கொடுக்காமல், கற்பவரை நெறிப்படுத்தி, ஒழுக்கத்தை கற்றுத் தருவதோடு, மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், மனத் திடத்தையும் கொடுக்கக் கூடியதாக, கல்வி அமைய வேண்டும்.
    நன்னெறிகள், நீதி போதனைகள், வாழ்க்கைக் கல்வி என்றெல்லாம் சொல்லப்படும், நல்லொழுக்கக் கல்வி தொடர்பான வகுப்புகள், தவறாமல் இடம் பெற வேண்டும். மாணவர்கள் உடல் நலம் பேணக் கூடிய, உடற்பயிற்சி வகுப்புகள், விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். 
    பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு, பெயரளவிற்கு இருக்காமல், இருவரது கருத்துகளும் பரிமாறப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், கவுன்சிலிங் வகுப்புகள் இடம் பெற வேண்டும்.குறிப்பாக, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வாரம் இரு முறையாவது, கவுன்சிலிங் பாட வேளை அமைய வேண்டும். தற்போதைய சூழலில், மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும், கவுன்சிலிங் வகுப்புகள் நடத்த வேண்டியது அவசியம். இவற்றில் எல்லாம் கல்வித்துறையும், அரசும் கவனம் செலுத்த வேண்டும்.
    அதோடு, ஆசிரியர்களும், தம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள குழந்தைகளை, தம் குழந்தைகளாக பாவித்து, நடத்த வேண்டும். மாணவர்களை, வார்த்தைகளால் குத்திக் குதறினால், ஒன்று, அவர்கள் குப்பைகளாவர் அல்லது குமுறி எழுந்து, இதுபோன்ற வன்முறை கொடுமைக்காரர்களாவர். நம்மிடம் கொடுக்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கை தடம் மாற, நாமே காரணமாகலாமா என்பதை உணர்ந்து, நடக்க வேண்டும்.
    &'ஒரு நல்ல ஞானாசிரியனால் தான், நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்&' என்ற, விவேகானந்தரின் கூற்றை மனதில் பதித்து, ஒவ்வொருவரும், நல்ல ஞானாசிரியராக செயல்பட்டால், இன்னொரு சம்பவம் இது போன்று நடக்காது.
    - இரா.ஆஞ்சலா ராஜம், சமூக நல விரும்பி
     நன்றி : தினமலர்

    பயிற்சியில் இருவேறு நிலைப்பாடு: ஆசிரியர்கள் பெரும் குழப்பம் - தினமலர்

    ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், இருவேறு நிலைபாடு உள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை களைய விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.

    தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 385 யூனியன்கள் உள்ளன. அவற்றில், 3,700க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி, 9,938க்கும் அதிகமான நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அதில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 
    இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டார வளமையம் மூலம், இப்பயிற்சி வழங்கி வருகிறது. 
    தமிழகத்தில் 385 வட்டார வளமையங்கள் உள்ளன. அவற்றை நிர்வகிக்க மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், ஒவ்வொரு யூனியன்களிலும் குறைந்தது ஆறு குறுவள மையங்கள் செயல்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு முதல் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், இரண்டாம் சனிக்கிழமை, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
    கடந்த ஆண்டு வரை மாதத்துக்கு ஒரு நாள் என பத்து நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பத்து நாட்களும் பள்ளி வேலை நாட்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. தற்போது, மூன்று பருவத்துக்கும் தலா ஒரு பயிற்சி வீதம் மூன்று நாட்கள் மட்டுமே வழங்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.
    மேலும், வட்டார வளமையம் மூலம் ஆண்டுக்கு 20 நாட்கள் வழங்கப்பட்டு வந்த பயிற்சியானது, வெறும் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டது. இப்பயிற்சியில், 40 சதவீதம் ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கவும் 60 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளி நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
    தற்போது, முதல் பருவத்துக்கு ஒரு குறுவளமைய பயிற்சியும், ஒரு வட்டார வளமையப் பயிற்சியும் வழங்கப்பட்டது. அந்த பயிற்சி நடந்த இரண்டு நாட்களும் 40 சதவீத ஆசிரியர்கள் பயிற்சியிலும் 60 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கும் சென்றனர். இந்நிலையில், குறுவளமையம் நடக்கும் மூன்று நாட்களையும், பள்ளி வேலை நாட்களாக அரசு அறிவித்துள்ளது.
    ஆனால், வட்டார வள மையத்தில் வழங்கப்படும் பயிற்சி நாள், விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. மேலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள் பள்ளி வேலை நாளாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள், பள்ளி விடுமுறை எனவும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ஆசிரியரை குழப்பம் அடையச் செய்துள்ளது.
    தற்போது, சனிக்கிழமை சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பயிற்சி வழங்கப்பட்டது. அதில், 40 சதவீத ஆசிரியர்கள் பயிற்சியிலும், 60 சதவீத ஆசிரியர்கள் விடுமுறையிலும் உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு விடுமுறை நாளான சனிக்கிழமை பயிற்சி வழங்குவதை எஸ்.எஸ்.ஏ., மறுபரிசீலனை செய்து பள்ளி வேலைநாட்களில் இதுபோன்ற பயிற்சியை வழங்க வேண்டும்.
    மேலும், விடுமுறை தினமாக சனிக்கிழமை அன்று பயிற்சியில் கலந்து கொள்ளும் 40 சதவீத ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கல்வித்துறை ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Popular Posts