TET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சதகுதி மதிப்பெண்ணுக்கு எதிராக மனு - சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசின்சார்பில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.அரசு குறிப்பிட்டுள்ள அடிப்படை தகுதியுள்ள நபர்கள்,இந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதின் மூலம், அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
 
தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம்,60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என, மாநிலஅரசு தெரிவித்துள்ளது. மாநில அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றவர்களே, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என, அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசின் இந்த முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பொது நலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், மாநில அரசின் குறைந்தபட்ச மதிப்பெண் அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும், மாநில அரசின் இந்தநடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே.சிக்ரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், தகுதித் தேர்வுகளில் குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயிப்பது மாநில அரசின் உரிமை என்றும், இதில் சுப்ரீம் கோர்ட் தலையிடமுடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.இதையடுத்து, தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Frequently Asked Questions for TET

கேள்வி 1: சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக பட்டச் சான்றிதழ் (Provisional Certificate) வைத்திருந்தால் போதுமா? அல்லது நிரந்தர பட்டச் சான்றிதழ் (Convacation Certificate) அவசியம் தேவையா?
பதில் - தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி அந்த சான்றிதழிளேயே இருக்கும். அந்த தேதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு தற்காலிக பட்டச் சான்றிதழ் போதுமானது. ஆனால் ஒரு சில பல்கலைகழகங்களில் 2 வருடங்கள் கழித்தே நிரந்தர பட்டச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. (உதாரணமாக இக்னோ பல்கலைக்கழகம்). இது போன்ற சூழ்நிலைகளில் சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக பட்டச்சான்றிதழை சமர்பித்து, நிரந்தர பட்டச் சான்றிதழ் இதுவரை பல்கலைகழகத்தால் வழங்கப்படவில்லை என்பதால் Relaxation வழங்குமாறு உறுதிமொழி கடிதம் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.

பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். 
ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே, காலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்குள், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால், பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடும் போட்டி உறுதி : டி.இ.டி., தேர்வில், 150க்கு, 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இறுதி தேர்வானது, பள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களும், கணக்கில் கொள்ளப்பட்டு, அதில் பெற்ற மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படும்.
டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண், 60க்கு கணக்கிடப்பட்டு, மொத்தத்தில், 100க்கு, தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்.

இடைநிலை ஆசிரியரை பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15 மதிப்பெண், ஆசிரியர் பட்டய தேர்வுக்கு, 25 மதிப்பெண் என, 40 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு மட்டுமே, 15 மதிப்பெண் முழுமையாக கிடைக்கும். அதேபோல், ஆசிரியர் பட்டய தேர்வில், 70 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருந்தால் தான், 25 மதிப்பெண், முழுமையாக கிடைக்கும். இல்லையெனில், இந்த மதிப்பெண் குறையும்.

கடும் போட்டி : அதேபோல், பட்டதாரி ஆசிரியரை பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 10 மதிப்பெண், பட்ட படிப்பிற்கு, 15 மதிப்பெண் மற்றும் பி.எட்., படிப்பிற்கு, 15 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த, 40 மதிப்பெண்களையும், முழுமையாக பெற வேண்டும் எனில், முறையே, 90 சதவீதம், 70 சதவீதம் (பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.,) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்துடன், டி.இ.டி., தேர்வில், 90 சதவீத மதிப்பெண் (150க்கு, 135 மதிப்பெண்) பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே, வேலை உறுதி. மற்றவர்கள், கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். 
கடந்த தேர்வுகளில், காலி பணியிடங்களை விட, தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடாமல், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்தது. ஆனால், தற்போது, காலியிடங்கள் எண்ணிக்கை குறைவாகவும், தேர்ச்சி பெற்றிருப்பவர் எண்ணிக்கை, அதிகமாகவும் இருப்பதால், இந்த போட்டி ஏற்பட்டுள்ளது.

பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்: அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் மாதத்தில் அடுத்த தேர்வு
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை நீக்க தடை ஐகோர்ட் கிளை உத்தரவு

ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்துக்காக பணி நீக்கம் செய்ய, ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2012 ஆகஸ்ட் முதல் 3 முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. 
லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தேர்வு எழுதினாலும், சில ஆயிரம் பேர் தான் வெற்றி பெற்றுள்ளனர். பணி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுக்குள் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனையின்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். 
இந்நிலையில் தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகம் சார்பிலும் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, பள்ளி கல்வி இயக்குனரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆறுமுகம் உள்பட 10 ஆசிரியர்கள், ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். ஆறுமுகம் தனது மனுவில், நான் பணி நியமனம் செய்யும் போது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறவில்லை. என்னால் தகுதி தேர்வு எழுத முடியவில்லை. என் பணி நியமனத்தை அங்கீகரித்த மாவட்ட கல்வி அதிகாரி, 5 ஆண்டில் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நிபந்தனை விதித்தார். அந்த கெடு முடியவில்லை. அதை கருத்தில் கொள்ளாமலும் என்னை விசாரிக்காமலும், முன்கூட்டி நோட்டீஸ் அளிக்காமலும் என் பணி நியமனத்தை ரத்து செய்து மாவட்ட கல்வி அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தடை விதிக்க வேண்டும்Õ என கூறியிருந்தார்.
மனுக்களை விசாரித்த நீதிபதி டி.ராஜா, பள்ளி கல்வி இயக்குனரின் உத்தரவுக்கும், அந்த உத்தரவை தொடர்ந்து மனுதாரர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க பள்ளி கல்வி செயலாளர், இயக்குனர், தஞ்சாவூர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

டி.இ.டி.,தேர்வானவர்களுக்கு நவ.23 ல் சான்றிதழ் வினியோகம்

கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23 முதல் வழங்கப்படுகிறது.
அக்., 2012 ஜூலையில், டி.ஆர்.பி.,சார்பில், டி.இ.டி.,(ஆசிரியர் தகுதித் தேர்வு) நடந்தது. தாள் 1, 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது. தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்க உத்தரவிடவேண்டும் என, சிலர் கோர்ட்டை அணுகினர். இதையடுத்து, டி.இ.டி., தேர்ச்சிக்கான முடிவு, மதிப்பெண்களை இணையதளத்தில் வெளியிடப்பட்டாலும்,தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என, கல்வித்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், 2012 ல், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட சி.இ.ஓ.,அலுவலங்களில் நவ., 23 முதல் டிச.,15 வரை தேர்ச்சி சான்றிதழ் வழங்கப் படுகிறது.அந்தந்த மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதி, வெற்றி பெற்றவர்கள், ஏற்கனவே, பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, கல்வித்துறை அனுப்பிய அழைப்பு கடிதத்துடன் நேரில் வர வேண்டும்.

தேர்வர்கள் தவிர, பிறரிடம் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்றும், தபாலிலோ, கொரியர் மூலமோ சான்றுகளை அனுப்பஇயலாது எனவும்,சி.இ.ஓ.,க்கள் தெரிவித்தனர்.

சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு சலுகை

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் ஆசிரியர் பணியினை அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணியிட மாற்றத்துக்கு ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றும்போது மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்த உத்தரவு அனைத்து அரசுத் துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையாளர் வி.கே.ஜெயக்கொடி பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:

தமிழகத்தில் உள்ள 34-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் ஏ, பி, சி மற்றும் டி பிரிவுகளில் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளி ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஊழியர்களுக்கு முடிந்தவரை அவர்களது சொந்த ஊர்களிலேயே பணியிடம் வழங்க வேண்டும் என பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வலியுறுத்தியுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசுப் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று மாற்றுத் திறனாளிகளுக்குப் பொது பணியிட மாறுதல் வழங்கும் போதும், பதவி உயர்வு அளிக்கும் போதும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏனைய மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமையில், சொந்த மாவட்டங்களில் பணியிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒற்றைச் சாளர முறை கடைபிடிக்கும் போதும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென அரசுத் துறைகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் வி.கே.ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த உத்தரவால் மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலைக்காக தங்களது உடல் அசெளüகரியங்களை சிரமத்துடன் பொறுத்துக் கொண்டு பணியாற்றவேண்டிய அவலநிலையை அரசின் இந்தச் சலுகையால் போக்கமுடியும் என  நிம்மதியுடன் அவர்கள் தெரிவித்தனர்.

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் கோரியுள்ளது

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் கோரியுள்ளது.
 மாணவர் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணத்தையும் மற்றும் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் தகவல்கள் கோரப்பட்டுள்ளது.
EMIS New Offline Software with Printing Tool & Tutorial 


ஸ்மார்ட் கார்ட் திட்டத்துக்காக பள்ளி மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் EMIS Offline Software New Version எளிதாக பிரிண்ட் எடுக்கும் வசதியுடன் தரப்பட்டு உள்ளது. மேலும் எவ்வாறு பிரிண்ட் எடுப்பது என  விளக்கமும் தரப்பட்டு உள்ளது.

தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 16,600 பேருக்கு விரைவில் பணி நியமனம்

தமிழகத்தில், இதுவரை நடத்தப்பட்ட 3 ஆசிரியர் தகுதி தேர்விலும் குறைந்த அளவிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் முறையாக நடத்தப்பட்ட தகுதி தேர்வில் முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், 2ம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர். 
இரு தாள்களையும் சேர்த்து மொத்தம் 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 6.6 லட்சம் பேரில் 4.09 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி பெற்ற 27 ஆயிரத்து 92 பேரும், தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்க அழைக்கப்பட்டு சொந்த மாவட்டத்திலேயே ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று ஏக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், 11 ஆயிரத்து 922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2 ஆயிரத்து 881 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், ஆயிரத்து 821 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது. மொத்தம் 16 ஆயிரத்து 624 ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கல்விச் சான்று மற்றும் பிற தகுதிகள் உள்ளிட்டவைகளை சரிபார்த்து தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குள் பணி வழங்கப்படும் என தெரிகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சரியான விடை கொண்டு திருத்தவில்லை அதனால் பலர் பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் சரியான விடைகள் கொண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தேர்வர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 67 ஆயிரம் 950 பேர் 677 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 17 ஆயிரத்து 974 பேர் மாற்றுத்திறனாளிகள். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 4 லட்சத்து 11 ஆயிரத்து 600 பேர் 1060 மையங்களில் எழுதினார்கள்.
தேர்வு எழுதியபோது வீடியோ எடுக்கப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு கடந்த 5–ந்தேதி வெளியிடப்பட்டது. ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வினா–விடைக்கும் தேர்வு எழுதியவர்கள் கருதும் விடைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
இதனால் தேர்வர்களுக்கு 10 மதிப்பெண் கிடைக்கவில்லை. 3 மதிப்பெண் கிடைக்கவில்லை. 5 மதிப்பெண் கிடைக்கவில்லை என்று பல்வேறு தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தினமும் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
தினமும் போராட்டம்
தினமும் 100–க்கும் மேற்பட்டவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாள் வருபவர்களும் வேறு வேறு ஆகும். அதுபோல நேற்றும் 100–க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் மதுரையைச்சேர்ந்த ஒருவர் கூறியதாவது:–
ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்விற்கு உரிய விடைகளை இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால் பல கேள்விகளுக்கு அரசு பாடப்புத்தகத்தில் உள்ள விடைகள்படி தான் எழுதி உள்ளோம். ஆனால் அந்த விடைகள் சரி இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. அரசு பாடப்புத்தகத்தில் உள்ள விடைகளை ஆசிரியர் தேர்வுவாரியம் ஏற்காதது மர்மமாக உள்ளது.
எங்கள் கோரிக்கைகளை யாரும் கேட்பாறில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்று மனு கொடுத்தால் அங்கு உள்ள அலுவலக உதவியாளர் தான் வாங்குகிறார்கள். அதிகாரிகள் யாரும் எங்களை பார்த்து பேசவும் இல்லை. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரையோ அல்லது உறுப்பினரையோ பார்க்கமுடிவதில்லை. அதுவும் அலுவலக உதவியாளர்கள் இங்கு ஏன் வருகிறீர்கள் என்று கேட்டு வேண்டா வெறுப்பாக நாங்கள் கொடுக்கும் மனுக்களை வாங்குகிறார்கள். எனவே இனிமேல் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழி இல்லை.
முதல்–அமைச்சர் தீர்வு காணவேண்டும்
இந்த பிரச்சினையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சில தேர்வர்கள் ‘ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான விடையை கொண்டு மதிப்பீடு செய்திருந்தால் நான் தேர்ச்சி பெற்றிருப்பேன்’ என்று அழுதுகொண்டே தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் தகுதித் தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு

நவ. 16-அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப் பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் கிளை உத்தர விட்டுள்ளது.

நெல்லை பாளையங் கோட்டை மிலிட்டரி லைன் சி.எம்.எஸ்.மான் கோமரி தொடக்கப் பள்ளி தாளாளர் கிப்சன் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளி நெல்லை சிஎஸ்அஸ். டயோசி சன் கீழ் இயங்கி வருகிறது.
கடந்த தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கை அடிப் படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க மறுத்து விட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து தரப்பினரும் 60 சதவீத மதிப் பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
தகுதித் தேர்வு தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், சிறுபான்மை பள்ளிகள், தங்களது பள்ளிகளில் ஆசிரியர் பணியி டங்கள் காலியாகும் போது, அந்த பணியிடத்திற்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகிகளே முடிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் கண்டிப்பாக 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அரசு நிர்பந்தம் செய்யக் கூடாது. தகுதித் தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவாக மதிப் பெண் பெற்றவர்களை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், சிறு பான்மை பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்க உரிய அனுமதி வழங்க பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க தாக்கீது அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

ஆசிரியர்கள் 60% மதிப்பெண் பெற வேண்டும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சி.எம்.எஸ்.மான்கோமரி தொடக்கப்பள்ளி தாளாளர்  கிப்சன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளி நெல்லை சிஎஸ்ஐ டயோசிசன் கீழ் இயங்கி வருகிறது.கடந்த தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கை அடிப்படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க மறுத்துவிட்டது.ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து தரப்பினரும் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி பெற முடியும் என்ற நிலை உள்ளது.தகுதி தேர்வு தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், சிறுபான்மை பள்ளிகள், தங்களது பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் போது, அந்த பணியிடத்திற்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகிகளே முடிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்,

தகுதி தேர்வில் கண்டிப்பாக 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அரசு நிர்பந்தம் செய்யக்கூடாது. தகுதி தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்க உரிய அனுமதி வழங்க பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, :தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலா ளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 23.8.2010 முதல் 14.11.2011-க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. 
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 23.8.2010 முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ, தனியார் சுயநிதி பள்ளியிலோ ஒன்றாம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட தேர்வு அமைப்புகளிடம் வழங்கப்பட் டுள்ளன. 
மத்திய பள்ளிகளுக்கான தகுதித் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத் திடம் (டி.ஆர்.பி.) ஒப்படைக்கப்பட் டுள்ளது. இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடந்துமுடிந்த 3-வது தகுதித்தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றார்கள். 
உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் அரசுப் பள்ளிகளிலும் சரி, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சரி.. ஏற்கனவே பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்துமா, பொருந்தாதா என்ற குழப்பம் இன்றுவரை தொடர்கிறது. 
இதற்கிடையே, தகுதித்தேர்வு அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர் களும், பணி நியமனத்துக்கான பணிகள் (அறிவிப்பு வெளியிடுதல், சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை) தொடங்கப்பட்டிருந்தாலும் அத்தகைய ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. 
டிஸ்மிஸ்
தகுதித்தேர்வு விதிமுறை அமலுக்கு வந்த போதிலும் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லா மலேயே இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் நிய மிக்கப்பட்டு வந்தனர். அவர்களின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அரசு சம்பளமும் வழங்கியது. 
யார் யாருக்கு தகுதித்தேர்வு உண்டு, யார் யாருக்கு விதி விலக்கு என்பது சரிவர முடிவுசெய் யப்படாததால் அவ்வப்போது பல மாவட்டங்களில் இந்த ஆசிரியர் களுக்கு சம்பளம் வழங்குவது நிறுத்தப்படுவதும், பின்னர் மீண்டும் வழங்கப்படுவதும் என்ற நிலை தொடர்ந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 499 ஆசிரியர் களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித் துள்ளது. இவர்கள் அனைவரும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் இடைநிலை ஆசிரியராக, பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர்கள். 
5 ஆண்டு கால அவகாசம்
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- 
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி களில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை உட னடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். இருப்பினும், 23.8.2010 முதல் 14.11.2011 வரையிலான காலத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரி யர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த உத்தரவின் மூலம், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 15.11.2011-க்குப் பிறகு தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர். 
தொடக்கக் கல்வி இயக்ககம்
பள்ளிக் கல்வித் துறையைப் போல, தொடக்கக்கல்வி இயக்க கத்தின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் (ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள்) மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்டிருக்கலாம். அவர்கள் மீதும் தொடக்கக்கல்வி இயக்ககம் தனியே நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. 
உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்: டி.சபிதா

அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.


 சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

 இந்த விழாவில் அவர் பேசியது:
 தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளது. மேலும் 1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

 இந்த ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
 அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தால்  மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவரும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக ரூ. 1.40 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம் 4,500 மாணவர்கள் பயனடைவர்.
 குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் இப்போது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
 இந்த 100 பள்ளிகளுக்காக 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100  தலைமையாசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் சபிதா. கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கான விருதுகள், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, அதிக உறுப்பினர்களைச் சேர்ந்த நூலகங்களுக்கான விருதுகள் உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
 அதிக உறுப்பினர்களைச் சேர்த்ததற்காக திருப்பூர் மாவட்ட மைய நூலகத்துக்கும்,  அதிக புரவலர்களை சேர்த்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
 முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
 அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஏ.சங்கர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் அரசியல்

சினிமா, விளையாட்டு, இலக்கியம், அரசியல், பத்தி ரிகை என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் செயல்பாட்டுத் திறன்தான் தகவல் அறிவைவிட முக்கியமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகள் மட்டும் விதிவிலக்கு. 
அங்கே ஒருவர் சரியாக பேசத் தெரியாதவராக, திக்குவாயராக, மேடைக்கூச்சம் கொண்டவராக, அந்த கற்பித்தல் கலையில் விருப்பமோ, திறனோ இல்லாதவராக இருக்கலாம். ஆனால், எழுத்துத் தேர்வில் தேறிவிட்டால் அவருக்கு ஆசிரியராகும் தகுதி வந்துவிட்டதென அரசு அறிவித்துவிடுகிறது. இதே முறையை ராணுவத்தில் செயல்படுத்தி வெடிகுண்டு, துப்பாக்கி பற்றிய கேள்விகளுக்கு விடை அளிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து காஷ்மீர் எல்லைக்கு அனுப்பினால் என்னவாகும்?
ஆசிரியரின் அடிப்படைத் தகுதி
ஆசிரியருக்கான அடிப்படைத் திறன்களில் மிக முக்கியமானது பேச்சுத்திறன் – அதாவது, மாணவனின் மனநிலை உணர்ந்து விஷயத்தை விளக்கும் திறன். நெட், ஸ்லெட், டெட் போன்ற தகுதித் தேர்வுகள் வெறும் நினைவுத்திறன் மற்றும் எழுத்துத்திறனைச் சோதிப்பவை. 
விஷய ஞானம் உள்ள ஆனால், அதை வெளிப்படுத்தத் தெரியாத பல ஆசிரியர்களை, மாணவனாகவும் பின்னர் ஆசிரியனான பின்னரும் கண்டிருக்கிறேன். மாணவர்கள் இவர்களது வகுப்புகளைத் தொடர்ந்து புறக்கணிப்பார்கள் அல்லது கவனிக்க மாட்டார்கள். மாணவர்களை உளவியல்பூர்வமாகக் கையாளத்தெரிவது அடுத்த திறன். 70 பேர் கொண்ட வகுப்பைக் கட்டுப்படுத்தி 40 அல்லது 50 நிமிடங்கள் கேட்க வைப்பது, வேலை கொடுத்து செய்ய வைப்பதற்கு ஒரு மேலாளரின் நாசூக்கும், தலைவனின் மன உறுதியும் தன்னம்பிக்கையும் வேண்டும். 
இன்று தகவல்கள் அபரிமிதமாகக் கிடைக் கின்றன. வகுப்பில் பேசப்போகிற விஷயத்தை அதற்கு முன்னரே எளிய வடிவில் இணையத்தில் இருந்து மாணவன் பெற முடியும். இன்றைய காலகட்டத்தில் ஒரு ஆசிரியரின் மதிப்பே பாடத்தை அர்த்தப்படுத்துவதில், புதுக் கோணத்தில், ஆழத்தில் சொல்லித் தருவதில்தான் இருக்கிறது. இந்த மூன்று திறன்களையும் - பேச்சுத் திறன், மேலாண்மைத் திறன், ஆழமாக அர்த்தப்படுத்தும் அறிவுத்திறன் ஆகியவற்றை - இன்றைய எழுத்து வடிவிலான தகுதித் தேர்வுகளால் அளவிட முடியாது. 
தகவல்களை ஒப்பிக்கும் கூடம்
கடந்த சில வருடங்களில் கல்லூரி அளவில் ஒரு பிரதான மாற்றத்தைக் காண முடிகிறது. படிக்கும் காலத்திலேயே நெட் தேறிவிட்டு, பலர் ஆசிரிய அனுபவம் இன்றி அரசு வேலைபெற்று வகுப்பெடுக்கத் திணறுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், அரசு ஆசிரியர்களின் அனுபவத்தை முக்கியமற்றதாகக் கருதுவதுதான். இந்தப் பிரச்சினை பள்ளி ஆசிரியர் தேர்வையும் பாதித்துள்ளது. இதேபோல் இந்தத் தேர்வுகள் மனப்பாடத்தை ஊக்குவிப்பதால், வெறுமனே தகவல்களை மட்டும் ஜீரணித்துத் தேறிவரும் ஆசிரியர்கள், கல்வி அரங்கில் அதிகமாகி வருகிறார்கள். இவர்களுக்கு என்று குறிப்பிட்ட துறையில் ஒரு தனிப்பட்ட பார்வையோ, ஈடுபாடோ, அபிப்பிராயங்களோ இருப்பதில்லை. வெறுமனே மனப்பாடம் செய்த தகவல்களை ஒப்பிக்கும் இடமாக இன்று வகுப்பறைகள் மாறி வருகின்றன. 
சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு புத்தாக்கப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது, அங்கு வந்திருந்த 40-க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரி ஆசிரியர்களில் 5% பேர்தான் முனைவர் பட்ட ஆய்வு செய்துவருவதைக் கண்டேன். வெறும் முதுகலை படித்தாலே வேலை என்கிற நிலையில், இன்று ஆசிரியராகப் போகும் மாணவர்களின் கவனம் முழுக்க மனப்பாடத் தேர்வை நோக்கியே இருக்கின்றது. ஆய்வு மனப்பான்மை காலாவதி ஆகிவிட்டது. 
பட்டப்படிப்பு ஏன்?
இன்னொரு பிரச்சினை… இன்று பட்டப்படிப்பு களின் மதிப்பு கேள்விக்குறி ஆகிவிட்டது. இன்று எந்தப் படிப்பு படித்தாலும் ஏதாவது ஒரு தகுதித் தேர்வில் வென்றால்தான் வேலை எனும் நிலை உள்ளது. பட்டப்படிப்பு முக்கியமில்லை என்றால், எல்லோரும் 12-ம் வகுப்பு முடித்ததும் தகுதித் தேர்வுக்குத் தயாராகத் துவங்கிவிடலாமே? 
தகுதித் தேர்வுகள் ஏன் இவ்வாறு அசலான கல்வி நோக்கத்துக்கு எதிராக நடத்தப்படுகின்றன? இந்தத் தேர்வுகளின் தகவல்சார் முறை என்பது அறிவியல் பாடங்களுக்கு, ‘ஜிமேட்’ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மட்டுமே ஏற்றவை.
 கலை மற்றும் சமூகப் பாடங்களுக்கு அல்ல. ஒரு ஆசிரியரைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதானால் அவரது அனுபவம், மாணவர்களுக்கு அவர் மீதுள்ள மதிப்பு ஆகியவற்றைக் கருத்துக்கணிப்பு மூலம் அறிதல், குறிப்பிட்ட நேரத்துக்கு எந்தத் தலைப்பிலும் பேசவைத்து மதிப்பிடுதல் மற்றும் தகவல்பூர்வத் தேர்வு ஆகிய வழிகளில்தான் செய்ய வேண்டும். ஆனால், அரசு இவற்றைச் செய்வதானால் நிறைய செலவாகும். அந்த செலவைக்கூட பங்கேற்பாளரிடமிருந்து பெற்று விடலாம். அப்போதும்கூட இது சிரமமாக, சிக்கலாக இருக்கும். ஆனால், எழுத்துத் தேர்வு குறைபட்டது என்றாலும் அதை நடத்துவது எளிது, சிக்கனமானது. எழுதுபவர்களில் மிகச்சிறு சதவீதமே தேறுவதாலும், மீண்டும் மீண்டும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பணம் செலுத்தி எழுதுவதாலும், இதன் மூலம் யு.ஜி.சி. அல்லது பிற அமைப்புகள் கோடிக்கணக்கில் லாபம் சம்பா திக்கின்றன. இன்று தகுதித் தேர்வுகள் நடத்துவது ஒரு லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. 
அரசியல் உள்நோக்கம்
தகுதித் தேர்வுகளின் பின்னால் அரசியல் நோக்கமும் உள்ளது. மனப்பாடக் கிளிப்பிள்ளை \கள், பொதுவாக நிறுவனங்களுக்கும் அடங்கி நடப்பவர்களாக இருப்பர். அவர்களுக்கு என்று தனியாக ஒரு கருத்தியலோ அரசியல் லட்சியமோ இருக்காது. இந்தியாவில் பெரும் அரசியல் போராட்டங்களை மாணவர்கள்தாம் நடத்தியுள்ளனர். அரசுகள் எப்போதுமே மாணவர்கள் ஓரணியில் திரள்வதைக் கண்டு அஞ்சுகின்றன. மாணவர்களை ஒருங்கிணைப்பதில் அரசியல் நாட்டமுள்ள ஆசிரியர்களின் பங்கையும் அரசுகள் அறியும். இன்று நம் மாணவர் சமூகத்தை அரசியலற்றவர்களாக மாற்றும் மத்திய அரசாங்கத்தின் முயற்சியில் முதல் படிதான் வெறும் தகவல்களை மட்டும் கற்பிக்கிற, கருத்தியல் வலு இல்லாத, மாணவர்களுக்குத் தலைமை தாங்கும் ஆளுமையற்ற ஆசிரியர்களை அதிக அளவில் உருவாக்குவது. 
இந்தத் தேர்வின் மற்றொரு வெளிப்படையான மறைமுக நோக்கம் லஞ்சம். பள்ளி ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் சாதி ஒதுக்கீட்டை மீறி வேலையளிக்கும் போக்கு உருவாகியுள்ளது. தேர்வு மட்டுமே அளவுகோல் எனும்போது, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் அனுபவமும் பணிமூப்பும் மதிப்பிழக்கின்றன. விளைவாக, வேலைக்குத் தகுதியானவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது.
 திரையரங்கில் வரிசை நீளும்போது பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு வியாபாரம் கொழிப்பதுபோல் இங்கு அரசியல்வாதிகள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கும் லட்சக் கணக்கான பணம் லஞ்சம் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. சமீபத்தில் தமிழகத்தில் ‘ஸ்லெட்’ கல்லூரி ஆசிரியர் தகுதித்தேர்வில், எதிர்பாராத விதமாக கணிசமான அளவில் பலர் தேர்வாக்கப்பட்டது நாடாளு மன்றத் தேர்தலுக்கான பணத்தை லஞ்சம் மூலம் சம்பாதிக்கத்தான் எனக் கூறப்பட்டது. கல்லூரி ஆசிரிய வேலையின் விலை ரூபாய் 15 லட்சத்தில் இருந்து 35 லட்சம் வரை என்று பத்திரிகைக் கட்டுரை ஒன்று கூறியது. 
கல்வித் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் இப்படி ஒரு பெரும் அபத்தம் நடந்து கொண்டிருக்கிறது.

Popular Posts