3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
தொலைநிலைக் கல்வியில் உதவித்தொகை திட்டங்கள்
பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் புத்திசாலி மாணவர்களுக்கு, தொலைநிலைக் கல்வி முறையில் ஏதேனும் உதவித்தொகை திட்டங்கள் உள்ளனவா?
பொதுவாக, ஏதேனும் பணியில்
இருக்கும் அல்லது வருமானம் ஈட்டும் நிலையில் இருப்பவர்கள்தான், தொலைநிலைக்
கல்வியில் சேர்கிறார்கள். எனவே, உதவித்தொகைக்கான தேவை பெரும்பாலும்
அவர்களுக்கு எழுவதில்லை. இதனாலேயே, தொலைநிலை மாணவர்களுக்கென்று,
சொல்லிக்கொள்ளும் அளவில் உதவித்தொகை திட்டங்கள் எதுவும்
செயல்படுத்தப்படுவதில்லை.
அதேசமயம், சிக்கிம் மணிப்பால் பல்கலை போன்ற கல்வி நிறுவனங்களில்
தொலைநிலைக் கல்வி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, HDFC வங்கியின் மூலம்
கல்விக் கடன் வழங்கப்படுகிறது. அப்பல்கலையில் தொலைநிலையில்
மேற்கொள்ளப்படும் அனைத்து படிப்புகளுக்கும் அது செல்லும்.
குறைந்தபட்சம் ரூ.50,000 என்ற அளவிலிருந்து அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம்
வரையில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. அதேசமயம், கல்விக்கடன் பெற
Co-applicant/Co-borrower போன்ற அம்சங்கள் கட்டாயம் தேவை. மேலும், சிக்கிம்
மணிப்பால் பல்கலையின் சார்பில், வித்யதீப் என்ற திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
இது தேசியளவிலான ஒரு உதவித்தொகை திட்டமாகும். இதன்படி, மெரிட்
அடிப்படையில், இப்பல்கலையின் தொலைநிலைக் கல்வியில் சேரும் மாணவர்களில்
மொத்தம் 1,500 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த 1,500 என்ற மொத்த
எண்ணிக்கையில் 500 உதவித்தொகைகள், வடகிழக்கு மாணவர்களுக்காக
ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பல பல்கலைகளில், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும்
பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்கள் ஆகிய சிலவகை பிரிவுகளில் வரும்
மாணவர்களுக்கென்று, கல்விக் கட்டணத்திலிருந்து 10% வரை தள்ளுபடி
அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்களுக்கு, வருகைப் பதிவு என்பது மிகவும் அவசியமா?
தொழில்முறை படிப்புகளைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் 50% வருகைப்பதிவு
இருக்க வேண்டும். அதேசமயம் Non - professional படிப்புகளுக்கு அந்தளவு
வருகைப் பதிவு தேவையில்லை மற்றும் சில பல்கலைகளில் கலை படிப்புகளுக்கு
எந்தவிதமான வருகைப்பதிவும் தேவையில்லை.
வருகைப் பதிவு என்பதைத் தாண்டி, ஒருவருக்கு PCP வகுப்புகளுக்கு சென்று,
அதன்மூலம் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற வேண்டும் என்ற தேவையேற்பட்டால்
கலந்துகொள்ளலாம். எனவே, வருகைப்பதிவோடு அதை சேர்த்து குழப்பிக்கொள்ள
வேண்டியதில்லை.
பல பல்கலைகள், தங்களிடம் முழுநேர படிப்பை மேற்கொள்ளும்
மாணவர்களுக்கு வளாக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. ஆனால் இதே
வசதியை தங்களிடம் தொலைநிலைக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கும் அவை செய்து
தருகின்றனவா?
இது அந்தந்த பல்கலையைப் பொறுத்த விஷயம். அந்தந்த பல்கலைகள், தங்களின்
தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது
என்பதைப் பொறுத்த விஷயம். ஆனால், இங்கே இந்த விஷயத்தை நாம் நடைமுறை ரீதியாக
அணுக வேண்டியுள்ளது.
பொதுவாக, தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்களில் மிகப்
பெரும்பான்மையோர் ஏற்கனவே பணிபுரியும் நபர்களாகவே இருக்கிறார்கள். எனவே,
அவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு என்பது தேவையாக இருப்பதில்லை. தொலைநிலைக்
கல்வியில் பட்டம் பெறுவதென்பது, ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருக்கும்
நபர்களுக்கு ஒரு கூடுதல் தகுதியாக அமைகிறது. நிலைமை இப்படி இருந்தாலும்கூட,
சில பல்கலைகள், தங்களிடம் தொலைநிலையில் படிக்கும் மாணவர்களுக்கு,
வேலைவாய்ப்பை பெறுவதைப் பற்றிய வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.
மதுரையில், உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயற்குழுக் கூட்டம், செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. தலைவர் கார்த்திகேயன், நிர்வாகிகள் வெற்றிச் செல்வன், வெங்கடேசன், ஆமநாதன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தனியார் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, நிர்வாகமே தகுதித் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் மீதான புகார்களை விசாரிக்கும்போது, விசாரணைக் குழுவில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும், எஸ்.எஸ்.ஏ., திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எப்படியாவது அரசு ஆசிரியராகப் பணியாற்றி விட வேண்டும் என்ற கனவில் ஆண்டுக்கணக்கில்தயாராகி வரும் பலருக்கும் அரசின் நடைமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாததால் தேர்வர்கள் தங்களது பணி வாய்ப்பை இழந்துள்ளனர்.ஆகஸ்ட் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடை பெற்றது.இதில், 6.90 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
மொத்தமாக 4.09 சதவீதம் பேர், அதாவது 14,495 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு ஆகஸ்ட் 21-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்வெளியானது. அப்போது கேள்வித்தாள், விடைகள் சார்ந்து ஆட்சேப மனுக்கள் கோரப்பட்டதுதான் தாமதம் என்பதுபோல,தேர்வு வாரியத்துக்கு 1,500க்கும்மேற்பட்ட புகார்கள் குவிந்தன என்கின்றனர் அதிகாரிகள்.
அதிகாரிகள் மற்றும் துறை வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட அந்த கேள்வித் தாள்களிலும், அதன் விடைகளிலும் ஏராளமான தவறுகள் இருந்துள்ளன. புகார்களை பரிசீலித்து விடையளிப்போம் என உறுதி கூறிய தேர்வு வாரியம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த நவ. 5-ம்தேதி இறுதி விடைகளை வெளியிட்டது.
அதிலும், அதிகாரிகளின் அலட்சி யம் தொடர்ந்தது.ஏராளமான விடைகள் தவறுதலாக இருந்தன. இந்த குளறுபடிகள் குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள்,தேர்வு வாரியத்திடமே நேரில் புகார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக இரண்டே வாரங்களில் பாட வல்லுநர்கள் மூலம்புகார்களை விசாரித்து விடை தருகிறோம் எனஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவாதம் அளித்தது.ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு எழுதி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று பல்வேறு நடைமுறைகளின்படி பணி ஒதுக்கீடு குறித்து தெரிவிக்கப்படும்.ஆனால், தற்போது தேர்வு முறையிலும் அதன் கேள்விகள், அதற்கு துறை ரீதியான பதில்கள் எனஎதுவுமே சரியானதாகத் தெரியவில்லை. அதை சரி செய்யக்கோரி ஏராளமானோர்கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு தயாராவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தேர்வர்கள் தெரிவிதனர்.
இந்த குளறுபடியில் பாதிக்கப்பட்ட கோவை, கிணத்துக்கடவை சேர்ந்த விஜயலட்சுமி (27)கூறியதாவது:
ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வில், எனக்கு (சி) வகைகேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதில் சில கேள்விகள் முற்றிலும் தவறாக அச்சிடப்பட்டிருந்தன. அரசு தேர்வுகள் சட்டத்தின்படி, கேள்வியில் தவறு இருப்பின் அந்த கேள்வி நீக்கப்பட்டு தேர்வர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும். ஒரு மதிப்பெண் கிடைத்தால்கூட ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். பத்துக்கும் மேற்பட்ட தவறுகள் இருக்கும் நிலையில் நிச்சயம் ஏராளமானோர் தேர்ச்சி அடைய வாய்ப்புண்டு.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு இரண்டு வாரம் ஒத்திவைப்பு
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான
TATA பொதுச்செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை
உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்கள்
முன்னிலையில் விசாராணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞ்சர்
இரண்டு வார கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு 2 வாரம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - IIக்கான தவறான வினாக்களுக்கான விடைகளை மாற்றம் செய்து நீதியரசர் உத்தரவு
ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான
விடைகள் இடம்பெற்றன. சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர்
நீதிமன்றமதுரை கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.அவற்றை நிபுணர்
குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை
மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் இரண்டில் (
TNTET PAPPER 2 ) கீழ்கண்ட கேள்விகளுக்கு மாற்றம் செய்து
உத்தரவிட்டுள்ளார்.
Question series C
Question no 25: the number of
types of counseling
Judgement : deleted the
question
Question no 08 :if we track the
proficiency....
Judgement : A -positive curve,
B- s type curve
Both answer correct
question series D
Question no 125: the winds
blow from particular
direction.......
Judgement : A , B,C. All the three key answers are correct.
என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேற்கண்ட வினாக்களைத் தவிர்த்த மனுதரர்கள் மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின்
விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 1,தாள2-ல் உச்சநீதிமன்ற நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி கீ ஆன்சரில் மாற்றம் செய்து உத்தரவிட்ட விபரம்
தாள்-1 ( TNTET PAPER 1)
ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன. சரியான
விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்
வழக்குகள் தொடுக்கப்பட்டன அவற்றை நிபுணர்
குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின்
பரிந்துரை மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் 1
இல்( TNTET PAPER 1) கீழ்கண்ட கேள்விக்கு மாற்றம் செய்து
உத்தரவிட்டுள்ளார்.
------------------
Question series D
------------------
Question no 122: Non conventional source of energy...
Judgement : A , C,D All the three key answers are correct.(wind,solar,bio-mass)
என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து
உத்தரவிட்டுள்ளார் மேற்கண்ட வினா தவிர்த்த மனுதரர்கள் கோரிய மற்ற
வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து
உத்தரவிட்டுள்ளார்.
தாள்-2 ( TNTET PAPER 2)
ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன. சரியான
விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில்
வழக்குகள் தொடுக்கப்பட்டன அவற்றை நிபுணர் குழுஅமைத்து பரிசீலிக்க
உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை மற்றும் மனுதாரர்கள்
அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் இரண்டில் ( TNTET PAPER 2 ) கீழ்கண்ட
கேள்விகளுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Question Series C
Question no 25: the number of types of counseling
Judgement : deleted the question
Question no 08 :if we track the proficiency....
Judgement : A -positive curve, B- s type curve
Both answer correct
Question Series D
Question no 125: the winds blow from particular direction.......
Judgement : A , B,C. All the three key answers are correct.
என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேற்கண்ட
வினாக்களைத் தவிர்த்த மனுதரர்கள் மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள்
சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் : 405 பணியிடங்கள் திடீர் கலைப்பு
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 405 வட்டார வள மைய
மேற்பார்வையாளர் பணியிடம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு வட்டாரத்துக்கும் வட்டார வள மைய
மேற்பார்வையாளர்கள் என்ற பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டு. இதில்,
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டனர். இவர்களின் கட்டுபாட்டில் பள்ளிகளை பார்வையிட ஆசிரியர்
பயிற்றுனர்களும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு
ஏற்ப நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு சம்பளம் மத்திய அரசு ஒதுக்கும்
நிதியில் இருந்து அளிக்கப்பட்டது.
இந்த பணிக்கு நிதி ஒதுக்குவதை கடந்த ஆண்டே மத்திய அரசு நிறுத்திவிட்டது. நிதி ஒதுக்கீடு பற்றாக்குறையால் வட்டாரவள மைய மேற்பார்வையாளருக்கு சம்பளம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அதிரடியாக நேற்றுமுன் தினம் பள்ளிகல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்களை கலைத்து அங்கு பணிபுரிபவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த பணிக்கு நிதி ஒதுக்குவதை கடந்த ஆண்டே மத்திய அரசு நிறுத்திவிட்டது. நிதி ஒதுக்கீடு பற்றாக்குறையால் வட்டாரவள மைய மேற்பார்வையாளருக்கு சம்பளம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அதிரடியாக நேற்றுமுன் தினம் பள்ளிகல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்களை கலைத்து அங்கு பணிபுரிபவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அனைவருக்கும் கல்வி
இயக்கம் மூலம் வட்டார வள மையங்களில் தமிழகம் முழுவதும் 405
மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த பணியிடங்கள் தற்போது
கலைக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் மீண்டும் பள்ளி பணிக்கே திரும்புகின்றனர்.
சொந்த மாவட்டங்களில் பணியிடம் கிடைக்காமல் வேறு மாவட்டங்களுக்கு
செல்லவேண்டிய நிலை பல தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது,Õ என்றனர்.
கூடுதலாக 3,500 ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி: நடப்பாண்டில் புது ஆசிரியர்கள் 18,500 ஆக உயர்வு
நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு
அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை
ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர்
நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை
வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில்
நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கடந்த கல்வி
ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என, 15
ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம்,
விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு
வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில்,
நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி
கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது.
பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர்,
694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். இதை, அரசு
ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை
பிறப்பித்துள்ளது.
கல்வித்துறை செயலர், சபிதா,
10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314;
ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப,
அரசு அனுமதி அளிக்கிறது. மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி
ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர், 887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை,
தையல்), 156 பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில்
நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி
திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர்,
முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி
ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில்,
"2012 13ம் ஆண்டுக்காக, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம், 2,800
முதுகலை ஆசிரியர் பணியிடம் உட்பட, 15 ஆயிரம் பணியிடங்களை, டி.இ.டி.,
மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளனர். இவர்களுடன்
சேர்த்து, 3,500 பணியிடங்களை நிரப்பவும் வாய்ப்பு உள்ளது' என, தெரிவித்தன.
மொத்தத்தில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், 18,500 பேர்
நிரப்பப்பட உள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சதகுதி மதிப்பெண்ணுக்கு எதிராக மனு - சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக
உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசின்சார்பில், ஆசிரியர் தகுதித்
தேர்வு நடத்தப்படுகிறது.அரசு குறிப்பிட்டுள்ள அடிப்படை தகுதியுள்ள
நபர்கள்,இந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதின் மூலம், அரசுப்
பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
தமிழக அரசின் சார்பில்
நடத்தப்படும் இந்த தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம்,60
சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என, மாநிலஅரசு தெரிவித்துள்ளது. மாநில
அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றவர்களே,
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என, அரசு
அறிவித்துள்ளது.
மாநில அரசின் இந்த முடிவை எதிர்த்து, சுப்ரீம்
கோர்ட்டில் பொது நலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், மாநில அரசின்
குறைந்தபட்ச மதிப்பெண் அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும், மாநில அரசின்
இந்தநடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க வேண்டும் எனவும்
கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள்,
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே.சிக்ரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட்
பெஞ்ச், தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. மேலும்,
தகுதித் தேர்வுகளில் குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயிப்பது மாநில அரசின்
உரிமை என்றும், இதில் சுப்ரீம் கோர்ட் தலையிடமுடியாது என்றும் நீதிபதிகள்
கூறினர்.இதையடுத்து, தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக
அறிவிக்கப்பட்டது.
லேபிள்கள்:
TET
மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு
மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு
ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று
முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட
ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய
முதல்வர் ஜெயலலிதா 312 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில:
* மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படித்தொகை மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிப்பு.
* அரசு ஊழியர்களுக்கான குளிர்காலபடி மாதம் 500 ரூபாயாக உயர்த்தப்படும்.
எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் யோசனை
தமிழகத்தில் 455 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடங்களை
நிரப்பும் போது, எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை
அளிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில்
அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், 385 வட்டாரங்கள்
செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும், முதுகலை அல்லது பட்டதாரி ஆசிரியர்
தகுதி பெற்றவர்களை மேற்பார்வையாளர்களாக நியமித்துள்ளது. இதில், 25 சதவீதம்
பேர் முதுகலை ஆசிரியர்கள். கடந்த 2000ல் துவங்கிய எஸ்.எஸ்.ஏ., திட்ட காலம்
2010ல் முடிந்த நிலையில், 3 ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை
கலைத்து, அனைவருக்கும் இடை நிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்துடன்
இணைக்கும் யோசனையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை செயல்படுகிறது. ஒரு
திட்டம் துவங்கி 10 ஆண்டுக்குள் முடிய வேண்டும். சில காரணத்திற்காக
எஸ்.எஸ்.ஏ., ஓரிரு ஆண்டு நீடிக்கலாம். தமிழகத்தில் இத்திட்டம் 3 ஆண்டு
நீடித்த நிலையில், இனிமேலும், நீடிக்க வாய்ப்பு குறைவாகவே
உள்ளதாக,கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரி ஒருவர்
கூறுகையில், "" எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் பட்சத்தில்,
தமிழகத்தில் 455 உயர்நிலைப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் காலியிடங்களை
நிரப்பும் போது எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களுக்கு ( பி.டி., தகுதி
ஆசிரியர்) முக்கியத்துவம் அளிக்கப்படும்.இத்திட்டத்தில் பணிபுரியும்
முதுகலை ஆசிரியர்களை அரசு மேல்நிலைப்பள்ளி காலியிடங்களில் நியமிக்க,
பள்ளிக்கல்வித்துறை முடிவெடுக்கும்,'' என்றார்.
இன்றைய டிட்டோஜாக் கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் ஒத்திவைப்பு, அடுத்த கூட்டம் 26ஆம் தேதிக்கு மீண்டும் கூடும்
இன்று சென்னையில் திரு.மீனாட்சி சுந்தரம்
தலைமையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டம் மாலை 4.00மணி வரை நீடித்தது எனவும்,
அனால் இன்றைய கூட்டத்தில் பங்குபெற்ற சங்கங்களுக்கு இடையே முடிவு
எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னையில் ஒரு
மாபெரும் பேரணி நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது, அந்த கருத்திற்கு
எதிர்ப்பு கிளம்பியதால் முடிவு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கடுத்தப்படியாக தமிழகம் முழுவதும் ஒரே
நாளில் மாவட்ட அளவில் போராட்டம் நடத்தி அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு
கொடுக்கலாம் எனவும், இதற்கு அரசு செவி சாய்க்கவில்லையெனில் உடனடியாக
டிட்டோஜாக் கூடி வேலை நிறுத்தம் அல்லது அடுத்தகட்ட போராட்டம் குறித்து
முடிவெடுக்கலாம் என்று பெரும்பாலான சங்கங்கள் கருத்து தெரிவித்தன.
ஆனால்
முன்னணி சங்கம் ஒன்று மட்டும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து
உடனடியாக வேலை நிறுத்தம் செய்வோம் என்றும், நாங்கள் ஏற்கெனவே போராட்டம்
நடத்திவிட்டோம் என்றும், இனி நடத்தமாட்டோம் என்றும் கருத்து தெரிவித்தது.
இதையடுத்து இந்த கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் வருகிற 26ஆம்
தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் இனி வரும் கூட்டத்தில் சுழற்சி
முறையில் அனைத்து சங்க கட்டடத்தில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.
Labels:
news
இரட்டைப்பட்டம் வழக்கு ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு
இன்று (13.12.2013 )சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல் 1.10 மணியளவில்
விசாரணைக்கு வந்தது. மேலும் டிசம்பர் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டிய அரசு தரப்பில் AFFIDAVIT இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பு AFFIDAVIT க்கு
தேவையான தகவல்கள் திரட்ட வேண்டி வழக்கறிஞர்கள் கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஜனவரி 2க்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறபித்தார்.
இதனால் வழக்கு இன்றும் முடியாமல்
போனது. பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் பெறமுடியாமல் உள்ளனர். மேலும் பல ஆசிரியர்கள்
தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் தவித்து
வருகின்றனர்.
நன்றி : திரு.விஸ்வநாத் மற்றும் திரு.ஜான்சன்
நன்றி : திரு.விஸ்வநாத் மற்றும் திரு.ஜான்சன்
தேர்வு பணியில் நடுநிலை பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்
பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும்
ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி
ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை.
இந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள
பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு
பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்
கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி
ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு
செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பறிபோகும் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள்: தமிழக அரசு பரிசீலனை
மத்திய அரசின் நிதிக் குறைப்பு நடவடிக்கையால், தமிழகத்தில்
அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) வட்டார வள மைய மேற்பார்வையாளர்
பணியிடங்கள் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம்
2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இதில், இயக்குனர், இணை
இயக்குனர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய
மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.
ஒன்று முதல் 14 வயது வரையான குழந்தைகளுக்கு தரமான இலவசக் கல்வி கிடைக்கச்
செய்வது தான் இத்திட்டத்தின் நோக்கம். இதுதவிர பள்ளிகள் கட்டமைப்பு வசதியை
மேம்படுத்துவது, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதவிர, திட்டத்தின் உட்பிரிவான உள்ளடங்கிய
கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பகல்நேர மையங்கள், ஆதார மையங்கள்
செயல்படுகின்றன.
இதன்மூலம், காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, கை, கால்
செயலிழந்த, மூளை முடக்கு வாதத்தால் பாதித்த, ஆட்டிசம் மற்றும் கற்றலின்
குறைபாடால் பாதிப்பு என எட்டு வகை பாதிப்புடைய ஒன்று முதல் 18 வயது வரையான
இயலாக் குழந்தைகளும் லட்சக்கணக்கில் பயன்பெறுகின்றனர். இத்திட்டங்களை ஆய்வு
செய்ய ஒவ்வொரு மையங்களிலும், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அந்தஸ்தில்,
வட்டார மேற்பார்வையாளர்கள் உள்ளனர். இத்திட்டத்தின் முக்கியப் பணியிடமாக
இது கருதப்படுகிறது. மத்திய அரசு நிதிக்குறைப்பு காரணமாக, மேற்பார்வையாளர்
பணியிடங்களை நீக்குவது உட்பட சில மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசு
பரிசீலித்து வருகிறது.
அரசு உத்தரவு?:
இதற்கிடையே மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாற்றம் செய்வது தொடர்பாக (அரசாணை எண்: 212/10.12.2013) உத்தரவு நேற்று வெளியாகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. திட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளதால் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை திட்டத்தில் இருந்து நீக்குவது தொடர்பான எவ்வித முடிவும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அதேநேரம், சீனியாரிட்டி அடிப்படையில், ஆண்டுதோறும், ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேர், "ரெகுலர்' பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக பணிமாற்றம் செய்யப்படும் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றார்.
எதிர்ப்பு:
இத்திட்ட
மேற்பார்வையாளர்களை "ரெகுலர்' பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்தால்,
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணி ஒதுக்க வேண்டும். அப்படி
ஒதுக்கும்பட்சத்தில், ஏற்கனவே, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு
"பேனலில்' உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும், என உயர்நிலை பள்ளி
தலைமையாசிரியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு
உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர்
சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், மாநிலம் முழுவதும் 500 உயர்நிலை
தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதை, "பேனலில்' உள்ள
தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலம் நிரப்ப வேண்டும்.
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்களை "ரெகுலர்' பள்ளிகளுக்கு
மாற்றம் செய்யக் கூடாது. இதுகுறித்து, கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர
முருகனை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம், என்றார்.பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ள்ளிக்கூடங்களில்
படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும்
வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும்
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளாதாக அறியப்படுகிறது.
மாணவர்களுக்கு பாதுகாப்பு தேவை
ஒரு சில பள்ளிகளில் பொருட்கள் காணாமல்
போவதாகவும், பள்ளிக்கூட வளாகத்திற்குள் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல்
நடமாட்டம் இருப்பதாகவும், பள்ளிகளுக்குள் அத்துமீறி செல்வதாகவும்,
அவர்களால் பள்ளிக்கூட பொருட்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் என்னுடைய நேரடி
கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே இத்தகைய நடவடிக்கையை தலைமை ஆசிரியர்கள் விழிப்புடன் இருந்து தவிர்க்கவேண்டும். இது தலைமை ஆசிரியர்களின் கடமை.
பள்ளிக்கூட மாணவர்–மாணவிகளுக்கு உரிய
பாதுகாப்பு தேவை. மாணவர்கள் அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
மாணவர்களின் கல்வி மற்றும் தேர்வு பாதிக்காத வகையிலும், கற்றல் மற்றும்
கற்பித்தல் பணிக்கு இடையூறு ஏதும் நேரிடாத வகையிலும்
பாதுகாப்புஅளிக்கப்படவேண்டும்.
பொருட்களுக்கு பாதுகாப்பு
அதுமட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு வழங்கப்படும்
நலத்திட்ட பொருட்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பள்ளிக்கூட
வளாகத்தினுள் பள்ளியைச்சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலை கண்டிப்பாக
தவிர்க்கப்படவேண்டும். பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
பள்ளிக்கூட பொருட்களுக்கு பாதுகாப்பு குறைவு எந்தக்காரணம்கொண்டும்
வரக்கூடாது. இந்த அறிவுரைகளை அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டு அதன்படி
நடக்கவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.
30% ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறி
மதுரை மாவட்டத்தில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 30 சதவிகிதம் அரசு ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
தொடக்கக் கல்வித் துறை வாய்மொழி உத்தரவுப்படி, மாவட்டந்தோறும் மாணவர்கள்
எண்ணிக்கை 20க்கும் கீழ் உள்ள பள்ளிகள், அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள்
எண்ணிக்கை விவரங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணிகள் நடக்கின்றன.மதுரை
மாவட்டத்தில் இப்பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
இத்துறையின் கீழ், 963 ஆரம்பப் பள்ளிகள், 312 நடுநிலைப் பள்ளிகளில் 1.51
லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். தற்போதைய ஆய்வில், ஒவ்வொரு கல்வி
ஒன்றியத்திலும் (மொத்தம் 15 கல்வி ஒன்றியங்கள் உள்ளன), சராசரியாக 30
சதவிகிதம் பள்ளிகளில், மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 20க்கும் கீழ் உள்ளதாக
அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வரும் காலங்களில், இப்பள்ளி மாணவர்களை அருகாமையில் இயங்கும் மற்றொரு
அரசு பள்ளியுடன் இணைக்கும் திட்டத்தின் அடிப்படையில் தான் இந்த ஆய்வு
நடத்தப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாணவர்களின்
சேர்க்கையை அதிகரிக்க பல நடவடிக்கையை அரசு எடுத்து வரும் நிலையில்,
எண்ணிக்கையை காரணம் காட்டி, பள்ளிகள் மூடப்படும் நிலை குறித்து
கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன்: கிராமப்
பகுதி பள்ளிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்
மக்கள் எதிர்பார்ப்பு. எண்ணிக்கையை காரணமாக வைத்து, பள்ளிகளை மூடுவதற்கான
திட்டம் இருந்தால், அதை அரசு கைவிட வேண்டும். மதுரையில் நடந்த ஆய்வில், 30
சதவிகிதம் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறுகின்றனர்.
குறிப்பாக, உசிலம்பட்டி கல்வி ஒன்றியத்தில், 20 மாணவர்களுக்கு கீழ்
பல்வேறு பள்ளிகளில், தலைமையாசிரியர் தவிர, பிற ஆசிரியர்களை அருகாமையில்
இயங்கும் பள்ளிகளுக்கு அயல் பணிக்காக அனுப்பி வைத்து கல்வி அதிகாரிகள்
நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை தவிர்த்து, கிராமங்களில் மாணவர்கள்
சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.
அரசு ஊழியர் மகள் ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்
அரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு
தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்களின், திருமணமாகாத, விவாகரத்தான,
விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது
தொடர்பாக, 2011ல் அரசாணை வெளியிடப்பட்டது.
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை சிறப்பு ஆசிரியர் பணியிடம் நிரப்ப டிஆர்பி அலுவலகத்தில் முற்றுகை
சென்னை உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்
பணியிடங்களை டிஆர்பி உடனடியாக நிரப்ப கோரி சிறப்பு ஆசிரியர்கள் நேற்று
டிஆர்பி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கல்லூரி சாலை
டிபிஐ வளாகத்தில் உள்ள டிஆர்பி அலுவலகம் முன் சிறப்பு ஆசிரியர்கள் நேற்று
காலை திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு
ஏற்பட்டது. உடற்கல்வி மற்றும் சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதாக அறிவித்து
17 மாதங்கள் ஆகியும் நியமனம் செய்யாததை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.
இதுகுறித்து அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் ராமர் கூறியதாவது: கடந்த மே 8ம் தேதி டிஆர்பி, அரசாணை 177ன்படி பள்ளிக் கல்வி சிறப்பு விதிகளின் கீழ் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்தது. பதிவு மூப்பு அடிப்படையில் இது நடக்கும் என்றும் தெரிவித்தது. 440 உடற்கல்வி ஆசிரியர்கள், 196 ஓவிய ஆசிரியர்கள், 137 தையல் ஆசிரியர்கள், 9 இசை ஆசிரியர்கள் என மொத்தம் 782 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 17 மாதங்களாகியும் அதற்கான பணியை டிஆர்பி தொடங்கவில்லை. மாநில பதிவு மூப்பு பட்டியல்களை வெளியிட்டு உடனடியாக சான்று சரிபார்ப்பு நடத்த வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தோம்.
ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பணிகளை முடித்துவிட்டுத்தான் இந்த பணிகளை தொடங்குவோம் என்று டிஆர்பி தலைவர் கூறுகிறார். இதில் முதல்வர் தலையிட்டு சான்று சரிபார்ப்பு தொடங்க உத்தரவிடும்படி மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு ராமர் தெரிவித்தார்.முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் டிஆர்பி தலைவர் விபுநய்யார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் ராமர் கூறியதாவது: கடந்த மே 8ம் தேதி டிஆர்பி, அரசாணை 177ன்படி பள்ளிக் கல்வி சிறப்பு விதிகளின் கீழ் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்தது. பதிவு மூப்பு அடிப்படையில் இது நடக்கும் என்றும் தெரிவித்தது. 440 உடற்கல்வி ஆசிரியர்கள், 196 ஓவிய ஆசிரியர்கள், 137 தையல் ஆசிரியர்கள், 9 இசை ஆசிரியர்கள் என மொத்தம் 782 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 17 மாதங்களாகியும் அதற்கான பணியை டிஆர்பி தொடங்கவில்லை. மாநில பதிவு மூப்பு பட்டியல்களை வெளியிட்டு உடனடியாக சான்று சரிபார்ப்பு நடத்த வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தோம்.
ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பணிகளை முடித்துவிட்டுத்தான் இந்த பணிகளை தொடங்குவோம் என்று டிஆர்பி தலைவர் கூறுகிறார். இதில் முதல்வர் தலையிட்டு சான்று சரிபார்ப்பு தொடங்க உத்தரவிடும்படி மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு ராமர் தெரிவித்தார்.முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் டிஆர்பி தலைவர் விபுநய்யார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
Teaching posts in Kendriya Vidyalaya Sangathan.
Teaching posts in Kendriya Vidyalaya Sangathan.
Employment News - Notice to the candidates for written exam to teaching and misc. teaching posts in KVS.
Kendriya Vidyalaya Sangathan
18, Institutional Area Saheed Jeet
Singh Marg
New Delhi-110016.
NOTICE
18, Institutional Area Saheed Jeet
Singh Marg
New Delhi-110016.
NOTICE
Kendriya Vidyalaya Sangathan is receiving requests from the candidatesregarding change of examination centres or change of date of examination for the teaching and misc.teaching posts. In this regard, KVS hasclearly indicated in the DOWNLOAD OPTION UNDER EMPLOYMENT NOTICE/ADMIT CARD that REQUEST FOR CHANGE OF TEST CENTRE/VENUE WILL NOT BE ENTERTAINED.
Regarding change of date of examination it is informed that the written examination for recruitment is being conducted at All India level and all arrangements have been made. As such it is not possible to change the date of examination.The candidates of Persons with Disability category are informed that the KVS will provide them the scribe if they require. Compensatory time of 20 minutes per hour of examination for persons who are making use of scribe will be given.
sd/JOINT COMMISSIONER (A\DMN.)
முதுகலை ஆசிரியர் வரலாறு தேர்வு வழக்கு தீர்ப்பு விவரம்
முதுகலை
ஆசிரியர் வரலாறு தேர்வு விடைக்குறிப்பு தவறு என தொடுக்கப்பட்ட இரு
வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பு விவரம்.
The petitioner was supplied with "C" series question paper in Historysubject.He challenges the question
Nos.7, 17, 53, 58, 82 and 90 in "C" series.
Question No.90 which reads as follows;
"90.By virtue of which Act dyarchy was introduced in India?
(A)Government of India Act, 1909
(B)Government of India Act, 1919
(C)Government of India Act, 1935
(D)Government of India Act, 1947".
According to
the TRB key answer, boththe options "B" & "C" are the correct
Answers. But, the learned counsel for the petitioner would submit that
option"B" alone is the correct answer.
JUDGEMENT :
"B" alone is the correct answer
FOR Q NO .7, 17, 53, 58, AND 82 IN "C" series TRB KEY ANSWER IS CORRECT
Board to
revalue the question No.90in"C" series (History subject) and the same
question in other series also and award marks only for those
candidates,who have optioned "B" as the correct answer.
CASE 2
The challenge in this writ petition is
to the key answers to certain questions in History subject. The
petitioner has challenged the key answers of
question Nos.48 & 50 in "A" series.
FOR Q NO ., 48, AND 50 in "A" series TRB KEY ANSWER IS CORRECT
"நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் தேவை"
'நாடு முழுவதும், ஆறு லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்" என மத்திய
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த
நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய அமைச்சர், பல்லம் ராஜு கூறியதாவது: நாடு
முழுவதும், ஆறு லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆசிரியர்கள்
பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, புதிய ஆசிரியர்களை தேர்வு செய்யும்
பணி நடக்கிறது. தரமான கல்வியை அளிக்க, அரசு, பல்வேறு முயற்சிகளை
மேற்கொண்டுள்ளது.
கல்வி உரிமை சட்டம் அமல்படுத்திய பின், மாணவர்களின் அடிப்படை தேவைகளை
பூர்த்தி செய்வதில், அரசு முன்னேற்றம் கண்டுள்ளது. இவ்வாறு பல்லம் ராஜு
கூறினார்.
உண்மைத்தன்மை (Genuinenity) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)
1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000
8. சென்னைப் பல்கலைக் கழகம்- துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13. Tamilnau Teacher Education University -350.
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.
நன்றி : திரு. தேவராஜன், தஞ்சாவூர்
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000
8. சென்னைப் பல்கலைக் கழகம்- துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13. Tamilnau Teacher Education University -350.
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.
நன்றி : திரு. தேவராஜன், தஞ்சாவூர்
Frequently Asked Questions for TET
கேள்வி 1: சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக
பட்டச் சான்றிதழ் (Provisional Certificate) வைத்திருந்தால் போதுமா? அல்லது
நிரந்தர பட்டச் சான்றிதழ் (Convacation Certificate) அவசியம் தேவையா?
லேபிள்கள்:
TET
மாநில பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான அரசாணை இன்று (03.12.2013) வெளியாகும் என எதிர்பார்ப்பு
மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை
ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் வாய்ப்பு வழங்கப்படாமல்
இருந்தது. இது சார்ந்து வழக்கு தொடுக்கப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று
மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் பெறும் வாய்ப்பு அவர்களுக்கு
ஏற்படுத்தப்பட்டது.
ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!
காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer
Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு
உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
1998ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தால் நிரப்பப்பட்ட தற்காலிக கணினி
ஆசிரியர்களை தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய 2006ம் ஆண்டு தமிழக அரசால்
முடிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு 2008, 2010 மற்றும் 2012ம்
ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட கணினி ஆசிரியருக்கான
சிறப்புத்தேர்வுகளில் முறையே 894, 125 மற்றும் 15 எண்ணிகையிலான
ஆசிரியர்கள் மட்டும் 50% மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து 1440 தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம்
செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து அவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில்,
நேற்று அந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும்
கே.கே. சசிதரன் அவற்றை தள்ளுபடி செய்து, "தகுதித் தேர்வில் வெற்றி பெறாத
ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே" என கூறினர். மேலும் அவர்கள்
கூறியதாவது: "அந்த ஆசிரியர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்டு முறைகள்
வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், அவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே அவர்கள்
பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே.
இருந்த போதும் அவர்களின் பெயர்களை
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அவர்கள் முன்னே பெற்றிருந்த பதிவு மூப்புடன்
சேர்க்கலாம். தற்போதைய அரசின் கொள்கைப்படி அவர்கள் ஆசிரியர் தேர்வு தகுதித்
தேர்விலும் கலந்து கொள்ளலாம். அப்பொழுது வயது வரம்பை தளர்த்தக் கோரி
அவர்கள் ஆசிரியர் தேறு வாரியத்தைக் கேட்டுக் கொள்ளலாம்." மேலும் காலியாக
உள்ள அந்த 1440 கம்ப்யூட்டர் டீச்சர் பணியிடங்கள் 31-1-2014க்குள்
நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். *இந்த செய்தியை
படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கணினி படித்தவாரக இருந்தால் நீங்கள்
குறித்துக் கொள்ளவேண்டியது.
நீதிபதிகள் ஆசிரியர் நியமனம் பற்றி தெளிவாக
கூறவில்லை. அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு மே 2014க்கு பிறகுதான்
நடத்தப்படக் கூடும். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலோ
பெரும்பாலான கணினி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை. அடுத்த ஜனவரிக்குள் பணி
நியமனம் முடிக்கப்பட வேண்டிய நிலையில் அதற்கு முன்பாக கணினி
ஆசிரியர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்தப்படலாம் அல்லது பதிவு மூப்பு
அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம்.
திறந்த நிலை பட்டங்கள் நிலை : மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி.,
தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள்,
ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என,
யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள், தொலை தூர கல்வி, திறந்த நிலை கல்வி முறைகளில் பட்டங்களை வழங்கி வருகின்றன. அடிப்படை கல்வி முடித்தவர்களும், இந்த முறைகளில் பயி?ன்று பட்டதாரியாக உயர்த்துள்ளனர். இதில், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இடம் பெற்றுள்ளனர். திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறையில் பட்டங்களை பெற்று பணியாற்றுவோர், தாங்கள் பட்டதாரிகள் என்பதால், உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், இவ்வகையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் பெற்ற பட்டங்களுக்கு சமமானது அல்ல என, தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, இவ்வகை பட்டம் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறைக்கு சமமானது என, யு.ஜி.சி., தெளிவுபடுத்திஉள்ளது.
இதுகுறித்து, நாடெங்கிலும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள், மாநில பல்கலைக் கழகங்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கு, யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பல்கலைக் கழகங்கள் திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறைகளில் பட்டம், பட்டய படிப்புகளை நடத்தி, அதற்கான சான்றுகளை வழங்கியுள்ளன.
இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறையில் பெறப்படும் பட்டங்களுக்கு
சமமானவை என, யு.ஜி.சி., ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. என்றாலும், சில
இடங்களில் இது குறித்த சர்ச்சை நீடிப்பதால், இவ்வகை பட்டங்கள் ரெகுலர்
முறைக்கு சமமான பட்டங்களே என, மீண்டும் அறிவிக்கப்படுகிறது. அவர்கள் பெற்ற
பட்டங்களும் அங்கீகரிக்கப்படும் என, அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு,
சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Expected DA from Jan, 2014 now confirmed to be 100% - may touch 101%
![]() |
| 100% DA/DR from Jan, 2014 |
| Expectation | Increase/ Decrease Index |
Month | Base Year 2001 = 100 |
Total of 12 Months |
Twelve monthly Average |
% increase over 115.76 for DA |
DA announced or will be announced |
| 1 | Dec,12 | 219 | 2512 | 209.33 | 80.83% | 80% | |
DA from
July, 2013
order has
been issued
by finmin
|
2 | Jan,13 | 221 | 2535 | 211.25 | 82.49% | 90% |
| 2 | Feb,13 | 223 | 2559 | 213.25 | 84.22% | ||
| 1 | Mar,13 | 224 | 2582 | 215.17 | 85.87% | ||
| 2 | Apr,13 | 226 | 2603 | 216.92 | 87.38% | ||
| 2 | May,13 | 228 | 2625 | 218.75 | 88.97% | ||
| 3 | Jun,13 | 231 | 2648 | 220.67 | 90.62% | ||
| Jul AICPIN | 4 | Jul,13 | 235 | 2671 | 222.58 | 92.28% | |
| Aug AICPIN | 2 | Aug,13 | 237 | 2694 | 224.50 | 93.94% | |
| Sep AICPIN | 1 | Sep,13 | 238 | 2717 | 226.42 | 95.59% | |
| Oct AICPIN | 3 | Oct,13 | 241 | 2741 | 228.42 | 97.32% | |
| 1st Expection for 100% |
1 | Nov,13 | 242 | 2765 | 230.42 | 99.05% | 100% |
| 4 | Dec,13 | 246 | 2792 | 232.67 | 100.99% | ||
Expected DA/DR from January, 2014
|
|||||||
| 2nd Expectation for 100% |
3 | Nov,13 | 244 | 2767 | 230.58 | 99.19% | 101% |
| 1 | Dec,13 | 245 | 2793 | 232.75 | 101.06% | ||
Expected DA/DR from January, 2014
|
|||||||
| 3rd Expectation: for 101% |
2 | Nov,13 | 243 | 2766 | 230.50 | 99.12% | 101% |
| 3 | Dec,13 | 246 | 2793 | 232.75 | 101.06% | ||
Expected DA/DR from January, 2014
|
|||||||
| 4th Expectation for 101% |
3 | Nov,13 | 244 | 2767 | 230.58 | 99.19% | 101% |
லேபிள்கள்:
News
மேற்பார்வையாளரின் ஆசிரியர் விரோதப் போக்கைக் கண்டித்து TNPTF உண்ணாவிரதம்
தொடர்ந்து ஆசிரியர்
விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பொன்னமராவதி வட்டார வள மைய
மேற்பாhவையாளரைக் கண்டித்து பொன்னமராவதியில் சனிக்கிழமையன்று ஆரம்பப்பள்ளி
ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
பொன்னமராவதி
வட்டார வளமைய மேற்பார்வையாளர் குறுவள மையக் கூட்டங்களில் பெண் ஆசிரியர்க
ளை நிற்கவைத்தும், பெண்மையைக் கொச்சைப்படுத்தியும், ஒருமையிலும் பேசி
அவமானப் படுத்துவது, தலைமை ஆசிரியர்கள் மீது வேண்டுமென்றே கையாடல் வழக்குப்
போடுவேன் என மிரட்டுவது, பள்ளிப் பார்வைக் குறிப்புகளில் தனக்குப்
பிடிக்காத ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் குறிப்பு எழுதுவது
உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இத்தகைய
ஆசிரியர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர்
எஸ்.மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் ச.அலெக்சாண்டர்
துவக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி வட்டாரச் செயலாளர்
பழ.தேவேந்திரன் உள்ளிட்ட மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பேசினர்.
போராட்டத்தை
ஆதரித்து அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன் பேசினார். உண்ணா
விரத்தை முடித்து வைத்து சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்
கோ.திருப்பதி சிறப்புரை யாற்றினார். முடிவில் வட்டாரப் பொருளாளர்
க.புவனேஸ்வரன் நன்றி கூறினார். உண்ணாவிரத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து
கொண்டார்.
லேபிள்கள்:
TNPTF
பணி நியமனத்திற்காக காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2,000 தையல், ஓவியம் உள்ளிட்ட
பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில் சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடந்தது. 5,000 பேர் கலந்துகொண்டனர்.
ஆனால், ஏழு மாதமாகியும் பணி உத்தரவு வழங்கப்படாததால், அவர்கள் பரிதவிப்பில்
உள்ளனர்.
பள்ளி கல்வித்துறையில், கடந்தாண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்
கீழ், தையல், ஓவியம், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பாடங்களுக்கு, 16 ஆயிரம் பகுதி
நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம்
வழங்கப்பட்டது. இதில், பின்னர், பல்வேறு காரணங்களால் 2,000 காலிப்பணியிடம்
ஏற்பட்டது. இதை மீண்டும் நிரப்ப, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகம் மூலம், கடந்த ஜூனில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
நேர்முகத்தேர்வு நடந்தது. 5,000 பேர் கலந்துகொண்டனர். ஆனால், ஏழு
மாதமாகியும், அவர்களுக்கு பணி நியமனம் உத்தரவு வழங்கப்படவில்லை.
நேர்முகத் தேர்வில் பங்கேற்ற லெட்சுமி கூறுகையில், "திருப்பூரில்
தனியார் மில்லில் தையல் வேலை செய்து வந்தேன். அரசு ஆசிரியர் வேலை என்பதால்
விண்ணப்பித்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து
கொண்டேன். மாதம் ஏழு கடந்து விட்டது. ஆனால், முடிவு தெரியவில்லை.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கேட்டால், எங்களுக்கு எந்த
உத்தரவும் வரவில்லை, தெரியாது என்கின்றனர். இதை நம்பி, மில் வேலையையும்
விட்டுவிட்டேன்" என்றார்.
கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த ஆசிரியர் பணிக்கு,
தொகுப்பூதியம் வழங்க மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. அதேபோல்,
ஏற்னவே பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் மாற்று பணியிடம் கேட்பதால்,
இவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. இவர்களை, விரைவில் பணி
நியமனம் செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" என்றார்.
ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதில் ஆர்வம் குறைவு: மூடுவிழாவை நோக்கி கல்லூரிகள்
ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் மாணவர்களிடம்
குறைந்துள்ளதால் பல ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடு விழாவை நோக்கி
பயணிக்கத் துவங்கி உள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் பி.எட்., கல்லூரிகள் -28 , பட்டய
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் - 51, செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி
நிறுவனங்களில் ஏறக்குறைய 5000 இடங்கள் உள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்
பி.எட்., கல்லூரிகளில் சேர மாணவ மாணவிகளிடையே ஆர்வமும் போட்டியும்
இருந்தது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த
மாணவர்கள்கூட மருத்துவம், இன்ஜினியரிங் படிப்பைத் தவிர்த்து ஆசிரியர்
பயிற்சியில் சேர ஆர்வம் காட்டினர். மொத்தமுள்ள இடங்களை விட இரு
மடங்கிற்கும் அதிகமாக மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலை இருந்தது.
இந்த நிலை மெல்ல மெல்ல மாறி, தற்போது ஆசிரியர் பயிற்சி
நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இந்தாண்டு, ஆசிரியர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தலைகீழாக மாறியுள்ளது.
விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் உறுதி என்ற போதிலும் கூட பல
கல்லூரிகளில் முழுவதுமாக பி.எட்., டி.டி.எட்., இடங்கள் நிரம்பவில்லை.
இந்தாண்டில் மாணவர்களை சேர்க்க, தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் படாத
பாடுபட்டன.
மூடுவிழாவை நோக்கி...
லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்
சேர மாணவர்களிடையே கடும் போட்டி இருக்கும். இந்தப் பள்ளியில் 100 இடங்கள்
இருந்தபோதிலும், இந்தாண்டு 60 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
சில ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கு
கீழேதான் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. வரும் ஆண்டுகளில் 25 சதவீத
இடங்களாவது நிரம்புமா என்ற கேள்விகுறி ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில்
மவுசு குறைந்துவிட்டதால், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மெல்ல மெல்ல மூடு
விழாவை நோக்கி பயணிக்கத் துவங்கியுள்ளன.
காரணம் என்ன?
ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பவர்கள் ஐந்தாம் வகுப்பு
வரையிலான பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம். ஆனால், புதுச்சேரியில் ஆரம்ப
பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற
வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. தேர்ச்சி பெற்றாலும் மாநில அளவில்
வேலைவாய்ப்பு அலுவலக பணி மூப்பு அடிப்படையில் தான் வேலை கிடைக்கும். இது
போன்ற சிக்கல் காரணமாக ஆசிரியர் படிப்பை மாணவர்கள் இந்தாண்டு
ஒதுக்கியுள்ளனர். புற்றீசல்கள் போல் அதிகரித்துவிட்ட கல்வியியல்
நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக
அமைந்துவிட்டன.
ஆர்வம் இல்லை
ஏற்கெனவே இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களே
போணியாகாத நிலை உள்ளதால், புதிதாக ஆசிரியர் பயிற்சி பள்ளி துவங்கும்
எண்ணத்தில் இருந்தவர்கள் உஷாராகி விட்டனர். கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர்
பயிற்சிப் பள்ளி துவங்க அனுமதி கேட்டு ஒரு விண்ணப்பமும் வரவில்லை. ஒரே ஒரு
கல்வியியல் கல்லூரி மட்டுமே இந்தாண்டு சீட் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
என விண்ணப்பித்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் புதிய பள்ளிகளை துவங்க
என்.சி.டி.இ.யிடம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் யாரும் ஆர்வம் காட்டவில்லை.
லேபிள்கள்:
News
முதுகலைத் தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தேதி அறிவிப்பு
எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற
அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வரும் 02.12.2013 அன்று அவ்வழக்கு நீதியரசர்கள்
ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன்ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு
வருகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் அடுத்த கட்டத்தை முதுகலை ஆசிரியர்
பணிக்கு தேர்வெழுதியுள்ள அனைவரும் மிகுந்த பரபரப்புடன் எதிர்
நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வழியில் முதுகலை படித்திருந்தாலும் ஆசிரியர் பணி ஐகோர்ட் உத்தரவு
முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில்
முடித்திருந்தாலும், மனுதாரரின் பிற தகுதிகள் திருப்தி
அளிக்கும்பட்சத்தில், ஆசிரியர் பணிக்கு டி.ஆர்.பி., பரிசீலிக்க, மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கமுதி நீராவியை சேர்ந்த மாரியம்மாள் தாக்கல்
செய்த மனு: தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, எம்.காம்.,-பி.எட்.,
தேர்ச்சியடைந்தேன்.
ஆங்கில வழியில் பி.காம்.,தேர்ச்சியடைந்தேன். முதுகலை
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்காக, 2012-13 ல் ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி.,) நடத்திய தேர்வில் பங்கேற்றேன். "கட்-ஆப்' மதிப்பெண் 92.
எனக்கு 102 மதிப்பெண் கிடைத்தது. டி.ஆர்.பி., தரப்பில்,"நீங்கள் முதுகலை
(எம்.காம்.,) தமிழ் வழியிலும், இளங்கலை (பி.காம்.,)ஆங்கில வழியிலும்
படித்துள்ளதால், பணி நியமனம் வழங்க முடியாது,' என நிராகரித்தனர். தமிழ்
வழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என
அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு
குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜரானார். நீதிபதி: தமிழ் வழியில்
படித்தவர்களுக்கான சிறப்புச் சலுகையை, மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில்
முடித்திருந்தாலும், மனுதாரரின் பிற தகுதிகள் திருப்தி
அளிக்கும்பட்சத்தில், அவரது பெயரை ஆசிரியர் பணிக்கு டி.ஆர்.பி., பரிசீலிக்க
வேண்டும் என்றார்.
லேபிள்கள்:
Court
பிளஸ் 2 விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்
"பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று
முதல் 30ம் தேதி வரை இணையதளத்தில் இருந்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்" என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இயக்குனர், தேவராஜன் அறிவிப்பு:
செப்டம்பர், அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வுகள் நடந்தன. தேர்வு
முடிவிற்குப்பின், விடைத்தாள் நகல் கேட்டு, மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அவர்கள், www.examsonline.co.in
என்ற இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதி மற்றும் தனி தேர்வு மதிப்பெண்
சான்றிதழில் உள்ள குறியீட்டு எண்ணை பதிவு செய்து, விடைத்தாளை, பதிவிறக்கம்
செய்யலாம்.
மறுகூட்டல் முடிவுகள், விரைவில் வெளியிடப்படும். விடைத்தாள்களை
பதிவிறக்கம் செய்யும் தேர்வர்கள், மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டல் செய்ய
விரும்பினால், www.tndge.in என்ற
இணையதளத்தில், இன்று முதல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், உரிய கட்டணத்தையும் சேர்த்து,
சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், டிச., 2, 3 தேதிகளில்,
நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணத்தை, ரொக்கமாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
லேபிள்கள்:
News
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here






