ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, தொடர் மறியல் போராட்டத்துக்கு ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த கூட்டுக்குழு (ஜாக்டோ ) திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தமிழ் வழி கல்வி மேம்பாடு உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ அமைப்பு சார்பில், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் மறியல் போராட்டத்தை மேற்கொள்ள உயர்மட்டக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் ஆயத்த மாநாடு, டிச., 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் நடக்கிறது.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, டிச., 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் தொடர் மறியல் செய்ய உள்ளனர். மாவட்டத்தில், இப்போராட்டத்தில், 7,000 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளதாக, ஜாக்டோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.