கல்வித்துறை அலுவலகங்களில் மாதந்தோறும் குறைதீர்வு கூட்டம்: ஆசிரியர்கள் கோரிக்கை - தி இந்து

கல்வித்துறை அலுவலகங்களில் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.


ஆசிரியர்களின் குறைகளைப் போக்க ஒவ்வொரு கல்விஅலுவலகத்திலும் மாவட்டந் தோறும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊதிய உயர்வு நிலுவைத்தொகை, ஜி.பி.எப். முன்பணம், சிறப்பு நிலை, தேர்வு நிலை ஊதிய உயர்வு, உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு, வீட்டுக்கடன், வாகன கடன், பாஸ்போர்ட் பெற தடையின்மை சான்று (என்.ஓ.சி.) போன்றவற்றைப் பெற தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிப்பது வழக்கம்.

இவ்வாறு கல்வித்துறை அலுவலகங்களுக்கு அனுப்பப் படும் கோப்புகள், மாதக்கணக்கில் தேங்கி விடுவதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். பணம் கொடுத் தால் உடனடியாக வேலை நடப்பதாகவும் ஒவ்வொரு கோப்புக் கும் ஒரு தொகை வசூலிக்கப்படு வதாகவும் கூறுகின்றனர்.

மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ‘கவனித் தால்’தான் வேலையே நடக்கிறது என்று தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநிலதலைவர் வே.மணிவாசகன் கூறுகையில், “ஆசிரியர்களின் குறைகளைப் போக்க ஒவ்வொரு கல்வி அலுவலகத்திலும் மாவட்டந் தோறும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்றுபள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் தேவராஜன் உத்தரவு பிறப்பித்தார்.அந்த உத்தரவு நடைமுறைப்படுத் தப்படாமலே உள்ளது. மாதந்தோறும் ஆசிரியர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டால், இதுபோன்ற பிரச்சினைகள் ஓரளவு முடிவுக்கு வரும்’’ என்றார்.

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2014-15 ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்திருப்பதாவது: பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெற்று தருவதில் கால தாமதம் ஏற்படக்கூடாது. அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை விடுமுறை தினங்களிலேயே பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். இலவச பஸ் பாசை போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்து பெற்று, பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2 ல் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு: மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு தர மத்திய, மாநில அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவை ஊழியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன. 

மத்திய, மாநில அரசுப் பணிகளில் சுமார் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வரை யறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப் பட்டு வந்தது. இதன்மூலம் ஊழியர் களின் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படாது. ஓய்வு பெற்ற பின்பு அடிப்படை சம்பளத் தில் 50 சதவீதம் ஓய்வூதியம் அளிக்கப்பட்டது. 

கடந்த 2004-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, ‘பங்களிப்பு ஓய்வூதியம்' என்ற புதிய திட்டத்தை கொண்டுவர முயற்சித்தது. அதன்படி நாடாளு மன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பால் மசோதா கிடப்பில் போனது. 

அதன்பிறகு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து பாஜக ஆதரவுடன் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு ஆதரவு அளித்து வாக்களித்தது. 

பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் இல்லை
புதிய ஓய்வூதிய திட்டப்படி ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப் படுகிறது. அத்துடன் அரசு அளிக் கும் 10 சதவீதம் தொகை மற்றும் 8 சதவீத வட்டியுடன், ஊழியர்கள் ஓய்வுபெறும்போது மொத்த தொகையாக (செட்டில்மென்ட் தொகை) அளிக்கப்படும். அதன் பின்னர் எந்தவிதமான தொகையும் மாத ஓய்வூதியமாக கிடைக்காது. பணியில் இருக்கும்போது ஊழியர்கள் இறந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் போன்ற சலுகைகள் இல்லை. 

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் இந்த பிரச்சினையை எழுப்ப மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஊதிய முறையை கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தவுள்ளன. இந்த கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கே ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளன. 

இதற்கான முடிவு கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த அகில இந்திய மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘முதலில் அமெரிக்கா, சிலி போன்ற வளர்ந்த நாடுகளில்தான் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது தோல்வியில் முடிந்தது.

 ஊழியர்களின் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்யவே அந்தந்த நாடுகளில் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.
பங்கு சந்தையில் கிடைக்கும் பணத்தை பெரிய நிறுவனங்கள் கடன் பெற்று பல்வேறு தொழில்களை செய்யும். அதன் அடிப்படையில் அமெரிக்காவில் ஜி.எம் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடன் அளிக்கப்பட்டது. அந்த நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்தது. இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் நிதி நெருக்கடியும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஓய்வூதிய திட்டம் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பானதல்ல. 

எனவே, புதிய ஓய்வூதிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த வாக்குறுதியை தரும் அரசியல் கட்சிகளுக்கே ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளோம். 

கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய அளவில் 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கங்களின் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ரூ.1700/-ம், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ரூ.1300/-ம் ஊதியமாக வழங்கப்படும் - உதவி தேர்தல் அதிகாரி


இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதித்துறை கூறிடும் காரணம்

இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதி துறை கூறிடும் காரணம் அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள்.23.8.1988.ன் படி தொடக்க கல்வி சார்நிலை பணி விதிகள் .விதி 6 ன் படி இடை நிலை ஆசிரியர் கல்விதகுதி SSLC, மற்றும் சான்றிதழ் கல்வி என உள்ளது ,விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது என உள்ளது.


        இதை கல்வி உரிமை சட்டம் 2009 ன் படியும் ,உச்ச நீதி மன்ற தீர்ப்பு படி மாற்றி அமைத்திட மனு அனுப்ப பட்டது .மீண்டும் வரும் 8.4.14.அன்று நேரில் இயக்குனரிடம் கொடுக்கப்பட உள்ளது .

            இந்த அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள் ;23.8.1988 மாற்றி தற்போதைய உண்மை நிலை படி இடை நிலை ஆசிரியர் கல்வி தகுதி +2 , டிப்ளமா என மாற்றம் செய்ய பட்டால் நமது ஊதியம் 9300+4200 என நிதி துறை மாற்றம் செய்துதான் ஆக வேண்டும்.

ஆசிரியர், அரசு ஊழியர்கள் இடது சாரிகளுக்கு வாக்களிக்க வேண்டுகோள்: தீக்கதிர் செய்தி

அவர் விடுத்துள்ள அறிக்கையில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து தனியாக தமிழ்நாட்டில் தேர்தலை சந்தித்திருப்பது இது முதல் முறையாகும் அரசுஊழியர் ஆசிரியர்களின் முதன்மையான கோரிக்கை புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து , ஏற்கெனவே அமலில் உள்ள வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
பாரதிய ஜனதா தலைமையில் இருந்த மத்திய அரசு இந்ததிட்டத்தை, 2001-ம் ஆண்டு நாடாளு மன்றத்தில் அறிமுகப்படுத்தியபோதே, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பத்தடி பாயும் என்பதற்கிணங்க அன்றுதமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அண்ணா திமுக அரசு, 01-04-2003 முதல் அமல்படுத்தியது. அது மட்டு மல்லாமல் அரசுஊழியர்களின் ஓய்வூதிய கால உரிமைகள் மீது கையை வைத்தது. இதற்கெதிராக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கிளர்ந் தெழுந்து போராடியது வரலாற்று நிகழ்வாகும். அந்த நேரத்தில் 1,70,000 அரசுஊழியர்களை அண்ணா திமுக அரசு டிஸ்மிஸ் செய்தது. பணியில் சேர்க்க மறுத்தது.

அரசுஊழியர்கள் தத்தளித்துக்கொண்டிருந்த நேரத்தில், சிஐடியு சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான தோழர் டி.கே. ரங்கராஜன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக, தமிழ்நாடு அரசு, டிஸ்மிஸ் செய்த அரசுஊழியர்களை, ஆசிரியர்களை பணியில் சேர்க்க வேண்டியதாயிற்று. அதை தொடர்ந்து நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று வந்ததிமுக அண்ணா திமுக அரசு அமல்படுத் திய புதிய பென்சன் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தியது. அது மட்டுமல்லாமல் மன்மோகன் சிங் அரசில் அங்கம் வகித்த திமுக புதிய பென்சன் திட் டத்தை அமல்படுத்திய போது வேடிக்கை பார்த்தது.புதிய பென்சன் திட்டத்தை அமல் படுத்த, பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசும், காங்கிரஸ் தலைமை யிலான அரசும் முனைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த வேலையில், இதற்கெதிராக இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில். தொடர்ந்து எதிர்த்து குரல் எழுப்பி வந்தனர். இதன் காரணமாக 10 ஆண்டு காலமாக புதிய பென்சன் திட்டம் நிறைவேற்ற முடியாமல் இருந்தது. இறுதியாக சென்ற ஆண்டு பாரதிய ஜனதாவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்து இந்த திட்டத்தை நிறைவேற்றிய அவலம் நடந்தேறியது.

அண்ணா திமுக கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் வெற்றி பெற்று வந்தால், தமிழ் நாட்டில் புதிய பென்சன் திட்டத்தை மறு பறுசீலனை செய்வேன் என்று கொடுத்த வாக்குறுதி மூன்று ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.காங்கிரஸ், பாரதிய ஜனதா, திமுக,அண்ணாதிமுக இந்த நான்கு கட்சிகளும் அரசுஊழியர் ஆசிரியர்களின் பென் சனுக்கு வேட்டு வைத்த கட்சிகள். இன்றை தேர்தல் களத்தில், இந்த நான்கு கட்சிகள் தனித் தனியாகவும், அவைகளை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.


அரசு ஊழியர்களின் பென்சனை கடைசிவரை பாதுகாக்க போராடிய, குரல் கொடுத்த இடது சாரிகளுக்கு வாக்களிக்க இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பயன் படுத்திக்கொண்டு இடதுசாரிகள் நிற்கும் 18 தொகுதிகளிலும் இலட்ச கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவர் தம் குடும்பத்தினர் என தமிழகத்தில் இடது சாரிகளுக்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அகவிலைப்படி நிலுவையை இம்முறை காலதாமதமின்றி வழங்க அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது சிறப்பு நிகழ்வா ? , ஓய்வூதியதாரர்களுக்கு என்ற சொல்லே அரசாணையில் இல்லையே?

ஒவ்வொரு முறை அகவிலைப்படி அரசணை வெளியிடப்படும் போதும் அதில் நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுவது இயல்பே. ஆயினும் தற்போது தேர்தல் என்பதால் அக்குறிப்பின் மீது அதிக கவனம் செல்வதும் இயல்பே.


 குறிப்பாக அனைத்து ஊழியர்களுக்குமான நிலுவை மற்றும் தொடர் வழங்களுக்கான தயாரிப்புகளை செய்து விட்டே அரசுகள் அரசாணைகளை வெளியிடுகிறது, ஆயினும் ஊதியம் பெற்றுத்தரும் அலுவலர்/ அலுவலகம் பொருத்து கால தாமதம் ஏற்படுகிறது. ஆயினும் சிறப்பு நிகழ்வாக விரைவிலேயே அவழங்க அதுவும் வரும் புதனுக்குள் வழங்க அழுத்தம் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆயினும் அவ்வழுத்தம் வழங்கப்பட்டாலும், தேர்தல் பயிற்சி வகுப்புகள், தேர்வு பணிக்கு மத்தியில் பிழையின்றி தாமதமின்றி வழங்கினால் அது ஆச்சரியம் தான்.
ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை அரசாணை வெளியிடப்படும் போது,
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படிக்கு தனி அரசாணை வெளியிடப்படும் ஆனால், இம்முறை அத்தகைய அரசாணைகள் வெளியிடப்படாததால்,ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கான அரசாணையை எதிர்பார்த்து உள்ளனர். இதுஓய்வூதிதாரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் அவ்வரசாணை விரைவிலேயே வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வரத் தேவையில்லை

மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் நிதியாண்டில் (2014-15) சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நேரிலோ, தபாலிலோ அல்லது பிறநபர் மூலமாகவோ அளிக்கலாம் என்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, தமிழ்நாடு மின்சார வாரியம், ரயில்வே, தபால், தொழிலாளர் சேமநல நிதி, உள்ளாட்சித் துறை மூலம் ஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. 

இது குறித்து, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தின் அலுவலர் கே.டி.குணசேகரன் வெளியிட்ட அறிவிப்பு:ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் செயல்பட்டு வரும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் உரிய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.


ஓய்வூதிய பணத்துக்கான உத்தரவு (டங்ய்ள்ண்ர்ய் டஹஹ்ம்ங்ய்ற் ஞழ்க்ங்ழ்-அசல் மற்றும் நகல்), வங்கி கணக்குப் புத்தகம், வருமானவரி கணக்கு எண் (பான் கார்டு-நகல்) ஆகியவற்றை ஓய்வூதிய அலுவலகத்துக்கு வரும் போது எடுத்து வர வேண்டும்.மேலும், ஓய்வூதியத்தை கூட்டு கணக்கு (ஒர்ண்ய்ற் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்) மூலம் பெறுபவர்கள், தங்களது துணையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால் அவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

நேரில் வரத் தேவையில்லை: ஆவணங்களைச் சமர்ப்பிக்க நேரில் வர இயலாதவர்கள், வங்கிக் கிளை மேலாளர், மாநில - மத்திய அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி, வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரில் ஒருவரிடம் சான்று பெற்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பிறநபர் மூலமாகவும் சேர்க்கலாம்.அவ்வாறு அனுப்பும் போது, ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் வாழ்வுச் சான்றுடன் வங்கிக் கணக்கு எண், ஓய்வூதிய பணத்துக்கான உத்தரவு, பான்கார்டு (நகல்கள் மட்டும்) ஆகியனவும் முக்கியமாகும்.வெளிநாட்டில் இருக்கும் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்றினை அந்த நாட்டில் உள்ள நீதிபதி, நோட்டரி, வங்கிக் கிளை மேலாளர், இந்திய நாட்டுப் பிரதிநிதி ஆகியவற்றில் ஒருவருடைய கையெழுத்தினைப் பெற்று குறிப்பிட்ட ஆவணங்களின் நகல்களை அனுப்ப வேண்டும்.

ஆகஸ்ட்டில் நிறுத்தப்படும்: ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அளிக்க வேண்டிய வாழ்வுச் சான்று மற்றும் மறுமணம் புரியாத சான்று ஆகியவற்றின் படிவங்கள் ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்ந்ஹழ்ன்ஸ்ர்ர்ப்ஹம் என்ற இணையதளத்தில் உள்ளன.ஓய்வூதியதாரர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேரிலோ அல்லது தபால் உள்பட உரியமுறையிலோ சான்றுகளை அனுப்பத் தவறினால் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிறுத்தப்படும்.ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தின் முழு முகவரி: ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-6.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பி.எட்., 2014-15 சேர்க்கை அறிவிப்பு வெளியீடு



CPS - குறைபாடுகள்

புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் - சட்டப்பிரிவு 12(5)ன் படி அரசு, ஏற்கனவே மற்ற ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களையும் பு.ப.ஒ.திட்டத்தில் சேர்க்கலாம்.


வருமான வரி பிடித்தம் செய்யாமல் அல்லது வரியில் ஒரு பகுதி பிடிக்கப்படாமல் விடுபட்டுப் போன தொகையைச் செலுத்துவது எப்படி?

ஏப்ரல் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை மாதந்தோறும் சம்பளத்தில் Advance Tax ஆக தோராயமாக ஒரு தொகை (Cess சேர்த்து) வீதம் பிடித்தம் செய்து பிப்ரவரியில் துல்லியமாகக் கணக்கிட்டு எஞ்சியுள்ள தொகையை (Cess சேர்த்து) பிப்ரவரி சம்பளத்தில் முழுமையாகப் பிடித்தம் செய்துவருமான வரிக் கணக்கில் சரிக்கட்ட வேண்டியது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் கடமை.


ஆனால் தவறுதலாகவோ இயந்திரக் கோளாறு காரணமாகவோ பணியாளர் மாறுதல் காரணமாகவோ பிப்ரவரி மாதச் சம்பளத்தில் முழுமையாகவோ பகுதியோ பிடிக்கப்படவில்லை என்றால் பின்வரும் நடைமுறையை மார்ச் 31க்குள் செய்ய வேண்டும்.

1. அத்தொகையை சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் (DDO) வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்த வேண்டும்.

2. DDOவிடம் YOURSELF FOR INCOME TAX என்ற பெயரில் அதே தொகைக்குக் காசோலை பெற வேண்டும்.

3. வருமான வரி அலுவலகத்தில் 281 எண்ணிட்ட சலான் பெற்று DDOவின் TAN எண் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

4. இந்த சலானுடன் காசோலையை இணைத்து வங்கியில் (SBI) செலுத்தி சலானின் அடிப்பாகத்திலுள்ள Acknowledgementன் பின்புறம் சம்பந்தப்பட்ட பணியாளரின் பெயர் மற்றும் PAN எண் எழுதிக் கொள்ள வேண்டும்.இந்த சலானைப் பெற்றுப் பத்திரமாக அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வருமானவரிப் பதிவேட்டில் ஒட்டிவிடவேண்டும்.

5. காலாண்டிற்கொருமுறை 24Q மின்கோப்புத் தாக்கல் செய்யும் போது இச்சலான்விவரங்களையும் சேர்த்து e-Filing பண்ண வேண்டும்.(சலானின் நகலை சார்ந்த பணியாளரின் பிப்ரவரி மாத சம்பளப் பதிவேட்டிலும், அலுவலக ரொக்கப் பதிவேட்டிலும் ஒட்டிப் பராமரித்து தணிக்கையின் போது காண்பிக்க வேண்டும்)

* எக்காரணம் கொண்டும் வங்கியில் ரொக்கமாக வருமான வரி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

* மார்ச் 31க்குள் விடுபட்டுப் போன வரியை மேற்கூறிய விதம் செலுத்தி விடவும்.

* கூடுதல் தகவல்: கடந்த ஆண்டுகளில் இதுவரை 24Q தாக்கல் செய்யாமல் உள்ள அரசுத்துறை DDOக்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200 வீதம் விதிக்கப்பட்டிருந்த அபராதம் மத்திய வருமான வரித் துறையால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

விரக்தியின் விளிம்பில் 73,000 பேர்வழக்குகளின் பிடியில் தேர்வு வாரியம்--- தின மலர் நாளேடு

கடந்த, 2013ல் நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றுள்ள 73 ஆயிரம் பேர், தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

நடந்தது என்ன? 



கடந்த, 2013, ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த ஜனவரி 20 - 27ம் தேதி வரை, நடந்து முடிந்தது. 

இறுதிப் பட்டியல் வெளியிட, தேர்வு வாரியம் தயாராக இருந்த நிலையில், இடஒதுக்கீடு பிரிவினருக்கான, 'மதிப்பெண் தளர்வு' அறிவிப்பை, கடந்த பிப்ரவரி 3ல், முதல்வர் வெளியிட்டார். இதற்குப் பிறகு தான், பெருவாரியான குழப்பங்கள், அரங்கேறத் துவங்கின.

என்ன பிரச்னை?

பொதுவாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற, 60 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும். அதாவது, மொத்த மதிப்பெண்களான, 150க்கு, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். ஆனால், முதல்வரின் அறிவிப்புப்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு, 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம் இடஒதுக்கீடு பிரிவினர், 150க்கு, 82.5 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது. இதை, 82 மதிப்பெண்களாகதேர்வு வாரியம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.இந்த வகையில், 2013 தேர்வில், 46 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தற்போது நடைபெற்று வரும் நிலையில், 'தகுதித் தேர்வு மதிப்பெண்களில் இத்தகைய சலுகை நியாயமில்லை' எனக்கூறி, ஒருதரப்பினர் வழக்கு தொடுத்துள்ளனர். 'இந்த சலுகை, எங்களுக்கும் வேண்டும்' என, 2012 தகுதித் தேர்வில், 82 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள், மனு கொடுத்துள்ளனர்.

'வெயிட்டேஜ்'க்கும் எதிர்ப்பு :

'மதிப்பெண் சலுகை' அறிவிப்பு வந்த சில நாட்களில், தகுதித் தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில் மாற்றம் செய்து, பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, 150க்கானமதிப் பெண்கள், 100க்கு என, கணக்கிடப்படும். அதில், முதல், 60 மதிப்பெண்களை, தகுதித்தேர்வு மதிப்பெண்ணும், மீதமுள்ள, 40 மதிப்பெண்களை, தேர்வு எழுதியவர்களின் முந்தைய கல்வித் தகுதி மதிப்பெண்களும் (பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்.,) நிர்ணயிக்கும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கு மிக கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இந்த புதிய முறையை எதிர்த்தும், பல்வேறு வழக்குகள்தொடரப்பட்டுள்ளன.மதுரை மாவட்டம், பாலமேட்டை சேர்ந்த கண்ணன், தான் தொடர்ந்துள்ள வழக்கு பற்றி கூறியதாவது:தகுதித் தேர்வில், 'சலுகை மதிப்பெண்கள்' மூலமாக, தகுதியற்ற நபர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதுவும் போக, ஒரு விளையாட்டு முடிந்தவுடன், அது தொடர்பான விதிகளை அமல்படுத்துவது எவ்வளவு அபத்தமோ, அப்படித்தான் இருக்கிறது, அரசின் மதிப்பெண் சலுகை உத்தரவு!தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்திருக்கும் நிலையில், மதிப்பெண்ணை தளர்த்தி, புதியதாக,46 ஆயிரம் பேரை தேர்ச்சி அடைய வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் அட்டவணை(தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்பைடயில்)

90 – 90 சதவீதத்திற்கு மேல் – 60 மதிப்பெண்கள்
80 – 90 சதவீதம் – 54 மதிப்பெண்கள்
70 – 80 சதவீதம் – 48 மதிப்பெண்கள்
60 – 70 சதவீதம் – 42 மதிப்பெண்கள்
55 – 60 சதவீதம் – 36 மதிப்பெண்கள்
(இதிலும், 39 மதிப்பெண்கள் தரவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது)
மீதமுள்ள 40 மதிப்பெண்கள் கணக்கிடப்படுவது எப்படி?
பிளஸ் 2 – 10 மதிப்பெண்கள்

பட்டப்படிப்பு – 15 மதிப்பெண்கள்
பி.எட்., – 15 மதிப்பெண்கள

சான்றிதழ் சரிபார்ப்பு பணி விவரம்(‘மதிப்பெண்கள் தளர்வு’ சலுகை பெற்றவர்களுக்கு)
இடைநிலை ஆசிரியர்களுக்கு – மார்ச் 12 – 31ம் தேதி வரைபட்டதாரி ஆசிரியர்களுக்கு – ஏப்ரல் 7 – 25ம் தேதி வரைஅதேபோல், புதிய, 'வெயிட்டேஜ்' முடிவை முற்றிலும் நீக்கியாக வேண்டும். கல்வித் திட்டங்கள், காலத்திற்கேற்ப மாறிவரும் நிலையில், 20 வருடத்திற்கு முன்னால், பிளஸ் 2 படித்தவர்களின் மதிப்பெண்ணையும், 10 வருடங்களுக்கு முன், பிளஸ் 2 முடித்தவர்களின் மதிப்பெண்ணையும், ஒரே தளத்தில் ஒப்பிட்டு, மதிப்பெண் வழங்குவது ஏற்புடையதல்ல. அப்போது, 60 சதவீத மதிப்பெண் வாங்குவதே, பெரிய விஷயம்.இப்போது, 'ப்ளூ பிரின்ட்' என்ற, மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட வசதிகளுடன், மிகச் சாதாரணமாக, மாணவர்கள், 80 சதவீதத்தை தொட்டு விடுகின்றனர். இதே நிலைமை தான், பட்டப்படிப்புக்கும்,பி.எட்., படிப்புக்கும் உள்ளது. ஆக, இந்த, 'வெயிட்டேஜ்' முறையை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முறையால், தகுதியும், அனுபவமும் வாய்ந்த நபர்கள் ஓரங்கட்டப்படுவர். இதைஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

மதிப்பெண் சலுகை ஏன்?

தகுதித் தேர்வில், இடஒதுக்கீடு பிரிவினருக்கு, தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரி, சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது கூட,'மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களின் தரத்தில் எவ்வித சமரசமும் இல்லை' என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், தகுதித்தேர்வு சம்பந்தப்பட்ட தமிழக அரசின் அரசாணை 181 - ஐ சுட்டிக்காட்டி, 'உடனடியாக, மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்' என, தேசிய ஆதிதிராவிட ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், அழுத்தம் கொடுத்ததாலேயே, அரசு உடனடியாக இம்முடிவைஎடுத்தது.அதேவேளையில், 5 சதவீத மதிப்பெண் சலுகையில், தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரித்து உள்ளதால், காலி பணியிடங்களுக்கு ஏற்ப, தேர்ச்சி விகிதத்தை சரிகட்டும் வகையில், 'வெயிட்டேஜ்'முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆரோக்கிய சூழலா? 'மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில், இத்தகைய குழப்பங்கள் நடப்பது ஏற்புடையது தானா?' என்பது குறித்து, கல்வியாளர் வி.கே.எஸ். சுபாஷ் கூறியதாவது: கடந்த, 2009ல் சட்டமாக்கப்பட்டு, 2010 ஏப்ரலில், உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் நடைமுறைக்கு வந்த, 'இலவச கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம்' தான், இந்த தேர்வுக்கு அடிப்படை.6 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, கல்வியை உறுதி செய்யும் வகையிலும், அவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் வகையிலும் தான், இந்த தேர்வு நடைமுறைக்கு வந்தது.கடந்த 2012ல், தமிழக அரசு நடத்திய முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில், வெறும், 2,448 பேர் தான் தேர்ச்சி பெற்றனர். அப்போது, காலி பணியிடங்களின் எண்ணிக்கை, அதிகமாக இருந்ததால், சுலபமான கேள்விகளோடு, மறுதேர்வு நடத்தி,15 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு, பணி ஆணைகளை அரசு வழங்கியது.இப்படி நடந்த மறுதேர்வு மூலம், ஆசிரியர்களுக்கான தகுதியில் சமரசம் செய்து கொள்ள தயாரான அரசு, இந்த வருடம் மதிப்பெண்ணில் சலுகை காட்டி, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேர்வு செய்திருக்கிறது. இத்தனை பேருக்கும் பணி கொடுப்பது சாத்தியமில்லை. அதனால் தான், புதிய, 'வெயிட்டேஜ்' முறை புகுத்தப்பட்டிருக்கிறது என்று, பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுத்திருக்கின்றனர். வழக்குகளின் போக்கு எப்படி இருந்தாலும், தீர்ப்பு, மாணவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.வேலை கிடைக்குமா? கடுமையாக உழைத்து, தீவிர ஈடுபாட்டுடன் தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றிருக்கும் எதிர்கால ஆசிரியர்கள், தற்போது நிம்மதியாக இல்லை. 'வேலை கிடைக்குமா?' என்ற சோர்வு, அவர்களின் மனம் முழுக்க நிறைந்திருக்கிறது. இது குறித்து, 2013 தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும், லோகேஸ்வரன் கூறுகையில், ''நான், 98 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் எல்லாம் முடிந்து விட்டன. ஆனால், வேலை கிடைக்குமா என்பது தெரியவில்லை. காலி பணியிடங்களின் எண்ணிக்கை, எவ்வளவு என்று தெரியாத நிலையில், எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? இது போதாதென்று, 5 சதவீத மதிப்பெண் சலுகை, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைகளை எதிர்த்து, வழக்குகள் தொடுத்திருக்கின்றனர். என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை,'' என்றார்

வழக்குகள் எத்தனை? கடந்த, 2013 தகுதித்தேர்வு சம்பந்தமாக மட்டும், குறைந்தது, 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இனிமேலும், வழக்குகள் பதிவு செய்யப்பட வாய்ப்பிருக்கிறதுஎன்கின்றனர் கல்வியாளர்கள்.அடுத்தது என்ன? தேர்தல் முடிய வேண்டும். வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாக வேண்டும். எல்லாம் சரியாக நடந்து முடிந்தால், 2013ல் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் (டி.ஜி.டி.,) மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான (எஸ்.ஜி.டி.,), இறுதிதேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.பணியிடங்கள் எத்தனை? மொத்தம், 73 ஆயிரம் பேர் தேர்வாகியிருக்கும் நிலையில், அத்தனை காலி பணியிடங்கள் இருக்குமா என்ற சந்தேகம், தேர்ச்சி பெற்றிருக்கும் அனைவரிடமும் இருக்கிறது. மே மாதத்தில் வெளியிடப்பட உள்ள, காலி பணியிடங்கள் பற்றிய விவரத்திற்கு பின்பு தான், உண்மை நிலை தெரியவரும்.அரசு செய்ய வேண்டியது குழந்தைகளில், 6 - 14 வயதுக்குள்ளோருக்கான கல்வியை உறுதி செய்ய உருவான இலவச கட்டாய கல்விச் சட்டம், அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25சதவீத இடஒதுக்கீட்டை அவர்களுக்கு வழங்கச் சொல்கிறது; ஆனால், தமிழகத்தில் அது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வை, அடிக்கடி நடத்தி, ஆசிரியர்களுக்கானதகுதியை மேம்படுத்த சொல்கிறது; அதற்கும் அரசு வழி செய்யவில்லை. இது குறித்து, கிழக்கு பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரி கூறியதாவது:இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் ஷரத்து 23 (2)ன்படி, இச்சட்டம் அமலுக்கு வந்த ஐந்து ஆண்டுகளுக்குள், அதாவது, ஏப்ரல், 2015க்குள், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களும், இந்த தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்! ஆனால், தமிழகத்தில் உள்ள 99 சதவீத ஆசிரியர்கள், இதில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை.இதுகுறித்து, மாநில அரசும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஆக, வருடத்திற்கு ஒரு முறை, காலி பணியிடங்களை நிரப்புவதற்காகநடத்தப்பட்டு வரும் இந்த தேர்வையாவது, திறம்பட நடத்தி, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தேர்வு எழுதியவர்கள் சார்பாக, தற்போது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் நியாயத்தை, பாரபட்சமின்றி ஆராய்ந்து, வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, 'தகுதியுள்ள ஒரு ஆசிரியர் ஏமாற்றப்படுவது, 100 மாணவர்களின் தோல்விக்கு சமம்' என்பதை, அரசு புரிந்து கொள்ள வேண்டும்' என்பதே, ஒட்டு மொத்த கல்வியாளர்களின் விருப்பம். 

தொடக்கக் கல்வி - கரும்பலகை திட்டத்தின் கீழ் 1610 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.1.2014 முதல் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது



பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமன ஒப்புதல்களை இரத்து செய்ய உத்தரவிடப்பட்டதற்கு பெற்ற இடைகால தடையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து CEO / DEO-களுக்கு உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு பெறாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் நியமன ஒப்புதல்களை ரத்து செய்யுமாறு அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

 

மேற்படி 07.11.2013 நாளிட்ட செயல்முறைகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்புடைய ஆசிரியர்களால் தொடரப்பட்டுள்ள வழக்குகளில், வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையாணையினை நீக்கக் கோரும் மனு மற்றும் அவ்வழக்குகளுக்கான எதிர்வாதவுரை முதலியவற்றை தயாரித்து, தொடர்புடைய அரசு சிறப்பு வழக்கறிஞரின் ஒப்புதலைப் பெற்று உடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதன் விவரங்கள் மற்றும் இவ்வழக்குகள் குறித்த நிலையினை விழிப்புடன் கண்காணித்து அவ்வப்போது இவ்வியக்கத்திற்கு தெரிவிக்குமாறும் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி  துறை உத்தரவிட்டுள்ளது   . 

அரசு ஊழியர் சங்கம் எந்த கட்சிக்கு ஆதரவு

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, காலிப்பணியிடத்தை நிரப்பி, சம்பள வரையறை உள்ளிட்ட, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதி வழங்குபவர்களுக்கு, 13 லட்சம் அரசு ஊழியர்கள் ஆதரவு அளிப்பர்,'' என, அரசு ஊழியர் சங்க மாநில செயலர், தமிழ்செல்வி தெரிவித்தார்.

ஈரோட்டில், தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நடந்த, மகளிர் கருத்தரங்கில் பங்கேற்ற, தமிழ்செல்வி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 13 லட்சம் பேர் உள்ளனர். அனைத்து மாநிலங்களும், ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைபடி, அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்று வரை கிடைக்கவில்லை.

கடந்த சட்டசபை தேர்தலின்போது, தொகுப்பு, மதிப்பு ஊதியமுறை ரத்து, புதிய பென்ஷன் திட்டம் திருத்தம், ஊதியக்குழு முரண்பாடு களைதல், ஊழியர் சங்கங்களை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை சந்தித்து பேசுதல் என, பல வாக்குறுதிகளை அளித்த, தமிழக முதல்வர், ஜெயலலிதாவை, மூன்றாண்டுகளாக சந்திக்க முடியவில்லை.

சென்னையில், முதல்வரை சந்திக்க, ஒரு லட்சம் பேரை திரட்டி, பேரணி நடத்தியபோதிலும், சந்திக்க முடியவில்லை. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, சிறப்பு கால முறை ஊதியம் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்ற, வாக்குறுதி அளிப்பவருக்கு மட்டுமே, லோக்சபா தேர்தலில், அரசு ஊழியர் சங்கம் ஆதரவு அளிக்கும். இவ்வாறு, அவர் கூறினார். தமிழகத்தில், அடுத்த மாதம், 24ல், லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வந்து, தங்க வேண்டியதில்லை. பகலில் வந்தால் போதும்: தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார்

"தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்படுகின்றனர்.

போதிய அரசு ஊழியர் இல்லாத மாவட்டங்களில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஊழியர்களை பணியமர்த்த, தேர்தல் கமிஷன், அனுமதி வழங்கி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்களை, அவர்கள் வசிப்பிடத்தில் இருந்து, இரண்டு மணி நேர பயண தொலைவிற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில், பணி அமர்த்த வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

எனவே, பெண்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வந்து, தங்க வேண்டியதில்லை. பகலில் வந்தால் போதும். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள், பணிக்கு வர முடியாத நிலையில் இருந்தால், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, விண்ணப்பிக்க வேண்டும். அவர் இறுதி முடிவெடுப்பார்.
தேர்தல் பணிக்கு வராத ஊழியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பாஸ்போர்ட் பெற அலையும் ஆசிரியர்கள் : அரசாணை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

தொடக்க கல்வித்துறை, அரசாணை 140ஐ, இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால், தொடக்க பள்ளி ஆசிரியர்கள், பாஸ்போர்ட் பெறுவதற்கான தடையின்மை சான்று வாங்க அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது. தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில், 2013 நவ., 21ல் வெளியிட்ட அரசாணை எண்:140ன் படி, 'தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கு, பாஸ்போர்ட் பெற துறையின் தடையில்லா சான்று துறைத்தலைவரால் மட்டுமே பெறப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. 
 
இனி, 'பி, 'சி மற்றும் 'டி' ஊழியர்கள் தடையில்லா சான்றிதழை, அவர்கள் துறை சார்ந்த நியமன அலுவலர்களே வழங்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. ''தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பாஸ்போர்ட் பெறுவதற்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். 
 
பாஸ்போர்ட் வாங்கினாலும், ஒவ்வொரு முறை வெளிநாடு செல்வதற்கும் துறை தலைவரிடம் தடையின்மை சான்று வாங்கவேண்டும். இதற்கு, மாற்றாக அரசு வெளியிட்ட அரசாணையை தொடக்க கல்வித்துறை இதுவரை நடைமுறைபடுத்தவில்லை. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களே தடையின்மை சான்று வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்,'' என்றார். ஆனால், தொடக்க கல்வி துறையில் இதுவரை இந்த அரசாணை குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க விரும்பும் தொடக்க பள்ளி ஆசிரியர்கள், இயக்குனர் அலுவலகத்துக்கு அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தமிழகத்தில் முதன்முறையாக இளங்கலையுடன் பி.எட். 4 ஆண்டு படிப்பு திருவாரூர் மத்திய பல்கலை. அறிமுகம்

இளங்கலை பட்டப் படிப்புடன் கூடிய பி.எட். படிப்பு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்தால் இளங்கலை பட்டம் மற்றும் பி.எட். பட்டத்தை ஒருசேர பெற்றுவிடலாம்.கலை, அறிவியல் கல்லூரிகளில் படிப்பவர்கள் ஆசிரியர் பணியில் சேர விரும்பினால் பட்டப் படிப்பை முடித்துவிட்டு அதன்பிறகு கல்வியியல் கல்லூரியில் பி.எட். படிப்பில் சேருவார்கள். அதற்கு தனியே விண்ணப்பித்து இடம் கிடைக்குமா என்று தேடிஅலைய வேண்டும்.

வரும் கல்வியாண்டில் அறிமுகம்

இந்நிலையில், பட்டப் படிப்புடன் கூடிய பி.எட். படிப்பை ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பாக (பி.ஏ.எட். மற்றும் பி.எஸ்சி.எட்.) திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வரும் கல்வியாண்டு (2014-15) அறிமுகப்படுத்த உள்ளது. கலை அல்லது அறிவியல் பிரிவு என தங்களுக்கு விருப்பமான ஒருங்கிணைந்த பி.எட். படிப்பை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

பிளஸ் 2 தகுதி

இந்த ஒருங்கிணைந்த பி.ஏ.எட்., பி.எஸ்சி.எட். படிப்புகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். ஓ.பி.சி. பிரிவினர் 55 சதவீத மதிப்பெண், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 50சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.கலை, அறிவியல் ஆகிய பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் தலா 30 இடங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகம் மத்திய கல்வி நிறுவனம் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு) வகுப்பினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு உண்டு.

ஏப்ரலில் நுழைவுத்தேர்வு

தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு அடிப்படையில் மேற்கண்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தமிழகத்தில் திருவாரூர், சென்னை, மதுரை, கோவை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நுழைவுத்தேர்வு ஏப்ரல் 26, 27-ம் தேதிகளில் நடைபெறும்.நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் ஏப்ரல் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.cucet2014.co.in) விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு, பாடத்திட்டம் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.cutn.ac.in) விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) அனுமதி கிடைத்ததும் வரும் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை பதிவாளர் (கல்வி) ஏ.ஆர்.வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற ஒருங்கிணைந்த பி.ஏ.எட்., பி.எஸ்சி.எட். படிப்புகள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மண்டல கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகள் தமிழகத்தில் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை.

கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி தவிர அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்

நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.

சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:நாடாளுமன்ற தேர்தலுக்காக தற்போது நடிகர் கமலஹாசன் மூலம், ‘உங்கள் வாக்கினை விற்காதீர்கள்’ என்று புதிதாக ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அது கேபிள் டிவி மற்றும் தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.

அரசியல்வாதிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் எடுத்து சென்றால் கண்டிப்பாக, அதற்கான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். ஆவணம் இல்லாவிட்டால், அரசியல்வாதிகளுக்குத்தான் கொண்டு செல்கிறார்கள் என சந்தேகம் ஏற்படுகிறது. அதனால்தான் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் நேற்று வரை ரூ.6.85 கோடி பணமும், ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ரூ.6 கோடி பணத்தை திரும்பப் பெற ஒருவர்கூட வரவில்லை. அதேபோன்று கடந்த தேர்தலில் கைப்பற்றப்பட்ட ரூ.36 கோடி பணத்தை பெற யாரும் வராததால் அந்த பணம் வருமான வரி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஓடும் அரசு மினி பஸ்களில் வரையப்பட்டுள்ள படம் இரட்டை இலைதான் என்று நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அதை உடனடியாக மறைக்க போக்குவரத்துறை செயலாளருக்கு கடந்த புதன்கிழமை கடிதம் எழுதப்பட்டது. தற்போது அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், திங்கட்கிழமை வரை அவகாசம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு அரசு போக்குவரத்து துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டுமென சிலர் தவறாக கூறி வருகிறார்கள். ஆனால், மறைந்த தலைவர்கள் சிலையை மூட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் எப்போதுமே உத்தரவு பிறப்பிக்கவில்லை. அதனால், தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மறைந்த அரசியல் கட்சி தலைவர்களின் சினிமா படம் குறித்த போஸ்டர் பொது இடங்களில் ஒட்டக்கூடாது. தியேட்டருக்குள் ஒட்ட தடையில்லை.

தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்காக சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்வு எழுதும் ஊழியர்கள் தகுந்த ஆதாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் காட்டி விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் தேர்தல் பணியை புறக்கணித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பெண் ஊழியர்களுக்கு, அவர்களது வீட்டில் இருந்து 2 மணி நேரம் பயணம் செய்யும் தூரத்தில்தான் தேர்தல் பணி வழங்கப்படும். வாக்குச்சாவடி மையங்களில் இரவு தங்க வேண்டிய நிலை பெண் ஊழியர்களுக்கு ஏற்படாது. சில வாக்குப்பதிவு மையங்களில் அரசு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், தனியார் பள்ளி ஊழியர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது புகார் தெரிவிக்க மாவட்டம் வாரியாக தனியாக இணையதளம் மற்றும் இலவச தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். செல்போன் மூலமாகவே படம் எடுத்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? தெரிந்துகொள்ள புதிய எஸ்எம்எஸ் வசதி:

வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள், தங்களது பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள தேர்தல் கமிஷன் எளிதான ஒரு வழிமுறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் செல்போனில் epic என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டையில் இடம்பெற்றுள்ள எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உடனே, உங்கள் செல்போனுக்கு வாக்காளரின் பெயர், பாகம் எண், எந்த ஓட்டு சாவடி உள்ளிட்ட விவரங்கள் வந்து விடும். பெயர் இல்லாவிட்டால், ‘1950 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்‘ என்று பதில் வரும். இதையடுத்து வாக்காளர்கள் தேர்தல் கமிஷனின் கால்சென்டர் நம்பரான 1950 எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் வாக்காளர் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பதை தெரிந்து கொண்டு, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்கள் 9444123456 என்ற தொலைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். பொதுமக்கள், தங்களிடம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. நாம் வாக்களித்து விடலாம் என்று நினைக்காதீர்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று பிரவீன்குமார் கூறினார்.

போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதையடுத்து இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
இதையடுத்து தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அலுவலக செய்திகள் கூறுகின்றன.
அரசு ஆசிரியர்களின் போராட்ட உணர்வை புரிந்து அரசு பின் வாங்கியுள்ளது.
இது வெற்றியின் முதல்படி!
TITO-JAC கின் ஒற்றுமை ஓங்குக!!

652 கணினி ஆசிரியர்களை பதிவு மூப்பின் படி நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


Tamilnadu Department of School Education 3rd Term Exam Timetable.

Click Here

பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு I தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் முடிகிறது I ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 25க்குள் முடிக்க வேண்டும்.

த.அ.உ.சட்டம் - 2005 - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர் அரசு பள்ளியில் பணியில் சேரும் பொழுது அரசாணை எண்.1072ன் படி ஊதியம் நிர்ணயம் செய்து பெறலாமா? அரசுக் கடிதம்




அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் போட்டோவுடன் அடையாள அட்டை அணிய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா

"அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.  
தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 64 கல்வி மாவட்டங்களாக பிரித்துள்ளனர். தமிழகத்தில், அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம், 36,813 பள்ளிகளும், 8,395 நிதியுதவி பள்ளிகளும், 11,365 சுயநிதி பள்ளி என மொத்தம், 56,573 பள்ளி உள்ளன. இந்த பள்ளிகளில், கல்வி பயிலும், 1.35 கோடி மாணவர்களுக்கு, 56,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் வரும், அனைத்து துறையினருக்கும், அரசு முதன்மை செயலர் சபிதா அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கீழ், அனைத்து அரசு பணியாளர்களும், அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில், தவறாமல் அவர்களது போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிதல் வேண்டும், என ஆணையிட்டுள்ளார். முன்பு இருந்த அடையாள அட்டையில், அரசு பணியாளர்களது பெயர் மற்றும் பதவி ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. 
 
அந்த முறையை நவீனப்படுத்தும் விதமாக, அடையாள அட்டையில், பணியாளர்களின் பெயர் மற்றும் பதவியை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம் பெறுமாறு மாற்றி அமைத்து, அடையாள அட்டை வழங்க, அனைத்து துறை தலைவர்களுக்கும், கலெக்டருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் வெற்றி, ஒரு இலட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு



''சம்பள பிடித்தம் அறிவிப்பு, தேர்தல் தேதி அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பிறகும், 60 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றது, பெரிய வெற்றி,''

ஆறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, தமிழக அரசுக்கு, 6 கோடி ரூபாய் வரை, மிச்சம் ஏற்பட்டுள்ளது. ''சம்பள பிடித்தம், தேர்தல் தேதி அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பிறகும், 60 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றது, பெரிய வெற்றி,'' என, அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், தென்னிந்திய செயலர், அண்ணாமலை தெரிவித்தார்.


மத்திய இடைநிலை ஆசிரியருக்கு இணையாக, தமிழக இடைநிலை ஆசிரியருக்கு சம்பளம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க கல்வித்துறை சார்ந்த, ஆறு ஆசிரியர் சங்கங்கள், நேற்று ஒருநாள், வேலை நிறுத்த போராட்டம் நடத்தின. இதை முறியடிக்க, தொடக்க கல்வித்துறை, பல நடவடிக்கைகளை எடுத்தது.

சம்பளம் 'கட்':

எனினும், மாநிலம் முழுவதும், 60 ஆயிரம் ஆசிரியர், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக, அண்ணாமலை தெரிவித்தார். அவர் கூறியதாவது: ஒரு பக்கம், வேலை நிறுத்தம் செய்தால், சம்பளம், 'கட்' எனவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை இயக்குனர், மிரட்டியபடி இருந்தார். மற்றொரு பக்கம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையும் தாண்டி, 60 ஆயிரம் ஆசிரியர், வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டது, மிகப் பெரிய வெற்றி. ஒவ்வொரு மாவட்டத்திலும், சராசரியாக, 2,000 ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றனர். 


 ஆனாலும், துறை அதிகாரிகள், அரசுக்கு, குறைவான எண்ணிக்கையை காட்டி, அறிக்கை அனுப்புவர். அவர்களுக்கு, வேறு வழி இல்லை. தேர்தலுக்குப் பின், முதல்வர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து, பேச்சு நடத்தி, பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு எடுக்க வேண்டும். இல்லை எனில், ஆறு ஆசிரியர் சங்கங்கள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களையும் சேர்த்து, போராட்டம் நடத்துவோம். இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

சில கேள்விகளும் பதில்களும்:

மத்திய அரசு ஊழியர் 50% அகவிலைப்படியை ஊதியத்தோடு இணைத்துவிட்டார்களா (merging)? 

இல்லை , ஒப்புதலுக்கான பரிசீலனையில் தான் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளதால், இனி தேர்தலுக்கு பின்பே அது சார்ந்த அறிவிக்க முடியும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வருமா?

தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்தாலும், இயல்பான செயல்முறை என்பதால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அரசு அறிவிக்க இயலும். எனவே அறிவிப்பு வரலாம்.


இடைநிலை to பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நடைபெறுமா, அது 2013 அல்லது 2014 எந்த முன்னுரிமைப் பட்டியல் படி வரும்?

இது குறித்து நாம் இரட்டை பட்ட வழக்கிற்கு அளித்த பதிலைப்போலவே பதில் கூற முடியும், அதாவது எது ஒன்றும் முறையான அறிவிப்பிற்கு பின்பே உறுதியாக அறிய முடியும். அது வரை காத்திருப்பதும். 

ஆசிரியர்களின் பணி விவர (Teachers Profile) பதிவினை 15.03.2014க்குள் உரிய படிவத்தில் அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை "நோட்டீஸ்'

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், 6வது ஊதியக்குழுவில், மத்திய அரசு, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கி உள்ள ஊதியத்தை, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2006, ஜன., 1ம் தேதி முதல், வழங்க வேண்டும்;


 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதித் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உட்பட, ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர்கள், கடந்த, 25ம் தேதி, உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம், 26ல், ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு எடுத்தனர். உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், நாமக்கல் மாவட்ட தலைவர், அண்ணாதுரை கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்ட, 62 ஆயிரம் ஆசிரியர்களிடம், அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம், விளக்கம் கோரப்பட்டுள்ளது; மாவட்டம் வாரியாக, கடந்த, 3ம் தேதி முதல், நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

நிர்வாக ரீதியாக, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை முறைப்படி எதிர்கொள்வோம். இவ்வாறு, அவர் கூறினார். இந்நிலையில், நாளை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அல்லாத, மற்ற ஆசிரியர் சங்கம் மற்றும் கூட்டணி சார்பில், வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளது. நாளை, பள்ளிக்கு விடுப்பு விடப்பட்டதாக தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும்  நாளை(மார்ச் 5) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வரும் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை ரூ.50 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.


பி.எட். முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பட்டதாரி ஆசிரியர்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுவதால், இரண்டாம் தாள் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வில் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

தேர்தல் அறிவிப்பு எதிரொலி: திட்டமிட்டப்படி 06.03.2014 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும், டிட்டோஜாக் முடிவு

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ள செய்தி இன்று மாலை வெளியானது, இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறவுள்ள டிட்டோஜாக் சார்பில் மாபெரும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுமோ என பரவலாக ஆசிரியர்கள் மத்தியில் பேசப்பட்டது.
 
 இதையடுத்து டிட்டோஜாக தலைவர்கள் உடனடியாக மூத்த வழக்கறிஞ்சர்களை தொடர்பு கொண்டு தேர்தல் அறிவிப்பு வெளியாவது குறித்த வினவினர். 
 
அப்பொழுது வழக்கறிஞ்சர்கள் சார்பில் வேலை நிறுத்தம் செய்வதால் ஏதும் பிரச்சனை இல்லை என்று உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து டிட்டோஜாக் தலைவர்கள் திட்டமிட்டப்படி 06.03.2014 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2014ம் கல்வியாண்டிற்கான AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம், AEEO பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2013 முடிய முழுத்தகுதி பெற்ற ஊ.ஒ / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை (SENIORITY LIST) மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப உத்தரவு

தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவருக்கெல்லாம் ஆசிரியர் வேலை கிடைக்காது


இலவசமற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனை பின்பற்றி மாநில அரசு தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை 2012ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தியது.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த தேர்வில் 6.67 லட்சம் பேர் எழுதியதில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.


 அப்போது இடைநிலை ஆசிரியர் தேர்வில் 1735 பேரும், பட்டதாரி ஆசிரியர் 713 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.கேள்வித்தாள் கடினம், தேர்வு எழுத ஒன்றரை மணி நேரம் மட்டுமே அனுமதி உள்ளிட்டவை தேர்ச்சி விகிதம் குறைய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபரில் துணைத் தேர்வு ஒன்றும் நடத்தப்பட்டது.

அப்போது தேர்வு நேரம் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. கேள்வித்தாள் கடினத்தன்மையும் மாறிட இத்தேர்வில் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல்தாள் தேர்வில் 10,397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் 8849 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சிபெற்றவர் மொத்த எண்ணிக்கை 19,246 ஆக இருந்தது.இதன் தொடர்ச்சியாக கடந்த 2013 ஆண்டு ஆகஸ்டில் 3 வது ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. முதல் தாள் தேர்வை 2.67 லட்சம் பேரும், 2ம் தாள் தேர்வை 4.11 லட்சம் பேரும் எழுதினர். இதில் முதல் தாளில் 12,596 பேரும், 2ம் தாளில் 14,496 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

கேள்வித்தாள் குளறுபடி காரணமாக கோர்ட் உத்தரவை தொடர்ந்து 2ம் தாள் தேர்வில் நீக்கப்பட்ட கேள்விகளுக்கு 2 மதிப்பெண் வழங்கப்பட்டதால் வெற்றிபெற்றவர்கள் 2436 பேர்அதிகரித்து 16,932 ஆக உயர்ந்தது. அந்த வகையில் தேர்ச்சி 29,528 ஆக உயர்ந்தது.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150க்கு 90 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. ஆனால் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருக்க மதிப்பெண்ணில் சலுகை அறிவிக்க பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

தகுதித் தேர்வில் ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு 5 சதவீத மதிப்பெண் சலுகையை தமிழக முதல்வர் அறிவித்தார். கடந்த பிப்ரவரி 6ம் தேதி இது தொடர்பாக உத்தரவிடப்பட்டது. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் 82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை மேலும் 47 ஆயிரம் அதிகரித்தது.ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த தேர்வில் 29,528 பேர் தேர்ச்சி பெற்றிருக்க, மதிப்பெண் தளர்வை தொடர்ந்து 47 ஆயிரம் பேருமாக சேர்த்து 76 ஆயிரம் பேர் நாங்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டோம், எங்களுக்கு எப்போது ஆசிரியர் வேலை தருவீர்கள்? என்ற கோரிக்கையுடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர். இந்த காத்திருப்பு இனி நீண்ட கால காத்திருப்புத்தான் என்ற கசப்பான உண்மை இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு தெரிய தொடங்கியுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி, சான்றிதழ் சரிபார்ப்பில் ஒ.கே, ஆனாலும் இவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை எப்போது வழங்கப்படும் என்பதுமில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது.தற்போதைய நிலவரப்படி 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் என்று 15 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேர்ச்சி பெற்ற 76 ஆயிரம் பேரில் இருந்து 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை கிடைப்பதற்கான முதல்கட்ட வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமையும். எனவே அடுத்து வரும் 2 கட்ட பணி நியமனத்தில் இதர காத்திருப்போருக்கு வேலை கிடைக்கும் என்று கருதினால் அது இலவு காத்த கிளியின் கதையாகிப்போய்விடும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

தகுதித்தேர்வு எழுதி 2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தேர்வாகும் அதே வேளையில், 2014ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றால் அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள், ஏற்கனவே 2013ல் காத்திருப்போருடன் ஒப்பீடு செய்யப்பட்டு அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.காலி பணியிடம் 12 ஆயிரம்; தேர்ச்சி பெற்றவர் 76 ஆயிரம்இனி பாஸ் ஆனால் போதாது; பர்ஸ்ட் கிளாஸ் வேண்டும்தேர்வும்... தேர்தலும்...தகுதிதேர்வு எழுதி ஆசிரியர் பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், தகுதித் தேர்வு தொடர்பாக அரசு புதிது புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதாக கருதுகிறோம். இது தேர்வு எழுதி வேலைக்கு காத்திருப்போர் மத்தியில் தேவையற்ற குழப்பங்களையே ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் வரும் காலங்களில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கல்வி நிறுவனங்களில் சேருவோர் எண்ணிக்கையும் கணிசமாக குறையும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக வெளிப்படையாக எதனையும் தெரிவிப்பது இல்லை. இதனால் எங்களுக்கு வேதனையே மிஞ்சுகிறது என்றனர்.தகுதித்தேர்வு எழுதி 2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தேர்வாகும் அதே வேளையில், 2014ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றால் அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள், ஏற்கனவே 2013ல் காத்திருப்போருடன் ஒப்பீடு செய்யப்பட்டு அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் சலுகைகள் காலியிடங்களுக்கு ஏற்ப மிதமான தேர்ச்சி, தரமான ஆசிரியர்கள் என்ற சூழலை மாற்றி குறைவான இடங்களுக்கு அதிகமானோர்போட்டி என்ற சூழலை உருவாக்கிவிட்டுள்ளது.

இவை ஒருபுறம் இருக்க 2012ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகையை வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டு தேர்வு எழுதியவர்கள் ஐகோர்ட் கதவினை இப்போது தட்டியுள்ளனர். இது தொடர்பான மனு, ஐகோர்ட் விசாரணையில் இருந்து வருகிறது. இதில்2012ம் ஆண்டிலும் நடந்த தேர்விலும் மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்றுநீதிமன்றம் உத்தரவிட்டால் தகுதியானவர் எண்ணிக்கை மேலும் சுமார் 40 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டவும் வாய்ப்பு உள்ளது.ஆனால் அந்த அளவிற்கு ஆசிரியர் பணி காலி பணியிடங்கள் இல்லை என்பதுடன் வரும் ஆண்டுகளிலும் அதிக அளவில் காலியிடங்கள் ஏற்படாது என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. 2013&14ம் கல்வியாண்டில் தொடக்க கல்வித்துறையில் பணி ஓய்வு பெறுவோர் எண்ணிக்கையை பொறுத்து வேலைவாய்ப்பு ஓரளவு புதிதாக உருவாகும்.

அதே வேளையில் 2014&15ம் ஆண்டுகளில் பணி ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. பணியில் சேர்ந்துள்ளவர்கள் ஏராளமானோர் இளவயதினராக இருப்பதால் வரும் காலங்களில் காலியிடங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்ற கனவு தகர்ந்துள்ளது.

Popular Posts