2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உத்தரவிடக் கோரி திருவாரூரை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
ரூ.54 கோடி கல்லா கட்டியஆசிரியர் தேர்வு வாரியம்- தகுதித் தேர்வுகள், விண்ணப்ப விற்பனையால் அமோகம்
ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுகள், விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ.54 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மூத்த விரிவுரையாளர்கள், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
1 முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேர்வை நடத்தும் பொறுப்பும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை 1.50 லட்சம் பேரும், ஆகஸ்ட் மாதம் நடந்த தகுதித் தேர்வை 6.50 லட்சத்துக்கு அதிகமானோரும் எழுதினர்.
தகுதித் தேர்வால் கணிசமாக வசூல்
போட்டித் தேர்வுகள், அதற்கான விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் ரூ.54 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது. இதில் கணிசமான தொகை இதுவரை நடத்தப்பட்ட 3 தகுதித் தேர்வுகள் மூலமாக மட்டுமே கிடைத்துள்ளது.
தேர்வுக்கான விண்ணப்ப படிவம் விலை 50 ரூபாய். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.250. மற்ற அனைவருக்கும் தேர்வுக் கட்டணம் ரூ.500. விண்ணப்பம் அச்சடிப்பு செலவு, தேர்வு மையங்களுக்கான செலவு, தேர்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் ஊதியம், விடைத்தாள் மதிப்பீடு செலவு என அனைத்து செலவினங்களும் போக இருப்புத்தொகையாக ஆசிரியர் தேர்வு வாரியம்வசம் ரூ.54 கோடி உள்ளது. இதை எந்த வங்கியில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று தேர்வு வாரியம் கணக்குபோட்டு வருகிறது.
கட்டணம் குறைக்கப்படுமா?
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி), தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ரயில்வே தேர்வு வாரியம், ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டணம் பல மடங்கு அதிகம். தனியார் கம்பெனிகள் போல லாப நோக்குடன் செயல்படாமல், தேர்வுக் கட்டணத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் குறைக்க வேண்டும் என்கின்றனர் தேர்வு எழுதுபவர்கள்
அங்கீகரிகப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்பதற்காக அரசு ஊழியர் மருத்துவ நல சிகிச்சை தொகையை மறுக்க கூடாது-ஐகோர்ட் உத்தரவு
அரசு ஊழியர் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்டமருத்துவமனையில், மனுதாரர் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, தொகையை அனுமதிக்கமறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருதய ஆப்பரேஷனுக்கான தொகையை திரும்ப வழங்க வேண்டும்,'
என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை விளாங்குடி சிதம்பரம் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் வேளாண்விற்பனைக்குழு அலுவலகத்தில், ஊழியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றேன். இருதய ஆப்பரேஷனுக்கு 1 லட்சத்து 94 ஆயிரத்து 982 ரூபாய் செலவானது. தமிழ்நாடு அரசு ஊழியர் மருத்துவ நலநிதி திட்டத்தின் கீழ், தொகையை திரும்ப வழங்குமாறு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை இயக்குனர், திண்டுக்கல் விற்பனைக்குழு செயலாளருக்கு விண்ணப்பித்தேன்; நிராகரித்தனர்.தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவு:
அரசு ஊழியர் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில், மனுதாரர்சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, தொகையை அனுமதிக்க மறுத்துள்ளனர். ஒரு மனிதன் உயிருக்கு போராடும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை எது? அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை எது? என ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.செலவு செய்த தொகையை, திரும்பப் பெற முடியுமா? இல்லையா? என சிந்திக்கவும் முடியாது.உடல்நிலை மோசமடைந்தால், பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை தேவை. இத்திட்டத்தின் நோக்கமே,இதுபோல் திடீர் மருத்துவச்செலவு ஏற்பட்டால், அதை சமாளிக்கத்தான். செலவு தொகையை, திரும்பவழங்குவதுதான். மனுதாரருக்கு, மறுப்பதன் மூலம், திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில், சிகிச்சை பெறவில்லை என்பது போன்ற தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி, தொகை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. தொகையை வழங்க மறுத்த உத்தரவை, ரத்து செய்கிறேன்.
மருத்துவ செலவு தொகையை மனுதாரருக்கு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர்வழங்க வேண்டும், என்றார்.
அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,
* நதிகளை தேசிய மயமாக்கி, நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* மேலும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
* அரசியல் சட்டத்தின் 8- வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்படும்.
* இலங்கையில் தனி ஈழம் தேவையா என அறிய வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழரிடையே வாக்கெடுப்பு நடத்த முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
* இலங்கையில் இனப்படுகொலை செய்தோர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். குற்றம் செய்தோருக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்.
* சட்டசபை, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு பெற்றுத்தர உறுதியளிக்கப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
*மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்ட அதிமுக பாடுபடும். * மத்தியில் ஊழலற்ற அரசு அமைய அதிமுக உத்தரவாதம் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் வரிவிலக்கு அளிக்கப்படும்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு மார்ச் - 12 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முதல் தாளைாத் தொடர்ந்து 2 ஆம் தாளுக்கும் நடைபெறும் (2 ஆம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டி.ஆர்.பி அறிவித்துள்ளது.)மேற்கொண்டு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் - வலைதளமான www.trb.tn.nic.in - ல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(இதற்கு முன் நடைபெற்ற சான்றிதழ் சர்பார்பில் கலந்து கொள்ளாதவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.)
(இதற்கு முன் நடைபெற்ற சான்றிதழ் சர்பார்பில் கலந்து கொள்ளாதவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.)
அரசுத் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் அதிரடி முடிவு
நேற்று தொடக்கக் கல்வி இயக்குனர் அளவில் நடைபெற்ற கூட்டத்திலும், இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
இதையடுத்து சென்னையில் கூடிய டிட்டோஜாக் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருகிற மார்ச்-6ல் திட்டமிட்டபடி மிகப்பெரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெர்றிகரமாக நடத்த டிட்டோஜாக் முடிவு செய்துள்ளது.
டிட்டோஜாக் - இன்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு
இன்று நடைபெற்ற டிட்டோஜாக் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
* 24.02.2014 அன்று மாலை 5மணிக்கு மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயுத்தக் கூட்டம் நடைபெறும். இதில் டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் மாவட்ட/ வட்ட நிரவாகிகள் பங்கேற்பு
* 25.02.2014 அன்று முதல் 28.02.2014 அன்று முடிய பிரச்சாரம் மற்றும் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெறும்.
* 02.03.2014 அன்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.
* 03.03.2014 அன்று டிட்டோஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சென்னையில் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும் நாளை காலை பள்ளிக்கல்வி செயலாளருடன் சந்திப்பு நடைபெற உள்ளதெனவும் தெரிவித்தார். டிட்டோஜாக்கில் உள்ள சங்கங்கள் அனைத்தும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
அண்மையில் நடந்த மாபெரும் பேரணியால் தான் இன்று அரசு தரப்பில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே வேலை நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அதுவரை போராட்டங்கள் ஓயாது என நாளை நடைபெறும் செயலாளருடன் சந்திப்பின் போது வலியுறுத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செய்லாளார் திரு. செ.முத்துச்சாமி தெரிவித்தார்.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS), பிப்ரவரி 2014 - தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு விநியோகித்தல்
22.02.2014 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தேர்வுக்கு (NMMS) ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் 13.02.2014 முதல் 20.02.2014 இத்துறையின் www.tndge.in என்ற இணையதளம் வழியாக தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Admission Card) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான டி.ஏ.வை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க முடிவு..!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 90 சதவீதமாக உயர்ந்தது. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் நன்னடத்தை விதி அமலுக்கு வருவதற்கு முன்பாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையும் 10 சதவீதத்துக்கு குறையாமல் அகவிலைப்படி உயர்த்தப்படும். 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்தால் மொத்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயரும்.
வழக்கமாக அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதனை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். அடிப்படை சம்பளம் உயர்ந்தால் வீட்டுவாடகை, போக்குவரத்து முதலான இதர படிகளும் உயரும். இதன் காரணமாக அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்காமல் மத்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது.
வழக்கமாக அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதனை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். அடிப்படை சம்பளம் உயர்ந்தால் வீட்டுவாடகை, போக்குவரத்து முதலான இதர படிகளும் உயரும். இதன் காரணமாக அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்காமல் மத்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது.
தற்போது 7 வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அகவிலைப்படியில் குறைந்தது 50 சதவீதத்தையாவது அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தால் 30 முதல் 35 சதவீதம் வரை சம்பளம் உயரும் என மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியக்காரர்கள் பலன் அடைவார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? இடியாப்ப சிக்கலில் டி.ஆர்.பி.,
"ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான் ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்" என ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது.
டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும் மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில் முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதியவர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.
கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில் 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. ஏனெனில் தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
தற்போதுள்ள காலி இடங்களுக்கு, தேர்வு பெறுவோர் போக மீதம் உள்ளவர்களுக்கு அடுத்த பணி நியமனத்தின் போது முன்னுரிமை கிடைக்கும் என, தேர்வர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால், இதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு டி.ஆர்.பி., முன்வரவில்லை.
எனினும் இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: கடந்த, 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இரு தரப்பினரின் மதிப்பெண்களையும் மதிப்பீடு செய்து இடஒதுக்கீடு வாரியாக அதிக ம திப்பெண் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு பெறாதவர்கள், அடுத்த காலி பணியிடங்களை நிரப்பும் போது முன்னுரிமை கோர முடியாது. அடுத்து, மீண்டும் டி.இ.டி., தேர்வு நடந்தால், அதில் தேர்ச்சி பெறுபவரின் மதிப்பெண் மற்றும் ஏற்கனவே, 2013ல் தேர்ச்சி பெற்று அரசு பணி கிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடைய மதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்து அதில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரரே, அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
ஆசிரியர்கள் ஆன்-லைன் பதிவை பள்ளிகளிடம் ஒப்படைக்கக்கூடாது: தொடக்க கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை
''ஒன்றிய அளவிலான, தொடக்க, நடுநிலைப்பள்ளி, ஆசிரியர்களின் விபரங்களை, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வதை, அந்தந்த பள்ளிகளிடம் ஒப்படைக்கக்கூடாது, என தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
"ஒன்றிய அளவில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், 25 வகையான விபரம், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் செயல்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை (இ.எம்.ஐ.எஸ்.,) மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதை உள்ளீடு செய்யும் அதிகாரம், அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு, மட்டுமே உள்ளது. ஆசிரியர்களால் அளிக்கப்படும் விபரங்கள், உதவி கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்படும், ஆசிரியர்களின் பணிப் பதிவேட்டுடன், சரிபார்த்த பின்னரே, இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.
ஆனால், சில ஒன்றியங்களில், துவக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நேரடியாக உதவி கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, 'யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு' வழங்கப்பட்டு, அப்பள்ளியில் பணிபுரியும், ஆசிரியர்களின் விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படுகிறது.
இது குறித்து, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு, பல்வேறு தரப்பில், புகார் சென்றது. இதையடுத்து, தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள உத்தரவில் 'தேசிய தகவல் மையத்தால், உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் மட்டுமே, பயன்படுத்தும் வகையில், மென்பொருள் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், நேரடியாக அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்களை, இணையதளத்தில் உள்ளீடு செய்தல் கூடாது. ஒன்றிய அளவில் செயல்படும் 'இ.எம்.ஐ.எஸ்' குழுக்கள் மூலம், மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
ஒரு நாள் வேலை நிறுத்தம் - டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு
இன்று (04.02.2014) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத்தில் வருகிற 06.03.2014 (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவாற்றப்பட்டுள்ளது.
2.2.2013 மாவட்ட பேரணி முடிந்துள்ள நிலையில் அரசு எவ்வித முடிவும் எட்டாத நிலையில் டிட்டோஜாக் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
தமிழக அரசு மேலும் மௌனம் சாதித்தால் போராட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என டிட்டோஜாக் வேண்டுகோள் விடுத்துள்ளது.
1.டிட்டோ ஜாக் அமைப்பு அரசுக்கு வேலை நிறுத்த நோட்டீசு அனுப்ப முடிவு
2.டிட்டோ ஜாக் அமைப்பு டன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்.
3.இல்லை யேல் மார்ச் 6 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு.
தொடக்கக்கல்வித் துறையில் உள்ள 6 இயக்கங்கள் உள்ளடக்கிய டிட்டோஜாக் சென்னையில் இன்று கூடி இம்முடிவை அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு GO வெளியிடப்பட்டது | TET 82/150 pass GO
Click Here
Tamilnadu Teacher Eligibility Test ( TNTET ) - New GO now released. 82 / 150 Passingmark for reservation category candidates.
Reservation Category - ST, SC, MBC, BC, BCM Candidates
ஒரு நாள் வேலை நிறுத்தம் - டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு
இன்று (04.02.2014) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத்தில் வருகிற 06.03.2014 (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவாற்றப்பட்டுள்ளது.
2.2.2013 மாவட்ட பேரணி முடிந்துள்ள நிலையில் அரசு எவ்வித முடிவும் எட்டாத நிலையில் டிட்டோஜாக் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
தமிழக அரசு மேலும் மௌனம் சாதித்தால் போராட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என டிட்டோஜாக் வேண்டுகோள் விடுத்துள்ளது.
1.டிட்டோ ஜாக் அமைப்பு அரசுக்கு வேலை நிறுத்த நோட்டீசு அனுப்ப முடிவு
2.டிட்டோ ஜாக் அமைப்பு டன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்.
3.இல்லை யேல் மார்ச் 6 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு.
தொடக்கக்கல்வித் துறையில் உள்ள 6 இயக்கங்கள் உள்ளடக்கிய டிட்டோஜாக் சென்னையில் இன்று கூடி இம்முடிவை அறிவித்துள்ளது.
2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று (31.01.2014) வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்.
கடைசியாக கடந்த 2013 ஜூலை முதல் 80 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 10 சதவீதம் அதிகரித்து தற்போது 90 சதவீதமாக இரு அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர். இனி 2013டிசம்பர்மாத அடிப்படையில் அகவிலைப் படியை அறிவிக்க வேண்டும்.
இதன்படிடிசம்பர்இறுதியில், நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் அடிப்படையில், மத்திய அரசு 10 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகையை ஜனவரி முதல் நிலுவையாக வைத்து வழங்கும். இதையடுத்து மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை மார்ச்சில் அறிவித்து, ஏப்ரலில் 3 மாத நிலுவையுடன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
AICPIN for the month of December 2013
Consumer Price Index Numbers for Industrial Workers (CPI-IW) December 2013
According to a press release issued by the Labour Bureau, Ministry of Labour & Employment the All-India CPI-IW for December, 2013 declined by 4 pointsand pegged at 239(two hundred and thirty nine). On 1-month percentage change, it decreased by 1.65 per cent between November and December compared with the rise of 0.46 per cent between the same two months a year ago.
The largest downward pressure to the change in current index came from Food group contributing -4.96 percentage points to the total change. At item level, Onion, Ginger, Chillies Green, Brinjal, Cauliflower, Cabbage, Peas, Tomato, Potato and other Vegetable items, Sugar etc. are responsible for the decrease in index. However, this was compensated to some extent by Fish Fresh, Eggs, Hen, Poultry, Milk, Pure Ghee, Garlic, Firewood, ESI Contribution, etc. putting upward pressure on the index.
The year-on-year inflation measured by monthly CPI-IW stood at 9.13 per cent for December, 2013, as compared to 11.47 per cent for the previous month and 11.17 per cent during the corresponding month of the previous year. Similarly, the Food inflation stood at 11.49 per cent against 16.17 per cent of the previous month and 13.53 per cent during the corresponding month of the previous year.
At centre level, Giridih recorded the highest decline of 12 points each followed by Ahmedabad, Chhindwara, Varanasi, Munger, Jamalpur, Nagpur and Bhavnagar (10 points each).Jamshedpur (09 points), Rourkela, Ludhiana, Tripura and Angul Talcher (08 points each) Among others, 7 points decrease was registered in 9 centres, 6 points in 8 centres, 5 points in 11 centres, 4 points in 8 centres, 3 points in 7 centres, 2 points in 9 centres and 1 point in 7 centres. On the contrary, Sholapur centre reported an increase of 4 points followed by Puducherry (2 points), Coimbatore and Srinagar centres 1 point each. Rest of the 3 centres’ indices remained stationary.
The indices of 37 centres are above All-India Index and other 38 centres’ indices are below national average. The index of Varanasi and Vijaywada centre remained at par with all-India index.
The next index of CPI-IW for the month of January, 2014 will be released on Friday, 28 February, 2014. The same will also be available on the office website www.labourbureau.gov.in.
- PIB
அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டவர் மீது நடவடிக்கை; தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு
அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்தவர் மீது கோர்ட்டு
அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தகவல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வரிகள்
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே முளகுமூட்டை கிராமத்தை சேர்ந்தவர்
ஹோமர்லால். இவர், தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு
அலுவலகம் குறித்து விவரங்களை கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு
நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அப்பீல் செய்தார். அந்த அப்பீல்
மனுவில், ‘தகவல் தர மறுப்பவர்களுக்கும், தவறு செய்பவர்களுக்கும் துணை
செய்து, தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களுக்கும் தவறான தகவல் தருபவர்கள்
விபசாரிகளின் புரோக்கர்களுக்கு சமமானவர்கள்’ என்றும் ‘லஞ்சம் வாங்குபவனும்,
ஊழல் செய்பவனும் தன் மனைவியை மட்டுமல்ல, தனது உறவு பெண்களையும் வாடகைக்கு
விடுவதற்கு சமமானவன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
கோர்ட்டு அவமதிப்பு
இவ்வாறு அவதூறு வாசகங்களுடன் மனு அனுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த
தமிழ்நாடு தகவல் ஆணையம், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க மாநில தலைமை
தகவல் ஆணையர் கே.எஸ்.ஸ்ரீபதி, மாநில தகவல் ஆணையர்கள் பி.நீலாம்பிகை,
எஸ்.எப்.அக்பர் ஆகியோர் கொண்ட முழு அமர்வு முடிவு செய்தது.
பின்னர், இதுகுறித்து விசாரணை நடத்திய இந்த அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–
தகவல் ஆணையம் என்பது, குடிமக்களுக்கு தேவையான அனைத்து விவரங்களை
வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு,
உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே மக்களுக்கு தகவல் வழங்கவும், வழங்கப்பட்ட தகவல் சரியானதுதானா? என்பதை உறுதி செய்வதற்காகவும் மட்டுமே தகவல் ஆணையம் உள்ளது.
அதிகாரம் உள்ளது
ஆனால், மனுதாரர் தன்னுடைய மனுவில் அசிங்கமான, அவதூறான வார்த்தைகளை
பயன்படுத்தி, தகவல் கேட்டுள்ளார். இவ்வாறு அவதூறான வார்த்தைகளுடன், விவரம்
கேட்பதற்காக, இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை. எனவே அவர் மீது கோர்ட்டு
அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்கிறோம்.
கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தில், ‘கோர்ட்டு’ என்ற வார்த்தைக்கு நீதி
பரிபாலனம் செய்யும் அமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் ஆணையமும்,
நீதி பரிபாலனம் செய்யும் அமைப்பு என்பதால், இந்த ஆணையத்துக்கு கோர்ட்டு
அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
மன்னிப்பு
இதன்படி இந்த மனுவை விசாரிக்க முடிவு செய்து, மனுதாரர் ஹோமர்லாலை
2013–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந் தேதி நேரில் ஆஜராக அவருக்கு சம்மன்
அனுப்பப்பட்டது.
ஆனால், தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அதனால் தன்னால் நேரில்
ஆஜராக முடியவில்லை என்றும் மனுவில் அவதூறான வார்த்தைகளை குறிப்பிட்டதற்கு
மன்னிப்பு கேட்டும் மனுதாரர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
மனுதாரர், தகவல் கேட்டு கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ள அசிங்கமான
வாசகங்கள், இந்த ஆணையத்தின் நன்மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் விதமாக
உள்ளது.
கண் துடைப்பு
இதனால், அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல்
நடவடிக்கை எடுக்க முடிவு செய்கிறோம். அவர் மன்னிப்பு கேட்டு கடிதம்
அனுப்பியுள்ளது எல்லாம் வெறும் கண் துடைப்புக்குத்தான்.
எனவே, மனுதாரர் ஹோமர்லால் மற்றும் அவரது கே.எச்.லா அசோசியேட்ஸ் பெயரில்
அனுப்பும் மனுக்கள், அப்பீல் மனுக்களை தகவல் ஆணையத்தின் பதிவுத்துறை இனி
ஏற்க கூடாது. மேலும், அவதூறான வார்த்தைகளை மனுவில் எழுதியதற்கு மனுதாரர்
ஹோமர்லால் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு தகவல்
ஆணையத்தின் பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்.
தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர்
அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில்
பதிவேற்றுவதற்காக
மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14)
சென்னையில் நடைபெற்றது.
இதில் மாவட்டத்திற்கு இருவர் வீதம் கலந்து
கொண்டனர்.ஏற்கனவே ஆஃப்லைனில் பதிவு செய்த விவரங்களும் பள்ளிகளுக்கான DISE
விவரங்களும் அரசு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில்
ஆசிரியர்களின் தற்போதைய அடிப்படை விவரங்கள் அனைத்தும் அந்தந்த
ஒன்றியங்களில் ஆன்லைனில் பதிவிடஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி,
பணிப்பதிவேட்டிலுள்ள அனைத்துப் பதிவுகளும் பதிவிடப்படவுள்ளன. முதற்கட்டமாக
அடிப்படை விவரங்களையும் புகைப்படத்தையும் தரவேற்றும் பணி பிப்ரவரிமுதல்
வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.ஏற்கனவே பள்ளிகள் குறித்த DISE விவரங்கள்
பதிவேற்றப்பட்டுள்ளன.
அதில் e-ServiceRegister என்னும் பக்கத்தில் ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களான பெயர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, மொழி, இனம், பதவி உயர்வு, சம்பளம், வீட்டு முகவரி, இரத்த வகை, அங்க மச்ச அடையாளங்கள், புகைப்படம், மெயில் முகவரி, செல்பேசி எண், இருசக்கர நாற்சக்கர ஓட்டுநர் உரிம எண், PAN கார்டு எண், போன்றவை தற்போது பதியப்படுகின்றன.
அதில் e-ServiceRegister என்னும் பக்கத்தில் ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களான பெயர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, மொழி, இனம், பதவி உயர்வு, சம்பளம், வீட்டு முகவரி, இரத்த வகை, அங்க மச்ச அடையாளங்கள், புகைப்படம், மெயில் முகவரி, செல்பேசி எண், இருசக்கர நாற்சக்கர ஓட்டுநர் உரிம எண், PAN கார்டு எண், போன்றவை தற்போது பதியப்படுகின்றன.
பணிப்பதிவேட்டில் பதியும் அனைத்து விவரங்களும் விடுப்பு,
சரண்டர் போன்ற விவரங்களும் TPF, CPS, SPF, HF, பணிக்கொடை போன்றவற்றுக்கான
வாரிசு நியமனம், ஆதார் எண் போன்றவையும் அடுத்த கட்டப் பணியின் போது
பதிவேற்றப்பட உள்ளன.சம்பளக் கமிஷன் ஊதிய நிர்ணயம், ஓய்வுக் காலப் பயன்கள்,
மாநிலக் கணக்காயருக்குக்கருத்துரு அனுப்புதல், ஓய்வூதிய நிர்ணயம், பதவி
உயர்வு, மாவட்ட மாறுதல், முன்னுரிமைப் பட்டியல், வாரிசு நியமனம் போன்ற
அனைத்தையும் எளிதில் தெளிவாக முடிக்க e-ServiceRegister உதவிகரமாக
இருக்கும் என்பதால் இம்முறையை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். மேலும்
அலுவலகத்தில் பணிப்பதிவேடு சிதிலமடைந்தாலோ, வெள்ளம், தீ, இடிபாடு
போன்றவற்றால் பாழடைந்தாலோ காணாமல் போய்விட்டாலோ இனி கவலைப்படத் தேவையில்லை.
அரசு ஊழியர்கள் குறைக்கப்பட்ட ஊதியம் ஜனவரி மாத சம்பளத்தில் பிடிக்கக் கூடாது : கருவூலங்களுக்கு நிதித்துறை அவசர உத்தரவு
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி அமல்படுத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் உள்ளதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டின.முரண்பாடுகளை களைய தமிழக அரசு 3 நபர் குழுவை அமைத்தது. இந்த குழுக்களின் பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் 52 அரசு ஆணைகளாக வெளியிடப்பட்டன.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் தரப்பில் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கெனவே நிர்ணயித்து வழங்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை அரசு ஆணையின் அடிப்படையில் திடீரென குறைக்கக் கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டது. இது தொடர்பாக நிதித்துறை செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஐகோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் அரசு ஊழியர் களுக¢கு ஜனவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாது என அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
வழக்கு நிலுவையில் உள்ளதால் அடிப்படை ஊதியம் குறைத்து உத்தரவிடப்பட்ட ஊழியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது. ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தையே ஜனவரி மாதத்திற்கும் வழங்க வேண்டும் என அந்தந்த துறைகளின் சம்பள கணக்கு அலுவலர்கள், மாவட்ட கருவூலம், சார் நிலை கருவூலங்களில் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இளம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி
இளம் தலைமையாசிரியர்களுக்கு மூன்று நாட்கள் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த இந்தியா - இங்கிலாந்து கூட்டு திட்டத்தின் படி தலைமைப் பண்பு பயிற்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசு பள்ளிகளை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக இளம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி பிப்ரவரி 3ம் தேதியில் இருந்து 8ம் தேதிக்குள் மூன்று நாட்கள் அந்தந்த மாவட்டங்களில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், உயர் தொழில்நுட்ப முறையில் பள்ளி நிர்வாகம், ஆசிரியர் - மாணவர் உறவு, மாணவர்களின் திறனை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நண்பர்களே வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது
நண்பர்களே வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது u/s.87A
இன் படி அனுமதிக்கப்படும் Rs. 2000 கழித்த பின் கணக்கிடுவதா அல்லது
Education cess கணக்கிட்ட பின்னர் Rebate 2000 கழிப்பதா என குழப்பம்
நிலவுவதாக அறிய வருகிறோம். எனவே உங்களுக்காக இணையத்தில் கிடைத்த தகவல்களை
பதிவிட்டுள்ளோம்.
Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess என தெளிவாக உள்ளது. எனவே Rs.2000 rebate கழித்த பின்னரே Education cess
கணக்கிடுவது சரி என அறிய வருகிறோம்.
படியுங்கள். குறைகள் இருப்பின் கூறுங்கள்.தெளிவு பெறுவோம். நண்பர்களுக்கு உதவுவோம்.
-----------------------------------------------------------------------------------
TAX RATES
ASSESSMENT YEAR 2014-15
• For any other resident individual (born on or after April 1, 1954), any non-resident individual, every HUF/AOP/BOI/artificial juridical person—
Net income range
Income-tax rates‡
Surcharge
Education cess
Secondary and higher educationcess
Up to Rs. 2,00,000
Nil
Nil
Nil
Nil
Rs. 2,00,000 –Rs. 5,00,000
10% of (total income minus Rs. 2,00,000) [see Note 1]
Nil
2% of income-tax
1% of income-tax
Rs. 5,00,000 –Rs. 10,00,000
Rs. 30,000 + 20% of (total incomeminus Rs. 5,00,000)
Nil
2% of income-tax
1% of income-tax
Rs. 10,00,000 –Rs. 1,00,00,000
Rs. 1,30,000 + 30% of (total income minus Rs. 10,00,000)
Nil
2% of income-tax
1% of income-tax
Above Rs. 1,00,00,000
Rs. 28,30,000 + 30% of (total income minus Rs. 1,00,00,000)
10% of income-tax [see Note 2]
2% of income-tax and surcharge
1% of income-tax and surcharge
Notes :
1. Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less.
2. Surcharge - Surcharge is 10 per cent of income-tax if net income exceeds Rs. 1 crore. It is subject to marginal relief (in the case of a person having a net income of exceeding Rs. 1 crore, the amount payable as income tax and surcharge shall not exceed the total amount payable as income-tax on total income of Rs. 1 crore by more than the amount of income that exceeds Rs. 1 crore).
3. Education cess - It is 2 per cent of income-tax and surcharge.
4. Secondary and higher education cess - It is 1 per cent of income-tax and surcharge.
• Alternate minimum tax -Tax payable by a non-corporate assessee cannot be less than 18.5 per cent(+SC+EC+SHEC) of “adjusted total income” as per section 115JC
-------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு: நண்பர்களே, மேற்காணும் தகவலில் Education cess 2 per cent என்று உள்ளதால் குழம்பிவிட வேண்டாம். வரிசை எண் .4 இல் Secondary and Higher education cess 1 per cent தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் Education cess 3 per cent தான்.
எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.
எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டது. நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர்
மதியழகன் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு
தாக்கல் செய்தார்.
அதில் ஆசிரியர் மதியழகன் கூறியிருப்பதாவது:நான் நாகை
மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி
வருகிறேன். நான் தமிழ் ஆசிரியர். எம்.ஏ. படித்த பிறகு எனக்கு ஒரு ஊக்க
தொகையை அரசு வழங்கியது.இதன்பிறகு நான் பிஎட் படித்தேன். அதற்கு 2வது ஊக்க
தொகை அரசு கொடுத்தது. இதை தொடர்ந்து நான் எம்பில் படித்து முடித்தேன்.
இதற்கு 3வது ஊக்க தொகை கேட்டு விண்ணப்பித்தேன். இதை அரசு தரவில்லை. 3வது
ஊக்க தொகை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம்தேதி மீண்டும் மனு கொடுத்தேன்.இந்த மனுவை பரிசீலனை செய்து, எனக்கு 3வது ஊக்க தொகை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசாணையின்படி எனக்கு 3வது ஊக்க தொகை தர வேண்டும். இதற்கு உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து மனுதாரரின் மனுவை தமிழக அரசின் தொடக்க கல்வித்துறை இயக்குனர் பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் மனுதாரருக்கு 3வது ஊக்க தொகை தருவது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம்தேதி மீண்டும் மனு கொடுத்தேன்.இந்த மனுவை பரிசீலனை செய்து, எனக்கு 3வது ஊக்க தொகை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசாணையின்படி எனக்கு 3வது ஊக்க தொகை தர வேண்டும். இதற்கு உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து மனுதாரரின் மனுவை தமிழக அரசின் தொடக்க கல்வித்துறை இயக்குனர் பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் மனுதாரருக்கு 3வது ஊக்க தொகை தருவது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் முன்னர் "பணி நிரவல்' : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை
"பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை
தவிர்க்க வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் பாடவாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த விதியை மீறி கூடுதலாக இருந்ததால் பணிநிரவல் கவுன்சிலிங் மூலம் காலியிடங்களுக்கு மாறுதல் வழங்குவது வழக்கம். 2012ல் நடந்த பணி நிரவலில் ஏராளமான ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாற்றினர். இதன் பின்னர், புதியதாக 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் சில பாடங்கள் தவிர, பெரும்பாலான பாடங்களுக்கு 40:1 விகிதாச்சாரத்தை தாண்டி சில இடங்களில் அதிகமான ஆசிரியர்கள் தற்போது பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், மேலும் 15 ஆயிரம் புதிய
ஆசிரியர்களை நியமிப்பதாக அரசு அறிவித்துள்ளது. தகுதித்தேர்வு தாள்-2
தேர்வான 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்
சரிபார்க்கும் பணி நடக்கும் நிலையில்,இவர்களில் பலருக்கு பணி வாய்ப்பு
கிடைக்கும் என, நம்புகின்றனர். இதன் மூலம் சில உயர், மேல்நிலைப் பள்ளிகளில்
ஒரேபாடத்திற்குரிய ஆசிரியர்கள் எண்ணிக்கை 40:1 விட அதிகரிக்க
வாய்ப்புள்ளது. பணி நிரவல் இன்றி, 2012 பணி நிரவலுக்கு பின் சேர்ந்த
ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமான இடத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு இராது.
பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கூறுகையில்,
"பணிநிரவல்என்பது பற்றாக்குறை பள்ளிக்கு, அதிகமுள்ள பள்ளிகளில் இருந்து ஜூனியர் நிலை ஆசிரியர்களை மாற்றம் செய்வது. இதில்,சிலருக்கு சாதகமான பள்ளி கிடைக்க வாய்ப்புள்ளது. 2012ல் பணி நிரவலுக்கு பின், நியமித்த 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில் சிலருக்கு பணிநிரவலில் மாறுதல் கிடைக்கும் நிலை உள்ளது.
"பணிநிரவல்என்பது பற்றாக்குறை பள்ளிக்கு, அதிகமுள்ள பள்ளிகளில் இருந்து ஜூனியர் நிலை ஆசிரியர்களை மாற்றம் செய்வது. இதில்,சிலருக்கு சாதகமான பள்ளி கிடைக்க வாய்ப்புள்ளது. 2012ல் பணி நிரவலுக்கு பின், நியமித்த 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில் சிலருக்கு பணிநிரவலில் மாறுதல் கிடைக்கும் நிலை உள்ளது.
ஆனாலும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் சூழலால் ஏற்கனவே
பணியில் சேர்ந்தவர்களின் பணிநிரவல் வாய்ப்பு பறிபோகும். ஒவ்வொரு
மாவட்டத்திலும், 20 முதல் 30 பேர் வரை பணிநிரவலில் மாறுதல் பெற
வாய்ப்புள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன், ஏற்கனவே பணியில்
உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்,பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்த
வேண்டும், என்றனர்.
அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஓவர்சீயர் பணி
மதுரை கருங்காலக்குடியை சேர்ந்தவர் சரசுவதி, மாற்றுத்திறனாளி. இவர்,
மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
நான், 1997–ம் ஆண்டு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்தேன்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். வேலை உறுதி அளிப்பு
திட்டத்தை செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 618 ஓவர்சீயர்
பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன இந்த பணியிடங்களில்
மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே,
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். அதன்
அடிப்படையில் எனக்கு ஓவர்சீயர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இட ஒதுக்கீடு
இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் தாழை.முத்தரசு ஆஜராகி வாதாடினார்.
ஃபேஸ்புக் பக்கம் தொடங்கியது தமிழக தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.
தேசிய வாக்காளர் தினத்தை (ஜனவரி 25) முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து
வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் தினம் நாளை (சனிக்கிழமை)
கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பாக நிருபர்களிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல்
அதிகாரி பிரவீண்குமார் கூறும்போது, "சென்னை கவர்னர் மாளிகையில் சனிக்கிழமை
காலை நடைபெறும் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில், புதிய வாக்காளர்களுக்கு
அடையாள அட்டை வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள மற்ற 27 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் புகைப்பட
அடையாள அட்டை சனிக்கிழமையன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வழங்கப்படும்.
அன்றைய தினம் வாங்காதவர்களின் வீடுகளுக்கு தேர்தல் துறையினரே நேரில் சென்று
வாக்காளர் அட்டையை வழங்குவார்கள். அதை வீட்டில் உள்ள ஒருவர்
கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளலாம்.
அப்படி பெற முடியாதவர்கள், பின்னர் தேர்தல் பதிவு அதிகாரி அலுவலகத்தில்
பெற்றுக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் எப்போது
வேண்டுமானாலும் பெயர் சேர்க்கலாம்.
"கண்ணியமாக வாக்களியுங்கள்" என்னும் கருத்தை மையமாக வைத்து உறுதிமொழி
ஏற்பு நிகழ்ச்சிகள், பேரணிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படவுள்ளது.
ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் – தினேஷ் கார்த்திக் ஆகியோர்
இடம்பெற்றுள்ள பிரசார விளம்பரப் படம் விரைவில், தொலைக்காட்சி மற்றும்
திரையரங்குகளில் வெளியாகும்.
இதன் மையக்கருத்து, "வாக்காளர்கள் கண்ணியமாக வாக்களிக்க வேண்டும்.
பணத்துக்காக வாக்கை விற்காதீர்," என்பன போன்ற கருத்துக்கள் இடம்பெறும்"
என்றார் பிரவீண்குமார்.
ஃபேஸ்புக் பக்கம் குறித்து கூறும்போது, " நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு,
யூத் எக்ஸ்னோரா அமைப்புடன் இணைந்து, பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் www.facebook.com/tnelection2014 என்ற ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளோம்.
முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களைக் கவர்வது, நியாயமான
முறையில் தேர்தலை வாக்காளர்கள் எதிர்கொள்ளச் செய்வது, வாக்களிப்பதன்
அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நோக்கத்துக்காகவே இந்த
சமூவவலைத்தளப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.
CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை
PFRDA - CPS - GUIDELINES FOR WITHDRAWAL OF 25 % OF ACCUMULATED CONTRIBUTIONS BY NPS SUBSCRIBERS CLICK HERE..
PFRDA - CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15/01/2014 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது
நிபந்தனைகள்:
1) தேவைகள்
a) குழந்தைகளின் மேல் படிப்பு செலவு
b) குழந்தைகளின் திருமணம்
c) வீடு கட்டுவதற்கு (ஏற்கனவே சொந்த வீடு வைத்துள்ளவர்கள் இது பொருந்தாது)
d) கீழ் கண்ட ஏதாவது ஒரு மருத்துவ செலவு நமக்கோ அல்லது நமது குடும்பத்தினர்க்கு (மனைவி அல்லது குழந்தை) ஏற்படும் பொழுது.
1. Cancer
2. Kidney Failure (End Stage Renal Failure)
3. Primary Pulmonary Arterial Hypertension
4. Multiple Sclerosis
5. Major Organ Transplant
6. Coronary Artery Bypass Graft
7. Aorta Graft Surgery
8. Heart Valve Surgery
9. Stroke
10. Myocardial Infarction (First Heart Attack)
11. Coma
12. Total blindness
13. Paralysis
இது போன்ற தருணங்களில் நாம் நமது CPS முதலிட்டில் இருந்து 25% வரை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் இதற்கு நாம் CPS திட்டத்தில் குறைந்தது 10 வருடம் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மேலும் இது போன்று நாம் 3 முறை நமது CPS முதலிட்டிலிருந்து 25 % மிகாமல் பெற்றுகொள்ள முடியும்.
ஆனால் குறைந்தது 5 வருட இடைவெளியில்.
அதே வேளையில் மருத்துவ தேவைக்கு மட்டும் இந்த 5 வருட நிபந்தனை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி கல்விச்சுற்றுலா அழைத்துசென்றால் கடும் நடவடிக்கை
அனுமதியின்றி கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மார்ச், ஏப்., மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக மாணவர்களை கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த காலங்களில் கல்விச்சுற்றுலாவின்போது எதிர்பாராதவிதமாக சில மாணவர்கள் உயிரிழந்தனர்.
இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலாவிற்கு மாணவர்களை அழைத்து செல்வதற்கு முன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். மாணவர்களின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
கல்வி சுற்றுலாவிற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மாவட்ட தொடக்க அலுவலர்களிடமும், உயர்நிலைப் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர்களிடமும், மேல்நிலைப் பள்ளிகள் முதன்மை கல்வி அலுவலரிடமும், மெட்ரிக் பள்ளிகள், ஆய்வாளர்களிடம் அனுமதி பெறவேண்டும். அனுமதியின்றி மாணவர்களை அழைத்து சென்றால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.
ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டு நீடிக்கும் அரசு ஊழியர்கள் மாற்றம்
நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்கவும் வலியுறுத்தியுள்ளது.இந்தியா நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, முதல் கட்டமாக கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடும் துணை கலெக்டர்களுக்கு சென்னையில் தனித் தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை வருவாய் துறையினர் இடமாற்றத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. வாக்காளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து தேர்தலுக்கான அடுத்த கட்ட முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபடும் தொகுதி தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களாக வருவாய் துறை, வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். இவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவர். இந்த பணிகளுக்காக அதிகாரிகள் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றினால் அவர்களை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தேர்தல் அலுவலர்களாக கலெக்டர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் தான் நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 ஆண்டுகள் பணி முடித்த கலெக்டர்கள் பலர் மாற்றப்பட்டனர்.
இதேபோல உதவி தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்படுபவர்கள் பலர் ஓரே இடத்தில் பணியாற்றலாம் என்பதால் அவர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டவுடன் கூண்டோடு பலரும் மாற்றப்படுவர் என்று தெரிகிறது.ஜனவரி மாத இறுதிக்குள் இவர்களின் பணியிட மாற்றத்தை முடிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே விரைவில் வருவாய் துறை, வளர்ச்சி துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவர் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை வருவாய் துறையினர் இடமாற்றத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. வாக்காளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து தேர்தலுக்கான அடுத்த கட்ட முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபடும் தொகுதி தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களாக வருவாய் துறை, வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். இவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவர். இந்த பணிகளுக்காக அதிகாரிகள் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றினால் அவர்களை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தேர்தல் அலுவலர்களாக கலெக்டர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் தான் நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 ஆண்டுகள் பணி முடித்த கலெக்டர்கள் பலர் மாற்றப்பட்டனர்.
இதேபோல உதவி தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்படுபவர்கள் பலர் ஓரே இடத்தில் பணியாற்றலாம் என்பதால் அவர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டவுடன் கூண்டோடு பலரும் மாற்றப்படுவர் என்று தெரிகிறது.ஜனவரி மாத இறுதிக்குள் இவர்களின் பணியிட மாற்றத்தை முடிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே விரைவில் வருவாய் துறை, வளர்ச்சி துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவர் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
01.01.2011 அன்று முன் தேதியிட்டு 50% அகவிலைபடியை, ஊதியத்துடன் இணைக்க வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது, எனினும் இந்த கட்டுரை உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் அடிப்படையாக கொண்டது.
It has been reported that the government is considering the merger of 50% of the DA with the basic. The government is likely to take a decision during the budget session of Parliament in February 2014. The information was given by sources close to the Central Government Employees Federations. The federations were demanding the merger from January 2011.
During the 5th pay commission period there was a clause that the DA will be merged with the basic once it touches 50%. But this was removed by the 6th pay commission. However the unions were constantly demanding the merger. The current DA stands at 90% and is likely to touch or cross 100% by January 2014, which will be announced in March. he government may consider the demand of merging of 50% DA with basic Pay in view of forthcoming Parliament elections.
Once the AICPIN for Industrial workers for the Month of December 2013 is announced, the rate of dearness allowance to be paid from January 2014 can be calculated. It is certain that the rate of DA will be 100 or 101% with effect from 1st January 2014. (Read : November CPI IW up by 2 points, at 243. Chances of 101% DA from Jan 2014) After the DA increased to 100%, the demand merger willbe stronger. Probably the demand would be for 100% DA merger. So the unions expect the government may consider 50% DA merger soon.
The sources, associated with National Council JCM, said that the government initially was not willing to consider this demand as some allowance and advances have been raised by 25% whenever the DA crosses 50% level as per the sixth CPC recommendation. But federations insisted that the allowances, which are raised to 25 % level when DA crosses 50%, will have no impact on merging DA with basic pay. The only allowance will have an increase when Basic Pay increases are HRA. No other allowances will be increased and other entitlement of the respective Grade Pay will not be revised as the 50% DA to be merged will be kept under separate component like it was treated in 5CPC as Dearness Pay. “There is no need to worry about financial implications, as the 50% DA will be paid by just changing its nomenclature as Dearness Pay”, said sources.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here







