3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 10 சதவீதமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
மே 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம்
வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய
பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து மே 2013 வரை
8.97 புள்ளிகள் அதிகரித்து 88.97ஆக உள்ளது.
அதேபோல் வருகிற ஜூன்
மாதத்திற்கான விலை ஏற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் AICPIN புள்ளிகள்
10-ற்கும் அதிகமாக 90.00 கடக்க வாய்ப்புகள் உள்ளதால், ஜூலை மாதத்திற்கான
அகவிலைப்படி 10% ஆக உயரக்கூடும்
என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2013 முதல்
உயர்த்தக்கூடும். மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும்
உயர்த்தும். அத்தியாவாசி பொருட்கள்களின் விலைவாசி உயர்வால் சிக்கி
தவிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வால் சற்று நிவாரணம்
கிடைக்கும் என்பதால் அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி
கற்பதற்கேற்றவாறு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை (Infrastructure)
மேம்படுத்த பள்ளி மானியம் வழங்கப்படுகிறது. இம்மானியம் வழங்க மாவட்ட
வாரியாக 2013-14ம் ஆண்டு வரைவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வகையான அரசு, ஊராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர், கள்ளர், சீரமைப்பு, வனத்துறை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு இம்மானியம் விடுவித்தல் வேண்டும்.
அரசு நிதி உதவிபெறும் தனியார் நிர்வாகப் பள்ளிகளை பொறுத்த வரையில் மாவட்ட திட்ட அறிக்கையில் இப்பள்ளிகள் சேர்க்கப்பட்டு, நிதி ஒதுக்கீடும் பெறப்பட்டிருந்ததால் மட்டுமே பள்ளி மானியம் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும்.
இம்மானியத்தை பயன்படுத்தி மேஜை, நாற்காலி, பீரோ, குடிநீர் பாத்திரம், பதிவேடுகள், சுவர் கடிகாரம், அலமாரிகள், எழுது பொருள்கள, மின்வசிறி, மின் விளக்குகள், தகவல் பலகை, கரும்பலகை, செயல் வழிக் கற்றல் அட்டைகள் வைக்கும் டிரேஸ், பாய்கள், தீயணைப்பான், தேசியக் கொடி, கயிறு, மைக், மின் அழைப்பான், உலக உருண்டை, தனிம வரிசை அட்டவணை போன்றவை வாங்க, பள்ளி மானியத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த ஏதுவாக பள்ளி மானியத்திலிருந்து மாணவர்களுக்கு தேவையான கைபந்து, கால்பந்து, ஸ்கிப்பிங் கயிறுகள், சதுரங்க பலகை, கேரம் விளையாட்டு போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்திட வேண்டும், பொருட்கள் தரமானதாக இருத்தல் வேண்டும்.
தொடக்கப் பள்ளி மானியம் மற்றும் நடுநிலைப் பள்ளி மானியம் வழங்குதல் (Release of Primary School Grant and Upper Primary School Grant)
1. 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.5000/- வீதமும் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு
வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.7000/- வீதமும். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.12000/- வீதமும் வழங்கப்பட வேண்டும்.
2. கோடிட்ட காசோலையாக கிராமக் கல்வி குழு / பெற்றோர் ஆசிரியர் கழகம் /பள்ளி நிர்வாகக் குழுவின் பெயரில் வழங்கப்பட வேண்டும்.
3. நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு மேல் எக்காரணம் கொண்டும் மானியம் வழங்கக்கூடாது.
4. காசோலை பெறப்பட்ட உடன் வங்கியில் செலுத்தப்பட வேண்டும்.
பொருள் வாங்குதல் (Purchase of Materials)
1. அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தேவையான பொருள்களை கிராமக்
கல்விக்குழுவின் தீர்மானத்தின்படி வாங்கப்பட வேண்டும்.
2. பொருள்கள் வாங்க தேவைப்படும் பொழுது மட்டும் தேவைப்படும் அளவிற்கு வங்கியிலிருந்து தொகை எடுக்கப்பட வேண்டும்.
3. பொருள்கள் வாங்கியமைக்கான பற்றுச்சீட்டுகள் (Vouchers) பெறப்பட்டு பத்திரமாக பராமரிக்கப்பட வேண்டும்.
4. தொகை பெறப்பட்டமை மற்றும் செலவு செய்யப்பட்டவை ரொக்கப் பதிவேட்டில் (Cash book) பதிவு செய்ய வேண்டும்.
5. பொருள்களின் விவரங்களை இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும். இருப்புப் பதிவவேட்டு பக்க எண் பற்று சீட்டில் பதியப்படவேண்டும்.
6. பள்ளித் தகவல் பலகையில் பள்ளி மானியத் தொகை பெறப்பட்ட விவரம் (தேதி, தொகை உள்பட) எழுதப்பட்டிருத்தல் வேண்டும். பள்ளி மானியம்
பயன்படுத்தியதைக் கண்காணித்தல்
(Monitoring the utilization of school grant)
1. மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்., வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (AEEO ) பள்ளி மானியம் பயன்படுத்தியதை கண்காணித்து உறுதி செய்தல் வேண்டும்.
2. இருப்புப் பதிவேட்டையும், ரொக்க பதிவேட்டையும், பள்ளி மானியப் பதிவேட்டையும் அலுவலர்கள் பார்வையிட வேண்டும்.
3. தேவையின் அடிப்படையில் மட்டுமே பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதா என்பதையும் வாங்கப்பட்டுள்ள பொருள்களின் தரத்தையும் உறுதி செய்தல் வேண்டும்.
4. பொருள்கள் வாங்கும் பொழுது மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.
பயன்பாட்டுச் சான்றிழ்கள் ஒப்படைத்தல்
(Submission of Utilisation Certificates)
1. பயன்பாட்டுச் சான்றிழ்கள் பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் மூலமாக வட்டார வளமையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
2. பார்வையின் போது அலுவலர்களுக்கு காண்பிக்க வேண்டும்.
மாவட்டத் திட்ட அலுவலகம் (DPO)
1. ஆண்டு வாரியாக பள்ளி மானியம் வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் (தொடக்க வகுப்புகள், உயர்தொடக்க வகுப்புகள்) எண்ணிக்கை, வழங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, தொகை, காசோலை எண்கள் போன்றவை அடங்கிய பள்ளி மானியப் பதிவேடு (School Grant Register ), பராமரித்தல் வேண்டும்.
2. கிராமக் கல்விக் குழுக்களின் பெயரில் கோடிட்ட காசோலைகள் ஜுன்- ஜுலை மாதங்களில் வழங்கப்பட வேண்டும்.
3. காசோலை வழங்கும் பதிவேட்டில் (Cheque Issue Register), பதிவு செய்யப்பட வேண்டும் (காசோலை எண், நாள், கிராமக் கல்விக் குழுவின் பெயர் மற்றும் வங்கியின் பெயர்)
4. நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு மேல் எக்காரணம் கொண்டும் மானியம் வழங்கக்கூடாது.
5. பயன்பாட்டுச் சான்றிழ்கள் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்களிடமிருந்தும் ஒன்றியம் வாரியாக ஒன்றியத்துக்கு ஒரு சான்றிழ் வீதம் பெறப்பட வேண்டும்.
6. மானியங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும், பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதையும்பள்ளிகளுக்குச் சென்று கண்காணிக்க வேண்டும்.
வட்டார வள மையம் (BRC)
1. வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஒன்றிய அளவில் பள்ளி மானியப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
2. ஒன்றிய அளவில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்யப்படவேண்டும்.
3. பள்ளி மானியத் தொகை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது, என்ன என்ன பொருள்கள் வாங்கப்பட்டுள்ளன என்பதை பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு சரிபார்க்க வேண்டும்.
4. பள்ளி மானியம் பெற்ப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளிகளிடமிருந்தும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறப்பட வேண்டும்.
5. பள்ளி மானியம் வழங்கப்பட்ட அனைத்து பள்ளிகளிருந்தும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறப்பட்டுவிட்டதை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய அளவில் ஒரே பயன்பாட்டுச் சான்றிதழில் பள்ளி மானியம் வழங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை (தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி), தொகை குறிப்பிட்டு மாவட்டத் திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப் படவேண்டும்.
பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையம் (CRC)
1. ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மைய அளவில் பள்ளி மானியப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
2. பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மைய அளவில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றம் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்யப்படவேண்டும்.
3. பள்ளி மானியத் தொகை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது. என்ன என்ன பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன என்பதை பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு சரிபார்க்க வேண்டும்.
4. பள்ளி மானியம் பெறப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளிகளிடமிருந்தும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறப்படவேண்டும்.
5. மேலும் மைய அளவிலுள்ள அனைத்து பள்ளிகளையும் பார்வையிடுதல் மற்றும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறுதல் ஆசிரியர் பயிற்றுநரின் முழுப்பொறுப்பாகும்.
கிராமக் கல்விக் குழு / பள்ளி மேலாண்மைக் குழு
1. அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தேவையான பொருள்கள் கொள்முதல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
2. பொருள்கள் வாங்கியமைக்கான பற்றுச் சீட்டுகள் ( Voucher ) பெறப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும்.
3. இருப்புப் பதிவேட்டில் வாங்கப்பட்ட பொருள்களின் பெயர், தொகை, ரசீது எண். நாள், வாங்கிய இடம் முதலியவை பதிவு செய்தல் வேண்டும். இப்பக்க எண்ணை பற்றுச் சீட்டில் குறித்து இருப்புச் சான்று பதிய வேண்டும்.
4. பள்ளி மானியப் பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும். (பெற்ற தொகை, காசோலை எண். வங்கி மற்றும் நாள்).
5. பள்ளித் தகவல் பலகையில் பள்ளி மானியம் தொகை பெறப்பட்ட விவரம் (தேதி தொகை உட்பட) எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
6. பயன்பாட்டுச் சான்றிழ் ஆசிரியர் பயிற்றுநரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இச்சுற்றறிக்கையின் நகலினை மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கீழ்கண்ட அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்புதல் வேண்டும். சுற்றறிக்கை பெறப்பட்டதற்கான ஒப்புகைச் சான்றிழ் பெற்று தங்கள் அலுவலகக் கோப்பில் வைத்திருத்தல் வேண்டும்.
(இவ்வாறு மாநில் திட்ட இயக்ககம் செயல்முறை வெளியிட்டுள்ளதாக அறியப்படுகிறது.)

புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக (SSA) மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட
இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்களை நியமித்து தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. ஏற்கனெவே அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட
இயக்குநராக பணிபுரிந்த திரு.முகமது அஸ்லாம், இ.ஆ.ப அவர்களை சிறுபான்ன்மை
நலத்துறை ஆணையாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
TET Hall Ticket only by Online| ஆசிரியர் தகுதித் தேர்வு "ஹால் டிக்கெட்' இணையதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்
ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு, இதுவரை,
4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி.,
தேர்வு நடக்கின்றன.
கடைசி நாளன்று, பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 5.5 லட்சம் முதல், 6 லட்சம் வரை உயரலாம் என, எதிர்பார்ப்பதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
முதுகலை ஆசிரியர் தேர்வு : ஜூலை, 21ல் நடக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான, "ஹால் டிக்கெட்', அடுத்த வாரத்தில், www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.
"தேர்வர்கள், வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படாது;அனைவரும், இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்' என்று, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏழாவது சம்பள கமிஷனை அமைக்காவிட்டால் விரைவில் வேலை நிறுத்தம்: ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை
ரெயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்கங்களில் 10.26
லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம்
மிகப் பெரிய தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.
நேற்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஷ்ரா கூறியதாவது:-
ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசை நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறோம்.
ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேவையும் சந்தித்து எங்கள் கோரிக்கையை தெரிவித்தோம். இது தொடர்பாக, பரிசீலிப்பதாக மட்டும் கூறிய அவர், எங்களுக்கு எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை.
எனவே, எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவெடுத்துள்ளோம். வேலை நிறுத்தத்திற்கான தேதியை இறுதி செய்வதற்காக இதர தொழிற்சங்கங்களுடன் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய ரெயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேயிடம் கேட்ட போது, ‘எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. நான் இப்போது தான் மந்திரியாக பொறுப்பேற்று உள்ளேன்’ என்று பதிலளித்தார்.
அகஇ - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது, 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான
2013-14ஆம் கல்வியாண்டின் முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது.
இப்பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையங்களில் 40% ஆசிரியர்கள்
கலந்து கொண்டு பயிற்சி பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் தொராய (தற்காலிக) பயிற்சி நாட்கள் விபரம்
இந்த வருடம் ஆசிரியர்களுக்கு மொத்தம் 7 நாட்கள்
மட்டுமே பயிற்சி நாட்கள்.
CRC DATES
CRC DATES
குறுவள மையம் 3 நாட்கள்
(இடைநிலை மற்றும் பட்டதாரிகள்)
1. 06.07.2013
2. 26.10.2013
1. 06.07.2013
2. 26.10.2013
3. 04.01.2014
1. 20.08.2013
2. 04.09.2013
3. 20.11.2013
4. 04.12.20132. 04.09.2013
3. 20.11.2013
15,000 பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் ஆரம்பம்
தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15,000
ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
இன்று தொடங்குகிறது. ஆகஸ்டு 17 மற்றும் 18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி
தேர்வு நடைபெறும் என கடந்த 22ம் தேதி டிஆர்பி அறிவித்தது. இதன் மூலம்
சுமார் 15,000 காலி பணி இடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
இன்று
(17ம் தேதி) தொடங்குகிறது. இந்த ஆண்டு 7 லட்சம் பேர் தகுதி தேர்வு
எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை
தவிர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும்
விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள்
ஏற்கனவே அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டு தயார் நிலை யில்
வைக்கப்பட்டுள்ளன.
ஜூலை 1ம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.500 ஆகும். ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்ப கட்டணமாக ரூ.250 செலுத்தினால் போதும்.

பணி நியமனத்துக்கு இந்த ஆண்டு புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. முதலில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதன்பிறகு தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.
பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை தகுதி தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2, டிகிரி, பிஎட்., மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார். இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு
தொடக்கக்
கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 14321 / இ1 / 2013,
நாள்.15.06.2013ன் படி மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர்
நலத்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு,
சென்னை - 6 தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் ஆசிரியர்கள் கோரிக்கைகள்
சார்பாக, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்திட பார்வையில் காணும்
அரசு கடித எண்.18000/ GE(2) / 2013-1, நாள்.12.06.2013ல்
உத்தரவிடப்பட்டது.
அந்தந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர் மற்றும் 2 மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் சார்ந்து விவாதிக்கும் வகையில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்திற்கு வரும் பொழுது தங்கள் சார்பான கோரிக்கைகள் 2 பிரதிகள் கொண்டுவருமாறு கனிவுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு யாரெல்லாம் எழுதலாம்? கடைசி ஆண்டு பயில்வோர் எழுதியோர் எழுதலாமா?
தாள் 1 எழுத தகுதியானோர்:
1. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு (10+2) என்ற முறையில் பயின்று
D.T.Ed / D.El.Ed ஆகிய கல்விதகுதியினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில்
பயின்றோர்.
தாள் 2 எழுத தகுதியானோர்:
1. பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் இளங்கலை பட்டம் (10+2+3) என்ற
முறையில் பயின்று இளங்கலை கல்வியியல் கல்வி (B.Ed) தகுதியினை
அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் முடித்திருக்க வேண்டும்.
2.இளங்கலை பட்டம் (B.A. /B.Sc. /B.Litt.) தமிழ், ஆங்கிலம், கணிதம்,
இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய
இளங்கலை பட்டமோ அல்லது அதற்கு இணையான பட்டமாக இந்த TNTET 2013 அறிவிப்பு
நாளுக்கு முன் இணை பட்டமாக அரசாணை மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இணை பட்டத்தினை
(Equal Degree) பெற்றுள்ளோர்.
கடைசி ஆண்டு தேர்வு எழுதியுள்ளோர்:
2012-13 ஆம் கல்வியாண்டு D.E.Ed/ B.Ed ஆகிய படிப்புகளை இறுதியாண்டு
பயில்வோரும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதலாம். ஆனால், அவர்கள் சான்றிதழ்
சரிபார்ப்பின் போது, மேற்காணும் D.E.Ed/ B.Ed ஆகிய படிப்புகளை வெற்றிகரமாக
முடித்திருக்க வேண்டும். இல்லையேல். அவர்கள் இவ்வாண்டு பணி நியமன
வாய்ப்புகளை பெற முடியாது. ஆயினும் பிறகு அவர்கள் இக்கல்வித்தகுதிகளை
பெற்றால் 7 வருட மதிப்புள்ள TET சான்றிதழ் வழங்கப்படும்.
வணிகவியல், பொருளியல் பட்டதாரிகள் டி.இ.டி., தேர்வை எழுத முடியாது
வணிகவியல், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில், இளங்கலை
பட்டப்படிப்பு முடித்து, அதன்பின், பி.எட்., முடித்தவர்கள், டி.இ.டி.,
தேர்வை எழுத முடியாது.
பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை,
தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல், அறிவியல் ஆகிய, ஐந்து
பாடங்களுக்கு மட்டுமே, பட்டதாரி ஆசிரியர்கள், நியமனம் செய்யப்படுகின்றனர்.
வணிகவியல், பொருளியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள், 10ம்
வகுப்பு வரை கிடையாது. எனவே, இந்த பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்பும்
அதன்பின், பி.எட்., பட்டமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத
முடியாது.
வரும், 17ம் தேதி முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை துவங்க உள்ள
நிலையில், யார், யார் விண்ணப்பிக்கலாம் என்பதை, டி.ஆர்.பி.,
தெளிவுபடுத்தியுள்ளது. எம்.காம்., - பி.எட்., படித்தவர்கள், நேரடியாக,
முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், பொருளியல்
பாடத்தினரும் விண்ணப்பிக்கலாம்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமும், துவக்கத்தில் இருந்து அல்லாமல்,
மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. எனவே, இந்த பாடத்தில்
பட்டம் பெற்றவர்களும், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது என்பது
குறிப்பிடத்தக்கது.
அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு கட்டாயம்
அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும்
சிறுபான்மையற்ற பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை
நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அரசு உதவி பெறும்
பள்ளிகளில் 2011,12, 2012,13ம் கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட
ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென
செயலர்கள், தாளாளர்கள் சார்பில் பள்ளி கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு
அனுப்பப்பட்டது.
இந்நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநரகம்
பிறப்பித்துள்ள உத்தரவு: கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி ஆசிரியர்களின்
நியமனத்திற்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்
தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற உதவிபெறும்
பள்ளிகளில் 2010 ஆக.23க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பிற
நிபந்தனைகளோடு தகுதித் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு உதவி
பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும்
ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பள்ளிகளில் அரசியல் தலையீடு: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு - தினமலர்
அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், அரசியல்
தலையீடு அதிகரித்து உள்ளதால், மாணவர் சேர்க்கையை, பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அரசு பள்ளிகளில் நடத்தப்படும்
விளையாட்டு விழா, கலை நிகழ்ச்சி, கட்டடம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து
செலவுகளுக்கும், மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் பொதுமக்களின் நன்கொடை
ஆகியவற்றின் மூலம், நிர்வாகம் செய்ய பெற்றோர் ஆசிரியர் கழகம்
உருவாக்கப்பட்டது.
ஆனால், தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்ககம், அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின், பள்ளிகளுக்கான
பராமரிப்பு நிதி, அதிக அளவு ஒதுக்கப்படுகிறது. இதனால் மாணவர்களிடம்,
நன்கொடை, கல்விக்கட்டணம் உள்ளிட்டவை வசூல் செய்ய தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும், கட்சி பிரமுகர்கள் ஆதிக்கம் வகிக்கும், பெற்றோர் ஆசிரியர் கழக
நிர்வாகிகளை எதிர்த்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள், குரல் கொடுக்க
முடிவதில்லை. இதனால், மாணவர்களை பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோரிடம்,
கல்விக்கட்டணம், நன்கொடை என, கட்டாய வசூல் நடத்தப்படுகிறது.
குறிப்பாக, ஆங்கில வழிக்கல்வி உள்ள பள்ளிகளில், இந்த வசூல் வேட்டை
அதிகரித்துள்ளது. இதை, தலைமை ஆசிரியர்களால் தடுக்க முடியவில்லை.
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, நன்கொடை மற்றும் கல்விக்கட்டணம்
வசூலிக்கக்கூடாது என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெற்றோர்
ஆசிரியர் கழகத்தில் உள்ளவர்களில், பெரும்பாலானோர் ஆளும்கட்சியை
சேர்ந்தவர்கள்.
மாணவர் சேர்க்கையை நாங்கள் தான் நடத்துவோம் என, கூறும் போது, அவர்களைத்
தடுக்க முடியவில்லை. தடுத்தாலும், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரிடமிருந்து போன்
வருகிறது. ஆங்கிலவழிக்கல்வி மற்றும் பிளஸ் 1 பாடத்தில், குறிப்பிட்ட
பிரிவுகளுக்கு, பல ஆயிரம் ரூபாய் நன்கொடையாக, வசூலிக்கின்றனர். இதனால்,
விரும்பிய பிரிவில் சேர்க்க, பெற்றோர் கடும் அவதிப்படுகின்றனர்.
எம்.எல்.ஏ., தலையீடு என, அதிகாரிகளுக்கு தெரிவித்தால், அவர்களும்
ஒதுங்கி விடுகின்றனர். ஆனால், பிரச்சனை என, வரும்போது, அவர்களும், தலைமை
ஆசிரியர்களையே பலிகடா ஆக்குகின்றனர். இதனால், அரசு பள்ளி தலைமை
ஆசிரியர்கள், இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தில், ஒன்றிரண்டு பெற்றோர் கூட இருப்பதில்லை.
முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் பதவியாக மாறிவிட்டது. அரசு பள்ளிகளில்,
பராமரிப்பு செலவுகளுக்கு, திட்ட நிதி மற்றும் அரசு வழங்கும் நிதியே,
போதுமானதாக இருப்பதால், பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கலைக்க
வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
நலத்துறை பள்ளிகளில் தேர்ச்சி குறைவு: தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு
ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்
குறையும் பட்சத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய
ஓய்வு வழங்கப்படும் என அரசுச் செயலர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் கண்ணகி பாக்கியநாதன் கடலூரில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்டத்தில் அனைத்துத் துறைகளில் ஆதிதிராவிடர்களுக்கான திட்ட செயல்பாடு, பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 45 சதவீதம் குறைவான தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது குறித்து கவலை தெரிவித்தார்.
பின்னர் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் அவர் பேசியது, "மாவட்டத்தில் இதுபோன்று கல்வி தரத்தில் பின்தங்கிய நிலை கவலை அளிக்கிறது. தேர்ச்சி சதவீதம் குறையும் நிலையில் இனி 50 வயது கடந்த தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது நிறுத்தப்படும். தோல்வியுற்ற மாணவர்களுக்கு நடத்தப்படும் உடனடி தேர்வில் அனைவரும் தேர்ச்சிப் பெற கல்வித் துறையினர் முழு கவனத்துடன் பணியாற்ற வேண்டும்' என்றார்.
சார் ஆட்சியர் ரா.லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"ஓய்வூதிய தனியார்மயம் கூடாது ஆக.6 கோட்டை நோக்கிப் பேரணி"
ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த
வேண்டும் என்பது
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் கோட்டை
நோக்கி பேரணி நடத்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல
அமைப்பின் 3 வது மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.
இம்மாநாட்டின் முதல் நாள், பொதுமாநாடு மதுரை
கே.கே.நகர் வி.ஆர்.கிருஷ்ணய் யர் சமுதாயக்கூடத்தில் வெள்ளி யன்று மாலை
நடைபெற்றது. ஸ்தபாக தலைவர் எஸ்.ஆடிய ராஜன் கொடியேற்றி வைத்தார்.
வரவேற்புக்குழு தலைவர் என். ஜெயச்சந்திரன் வரவேற்புரை யாற்றினார். சிஐடியு
மாவட்ட உதவித்தலைவர் பா.விக்ரமன் துவக்கவுரையாற்றினார். தமிழ் நாடு
அரசுப்போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறு
முகநயினார், போக்குவரத்து ஓய்வூதியத்துறை முன்னாள் இயக்குநர் வீ.பிச்சை
ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து பிரதி நிதிகள் மாநாடு
நடைபெற்றது. அரசுப் போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நலஅமைப்பின்
பொதுச்செயலாளர் கே.கர்சன் வேலை, ஸ்தாபன அறிக்கையையும், பொருளாளர் ஏ.வரத
ராஜன் வரவு செலவு அறிக்கையையும் சமர்பித்தனர்.
மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறுபோக்குவரத்துக் கழகங் களில் பணியாற்றி பணி மூப்பின் காரணமாக ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு அன்றே வழங்க வேண் டிய பணிக்கொடையினை ஓய்வுபெறும் அன்றே வழங்க வேண்டும். விடுப்புச்சம்பளம், சமூகப்பாதுகாப்பு நிதி, ஓய்வு கால சேமநலநிதி மற்றும் ஐஆர்டி, பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும். பென்சனை அரசே ஏற்று நடத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். புறநகர் பேருந்து களில் பயணம் செய்ய ஓய்வு பெற்றோர்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6.8.2013 அன்று சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்துவது மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.மாநாட்டின் இரண்டாவது நாளாக ஜூன் 1ம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறும் மாநாட்டில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் எம்.ஜெக தீசன், ஓய்வுபெற்ற பள்ளி கல் லூரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் என்.கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் கே.ஆர்.சங் கரன், மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். சங்கத்தின் துணைத்தலைவர் எம்.சந்திரன் நிறைவுரை யாற்று கிறார்.மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.தேவராஜ் நன்றி கூறுகிறார்.

2013-14ம் ஆண்டு பொது மாறுதல் 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 02898 / டி1 / 2013, நாள்.31.05.2013ன் படி 2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல், 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை 31.05.2013 மாலைக்குள் இமெயில் மூலம் அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி
| -ஜி. ராமகிருஷ்ணன் |
கல்வி கற்பதற்கான உரிமைக் குறியீடு களை எய்துவது குறிப்பாக மொத்தப் பள்ளிச் சேர்க்கை மற்றும் இடை நிற்றல் அளவு களில் மிகச் சிறப்பாகக் கருதப்படும் மாநிலங் களுள் தமிழகம் ஒன்று என மாநில நிதிய மைச்சர் சமர்ப்பித்த நடப்பாண்டுக்கான ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூற்று சரியானதே. இருப்பினும் தமிழ கத்தில் பள்ளிக் கல்வி நிலை குறித்து நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. திருப்தி அடைந்தால் இத்துறையில் உள்ள குறைபாடு களைப் போக்கிட முடியாது. உதாரணமாக, “அசர்’ (ஆய்வு நிறுவனம்) செய்த ஆய்வின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பு மாணவர் களில் 53 விழுக்காடு குழந்தைகள் இரண் டாம் வகுப்பிற்கான பாடத்தை வாசிக்க இய லாத நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் இந்த விழுக்காடு 58 சத விகிதமாக இருந்தது. மேலும், மாணவர் சேர்க் கை விகிதத்தைப் பொருத்தவரை மக்கள் அரசுப் பள்ளிகளை விடுத்து தனியார் பள்ளி களை நாடும் போக்கு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வி, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் நிலவும் மேற்கண்ட குறைபாட்டுக்கு கல்வித் தரம் உயராதது முக் கியமான காரணங்களில் ஒன்று. கற்பிக்கும் முறை, கல்வி பெறும் சூழல், தாய்மொழியில் திறன், குழந்தைகளின் வாசிப்புத் திறன் போன்ற அம்சங்களைக் கொண்டே கல்வித் தரம் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த அம் சங்கள் அல்லாமல் பள்ளிகளில் அடிப் படைக் கட்டுமானங்களும் கல்வித் தரம் உயர அவசியம். கல்வித் தரத்தை உயர்த்துவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மாறி வரும் சூழலுக் கேற்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சி, தேவை யான அடிப்படைக் கட்டுமானங்களை உரு வாக்குவது, ஆசிரியர்களை ஊக்குவிப்பது, பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது போன்றவைகளுக்கு ஆசிரியர்களை அரவ ணைத்து மாற்றங்களை உருவாக்குவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது. கல்வித்தரம் உயர மாநில, மாவட்ட அளவிலான இத்துறை சார்ந்த அதிகாரிகளுக் கும் பொறுப்பு உள்ளது. கல்வித் தரம் சம்பந்தப் பட்ட ஒவ்வொரு அம்சத்திலும் “அசர்” போன்ற ஆய்வு சுட்டிக்காட்டும் குறைபாடு களைப் போக்கிட இத்துறை சார்ந்த அதிகாரி களின் தலையீடும் அவசியமானது. கல்வித் தரம் உயர தேவையான பல அம் சங்களில் ஆசிரியர்களின் பங்கும் முக்கிய மான ஒன்று. ஆசிரியர்களின் பாத்திரம், பங்க ளிப்பு சிறப்பாக உள்ள பள்ளிகளில் தரமும் உயர்கிறது. அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல் லும் போக்கும் தடுக்கப்படுகிறது. தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஒன்றான இராமம் பாளையம் ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு இக்கட்டுரையாளருக்குக் கிடைத் தது. கோவை மாவட்டத்திலுள்ள ஜடையன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது இராமம் பாளையம் கிராமம். கோவையிலிருந்து 38 கி. மீட்டர் தொலைவிலுள்ள இராமம்பாளை யம் அரசு ஆரம்பப்பள்ளி தற்போது அனைவ ரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்பள்ளி 1930-இல் துவங்கப்பட்டது. சுமார் 1,000 பேர் வசிக்கக் கூடிய இக்கிராமத்திலுள்ள மக்கள் சமீப காலம் வரை தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்காமல் தனியார் மெட்ரி குலேஷன் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கி னார்கள். இந்நிலை இராமம்பாளையத்திலுள்ள அரசுப் பள்ளிக்கு மட்டுமல்ல, தமிழகத்தி லுள்ள பெரும்பான்மையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இதே நிலைமைதான். காரமடை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஐந் தாண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 3 வகையான அர சுப்பள்ளிகளில் 1,898 மாணவர்கள் எண் ணிக்கை குறைந்துள்ளது. இது கவலையளிக் கக்கூடியது. ஒருபகுதி மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறபோது ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த, குறிப்பாக தலித் மற் றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் வேறு வழியில்லாத நிலையில் அரசுப் பள்ளிகளில் சேர்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக ளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது காரமடை ஒன்றியத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான். இந்நிலைமையை மாற்றிட அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது, ஆசிரியர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்கள் முயன் றால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைவதை தடுப்பது மட்டுமல்ல, எண்ணிக்கையை உயர்த்தவும் முடியும் என்பதற்கு இராமம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இராமம்பாளையம் பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 27 மட் டுமே. நடப்பு ஆண்டில் மாணவர்கள் எண் ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இதில் தலித் மாணவர்கள் 53 பேர். பிற்படுத்தப்பட்ட மாண வர்கள் 8 பேர், மலைவாழ் வகுப்பைச் சார்ந் தவர் 1. மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிக ளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிற நிலையில், இராமம்பாளையம் பள்ளி யில் மட்டும் உயர்வதற்கு என்ன காரணம்? தற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல் படும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 56 வயதுடைய சரஸ்வதியும், உதவி ஆசிரி யராக 35 வயதான இளைஞர் பி.பிராங்ளின் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்கள். தலை மை ஆசிரியர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற உள்ளார். கணிதம் படித்து ஆசிரிய ராகப் புதிதாகப் பணியில் சேர்ந்த பிராங்ளின் கல்வித் தரத்தை உயர்த்துவது என்ற முடி வோடு பணியைத் துவங்கினார். இந்த இரண்டு ஆசிரியர்களும் எடுத்த முயற்சிதான் மேற்கண்ட மாற்றத்திற்கு காரணம். இளம் ஆசிரியர் பிராங்ளின் எடுத்த முயற்சிக்கு தலைமை ஆசிரியர் முழு ஒத்துழைப்பு கொடுத்து செயலாற்றியதும் ஆசிரியர்கள் முயற் சிக்கு இராமம்பாளையம் கிராம மக்கள் ஆதரவு அளித்ததும்தான் இந்த மாற்றத்திற்கு காரணம். குழந்தைகள் எளிதில் அமர்ந்து கல்வி கற்க ஏதுவான வட்ட மேசையும், குழந்தை கள் உட்கார இருக்கையும், இருக்கையில் புத் தகங்களை வைத்துக்கொள்ள சிறிய காப் பறையும் உள்ளன. குழந்தைகள் தங்கள் புத்த கங்களை வீட்டுக்குச் செல்கிறபோது சுமந்து செல்ல வேண்டியதில்லை. தேவையான புத்தகம், நோட்டுகளை மட்டும் எடுத்துச் சென்றால் போதும். தரையிலிருந்து குழந்தை களுக்கு எட்டும் உயரம் வரை சுவற்றிலேயே கரும்பலகை, சுவர்முழுவதும் பசுமையான பின்னணியில் வனம் மற்றும் பல விலங்கு களின் ஓவியம், டைல்ஸ் பதித்த தரை என குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் வகுப் பறையில் விரும்பி மகிழ்ச்சியாகக் கற்க ஏது வான சூழலில் இரண்டு வகுப்பறைகளும், திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் பயன்படுத்த குளிர் சாதன வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வகுப்பறையில் நுழைவு வாயிலிலேயே ஆள் உயரக் கண்ணாடி, சமச்சீர் கல்வி முறை, குழந் தைகளுடன் சரிசமமாக அமர்ந்து கல்வி கற் பிக்கும் முறை ஆகியவை வகுப்பறையின் ஒட் டுமொத்த சூழலையே முற்றாக மாற்றிவிட்டது. மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி, நாளி தழ்களை வாசிக்கப் பழக்கப்படுத்துவது என சிறப்பு முயற்சிகளையும் ஆசிரியர்கள் மேற் கொண்டுள்ளனர். இதனால் கற்பது சுமை யல்ல, கற்பது கற்கண்டே என்ற உணர்வை மாணவர்களுக்கு உருவாக்கிவிட்டார்கள். ஆசிரியர்களுக்கென்று தனி மேசை, நாற்காலி பள்ளியில் இல்லை. பாடப் புத்தகங் கள் வைப்பதற்கும், கற்பதற்கான புத்தகங்க ளும் அதற்காகவே உருவாக்கப்பட்ட ரேக்கு களில் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டி ருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 11 கணிப்பொறிகள் கொண்ட தனியான அறையும், எல்சிடி புரொஜக்டருடன் கூடிய கணிப்பொறி அமைப்பும் உள்ளன. கணினி அறை மற்றும் வகுப்பறைகளுக்கு தடை யில்லா மின்சாரம் கிடைக்க யுபிஎஸ் ஏற்பா டும் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளே விரும்பி கடைப்பிடிக்கும் அளவிற்கு தூய்மையாக இருக்க வேண்டி யதன் தேவை உணர்த்தப்பட்டதால் டெட் டால் போட்டு கைகழுவும் பழக்கமும், குப் பைகளைத் தவறாமல் குப்பைக் கூடையில் சேகரிக்கும் வழக்கமும் உள்ளன. கடந்த 4 - 5 ஆண்டுகளாக பிராங்ளின் மற்றும் தலைமையாசிரியர் சரஸ்வதி ஆகி யோர் எடுத்த முன்முயற்சியால் ஓர் அரசுப் பள்ளி இவ்வளவு வியத்தகு முன்னேற்றங் களை கண்டுள்ளது. அடிப்படையில் விவசா யிகளாக இருக்கும் இவ்வூர் மக்கள் அனை வரும் ஆசிரியர்களின் சீரிய முயற்சிக்கு மேலான ஒத்துழைப்பை அளித்து வருகின் றனர். குறிப்பாக கிராமக் கல்விக்குழு தலைவர் மகேஷ், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆர்.ஆர்.ஈஸ் வரன் மற்றும் கிராமத்தைச் சார்ந்தவர்கள் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக உள்ளனர். ஜடையம்பாளையம் ஊராட்சித் துணைத் தலைவராக உள்ள ஆர்.கே.பழனிச்சாமி பள்ளிக்கு நிதியுதவி செய்து வருகிறார். ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் மாதிரி வகுப்பறை உருவாக்கப்பட்டு செயல்படத் துவங்கிய நிலையில், அங்கு ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் இதே போல் இன்னொரு வகுப்பறையை உருவாக்க ரூ.3 லட்சம் நிதியை ஒதுக்கித் தந்துள்ளார். பள்ளிக்கான சுற்றுச் சுவரும் ஊர்மக்களின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக ளில் சேரும் குழந்தைகள் தலித் மற்றும் பிற் படுத்தப்பட்ட ஏழைக் குடும்பங்களைச் சார்ந் தவர்கள்தான். இப்பள்ளிகள் தரமானதாக இருந்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். ஏழைக் குழந்தை களின் எதிர்காலம் ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது. இராமம்பாளையம் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தினால் மேலும் வகுப்பறை கள் கட்டுவதற்கான இடத்தை வழங்கவும் ஊர் மக்கள் தயாராக உள்ளார்கள். தமிழகத் தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் எல்லாம் இராமம்பா ளையம் பள்ளிகளாக உருவாகிட ஆசிரியர்க ளின் முயற்சி முக்கியமானது. இராமம்பாளை யம் பள்ளி மாநிலம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் சமூகத் திற்கும் உணர்த்தும் பாடத்தைப் புரிந்து கொண்டால் மாற்றம் நிச்சயம். அரசின் ஆதரவு, ஊர் மக்களின் உதவியும் அடிப்படையானது. இராமம்பாளையம் ஆரம் பப்பள்ளி நல்லாசிரியர்களைப் போற்றுவோம். அனைத்து அரசு மற்றும் உள்ளாட்சி அமைப் புகள் நடத்தும் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இதுபோன்று மாறட்டும். நன்றி : தினமணி (29.3.2013) |
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம்
2013 - 14 ஆம் கல்வியாண்டு முதல் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண்ணாசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
இதே போல் ஆண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஆணாசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிக்கு இருபால் ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் வழங்கலாம். ஆனால் தற்போது பணிபுரியும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விதி பொருந்தாது என அரசு முதன்மைசெயலர் உத்தரவிட்டு உள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை - உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசாணை (1டி) எண்.129 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள் 09.05.2013 அரசாணையின்படி 20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மே 30-ல் முதல்வரிடம் மனு அளிக்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மே 30-ம் தேதி மனு அளிப்பது என வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராக. ராமு தலைமை வகித்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் நியமன நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு என்பதை சிறப்பு அரசாணை மூலம் அறிவித்து உடன் பணி வழங்க வேண்டும்.
மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் பழைய விதிமுறைகளின்படி 2001-க்கு முன்பு ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30-ம் தேதி முதல்வரைச் சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ், பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.கே. சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்றார்.
அரியலூர் மாவட்டத் தலைவர் இளவரசன் நன்றி கூறினார்
டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் குறைப்பு இல்லை : தமிழக அரசு அறிவிப்பு
"டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்' என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியபோதும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது.
டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.
பல மாநிலங்களில் சலுகை : அதன்படி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் அளவு, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இதைப் பின்பற்றி, தமிழக அரசும், எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., ஆகிய பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.
சட்டசபையில் கோரிக்கை : கடந்த, 10ம் தேதி, சட்டசபையில், பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், பல எம்.எல்.ஏ.,க்கள், டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.
அறுபது சதவீத மதிப்பெண்கள் என்ற அளவால், சமுதாயத்தில் பின் தங்கிய தேர்வர்களால் தேர்வு பெற முடியாத நிலை உள்ளது என்றும், குறிப்பாக, 55 சதவீதம், 58, 59 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் தேர்வர்கள் கூட, தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது என்றும், எம்.எல்.ஏ.,க்கள் சுட்டிக் காட்டினர். அப்போது, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதிலளிக்கையில், "இந்த கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது' என, தெரிவித்தார். இதனால், தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று வெளியான, டி.இ.டி., தேர்வு அறிவிப்பில், தகுதி மதிப்பெண்கள் குறைப்பு செய்யப்படவில்லை. வழக்கம் போல், தகுதி மதிப்பெண்களாக, 60 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அரசு தவறு செய்கிறது : இது குறித்து, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழக அரசின் அறிவிப்பு, மிகவும் தவறானது. ஆந்திரா உட்பட பல மாநிலங்கள், தகுதி மதிப்பெண்கள் அளவை குறைத்துள்ளன. "தகுதி மதிப்பெண்கள் அளவை, மாநில அரசுகள் குறைத்துக்கொள்ளலாம்' என, என்.சி.டி.இ., அனுமதி வழங்கியுள்ளது. அப்படியிருக்கும்போது, தமிழக அரசு மட்டும், ஏன் இப்படி செயல்படுகிறது என, புரியவில்லை.
ஒரே தகுதியை, அனைத்து தேர்வர்களும் பெற வேண்டும் என்பது சரியல்ல. இதனால், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
TRB - TN TET 2013 Announced | ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 அறிவிப்பு
TET - 2013 EXAM ANNOUNCED.
Paper I - 17.08.2013 Time 10 am to 1 pm
Paper II - 18.08.2013 Time 10 am to 1 pm
Recruitment Post = 13,000 (SGT+BT)
Application Sales Starts From 17.06.2013 to 01.07.2013
முதல் தாள் தேர்வு : 17.08.2013
இரண்டம் தாள் தேர்வு : 18.08.2013
தேர்வு நேரம் : காலை 10 முதல் 1 வரை ( 3மணி நேரம்)
Application Cost: Rs. 50
Examination Fees: Rs. 500
SC/ST/Disabled Fees: Rs. 250
click here to download the TRB - TN-TET announcement Notification

ஆகஸ்ட் 17, 18ல் ஆசிரியர் தகுதித் தேர்வு
2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜுன் 17ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ம் தேதி ஆகும்.
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஆகஸ்ட் 17ம் தேதியும், இரண்டாம் தாள் ஆகஸ்ட் 18ம் தேதியும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 1,100 உதவிப் பேராசிரியர் நியமனத்தை முடித்திடவும், டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. தமிழக அரசு அறிவித்து, இரு ஆண்டுகள் ஆகியும், இன்னும் இந்தப் பணி நியமனம் நடக்கவில்லை. இந்த விவகாரம், சென்னை, ஐகோர்ட்டுக்கு சென்ற நிலையில், ஒன்பது மாதங்களுக்குள், உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வை முடிக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைக்கால ஆசிரியர் நியமன முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
தொடக்கப் பள்ளிகளில் இடைக்கால ஆசிரியர்களை நியமிப்பதில் கல்வித் தகுதி உள்ளிட்ட வரைமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றாதது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
கல்வி உதவியாளர் நியமனம் குறித்து குஜராத் அரசு தாக்கல் செய்த முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.செüஹான், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டது:
கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பும் இடைக்கால ஆசிரியர் நியமன முறை தொடர்வது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற ஜனரஞ்சகமான திட்டங்கள் நாட்டின் வருங்காலத்தையே பாழாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்திய அரசியல் சட்டத்தில் கல்வி உரிமையை அளிக்கும் 21-ஏ பிரிவு இருக்கும்போது இதுபோன்ற நடைமுறைகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை எப்படி அனுமதிக்க முடியும்? முறையான கல்வித் தகுதி இல்லாதவர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமிப்பதால் கல்விகற்பிக்கும் முறையையே பாழடித்துவிடுகிறோம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இடைக்கால முறையில் நியமிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

இளநிலை ஆய்வாளர் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
| List of Current Notifications | ||||||
| S No. | Advt. No./ Date of Notification | Name of the Post | Online Registration | Date of Examination | Activity | |
| From | To | |||||
| NOTIFICATIONS - 2013 | ||||||
1
|
8/2013 17.05.2013
|
17.05.2013
|
10.06.2013
|
03.08.2013
| Apply Online | |
கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் நிலையில், காலியாக உள்ள, 17 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 3ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 17ம் தேதி முதல் (நேற்று), ஜூன் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மேலும், கூட்டுறவு சங்கங்களில், 13, "சூப்பர்வைசர்" பணிகளை நிரப்பவும், மேற்கண்ட தேதிகளுக்குள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில், 18, "ஸ்டோர் கீப்பர் - கிரேடு - 2" பணியிடங்கள், தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையில், 2, "ஸ்டோர் கீப்பர்" பணியிடங்களுக்கும், விண்ணப்பிக்கலாம். அனைத்து தேர்வுகளும், ஆகஸ்ட், 3ம் தேதி, காலை, 10:00 மணி முதல், பிற்பகல் 1:00 மணி வரை நடக்கும்.
"ஆப்ஜக்டிவ்" முறையில், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். இத்துடன், 40 மதிப்பெண்களுக்கு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவ்வாறு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here