திருத்திய ஊதியம் - தமிழ்நாடு திருத்திய ஊதிம் 2009 - திருத்திய ஊதிய மாற்றியமைப்பு சார்பான கோரிக்கைகள் பெற இயலாது என அரசு அறிவிப்பு



மாறுதலுக்கான தகுதி 3 ஆண்டுகள் பணிக்காலம் என்பதற்கு TNPTF கண்டனம்.


பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்








உதவித்/ கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கள் மீளவும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாறுதல் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு



உதவித்/ கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


கோப்புகளை கூர்ந்தாய்ந்து முதல் முறையே தேவையான ஆவனங்களை கோர அரசு உத்தரவு




ஜாக்டோ சார்பில் சி.பி.ஐ(மார்க்சிஸ்ட்)., மாநில செயலாளர் திரு.ஜி.இராமகிருஷ்ணன் உடன் ஜாக்டோ குழு சந்திப்பு


அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறு வளமைய பயிற்சி "ENRICHMENT TRAINING ON CCE IN SABL" என்ற தலைப்பில் 11.07.2015 அன்று நடைபெறவுள்ளது


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றோருக்கு, பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்பு சேர்த்து வட்டியுடன் திரும்ப அளிக்க அரசு உத்தரவு


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் சார்பான திருத்தம்


01.08.2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அனைத்து இயக்கங்களின் சார்பாக மா நில பொறுப்பாளர்கள், ஜாக்டோ உயர்மட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


அகஇ - மாணவர்களின் தர மேம்பாட்டிற்கு "ஆசிரியர் பயிற்றுநர்கள்" மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து மாநில திட்ட இயக்குனர் அவர்களின் வழிக்காட்டுதல்கள்





முதுகலை ஆசிரியர்கள் கீழ் வகுப்புகளை எடுக்கலாமா ?



உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2012ல் காமாட்சி என்பவர் ஓய்வு பெற்றார். இவர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை திரும்ப அளிக்க கோரி 2013ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார்.
 
 இதையடுத்து 2014ல் நீதிமன்ற ரூ.2,91,000/-(பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து) மற்றும் வட்டியுடன் அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
 
உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியும், உரிய நபருக்கு தொகை வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் உரிய நபருக்கு அவரின் வங்கி கணக்கில் ரூ.2,91,000/- மற்றும் அதற்கான வட்டி சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளது.
 
 இது புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் ஊக்கத்தை அளித்துள்ளது. அதேபோல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு ஒன்று அடுத்த வாரத்தில் தாக்கல் ஆக உள்ளது.

சிறுபான்மை இன மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்

மகாத்மா காந்தி 2015 - அமைதிக்கான விருதுக்கான விண்ணப்பங்களை வரவேற்று தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு


சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்தாது; உயர்நீதிமன்றம்



' இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்குமகப்பேறு விடுப்பு உண்டு'

'அரசு பெண் ஊழியருக்கு, முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


       ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பிரியதர்ஷினி தாக்கல் செய்த மனு: எனது முதல் பிரசவத்திற்காக, கடந்த, 2011ல், 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். எனக்கு, இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டாவது பிரசவத்திற்காக, கடந்த, 2014, அக்., 12 முதல், 179 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். இதையடுத்து, கடந்த, ஏப்., 10ம் தேதி, பணியில் சேர்ந்தேன்.

          ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,'உங்களுக்கு, ஏற்கனவே இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பில் சென்றதை அனுமதிக்க முடியாது' என்றார். இந்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்து, நீதிபதி எஸ்.வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவு:

         மனுதாரருக்கு, முதல் பிரசவத்திலேயே, இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதை காரணமாக வைத்து, அடுத்த பிரசவத் திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்கமுடியாது என்பது ஏற்புடையதல்ல.மகப்பேறு விடுப்பு, பெண்களின் உடல்நலம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனுமதிக்கப்படுகிறது.
 
 முதலில், இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு, விடுப்பு அனுமதிக்க வேண்டும். சம்பளப் பிடித்தம் உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது. வரும், 23ம் தேதிக்கு, விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அக இ - 20.06.2015 மற்றும் 27.06.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சியில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க இயக்குனர் உத்தரவு


June 2015 - Primary CRC on 20.6.2105 and Upper Primary CRC on 27.06.2015


ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்

தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்






இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மாற்றிட இந்திய உச்ச நீதிமன்றம் தடை உள்ளத்தால் கோரிக்கையை பரிசிலனை செய்திட நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திட முடியாது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.




தொடக்கக் கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தொடககக்கல்வி இயக்குனர் உத்தரவு.



தொடக்கக் கல்வி - பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர் இடை நிலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டவரின் விவரம் பதவி உயர்விற்காக அரசு உத்தரவு


பிறப்பு சான்றிதழில் உள்ள பிறந்த தேதியினையே மாணவர் சேர்க்கையின் போது பதிவேடுகளில் பதிவு செய்ய தொடக்கக்கல்வி துறை உத்தரவு


பள்ளிக்கல்வி - 2003 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கினால் ஏற்படும் செலவின விவரம் கோரி இயக்குனர் உத்தரவு


பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 15.11.2011 முதல் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசு மாற்றம் செய்து உத்தரவு



CPS திட்டத்தை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் நிதித்துறை செயலாளர் ஜுன் 1ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு



மகப்பேறு விடுப்பு; புதிய வழிகாட்டு நெறிமுறை

பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு அளிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (பயிற்சி) முதன்மைச் செயலாளர் அனிதா ப்ரவீன் அனைத்துத் துறை செயலாளர்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பணியில் நிரந்தரமாக பணியாற்றும் இளம் தாய்மார்களுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால் இந்த விடுப்பினைப் பெற தகுதி படைத்தவர்கள். தாற்காலிகமாக பணியாற்றுவோருக்கும் நிபந்தனைகள் அடிப்படையில் விடுப்பு அளிக்கப்படுகிறது. மகப்பேறு காலத்தில் பாதிப்பு ஏற்பட்டு கரு கலைந்தால், அவர்களுக்கு சராசரியான ஊதியத்துடன் ஆறு வாரங்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்.
இந்த விடுப்புக் காலம் என்பது குறைந்தபட்சம் 12 வாரங்களுக்கும் அதிகபட்சம் 20 வாரங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குழந்தைகள் பிறக்கும் போதே இறந்திருந்தால், அத்தகைய தாய்மார்களுக்கு 90 நாள்கள் வரை மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும். எனவே, இத்தகைய தன்மைகளில் மகப்பேறு விடுப்புகளை துறைத் தலைவர்கள் அளிக்கலாம். மகப்பேறு விடுப்பு தொடர்பாக பல்வேறு முரண்பாடான கருத்துகள் கேட்கப்பட்டுக் கொண்டே இருந்ததால் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுவதாக அனிதா ப்ரவீன் தெரிவித்துள்ளார்.

PAY ORDER FOR SSA HEAD FOR 7979 B.T.ASSISTANT POST



Popular Posts