3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
மகப்பேறு விடுப்பு; புதிய வழிகாட்டு நெறிமுறை
பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு அளிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (பயிற்சி) முதன்மைச் செயலாளர் அனிதா ப்ரவீன் அனைத்துத் துறை செயலாளர்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பணியில் நிரந்தரமாக பணியாற்றும் இளம் தாய்மார்களுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால் இந்த விடுப்பினைப் பெற தகுதி படைத்தவர்கள். தாற்காலிகமாக பணியாற்றுவோருக்கும் நிபந்தனைகள் அடிப்படையில் விடுப்பு அளிக்கப்படுகிறது. மகப்பேறு காலத்தில் பாதிப்பு ஏற்பட்டு கரு கலைந்தால், அவர்களுக்கு சராசரியான ஊதியத்துடன் ஆறு வாரங்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்.
இந்த விடுப்புக் காலம் என்பது குறைந்தபட்சம் 12 வாரங்களுக்கும் அதிகபட்சம் 20 வாரங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குழந்தைகள் பிறக்கும் போதே இறந்திருந்தால், அத்தகைய தாய்மார்களுக்கு 90 நாள்கள் வரை மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும். எனவே, இத்தகைய தன்மைகளில் மகப்பேறு விடுப்புகளை துறைத் தலைவர்கள் அளிக்கலாம். மகப்பேறு விடுப்பு தொடர்பாக பல்வேறு முரண்பாடான கருத்துகள் கேட்கப்பட்டுக் கொண்டே இருந்ததால் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுவதாக அனிதா ப்ரவீன் தெரிவித்துள்ளார்.
பூட்டை உடைத்து, பொருட்களை எடுத்து சத்துணவு சமையல்: போராட்டத்தை முறியடிக்க அரசு தீவிரம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க, அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், நேற்று முதல், காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளது. இப்போராட்டத்தை சமாளிக்க, அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
வெளி ஆட்களைக் கொண்டு, சத்துணவு சமைத்து, மாணவ, மாணவியருக்கு வழங்க ஏற்பாடு செய்யும்படி, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர்கள் சமையலர்களை ஏற்பாடு செய்தனர். சமையல் செய்ய வந்தவர்களுக்கு, 185 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில், சத்துணவு ஊழியர்கள், உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையை பூட்டி, சாவியை எடுத்து சென்று விட்டனர். எனவே, பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், முன்னாள் பொதுச் செயலர் மேகநாதன் கூறியதாவது: கடைநிலை அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும். கடும் புகையில் வாடி, ஓய்வு பெறும்போது, குறிப்பிட்ட தொகை, ஓய்வூதியம் வழங்கினால், மேற்கொண்டு வாழ எளிதாக இருக்கும் என, அரசை வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கைகளை பரிசீலிக்கவே, அரசு தயங்குகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
'போராட்டம் தேவையற்றது':
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சத்துணவு திட்டத்தின் கீழ், முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள, 54.63 லட்சம் குழந்தைகளுக்கு, 42,619 சத்துணவு மையங்கள் மூலம், கலவை சாதம் வழங்கப்படுகிறது. இதற்கென, 1.28 லட்சம் பணியாளர், சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு அரசு பல சலுகைகளை அளித்து வருகிறது. இத்திட்டத்திற்காக, கடந்த நிதியாண்டில், 1,412.88 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஒரு சத்துணவு ஊழியர் சங்கம், நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை துவக்கி உள்ளது. இதுகுறித்து, கலெக்டர் மற்றும் இதர அலுவலர்கள் மூலம், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்டங்களில் உள்ள, அனைத்து சத்துணவு மையங்களும், நேற்று திறக்கப்பட்டு, சத்துணவு சமைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்துள்ள நிலையில், மற்ற வகுப்பு குழந்தைகளுக்கு, ருசியான கலவை சாதம் வழங்கப்பட்டது. குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்பட்ட, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் போராட்டம் தேவையற்றது. இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிப்பு
தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வரும் நிதியாண்டில் வரவு-செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் குறித்த ஒதுக்கீடு ரூ.41, 215.57 கோடியாகவும், ஓய்வூதியம், இதர ஓய்வுக்கால பலன்கள் குறித்த செலவினத்துக்கான ஒதுக்கீடு ரூ.18,678.6 கோடியாகவும் இருக்கும்.
இது வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் சம்பளம்-ஓய்வூதியம் குறித்த செலவுகள்மொத்த வருவாய்ச் செலவுகளில் 40.65 சதவீதமாகும். அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய செலவினங்களின் காரணமாக, வரும் நிதியாண்டிகளில் இதன் வளர்ச்சி விகிதம் முறையே 11, 25 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. வரும் 2017-18-ஆம் ஆண்டு முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 15 முதல் வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு
ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. சங்க மாநில செயலாளர் பேயத்தேவன் கூறியதாவது: உணவு சமைப்பதற்கான முன் மானியம் வழங்குவதில் கால தாமதம் செய்வதால் கடன் வாங்கி உணவு சமைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை ஒரு குழந்தைக்கு ரூ. 1.70 பைசா என்றும்,
6 முதல் 10 வகுப்பு வரை ரூ. 1.80 பைசாவும் வழங்குகின்றனர். பருப்பு சமைக்கும் நாட்களில் ரூ. 1.30, 1.40 என்று அனுமதிக்கப்படுகிறது. இதனை ரூ. 5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 3 கிராம் எண்ணெய் என்பதை 7 கிராமாக உயர்த்த வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் வழங்கப்படும் உருளைக்கிழங்கு ஒரு குழந்தைக்கு 16 பைசா அனுமதிக்கப்படுகிறது. 100 குழந்தைகளுக்கு ரூ. 16 வழங்கப்படுகிறது. அப்படியென்றால்ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.8 க்கு வாங்க வேண்டும். இது நடைமுறை சாத்தியமில்லாதது. ஒரு மாணவனுக்கு 60 பைசா உயர்த்த வேண்டும். தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை நிரப்பவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், மறியல், அமைச்சர் சந்திப்பு என எல்லாம் செய்து பார்த்தும் பலனில்லை. ஏப்ரல் 4 ல் சென்னையில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது. அதன் பிறகு ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால்...: உதவிபெறும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
வரும் 31ம் தேதிக்குள், வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும் என, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான வருமானவரிக் கணக்கை, இம்மாத இறுதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, வருமானவரித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப் பாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம், வருமானவரிக் கணக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
ஆனால், தனியார் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தங்கள் வருமானவரிக் கணக்கை, இன்னும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் வருமானவரித் துறையில் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், கடைசி கட்ட பரபரப்பை தவிர்க்க, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம், எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அனைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், தங்கள் வருமானவரிக் கணக்கை, வரும் 31ம் தேதிக்குள், வருமானவரித் துறையில் தாக்கல் செய்து, நகலை, பள்ளிக்கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும், 20 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையை, சம்பந்தப்பட்ட பள்ளிகளே, வருமானவரித் துறையில் செலுத்த வேண்டும். இதில், கல்வித்துறை தலையிடாது என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா?
உண்மை நிலவரம்
2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா???
நண்பர்களே.. இவர்கள் அனைவரும் நவம்பர் 2001ல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் D.t.ed பதிவு செய்திருந்தவர்கள். ஜனவரி 2002ல் கரூர் மாவட்டத்தில் இவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு அரசியல்வாதிகளின் துணையுடன் பணிநியமனம் வழங்கப்பட்டது.
இவர்கள் அனைவரும் SC, MBC பிரிவினர். இவர்கள் அனைவருக்கும் பின்னடைவு பணியிடங்கள் இருந்தும் பணிநியமனம் மறுக்கப்பட்டது. மேலும் ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் 11.1.2002ல் நடத்தப்பட்ட பணிநியமணத்திலும் இவர்களுக்கு பணியிடங்கள் இருந்தும் சான்றிதழ்கள் மட்டும் சரிபார்க்கப்பட்டு பணிநியமனம் மறுக்கப்பட்டது. பெரம்பலூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அன்றைய நாளில் பணிநியமனம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பணி வழங்கப்பட்டு இருந்திருந்தால் காலமுறை ஊதியத்தில் பழைய ஓய்வூதியத்தில் நியமனம் செய்யப்பட்டிருப்பர். இதனை தொடர்ந்து 2004ல் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை தொடர்ந்து நியமனம் பெற்ற நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 2002ல் நியமனம் வழங்கப்பட்டிருந்தால் ஓய்வூதியம் கிடைத்திருக்கும்.
இவர்கள் அனைவரும் கரூர் மாவட்ட பதிவுதாரர்கள். மற்ற மாவட்டங்களுக்கு மாறுதல்கள் பெற்று சென்றதால் அம்மாவட்டத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here



























.jpg)

















