TET விண்ணப்பிக்கும் முறையை மாற்றி TNPSC போல ONLINE முறையில் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்

போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.


அதிக வேலை பளு:

டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தற்போது அமலில் உள்ளது. இந்த முறை, டி.ஆர்.பி.,க்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.


இணையதளம்:

இந்நிலையை மாற்றி, எளிமையான முறையில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது, டி.ஆர்.பி., தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணைய தளம் வழியாக, விண்ணப்பதாரர், எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால், கட்டணமும், வெகுமாக குறையும். விண்ணப்ப கட்டணம், 500 ரூபாயாக உள்ளது. இதுவே, இணையதள முறைக்கு மாறினால், பதிவு கட்டணமாக, மிக குறைந்த தொகையை வசூலிக்க, வாய்ப்பு ஏற்படும்.


கால அவகாசம்:

மேலும், விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் கொடுத்து, இணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும், டி.ஆர்.பி., வாய்ப்பு கொடுக்கும். இதுபோன்று, பல வசதிகள் இருப்பதால், அரசு பொறியியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது ஆய்வு நடந்து வருகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில், 139 உதவி பேராசிரியரை நியமனம் செய்ய, அக்டோபர், 26ம் தேதி, போட்டி தேர்வு நடக்கும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கு, ஆகஸ்ட், 20ம் தேதி முதல் செப்டம்பர், 5ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


இம்மாத இறுதிக்குள்...:

இதற்கு, 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. எனவே, இந்த தேர்வில் இருந்து, இணையதள பதிவு முறையை, டி.ஆர்.பி., அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப முறையா; இணையதள பதிவு முறையா என்பது, இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.

புதிய இடைநிலை ஆசிரியர்கள் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

இன்று சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது மார்க்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சட்டபேரவை உறுப்பினர் பாலபாரதி ஆசிரியர் நியமனம் குறித்து எழுப்பிய கேள்வியின் போது இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் ஆசிரியர் நியம்னம் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ளது என்றும் தெரிவித்தார். 

இன்ஸ்பயர் விருது திட்டம் 2014 - இ-மேலாண்மை : அனைத்துவகை தொடக்க/ உயர்/ மேல்நிலைப்பள்ளி பள்ளிகளும் இம்மாத இறுதிக்குள் மாணவர் விவரங்களை உள்ளீடு செய்ய ஆணை

தொடக்கக் கல்வி - பள்ளி மாணவ்ர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட் காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு


அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்

பணிக்கால விடுப்புகளும், ஊதியமும் :
தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
சிறப்பு தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
மகப்பேறு விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
கருச்சிதைவு விடுப்பு- முழுஊதியம் & படிகள் 
தத்தெடுப்பு விடுப்பு - முழுஊதியம் & படிகள் 

ஈட்டிய விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
மருத்துவவிடுப்பு - முழுஊதியம் & படிகள் 
சொந்தக்காரண விடுப்பு - ஊதியத்தில் 50% & படிகள் 
அசாதாரண விடுப்பு - ஊதியம் ஏதுமில்லை 
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு - முழுஊதியம் & படிகள் (MA தவிர) 
மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு:
0 - 2 வருடம் = இல்லை 
2 - 5 வருடம் = 90 நாட்கள் 
5 - 10 வருடம் =180 நாட்கள் 
10 - 15 வருடம் =270 நாட்கள் 
15 - 20 வருடம் =360 நாட்கள் 
20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.

பத்து மாணவர்களுக்கு குறைவான தொடக்க பள்ளிகள் : இழுத்து மூட அரசு யோசனை

அரசு பள்ளிகளில், பத்து மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆயிரத்து 268 பள்ளிகள், இழுத்து மூடப்படும் என்ற நிலை அரசின் பரிசீலனையில் உள்ளது. தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு, புத்தகம், நோட்டு, சீருடை, சைக்கிள், 'லேப்-டாப்,' 'பஸ்பாஸ்' என 14 வகையான இலவச நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கல்வித்துறைக்காக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. 
 
இருந்தும், அரசு துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது, மிக சொற்பமாகவே உள்ளது.பெரும்பாலான பள்ளிகளில், ஒரு சில மாணவர்களே சேர்ந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் நாகுல்பட்டி துவக்க பள்ளியில், முதல் வகுப்பில் மாணவர்களே இல்லை. இரண்டாம் வகுப்பில் ஒருவரும், நான்காம் வகுப்பில் ஒருவரும், ஐந்தாம் வகுப்பில் இருவர் என மொத்தம் நான்கு மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
 

இதற்கு, இரண்டு ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் என அரசு பணம், ஆண்டுக்கு சில லட்சம் சம்பளமாக விரயமாகிறது. இதேபோல்தான், ஆர்.வெள்ளோடு ஊராட்சி அய்யம்பட்டி துவக்கப்பள்ளியில் மூன்று மாணவர்களும், உ.தாதனூரில் ஆறு பேரும், ஆர்.கே.தாதனூர் ஆறு பேரும் மட்டுமே மாணவர்கள் உள்ளனர். இதே போல்தான், மாவட்ட, மாநில அளவிலும் நீடிக்கிறது.இதற்கு காரணம், முறையான கல்வி முறை இல்லாததே காரணம் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் எழுந்துள்ளது. இது மட்டுமின்றி, பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி மோகமும் காரணமாகிறது. வரைமுறை இல்லாமல், போதிய உள் கட்டமைப்பு வசதி இல்லாத நிலையில், ஆங்கில நர்சரி பள்ளிகள் துவங்க அரசு அனுமதி அளிக்கிறது. அரசு பள்ளிகள் குறைய இதுவும் ஒரு காரணமாககும்.இதனால், நடப்பு கல்வி ஆண்டில், தமிழக அளவில், இதே எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள, ஆயிரத்து 268 பள்ளிகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பள்ளிகளில் உள்ள மாணவர்களை, அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். வரும் காலங்களிலாவது, முறையான பாட வகுப்புகளை நடைமுறைபடுத்தி, மாணவர் சேர்க்கையை கூடுதலாக்க அரசு நிர்வாகம் முன்வர வேண்டும். இல்லையேல். அடுத்தடுத்து இதேபோல் பள்ளிகள் மூடப்படும் நிலை தான் தமிழகத்தில் ஏற்படும்.

5லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்நபரின் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்

மாதச் சம்பளக்காரர்கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) விவரத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2014. இதற்கு இன்னும் 14 நாட்கள்தான் இருக்கின்றன. கடைசி வாரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்துகொள்ளலாம் என்று இருந்துவிட்டு, அவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறுகள் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க இப்போதே களமிறங்கிவிடுங்கள்.

வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்ய வேண்டும், எந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜுவிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
''மாத சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகை மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி, பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட வரிச் சலுகைகளைக் கழித்ததுபோக, மீதி உள்ள தொகைக்கு வரி கட்ட வேண்டும். இந்த முதலீடு, செலவு, வரிச் சலுகை பெற்ற விவரம், வரி கட்டிய விவரத்தை வருமான வரித் துறைக்கு தெரிவிப்பதுதான் வரிக் கணக்கு தாக்கல்' என்று அடிப்படை விளக்கம் சொன்னவர், யாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டினார்.
யாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்?
நிதியாண்டில் வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் 10,000 ரூபாய்க்குமேல் வட்டி வருமானம் கிடைத்திருந்தால்.
ஒரு நிதியாண்டில் இரண்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவர்கள்.
சம்பளம் தவிர, இதர வருமானம் உள்ளவர்கள்.
நிதியாண்டில் ஒருவரின் ஆண்டு நிகர வருமானம் (மொத்த வருமானத்தில் வரிச் சலுகைகள் எல்லாம் கழித்தது போக உள்ள தொகை) ரூ.2 லட்சத்தைத் தாண்டும்போது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது.
80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டும் போது.
கூடுதலாக வருமான வரி பிடிக்கப்பட்டு ரீஃபண்ட் பெற வேண்டியிருந்தால்.
பங்குகள், மியூச்சுவல் யூனிட்கள், சொத்து விற்றது மூலம் மூலதன ஆதாயம் கிடைத்திருந்தால்.
மூலதன ஆதாய இழப்பு ஏற்பட்டு, அதனை அடுத்துவரும் ஆண்டுகளில் ஈடுகட்ட திட்டமிட்டிருந்தால்...
மேலே கூறப்பட்டுள்ள நிலையில் இருப்பவர்கள் அனைவருமே அவசியம் டாக்ஸ் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்து, வரி தாக்கல் செய்வதற்காக யார், எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
யாருக்கு என்ன படிவம்..!
'நம்மில் பெரும்பாலானோருக்கு யார் எந்தப் படிவத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்கிற குழப்பம் இருக்கிறது. அதைத் தவிர்க்கும் விதமாக அதை விரிவாகத் தந்திருக்கிறோம்.
ஐடிஆர் 1 (சஹஜ்)
சம்பளம் அல்லது ஓய்வூதியம்.
ஒரு வீட்டிலிருந்து வாடகை வருமானம் வருதல்.
வட்டி வருமானம்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதியாண்டில் 5,000 ரூபாய்க்குமேல் இருக்கக் கூடாது.
வெளிநாட்டில் சொத்து இருக்கக் கூடாது.
குறிப்பு: ஐடிஆர் 1 - படிவத்தில் முதல்முறையாக வீட்டுக் கடன் வாங்குபவர் களுக்கு, 80இஇ பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற தனியாக இடம் விடப்பட்டிருக்கிறது. வீட்டுக் கடன் ஏப்ரல் 1, 2013 மற்றும் மார்ச் 31, 2014-க்கு இடையில் வாங்கப் பட்டிருக்கிறது எனில், பிரிவு 24-ன் கீழ் வழக்கமாகப் பெறும் வட்டிக்கான வரிச் சலுகை 1.5 லட்சம் ரூபாய் போக, கூடுதலாக 80இஇ-ன் கீழ் 1 லட்சம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும். இதைப் பெற வீட்டின் மதிப்பு 40 லட்சம் ரூபாய்க்குள்ளும், கடன் தொகை ரூ.25 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஐடிஆர் 2
சம்பளம் அல்லது ஓய்வூதியம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருமானம்.
மூலதன ஆதாயங்கள்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லுதல்.
வட்டி வருமானம்.
வெளிநாட்டில் சொத்து இருந்தால்.
பிசினஸ் வருமானம் இருக்கக் கூடாது.
குறிப்பு: பிரிவு 10-ன் கீழ் பெறும் வீட்டு வாடகை படி (ஹெச்ஆர்ஏ), விடுமுறை சுற்றுலா படி (எல்டிஏ) போன்றவற்றைத் தனித் தனியாகக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். இதேபோல், பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் விற்பனை, சொத்து விற்பனை மூலமான மூலதன ஆதாயத்தையும் தனித் தனியாகக் குறிப்பிட வேண்டும். மேலும், மூலதன ஆதாய வரியைத் தவிர்க்க 80இசி-ன் கீழ் முதலீடு செய்யும் (என்ஹெச்ஏஐ/ஆர்இசி) மூலதன ஆதாய பாண்டுகள் விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
ஐடிஆர் 3
கூட்டு நிறுவனத்தில் பங்குதாரர் களாக இருப்பவர்கள்.
வட்டி, சம்பளம், போனஸ், கமிஷன் / ஊக்கத்தொகை போன்ற வருமானம் உள்ளவர்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருதல்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லுதல்.
ஐடிஆர் 4
தனி உரிமையாளர் பிசினஸ்.
வியாபாரம் அல்லது நிபுணத்துவம் (டாக்டர், வக்கீல், ஆடிட்டர் போன்றவர்கள்) மூலம் வருமானம் வருதல்.
இதர வருமானம்.
கமிஷன்.
ஐடிஆர் 4 எஸ் (சுகம்)
ஒப்பந்தக்காரர்கள், சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், குறிப்பாக கணக்கு வழக்கு பராமரிக்காமல் லாபத்தில் 8% வரி கட்டி வருபவர்கள். இவர்களின் பிசினஸ் டேர்னோவர் ரூ.1 கோடிக்குள் இருக்க வேண்டும்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதியாண்டில் 5,000 ரூபாய்க்குமேல் இருக்கக் கூடாது.
 
ஊக வணிகம் (ஸ்பெக்குலேஷன்) மூலம் வருமானம் பெற்றிருக்கக் கூடாது.
ஐடிஆர் V (ITR- V Form)
இது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்யும் படிவம்.(Verification Form)
வருமான வரி அலுவலகத்தில் நேரில் சென்று வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதில் அலுவலக முத்திரை பதித்துத் தருவார்கள்.வரிக் கணக்கு தாக்கலை உரிய காலத்தில் செய்துவிட்டால், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது!
ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குமேல் இருந்தால், அவர் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில்
(இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்.

வீரம் - வீரம் மற்றும் தைரியத்திற்கான தமிழக அரசின் பெண்களுக்கான "கல்பனாசாவ்லா" விருது 2014 விண்ணப்பங்கள் அனுப்ப கோரி உத்தரவு


தொடக்கக் கல்வி - சென்னை மண்டல இரயில் கண்காட்சிக்கு அழைத்து செல்ல உத்தரவு


'அட்டஸ்டேஷன்' தேவையில்லை: மத்திய அரசு அதிரடி

அரசு தொடர்பான அடிப்படை தேவைகளுக்கான விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்கும்போது, அதிகாரிகளின், 'அட்டஸ்டேஷன்' தேவையில்லை; சுய ஒப்புகை மட்டுமே போதுமானது' என,மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுத் துறை சார்ந்த பணிகள், வேலைவாய்ப்பு, கல்வி, உள்ளிட்ட முக்கிய விண்ணப்பங்களுடன், நகல் சான்றிதழ்களை அனுப்பும் போது, அதில், 'நோட்டரி பப்ளிக்' அல்லது பச்சை மை உபயோகப்படுத்தும், தகுதியுள்ள அதிகாரிகளிடம், 'அட்டஸ்டேஷன்' கையெழுத்து பெற்று அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. இதற்கு, பண விரயம் மட்டுமின்றி, நேர விரயமும் ஆவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.


'விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் அனுப்பும் நகல்களில், தாங்களே கையொப்பம் இட்டு அனுப்பினால் போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அசல் சான்றிதழ் காண்பிக்க வேண்டும்' என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.


கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் ஆசிரியர் பணி நியமனத்தை முடித்து மீண்டும் தேர்வு நடத்த முடியாமல் இருந்தது. இப்போது வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வட்டார வளமைய ஆசிரியர் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு


1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய காலத் திட்டத்தின்படி எவ்வளவு ஓய்வூதியத்தை வழங்கலாம் என்பதை அரசுக்குப் பரிந்துரை செய்ய உள்ளது; 7வது ஊதியக் குழு

மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது. குழுவின் உறுப்பினர்கள் விவேக் ரே, ரதின் ராய், மீனா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். 
 
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், படிகள், சலுகைகள் உள்ளிட்டவற்றை நிர்ணயிப்பது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க நீதிபதி அசோக் குமார் தலைமையிலான ஊதியக் குழுவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்தது. இக்குழுவின் பரிந்துரை 2016-17 நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் குழுவின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகும், இக்குழு எப்போது செயல்படத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இக் குழுவின் கூட்டத்தை வரும் 23ஆம் தேதி கூட்ட அசோக் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். முதலாவது கூட்டம் என்பதால் அது சம்பிரதாய அளவில் இருக்கும் என்றும் குழுவின் செயல் திட்டம், பணிகள் தொடர்பாக அதில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
 
மத்திய அரசு ஊழியர்கள், அகில இந்திய அரசுப் பணி, யூனியன் பிரதேசங்களில் பணியாற்றுவோர், இந்திய கணக்குத் தணிக்கைத் துறை, பாரத ரிசர்வ் வங்கி நீங்கலாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தொடர்பான ஊதியம், படிகள் போன்றவை குறித்து ஏழாவது ஊதியக் குழு ஆய்வு செய்யவுள்ளது.
 
தற்போது அமலில் உள்ள சம்பள படிகள், சலுகைகள், பாதுகாப்புத் துறையில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய காலப் பலன்கள், அரசுப் பணியில் திறமையை ஊக்குவித்தும் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில், புதிய ஊதிய விகிதத்தை மாற்றியமைப்பது, சமூக-பொருளாதார-தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பது, அவர்களின் ஊதியத்துக்கு ஏற்ப சலுகைத் திட்டங்களை அறிவிப்பது, 1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய காலத் திட்டத்தின்படி எவ்வளவு ஓய்வூதியத்தை வழங்கலாம் என்பன உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அளிக்கும் பணி ஏழாவது ஊதியக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
தனது ஆய்வின் தேவைக்காக பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்கள், தொழிற்துறை, அரசுத் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற வல்லுநர்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை நியமித்துக் கொள்ள இக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இக்குழு 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தனது பணியை 23-ஆம் தேதி தொடங்கும் ஊதியக் குழு பொதுமக்கள், தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரில் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
பொதுமக்களின் கருத்துகளை அறியும் வகையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்த்ன. கருத்துகளை வரவேற்க மே 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
ஊதியக் குழுவிடம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி: செயலர், ஏழாவது ஊதியக் குழு, அஞ்சல் குறீயிட்டு எண் 4599, ஹோஸ் காஸ் அஞ்சலகம், புது தில்லி-110 016.

அகஇ - 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தவுள்ள தொடக்க / உயர்நிலை ஆசிரியர்களுக்கான தற்காலிக பயிற்சி அட்டவணை

இரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,ஓராண்டு படிப்பு முடிவதால் மவுசு

கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்., படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து வருகிறது. மத்திய அரசால், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன், கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை, நுண்ணிய ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
 
 
இதில், தமிழக மாணவர்களின் அறிவுத்திறன் மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.எனவே, கல்வி கற்பித்துத் தரும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்காக, பி.எட்., படிப்பை, அடுத்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்கான, சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல், இது நடைமுறைப் படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது.
 
இதனால், இந்த கல்வியாண்டு மட்டும் தான், ஓராண்டு கொண்ட பி.எட்., படிப்பு நடைமுறையில் இருக்கும். படிப்பு செலவினங்கள், கால விரயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பி.எட்., படிப்பிற்கு, இந்த கல்வியாண்டில், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக, வெறிச்சோடிய பல கல்வியியல் கல்லுாரிகளிலும், தற்போது மாணவ, மாணவியரின் கூட்டம் அலை மோதுகிறது.
தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு

"அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்லுவது அரசுப் பள்ளிகளே"

"அரசு பள்ளிகள் தான், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது" என்று கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் தெரிவித்தார்.

கரூரில் நடந்த ரோட்டரி கிளப் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் பேசியதாவது:

அரசு பள்ளிகள் தான், ஏழை மக்களின் கடைசி நம்பிக்கையாக உள்ளது. அரசு பள்ளிகள் தான் அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்கிறது. கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். எதற்காகவும் நம்முடைய தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. நம்முடைய பெயர், கையெழுத்தைக் கூட தமிழில் எழுத தயங்கி வருகிறோம்.

நாட்டின் ஜீவன் கிராமங்களில் தான் உள்ளது. அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை விட்டுவிடும் சூழல் உள்ளது. கடந்த 1999-2006ம் ஆண்டுகளில் தேசிய அளவில் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

கிராமங்களின் முன்னேற்றத்துக்கும் மற்றும் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தவும் உதவி செய்ய வேண்டும். இதற்கு சமூக அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சகாயம் பேசினார்.

விழாவில், நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

TPT மற்றும் B.Ed கல்வித்தகுதிகள் TET தேர்விற்கு மற்றும் பணி நியமனத்திற்கு ஏற்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள RTI விளக்கம்


30.06.2014க்குள் அனைத்து அரசு/ நிதியுதவி பள்ளிகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு அமைக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு


மருத்துவ மாணவர் சேர்க்கை: தர வரிசை பட்டியல் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார். 


தரவரிசை பட்டியல் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 18ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெறும் என, மருத்துவ தரவரிசை பட்டியலை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 17ம் தேதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது.

 இதன் தலைவராக நீதிபதி அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக விவேக்ரே, ரத்தின்ராய், செயலாளராக மீனாஅகர்வால் நியமிக்கப்பட்டனர். பிப்., 28ல் அறிவித்தபின், மார்ச் 5ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தக் குழுவின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில், புதிய அரசு அமைந்தபின், இக்குழு அலுவல்களை தீவிரப்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக, அலுவலர்கள் நியமிக்கும் பணி நடக்கிறது. வரும் 15 நாட்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த அலுவலர் குழுவில், 4 சார்பு செயலர்கள், ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டம் அனாலிஸ்ட், 3 செக்ஷன் ஆபீசர்கள், ஒரு உதவியாளர், 6 தனிச்செயலர்கள், 5 ஸ்டெனோ கிராபர்கள், 3 டிரைவர்கள், ஒரு அலுவலக உதவியாளர் என 24 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.இந்த அலுவலர்களை பிற துறைகளில் இருந்து நியமிக்க, மத்திய பணியாளர் துறையிடம் விபரம் கேட்டுள்ளனர். இந்த நியமனத்திற்குப் பின், 18 மாதங்கள் ஏழாவது ஊதியக்குழு செயல்படும். அதாவது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை பல்வேறு துறைகளின் தற்போதைய சம்பள விகிதங்களை ஆய்வு செய்து, புதிய விகிதத்தை நிர்ணயிக்கும்.

தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு

அரசாணை எண் :137-1

இயக்குனர் செயல்முறைகள் 

மாறுதல்  விண்ணப்பம் 


விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014
16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
16 - மாலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
17 - காலை: நடுநிலைப் பள்ளி த.ஆ மாறுதல், மாலை: நடுநிலைப் பள்ளி த.ஆ பதவிஉயர்வு
18 - காலை: ப.ஆ பணிநிரவல், மாலை: ப.ஆ மாறுதல் மற்றும் பதவி உயர்வு

19 - ப.ஆ ஒன்றியம் விட்டு மாறுதல்

21 - ப.ஆ மாவட்ட மாறுதல்
23 - காலை: தொடக்கப்பள்ளி த.ஆ மாறுதல், மாலை: தொடக்கப்பள்ளி த.ஆ பதவி உயர்வு
24 - இ.நி.ஆ பணிநிரவல்
25 - இ.நி.ஆ மாறுதல்
26 - இ.நி.ஆ ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்
28 - இ.நி.ஆ மாவட்ட மாறுதல்

ஒரே பக்கத்தில் பள்ளிகள் வேலை நாட்கள் விவரம்


முதல்வர் ஜெயலலிதா பிரதமரிடம் கல்வித் துறைக்கு கேட்டவை

ext of the Memorandum presented by Selvi J Jayalalithaa,

Hon’ble Chief Minister of Tamil Nadu to Shri Narendra Modi,
Hon’ble Prime Minister of India on 3.6.2014 is reproduced below:
(c) Grants for School Education


I. Sarva Shiksha Abhiyan
For the year 2011-12, the Ministry of Human Resource
Development had in 2013-2014 sanctioned a sum of Rs.438.38
crores towards committed liability of the teacher salary component,
of which the 65% central share works out to Rs.284.95 crores. As
against this, the Government of India released Rs.57 crores only and
the balance grant of Rs.228 crores is still awaited.

II. Right to Education (RTE) Compensation
The total number of admissions under the Right to Education
Act in private schools for 2013-14 is 49,864 and the reimbursement
amount to be given works out to Rs.25.13 crores. The Government
of India is requested to release a sum of Rs.25.13 crores at the
earliest.

III. Rashtriya Madhyamik Shiksha Abhiyan
In 2010-11, the Project Approval Board (PAB) sanctioned 344
infrastructural works at a cost of Rs.499.20 crores with 75 per cent
Central share of Rs.374.40 crores. The amount received from the
Government of India was only Rs.310.52 crores and the balance of
Rs.63.88 crores, already incurred from the State Government funds,
is yet to be received.

For the year 2011-12, the revised PAB approval is Rs.675.05
crores and the entire Central Government’s share of Rs.506.29
crores is yet to be released. Therefore, the Government of India is
requested to reimburse the total pending claims of Rs.570.18 crores
for the years 2010-11 and 2011-12.

தெலுங்கானா மக்களுக்கு அள்ளிக்கோ சலுகைகள்!வாரி வழங்கினார் முதல்வர் சந்திரசேகர ராவ்

புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் முதல், முதல்வராக பொறுப்பேற்றுள்ள, டி.ஆர்.எஸ்., கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், ஏராளமான கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, மாநில மக்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

௨௯வது மாநிலம்:'ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும்' என, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தெலுங்கானா பகுதி மக்கள் கோரி வந்தனர். 

அவர்களின் கோரிக்கை, இம்மாதம் 2ல், நிறைவேறியது. நாட்டின், 29வது மாநிலமாக தெலுங்கானா உருவானது. அம்மாநில புதிய முதல்வராக, சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார். இந்த பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகளாக, பலபோராட்டங்களை நடத்தி வந்த ராவ்,முதல்வரானதும், பல திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவித்து வருகிறார்.

நேற்று அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
மேலும் புதிதாக, 14 மாவட்டங்கள் உருவாக்கப்படும்;
விவசாய கடன், 12 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்; இதனால், 23 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்; இது, 10 நாட்களில் செயல்
படுத்தப்படும்.
ஆட்டோ ரிக் ஷாக்களுக்கு சாலை வரி ரத்து.
நலிவடைந்த பிரிவினருக்கு, இரண்டு படுக்கையறை வீடு; முதற்கட்டமாக, 5,000 வீடுகள் கட்டப்படும்.
எல்.கே.ஜி., முதல் முதுகலை படிப்பு வரை கல்வி இலவசம்.
முதியோர் பென்ஷன் 1,000 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு 1,500 ரூபாய்.

மோடி நிர்வாகத்தில் புதுமை- மத்திய ஊழியர் சங்க சம்மேளனம் எதிர்ப்பு:


பள்ளி மாணவர்கள் செல்லும் பஸ்களில் படம் மற்றும் பாடல்கள் போடுவதை தடுக்க உத்தரவு

பள்ளி மாணவர்கள் செல்லும் அரசு, தனியார் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும், பாடல்கள் ஒலிபரப்புவதையும் தடுக்க, கலெக்டர் விவேகானந்தன், போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2012 ன் கீழ் பதிவாகும் வழக்குகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கப்படும் மறுவாழ்வு நிதியை பெற்றுத்தர உதவிட வேண்டும். ஒவ்வொரு யூனியன் அளவில், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து வட்டார வள மைய பயிற்றுநர்கள், ஆசிரியர்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலம் மூலம் பயிற்சி அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுன் பஸ்களில், பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், முன்பகுதியில் இருக்கைகள் ஒதுக்கித் தரவும், மாணவ, மாணவிகள், பள்ளிக்கு செல்லும் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும் மற்றும் பாடல்கள் ஒலிபரப்புவதையும் தடை விதிக்க, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2012 குறித்து, போலீஸ் துறையில் செயல்படும் சிறப்பு இளைஞர் போலீஸாருக்கும், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களில் நியமிக்கப்பட்டு குழந்தைகள் நல அலுவலராக பணியாற்றும் போலீஸாருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
மாவட்டத்தில், இடையில் நின்ற குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்வது, அனைத்து குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு விடுதிகளில் குழந்தைகளின் பிரச்னைகளை தெரியப்படுத்த, 24 மணி நேரமும் செயல்படும், கலெக்டரின் நேரடி கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 என்ற எண்ணையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண், 04342-232234 ஆகிய எண்களை தெளிவாக ஒட்டி வைக்க வேண்டும்.
மக்கள் கூடும் இடங்களான கலெக்டர் அலுவலகம், மருத்துவமனைகள், பள்ளிகள், தாலுகா அலுவலகங்கள், சார்நிலை அலுவலகம் ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் ஈடுபடும் நபர்களுக்கு தரப்படும் தண்டனையை, விவரத்துடன், விழிப்புணர்வு பேனர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, எட்டு யூனியன்களில் செயல்படும் ஒன்றிய குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும், 251 பஞ்சாயத்துகளில் செயல்படும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில், பதிவு பெறாத இல்லங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இளஞ்சிறார் நீதிச் சட்டம், 2012 கீழ் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு, தொடக்க / நடுநிலைப் பள்ளி - 220 நாட்கள், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 210 நாட்கள்

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 6 முதன்மை கல்வி அலுவலர், 11 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்கள் 31.05.2014 அன்று ஒய்வுபெறுவதையொட்டி பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து இயக்குநர் உத்தரவு




தனியார் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு முன் அனுமதி தேவையில்லை


தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை

அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னையில், அமைச்சர் வீரமணி தலைமையில், பள்ளிகல்வித்துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மெட்ரிக் பள்ளி இயக்குனர் பிச்சை, உயரதிகாரிகள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், தொடக்ககல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 

மாவட்ட வாரியாக, பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், அதை அதிகரிப்பது எப்படி, மாணவர்களுக்கு அரசின் இலவச நலத்திட்டங்களை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டு(2015-16) முதல், மெட்ரிக் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், 10ம்வகுப்பில், தமிழ் முதல் பாடமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அம்மாணவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறியதாவது: ஆறாம் வகுப்பில், தமிழ் முதல்பாடமாக கட்டாயம் இருக்க வேண்டுமென முன்னர் அமல்படுத்தப்பட்ட திட்டம், படிப்படியாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டு, அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்பில் அமல்படுத்தப்படுகிறது. தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே, அப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும்.

மாறாக, மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை முதல்பாடமாக எடுத்தால், அவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் நோக்கிலேயே இவ்வாறு கூறப்பட்டது.

தற்போது பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள் 500க்கு 500 பெற்றாலும், அவர்களுக்கு மாநில ரேங்க் தரப்படுவதில்லை. கடந்த கல்வியாண்டில், 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது. அதில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, அவர்களை மேம்படுத்தும் நோக்கில் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு, எழுத்து பயிற்சி, கணிதப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. 
 
அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 
புதிய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் எண் பெறுவதற்கு அந்தந்த துறை தலைவர்கள், அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதனை துறை தலைவர் வாயிலாக அரசின் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கிருந்து சிபிஎஸ் எண் பெற்றுக்கொள்ள வேண்டும்.
1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இனி ஊதியம் கோரப்பட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண் பெறுவதற்காக மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்களும், தலைமை அதிகாரிகளும், சம்பள பிரிவில் உள்ள அதிகாரிகளும் புதிய ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து அதற்கான எண் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்ட விவரங்களை மட்டுமே பராமரிப்பதால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களின் விவரங்களை அளிக்க இயலாது - தமிழக AG அலுவலகம் தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல்


Popular Posts