தொடக்கக் கல்வி - மாவட்டத்தில் உள்ள சிறார் இல்லங்கள், பயனடையும் சிறார்களின் எண்ணிக்கை, முகவரி மற்றும் மான்யம் போன்ற விவரங்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

TET Easy Weightage Calculation Excel File for BTs/ SGTs for 100 cut off

மதுரை மண்டல (8 மாவட்டங்கள்) தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 11.10.2012

புகையிலை நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்கேற்க வைக்க கூடாது - பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

ஓய்வூதிய துறையில் அன்னிய முதலீடு- மத்திய அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியம், காப்பீடு பொதுத்துறையில் அன்னிய முதலீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டாரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






ஓய்வூதியம், காப்பீடு பொதுத்துறையில் அன்னிய முதலீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி குழு தலைவர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன பொது செயலாளர் முத்துசுந்தரம், மாநில செயலாளர் அன்பரசு பேசினர்.


எழிலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி குழு தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் வெற்றிராஜன், மாவட்ட செயலாளர் டேனியல்ஜெயசிங் பேசினர். வணிகவரித்துறை அலுவலகத்தில் பகுதி குழு செயலாளர் சந்திரன் தலைமையிலும், கிண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பகுதி குழு தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், டிபிஐ அலுவலகத்தில் பகுதி குழு பொருளாளர் வினோத் தலைமையிலும் ஆர்ப் பாட்டம் நடந்தது.  கலெக்டர் அலுவலகம், அருங்காட்சியகம் உள்ளிட்ட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு


பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.


 ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.

 இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

 அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

 இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

 இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.

 அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
 அதன் விவரம்:
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

 பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
 மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).

 பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 

 இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
 இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

 வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?
 இடைநிலை ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
 90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை.............-12
 70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
 60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
 50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
 ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
 70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
 50 முதல் 70 சதவீதம் வரை............- 20
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
 90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 8
 70 முதல் 80 சதவீதம் வரை............- 6
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4
 50 முதல் 60 சதவீதம் வரை............- 2
 இளநிலைப் பட்டப் படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 50 சதவீதத்துக்கும் கீழே................- 10
 பி.எட். படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) - பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வி துறையில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய (100 mark weigtage System) வழிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசு தகவல் மையத்தில் நடைபெற்ற TPF மற்றும் CPS குறித்த ஆய்வுக்கூட்ட அறிக்கை

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து (அரசு/ அரசு நிதியுதவி / தனியார்) பள்ளிகளில் கழிப்பறை வசதியை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநருக்கு கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவு

தேசிய நல்லாசிரியர் விருது - மாவட்ட அளவில் குழு அமைத்தல் , கருத்துருக்கள் கோருதல் மற்றும் விண்ணப்பபடிவங்கள்

EMIS - மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் நடத்தி படிவம் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

சில முக்கிய நாள்கள

அக்டோபர் 11 - பெண் குழந்தைகள் தினம் 

அக்டோபர் 15 - சர்வதேச கை கழுவும் தினம்

அரசு பேருந்துகளில் மாணவர்கள் பாதுகாப்பாக செல்ல முடிகிறதா?

  தனியார் பள்ளி மாணவர்களுக்கு, தனி பேருந்துகளை குறிப்பிட்ட வழித் தடங்களில் இயக்க உத்தரவிட வேண்டும் என, தாக்கலான மனுவிற்கு பதிலளிக்க, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

சிவகாசி தென்மண்டல குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் அருணோதய எர்ஸ்கின் தாக்கல் செய்த மனு: சென்னையில், பள்ளி வேனில் சென்ற, 6 வயது குழந்தை, அதே வேன் ஓட்டை வழியாக விழுந்து பலியானது. இதைத் தொடர்ந்து, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்து, அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 

தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம், (கல்வி நிறுவன வாகனங்கள் ஒழுங்குமுறைச் சட்ட சிறப்பு விதிகள் 2012) அரசு கொண்டு வர உள்ளது. அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான், 67 சதவீத மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக அரசு, 27.2 லட்சம் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. அவர்கள் தினமும் பல இடையூறுகளை சந்தித்து, அரசு பஸ்களில் பயணிக்கின்றனர். 

அரசு பஸ் ஓட்டுனர்கள் உரிய இடங்களில் நிறுத்துவதில்லை. மாணவர்கள் ஓடிச் சென்று, பேறுந்துகளில் ஏற வேண்டியுள்ளது. பேருந்துகளில் கம்பிகள் நீட்டிக் கொண்டும், இருக்கைகள் கிழிந்தும் உள்ளன. தனியார் பள்ளி வாகனங்களுக்கு, கடும் விதிமுறைகளை அரசு வகுக்கிறது. ஆனால், அரசு பஸ்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கண்டுகொள்வதில்லை. 

மாணவர்களுக்கு, தனி பேருந்துகளை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த டிரைவர்கள், கண்டக்டர்களை நியமிக்க வேண்டும்; அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்திற்கு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பினேன். மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா, எம்.துரைசாமி கொண்ட அமர்வு முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.நாராயணன் ஆஜரானார். தலைமைச் செயலர், போக்குவரத்துத் துறை செயலர், பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தனியார் பள்ளிகளுக்கு 9% கட்டணம் அதிகரிப்பு

   "தனியார் பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு, 9 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துள்ளோம்" என, கட்டண நிர்ணய குழுத் தலைவர், சிங்காரவேலு கூறினார். அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான, கூடுதல் கட்டணங்களை திருப்பித் தந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னையில், @நற்று அவர் கூறியதாவது: இதுவரை, 1,000 பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயித்துள்ளோம். புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், 400 பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்தப் பள்ளிகளுக்கு, டிசம்பருக்குள், புதிய கட்டணம் நிர்ணயிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது.

முதல் கட்டமாக, 200 பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, புதிய கட்டணத்தை நிர்ணயித்து விட்டோம். இம்மாத இறுதிக்குள், கட்டண விவரம், அரசு இணையதளத்தில் வெளியிடப்படும். மீதமுள்ள, 200 பள்ளிகளிடம், விசாரணை நடந்து வருகிறது.

நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பரிலோ, அந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரம் வெளியிடப்படும். அனைத்துப் பள்ளிகளுக்கும், மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணங்களை, தனித்தனியே அட்டவணையிட்டு வழங்குகிறோம்.

விலைவாசி உயர்வு, சம்பளம் அதிகரிப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு, 9 சதவீதம் வீதம், கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துள்ளோம். "ஸ்மார்ட் வகுப்புகள்&' நடத்துவதாக கூறி, பல பள்ளிகள் தனியாக கட்டணம் வசூலித்து வந்தன.

தற்போது, அந்த வகுப்புகளுக்கும் சேர்த்தே, கட்டணம் நிர்ணயிக்கிறோம். எனவே, இனி, அதற்கென தனி கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான, கூடுதல் கட்டணங்களை திருப்பித் தந்துள்ளன.

கூடுதல் கட்டணங்களை திருப்பி வழங்கியதற்கான ஆவணங்களை காட்டாவிட்டால், மெட்ரிக் இயக்குனரக அதிகாரிகளிடம் கேட்டு, உறுதி செய்து கொள்கிறோம். இவ்வாறு சிங்காரவேலு கூறினார்.

நேரடி தொடர்பு கொள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு

  கல்வி துறையில், பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில், மாநில அலுவலர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட கல்வி தகவல் படிவத்தில், விவரங்கள் சேகரிக்கும் பணி, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

  தமிழகத்தில், ஒன்று முதல், 12ம் வகுப்பு வரை, இந்த தகவல் சேகரிக்கப்படுகின்றன. இதன்படி, பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு, குடிநீர், கழிவறை வசதிகள், ஆசிரியர்கள் கல்வி தகுதி, இனத் தகுதி, மாணவர்களின் இன மற்றும் வகுப்பு வாரி விவரங்கள் உட்பட பல விவரங்களை சேகரித்து, கணினியில் பதிவு செய்ய உள்ளனர்.

  இதன்மூலம், மாநிலத்தில், கடைக்கோடியில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரிடம், பள்ளி குறித்து, மாநில அலுவலர்கள் நேரிடையாக விவாதிக்கவும், தகவல் சேகரிக்கவும் முடியும். இதற்காக, தனி இணையதளம் துவக்கப்பட உள்ளது. விவரங்களை சேகரிக்கும் பணியில், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு


பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு

 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.


 ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.

 இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

 அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

 இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

 இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.

 அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
 அதன் விவரம்:
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

 பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
 மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).

 பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 

 இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
 இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

 வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?
 இடைநிலை ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
 90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை.............-12
 70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
 60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
 50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
 ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
 70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
 50 முதல் 70 சதவீதம் வரை............- 20
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
 90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 8
 70 முதல் 80 சதவீதம் வரை............- 6
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4
 50 முதல் 60 சதவீதம் வரை............- 2
 இளநிலைப் பட்டப் படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 50 சதவீதத்துக்கும் கீழே................- 10
 பி.எட். படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4

B.T Counsilling online


ஆன்-லைனில் பட்டதாரி ஆசிரியர் நியமன கவுன்சிலிங்

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங் ஆன்லைனில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், அக்டோபர் 10, தேதி நடக்கிறது.

   தமிழகத்தில், முதுகலை ஆசிரியர்களை தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், ஆன்லைனில் நடக்கிறது. கடந்த 2010- 11ம் கல்வியாண்டில், டி.ஆர்.பி., மூலம் நேரடியாக தேர்வாகி, இதில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
    சிவகங்கை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும், இந்த ஆன்லைன் கவுன்சிலிங்கின் போது, சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து, அக்டோபர் 10ம் தேதி காலை, காலி பணியிடம் பற்றிய விவரம், இன சுழற்சி முறையில் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்படும்.
   விரும்பிய இடங்களை தேர்வு செய்து, நியமன உத்தரவை ஆசிரியர்கள் பெற்றுச் கொள்ளலாம் என, முதன்மை கல்வி அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.

NPSC Group 4 Exam (7.7.12) Results Published

Tamil Nadu Teacher Eligiblity Test 2012 including Puducherry (TN-Region) Teachers Eligiblity Test (Supplementary Examination)-Fresh Candidates

I. List of Admitted candidates (Tamil Nadu)                                    -        20043 
II. List of Admitted Candidates Puducherry (TN-Region) - 346
Date of Examination: 14.10.2012
Paper I Timing: 10:00 A.M to 01:00 P.M
Paper II Timing: 02:00 P.M to 05:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)


TRB

Old Students

EMIS - Elementary proceeding, Instructions & forms

தொடக்க (1-5) வகுப்புகளுக்கான அடைவு திறன் புதிய படிவத்தில் பூர்த்தி செய்து 10.10.2012 க்குள் அனுப்ப SSA மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.7.2012 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

அரசு பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் எஸ்.எம்.எஸ். வருகைப் பதிவேடு முறை


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்களின் வருகையை, எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் வருகை குறித்து, பதிவு செய்ய, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி முறையை அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர், காலை 9:30 மணிக்கு, பள்ளிக்கு வந்த ஆசிரியர்களின் வருகை குறித்து, அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அல்லது மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிப்பர். இது கம்ப்யூட்டர் மூலம் ,தானாகவே கல்வி துறை அலுவலகத்தில் பதிவாகிவிடும்.
ஒரு பள்ளியின் ஆசிரியர்கள் வருகை குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள "பாஸ்வேர்ட்&' மூலம் கம்ப்யூட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதே போல், கல்வி துறை இயக்குனர் வரை கொடுக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட் மூலம், தமிழகத்தில் எந்த ஊரிலும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் வருகை குறித்து, சென்னையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
"இம்முறை தற்போது தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டிலிருந்து, அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வரஉள்ளது&' என கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்


 பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com  வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்கு காண்போம்.
நமது வலைத்தளத்தில் இடது புறம் உள்ள இணைய தளத்தில் பதிவு (Online Entry) என்ற இடத்தில உள்ள  TNDSEன் மீது   Click (அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது) செய்யவும்.



அரசு பள்ளி  கல்வி துறை வலைதளத்திற்கு தாங்கள் செல்லுவீர்கள். அங்கு உள்ள login ஐ click செய்யவும்.



தங்கள் பள்ளியின் Username மற்றும் Password Enter செய்யவும்.




கேட்கப்பட்டு உள்ள தங்கள் பள்ளியின் விவரங்களை type செய்துவிட்டு Save செய்யவும்.
அடுத்ததாக Add Post Details என்பதை Click செய்யவும்.


தங்கள் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் பதவியை கிளிக் செய்யவும். பிறகு Conform கொடுக்கவும்.


தலைமை ஆசிரியர் பணியிடம் vacant ஆக இருப்பின் Add Vacancy ஐ கிளிக் செய்யவும். தலைமை ஆசிரியர் பதவி நிரப்ப பட்டு இருந்தால் Add in Position என்பதை கிளிக் செய்யவும்.

தலைமை ஆசிரியர் பற்றிய தேவையான விவரங்களை நிரப்பிய பிறகு save செய்யவும். பிறகு தலைமை ஆசிரியர் பதவியை Reset செய்து மீதம் உள்ள பணியிடங்களில் இதே போன்று தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும். தகவல்கள் நிரப்பியவுடன் Save செய்ய மறக்க வேண்டாம்.

ஒருமுறை செய்த தகவல்களில் தேவையான மாற்றம் செய்ய வேண்டி இருப்பின் Edit ஐ கிளிக் செய்து மாற்றங்களை பதிவு செய்யலாம். மீண்டும் Save செய்ய மறக்க வேண்டாம் 

தகவல்கள் அனைத்தும் பதிவு செய்த பிறகு Add Post Summary  கிளிக் செய்து தேவையான மாற்றங்கள் செய்து save செய்ய வேண்டும்.

Post Summary இல் நாம் பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் சரிபார்த்தபின் தகவல்களை Select செய்து Ctrl + C மூலம் Copy seidhu Microsoft Word இல் Paste செய்து   Print எடுக்கவும்.


இறுதியாக Log Out செய்ய வேண்டும்.

நன்றி!

Educational Management Information System (EMIS) - மாணவர் சார்ந்த விவரங்களை பூர்த்தி செய்ய பள்ளிகல்வித் துறையின் அறிவுரைகள் மற்றும் பாடக்குறியீடுகள்

தகவல் உரிமைச்சட்டம் (RTI 2005) - தொழிற்கல்வி பிரிவில் இடைநிலை ஆசிரியர் கல்வி (SGTTC) முடித்திருந்தால் மீண்டும் +2 படிக்க அவசியமில்லை மற்றும் பதவி உயர்வுக்கும் தகுதியுண்டு

SSA கீழ் உருவாக்கப்பட்ட பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது மற்றும் காலிப்பணியிடங்கள் சார்ந்த விவரம் குறித்த இயக்குனரகத்தில் 11.10.2012 ஆய்வு கூட்டம் நடைபெறுதல் சார்ந்து- தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி - 01.07.2012 முதற்கொண்டு உயர்த்தப்பட்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரைக்கான நிலுவையும் விரைவில் தொகையாக வழங்க அரசாணை வெளியிடு

தொடக்கக் கல்வி - 2011 - 2012ஆம் ஆண்டுக்குரிய புத்தாக்க அறிவியல் ஆய்வுத் திட்டம் (INSPIRE AWARD)- தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்குபெற உள்ள மாணவர்களின் பட்டியல் வெளியீடு

மாணவர்களிடம் அன்பு, கருணை மற்றும் ஈகை குணங்களை மேம்படுத்த 1 முதல் 8 வகுப்பு மாணவர்களை 08.10.12 அன்று "Joy of Giving Week" கொண்டாட அறிவுரை வழங்கி தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு

ஆசிரிய அன்பர்களே!


இப்படத்தில் வரும் கருத்துக்கள் அனைத்தும் சரியென்றோ தவறென்றோ, அனைத்தும் உண்மையென்றோ உண்மைக்கு முரணானது என்றோ குறிப்பிட வரவில்லை.  நம் மாணவ ஆசிரிய பருவத்தில் இதைவிட மேம்பட்ட கருத்து செறிவுள்ள, பள்ளி மற்றும் மாணவர்கள் முன்னேற்றத்தின் மீது அளப்பெரிய ஆர்வமும் ஆக்கறையும் கொண்டு செயல்படுகின்ற எத்தனையோ ஆசிரிய பெருமக்களை நாம் பார்க்கிறோம் ,
அவர்கள் வெறும் சுயவிளம்பரத்திற்கோ பெருமைக்கோ செய்யாமல் தம் வாழ்வியல் இயல்பாக இன்ப கடமையாக வாழ்நாள் முழுதும் தம் சில சௌகரியங்களை துறந்து, தொடர்ந்து இப்பெரும் செயலை செய்து வருகின்றனர். இத்தகைய கல்வி சார்ந்த படங்களை நாம் ஊக்குவிப்பதோடு சரியான விமர்சனங்களை வைப்பதன் மூலம் இன்னும் யதார்த்தமும் கருத்தும் நிறைந்த மேலும் பல கல்வி சார்ந்த சிறந்த 

திரைப்படங்கள் வெளிவர வாய்ப்பாக அமையும். இதன்மூலம்  ஆசிரியர்களின் சிக்கல்கள் பிரச்சனைகள் போராட்டங்கள் மக்களுக்கு தெரிவதோடு, கடைக்கோடி இந்தியனும் , முதல் தலைமுறையாக கல்வி கற்க பள்ளிக்கு வரும் ஏழை குழந்தைக்கும் முழுமையான தரமான கல்வியை அளித்திட போராடும் அரசின் அற்புத நோக்கமும் அரசு பள்ளிகளின்  நோக்கமும் நிறைவேறிட இது சிறு உந்துதளாக அமையும் என்ற நம்பிக்கையோடு www.tnptfvirudhunagar.blogspot.com

RTE 2005 - 4மாவட்ட ( கோவை, நீலகிரி , திருப்பூர், ஈரோடு) பொது தகவல் அலுவலர் / உதவியாளர் / உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 19.10.2012 அன்று ஒரு பயிற்சி பயிற்சி அளிக்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவியிலிருந்து பிரிவுக் கண்காணிப்பாளர் பணி மாறுதல் வழங்குவதற்கான 15.03.2012 அன்றைய நாளின்படி முன்னுரிமைப் பட்டியல்

அரசால் புதிதாக துவங்கப்பட்டுள்ள தொடக்க / உயர்நிலைப் பள்ளிகளில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 1 மற்றும் 6 ஆம் வகுப்பு ஆங்கிலவழி பாடநூல்கள் பாடநூல் கழக வட்டார அலுவலங்களில் பெற்றுக்கொள்ள உத்தரவு

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அவற்றை கடைபிடிக்க இயக்குனர் RMSA உத்தரவு

ஒவ்வொரு மாத கடைசி வரத்திலும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டத்தை உரிய CRC ஆசிரிய பயிற்றுனரோடு நடத்தி அறிக்கையினை சமர்பிக்க - SSA திட்ட இயக்குனர் உத்தரவு

சர்வதேச அளவில் பதக்கம் வெல்ல வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் பொருட்டு உடல் திறன் போட்டிகள் நடத்துதல் மற்றும் உடல்திறன் திறமை அறிக்கை அட்டை செயல்படுத்துதல் / சமர்பித்தல் - தொடக்கக்கல்வி இயக்குநர்

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் - 2011-12 ஆம் ஆண்டுக்கான உயர்நிலை/ மேல்நிலை பள்ளி மான்யம் ரூ.50000/- மற்றும் சிறுமராமத்துப்பணி மான்யம் ரூ.25000/- செலவினங்கள் - அலுவலக தணிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

பள்ளிக் கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர் / துணை இயக்குநர் பதவிகளுக்கான 2012 ஆம் ஆண்டுக்கான DEEO/DEO தற்காலிக தேர்ந்த பெயர்ப் பட்டியல் ஏற்பளிக்கப்பட்டு அரசாணை ஆணை வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் நியமனங்கள் ரத்து செய்து - மதுரை ஐகோர்ட்

தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமனத்துக்கு வகை செய்யும் ஏப்ரல் 30 தேதியிட்ட பணி நியமன அரசாணை எண்  72 ரத்து செய்யப்பட்டுள்ளது. 
மதுரை பாப்பையபுரம் முத்து லெட்சுமியின் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மாவட்டம் தோறும் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கன் வாடி உதவியாளர் மற்றும் அமைப்பாளர்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். பணியாளர் நியமனம் அரசியல் சட்டத்தின் 14 , 16 வது பிரிவுகளுக்கு விரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.3 கி.மீ உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதி உள்ளவர் என்பது தவறு என்றும், வட்டார அடிப்படையில் தகுதி நிர்ணயிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.  3 கி.மீ வசிப்பிட வரம்பால் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது சாத்தியமாகாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

பணியாளர் நியமனத்துக்கான புதிய விதிமுறைகளையும் ஐகோர்ட் வெளியிட்டது.புதிய விதிமுறையின் கீழ் இரண்டு மாதத்தில் பணி நியமனம் செய்யவு உத்தரவிட்டுள்ளது.

SSA BRTEs/ Supervisors to take part in 02.10.2012 Grama Sabha Meeting for Creating awareness of Out of School Children

State Public Sector Undertakings/ Statutory Boards- Re-employment of retired employes- certain instructions-reiterated-regarding

நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 4, 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய நீர்வள வாரியம் ஓவியப்போட்டிகளை பள்ளி/மாநில அளவிலும் நடத்துகிறது

உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் / ஆசிரியர்கள் எண்ணிக்கை, அங்கீகாரம் தமிழ் / ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணித அடிப்படை திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கை சார்ந்து சில விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு

வட்டார வள மையத்திற்குள்ளாகவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு முதுகலை பட்டம் பெற்ற BRTEs / மேற்பார்வையாளர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் பாடம் கற்பிக்க அனுமதி அளித்து அனைவருக்கும் கல்வி இயக்குனர் உத்தரவு

9 மற்றும் 11 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 2 நாள் வாழ்வியல் திறன் கல்விப் பயிற்சி மாநில , மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் அனைத்துப் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அளிக்க SCERT இயக்குனர் உத்தரவு

டி.இ.டி. மறுதேர்வு: 13 ஆயிரம் பேர் விண்ணப்பம்


டி.இ.டி. மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், ஆயிரத்து 793 பேரும், குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 296 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் முதல், ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

   டி.இ.டி. மறுதேர்வு, அக்டோபர் 14ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே நடந்த தேர்வில், தோல்வியடைந்தவர்கள் மட்டும், மறுதேர்வில் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., அறிவித்தது. இதையடுத்து, புதிய விண்ணப்பதாரர்களுக்கும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

   இதையடுத்து, 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் விவரங்களை, நேற்று இரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. 

   அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 13 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

SSA/ Non- SSA பணியிடம்/ காலியிடம் மற்றும் கூடுதல் பணியிட விவரங்களை கோரி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாதார நலத்திட்டக் கல்விக்கான பயிற்சியினை உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பள்ளிக்கு இரு ஆசிரியர்களுக்கு 4 கட்டங்களாக பயிற்சியளிக்க SCERT இயக்குனர் உத்தரவு

தேசிய அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி (INSPIRE) புது தில்லி பிரகதி மைதானத்தில் அக்டோபர் 21 முதல் 23 வரை நடைபெறுவதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் இயக்குனர் அறிவிப்பு

இதில் மாநில அளவு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் அவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று வர பொறுப்பாசிரியர்களும் கலந்துக்கொள்கின்றனர் .

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச "சிம்கார்டு'(SIM CARD)

பள்ளி கல்வித்துறை சார்பில், தலைமையாசிரியர்களுக்கு "சி.யு.ஜி' திட்ட வசதி கொண்ட, மொபைல்போன் "சிம்கார்டு' இலவசமாக வழங்கப்படவுள்ளது. கல்வி அலுவலர்கள் கூறுகையில், "" பள்ளி கல்வித்துறையின் அனைத்து தகவல்களும் உடனடியாக, தலைமை ஆசிரியர்களை சென்றடைய உதவும். பள்ளி கல்வித்துறை அல்லாத, மற்ற அழைப்புகளுக்கான விதிக்கப்படும் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் செலுத்த நேரிடும். மொபைல்போன்களை, "சுவிட்ச்- ஆப்' செய்யக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது'

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து 1991ல் பணியிழந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு பணிவரன்முறை செய்ய விவரம் கோரி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கல்வி பாடங்களை மூலம் ஒளிபரப்ப - SSA மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

கன்னியாகுமரி மண்டலம் (8 மாவட்டங்களுக்கு)- பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் 05.10.2012 அன்று நடைபெறுவது குறித்த தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

Popular Posts