அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை


குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாத அரசு பள்ளிகள் பற்றிய விவரங்களை வரும் 15ம் தேதிக்குள் மாவட்ட அதிகாரிகள் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த நடவடிக்கைகளை, 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை அவசியம் இருக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, இத்தகைய வசதிகள், அரசுப் பள்ளிகளில் இருக்கிறதா என்பதை, நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.
இந்த வசதிகள் இல்லாத, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இருந்தால், அதைப் பற்றிய விவரங்களை, 15ம் தேதிக்குள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக, சம்பந்தபட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு கருத்துருக்கள் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால், சிறப்புத் திட்டத்தின் கீழ், ஒரு கழிப்பறைக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அலுவலக நேரத்திற்கு பின்னர் அலுவலக பணியில் ஈடுபடுதலை தவிர்க்க இயக்குநர் உத்தரவு


தமிழ்நாடு
 தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
  ..எண். 012921 / 1 / 2012, நாள். 28.05.2012
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள்அலுவலக நேரத்திற்கு பின்னர் அலுவலக பணியில்ஈடுபடுத்துவதாகவும்இதனால் தேவையற்ற நிகழ்வுகள்ஏற்படுவதாகவும் இயக்குநரின் கவனத்திற்குகொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் தொடக்கக்கல்வித் துறையைச்சார்ந்த அலுவலகங்களில் அலுவலக நேரத்திற்கு பின்னர் பெண்ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் எனதிட்டவட்டமாக அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவித்துஅதன் ஒப்புதலைப் பெற்று கோப்பில் வைத்து கொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகிறது.

தொடக்கக் கல்வி - வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் சார்பாக மாவட்ட வாரியாக சீராய்வு மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு


சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் நிலுவையிலுள்ள வழக்குகள்,தீர்ப்பாணை வழங்கப்பட்டு செயல்படுத்தாத வழக்குகள் மற்றும்எதிரவாதவுரை தாக்கல் செய்த மற்றும் செய்யப்படாமல்நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்புவழக்குகள் சார்ந்த விவரங்கள் கொண்டுவர தொடக்கக் கல்விஇயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே சார்ந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்சார்ந்த கோப்புகள் எதுவும் விடுபடாமல் படிவத்தில் பூர்த்தி செய்துநேரில் தவறாமல் ஆஜராகுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர்உத்தரவிட்டுள்ளார்.
நாள். 12.06.2012 முதல் 22.06.2012 

மாவட்ட வாரியாக ஆய்வு நிரல் :-


12.06.2012 - காலை 9-30 மணி -சென்னை,திருவள்ளூர்,வேலூர்,காஞ்சிபுரம்
13.06.2012-காலை 9-30 மணி -கிருட்டிணகிரி,திருவண்ணாமலை,விழுப்புரம்கடலூர்
14.06.2012 - காலை 9-30 மணி - தருமபுரி,நாமக்கல்,சேலம்
15.06.2012 - காலை 9-30 மணி - திருச்சி,பெரம்பலூர்,அரியலூர்,கரூர்
16.06.2012 - காலை 9-30 மணி -தஞ்சை,நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை
18.06.2012 - காலை 9-30 மணி - ஈரோடு,திருப்பூர்,கோவை,நீலகிரி
19.06.2012 - காலை 9-30 மணி - திண்டுக்கல்,தேனி,திருநெல்வேலி
21.06.2012 - காலை 9-30 மணி - சிவகங்கை,இராமநாதபுரம்,தூத்துக்குடி
22.06.2012 - காலை 9-30 மணி - மதுரை,கன்னியாகுமரி,விருதுநகர்

தொடக்கக் கல்வி - வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் சார்பாக மாவட்ட வாரியாக சீராய்வு மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.


தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 2500 / எப்1 / 2012, நாள்.07.06.2012
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் நிலுவையிலுள்ள வழக்குகள், தீர்ப்பாணை வழங்கப்பட்டு செயல்படுத்தாத வழக்குகள் மற்றும் எதிரவாதவுரை தாக்கல் செய்த மற்றும் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சார்ந்த விவரங்கள் கொண்டுவர தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே சார்ந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் சார்ந்த கோப்புகள் எதுவும் விடுபடாமல் படிவத்தில் பூர்த்தி செய்து நேரில் தவறாமல் ஆஜராகுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நாள். 12.06.2012 முதல் 22.06.2012
மாவட்ட வாரியாக ஆய்வு நிரல் :- 

2012-2013 ஆம் கல்வி ஆண்டின் தோராய 10 குறு வளமைய (CRC) பயிற்சித் தேதிகள்


TNPSC RESULTS


10+2+3+1 கல்வி தகுதியுடன் கணிதம் ஓராண்டு படித்தால் பட்டதாரி கணிதம் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படும் . இயக்குனர்


Proceeding Letter of தொடக்கக்கல்வி - 10 + 2 + 3 தகுதியில்லாமல் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


Announcements - District Revenue Administration - Issue of Community, Nativity and Income certificates to all sixth standard students studying in all schools of Tamil Nadu - Implementation of the Scheme - Orders issued.


தொடக்கக் மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறுதல் மற்றும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது ?

அரசு அறிவிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு முன் சரியான காலிப் பணியிட விவரங்களை அறிய , காட்டாய கல்விச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் மாணவர் விகிதம் நிர்ணயிக்கப்பட்டு , உபரி ஆசிரிய பணியிடங்கள் காலி பணியிடங்களுக்கு மாற்றப்பட்டு. இப்பணி இட நிரவல் முடிந்த  பின்பு சரியான காலிப் பணி இடங்களைக்  கொண்டு மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது . இதே போல் பள்ளிக்கல்விதுறையில் உள்ள பட்டதாரி ஆசிரிய பணியிடங்களும் நிரவப்படுகிறது. மீதம் உள்ள பணியிடங்களை இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நியமிக்கப்பட உள்ளனர். 
ஆனாலும் குறிப்பிட்ட துறைகள் இது சார்ந்து முறையான அறிவிப்பை வெளியிட்டப் பின்பே சரியான தேதிகள் தெரிய வரும். அதுவரை இவை அனைத்தும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் செய்தியாகவே இருக்கும். உரிய துறைகளின் முறையான அறிவிப்பிற்கு பின் விரைவில் இவர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி நம் இணைய தளத்தில் வெளியிடப்படும் . 

தொடக்கக்கல்வி - 10 + 2 + 3 தகுதியில்லாமல் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்..எண். 04404 / 1 / 2012, நாள். 05062012
அரசாணை(நிலைஎண். 107 பள்ளிக்கல்வித்துறை நாள்.18.09.2009அரசாணையின்படி தமிழாசிரியர்பட்டதாரி ஆசிரியர்,நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்உதவித் தொடக்கக் கல்விஅலுவலர் பதவி உயர்வு பெற சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் 10 + 2 + 3கல்வித் தகுதியில்லாமல்பல ஆசிரியர்கள் பதவி உயர்வுபெற்றிருப்பது தொடக்கக் கல்வி இயக்குனரின் கவனத்திற்குகொண்டு வரப்பட்டுள்ளதுஎனவே அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் விவரத்தினை இயக்குனருக்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
(soon the proceeding will be updated)

அரசாணை 177 பத்தி 2.6ன் படி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் கிடையாது என்றே கருதலாம் - மாநில திட்ட இயக்குனர்


PENSION – Tamil Nadu Government Pensioners’ Family Security Fund Scheme – Enhancement of financial assistance from Rs.25,000/- to Rs.35,000/- in the case of death of pensioners – Orders – Issued.


கவலைக்கிடமாகும் இந்தியாவின் சுகாதாரம்



உலக அளவில் சுகாதாரத்தில் இந்தியாவின் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வரு கிறது. குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.




உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கையில் இந்தியாவே முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக் கிறது. அதாவது உலக அளவில் பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கை யில் 20 சதவிகிதம் பேர் இந்தியாவை சேர்ந்த பெண்களாகவே இருக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கடந்த 20 ஆண்டுகளில் 2 லட்சத்து 87 ஆயிரம் பெண்கள் இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் இறந்தவர்களின் எண் ணிக்கை 56 ஆயிரம் பேர் என ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரம் கூறுகிறது.




இந்தியாவில் பெண்களுக்கு போதிய அள வில் ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்பதே இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. குறிப்பாக இந்திய பெண்களில் 56.2 சதவிகிதம் பேர் இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட் டிருக்கின்றனர். இந்தாண்டின் துவக்கத் தில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வறிக் கையை வெளியிட்டார். ஐந்து வயதிற்கு உட் பட்ட குழந்தைகளில் 42 சதவிகிதம் பேர் குறைந்த எடையளவிலேயே இருக்கின்றனர். 52 சதவிகித குழந்தைகள் போதிய வளர்ச்சியற்ற நிலையி லேயே இருக்கின்றனர் என்று கூறினார். இப்படி இந்திய மக்க ளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார நிலை குறித்து ஆய்வு செய்தால் கவலையளிப் பதாகவே இருக்கிறது.




ஒரு புறம் சேமிப்பு கிடங்குகளில் உள்ள உணவு தானியங்கள் மக்கி வீணாகின்றன. மறுபுறம் எலிகளுக்கு உணவாக்கப்படுகிறது. ஆனாலும் மத்திய அரசு அதனை உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு கொடுக்க மறுத்து வருகிறது. உச்சநீதிமன்றம் வீணாகும் உணவு தானியங்கள் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கூறிய போது, அதெல்லாம் முடியாது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங், ‘கொள்கை’ முழக்கமிட்டார். கொஞ்சம்நஞ்சம் ஒதுக்கும் பொதுசுகாதாரத்திற் கான நிதியையும் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் தனியார் மருத்துவமனைக்கு திருப்பி விடுகின்ற னர். மக்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கும் விதமாக சுகாதாரத்தையே அரசு தனது பொறுப்பி லிருந்து கைவிடும் கொள்கையையே பின்பற்றி வருகிறது.




ஏழைகள் உணவின்றி உயிரை விட்டாலும் பரவாயில்லை எனக் கருதும் மத்திய அரசு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப விகி தம் குறையாமல் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. அதற்காக இதுவரை அள்ளிக் கொடுத்த மக்களின் வரிப்பணம் போதாது என்று, தற்போதும் ஏற்றுமதி நிறுவனங் களுக்கு பல்லாயிரங்கோடி ரூபாய்களை அள் ளித்தர தயாராகி வருகிறது. இந்தியாவின் சுகா தாரம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரு கிறது. இந்நிலை நீடிப்பது இந்தியாவிற்கு நல்ல தல்ல. இந்த நேரத்திலாவது இடதுசாரிகளிடம் 2004 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுதியளித்தபடி சுகாதாரத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கிட வேண்டும். அதன் மூலம் ஏழைகளை பாதுகாத்திட மத்திய அரசு முன்வர வேண்டும்.
 நன்றி ! தீக்கதிர் 

அரசு நிதியில் ஆதாயம் தேட முனையும் ரிலையன்ஸ்: பிரதமருக்கு தபன்சென் கடிதம்

சிஏஜி மற்றும் கட்டண ஆணைய அறிக்கைக்கு பின்னரே கேஜி-டி 6 இயற்கை எரிவாயு விலை தொடர்பாக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என தபன் சென் எம்.பி. பிரதமருக்கு எழுதிய கடிதத் தில் கூறியுள்ளார்.


கே.ஜி-டி6 எனப்படும் கோதாவரிப் படுகை எரிவாயு விலையை உயர்த்துதல் விஷயத்தில் பிரதமர் அலுவலகம் தலை யீடு தொடர்பாக சிஐடியு பொதுச்செயலாள ரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தபன் சென் எம்.பிக்கு பிரதமர் அனுப்பிய கடி தத்தை தொடர்ந்து 16.5.2012 அன்று தபன் சென், பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதி னார். கடிதத்தில் அவர் கூறியிருப்ப தாவது:-


தனது கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நிதர்சனமான, முக்கியமான விஷயத்தை கவனிப்பதற்கு தவறியுள்ளது துரதிர்ஷ்ட வசமானது. தனது முதல் கடிதத்தைத் தொடர்ந்து 31.3.2012 அன்று மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. கட்டண உயர்வு தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ் ட்ரிஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) அனுப்பிய கடிதத்தை பிரதமர் அலுவலகம் ஏற்றுக் கொண்டு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு சட்ட ஆலோ சனை பெற அனுப்பப்பட்டுள்ளது.


எரிவாயு விலை தொடர்பாக அதிகார மளிக்கப்பட்ட அமைச்சர் குழு (இஜிஓஎப்) விடம், இந்த எரிவாயு விலை உயர்வு வேண்டுகோள் வருவதற்கு முன்பாக பெட்ரோலிய அமைச்சகத்திற்கு ஆர்ஐ எல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


பொதுமக்களின் நலனைக் கருத் தில்கொண்டு தனது கேள்வியாக, ரிலை யன்ஸ் நிறுவனம் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக கேட்டபோது பெட்ரோலியம்- இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் பதிலளிக்கப்படவில்லை. தற்போதைய தலையீடு மற்றும் நிகழ்வுகளின் தொடர்ச்சி, புறக்கணிப்பு காரணமாக தனியார் நிறுவனம் ஆதாயம் உரிமை பெற்றுவிடக்கூடாது. 


தற்போதைய விலை நிர்ணய காலம் காலாவதி ஆவதற்கு முன்னர் தேசிய கரு வூலத்தின் மதிப்பில் மற்றும் லட்சக் கணக்கான மின்சாரம் மற்றும் உர வாடிக் கையாளர்கள் மதிப்பில் ஆதாயம் தேட நிறுவனம் முயன்றுள்ளது.


ஆர்ஐஎல் ஒப்பந்தகாரர் வேண்டு கோளை அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சகம் 2010ல் நிராகரித்தது. எரி வாயு விலை உயர்வு தொடர்பாக அந்நிறு வனத்தின் தற்போதைய வேண்டு கோளை பெட்ரோலிய அமைச்சகம் நிரா கரித்தது. 


எரிவாயு விலையை விநியோகம் தொடங்கிய நாளில் இருந்து 5 ஆண்டு களுக்கு அனுமதித்தது. எனவே அமைச் சர்கள் குழு முடிவு செய்த விலையை ஆர்ஐஎல் நிறுவனம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு தரப்பட்ட இந்த உத் தரவுப்படி 5 ஆண்டு ஒப்பந்தத்தை அதா வது 2014ம் ஆண்டு வரை பெட்ரோலிய அமைச்சகம் கடைப்பிடிக்க வேண்டும். சட்ட ஆலோசனை மூலமாக இந்த விவ காரம் பிரதமர் அலுவலகம் மூலம் ஆய்வு செய்து மீறக்கூடாது. இந்த சூழ்நிலையில் சட்ட கருத்து ஆலோசனை என்பது விதி முறை மீறலாக உள்ளது.


தேசிய அனல் மின் கழகங்களின் கவாஸ்+காந்தார் (குஜராத்) மின் நிலையங் களுக்கு ஆர்ஐஎல் நிறுவனம் முதலில் 2.34 எம்பிடியு அளவு எரிவாயுவை 17 ஆண்டுகளுக்கு அளிக்க ஒப்புக் கொண்டது. பின்னர் அது தனது கருத்தை மாற்றிக்கொண்டது. எரிவாயு விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடவில்லை. இதன் காரணமாக இந்த மின் நிலையங்கள் பணி இன்றுவரை முடங்கியுள்ளது. மின்துறை அமைச்ச கமோ, பிரதமர் அலுவலகமோ இவ்விஷ யத்தில் தலையிடவில்லை. சட்ட ஆலோ சனை பெறும் விஷயத்திலும் இந்த அலு வலகங்கள் தலையிடவில்லை.


அதனால் பொதுத்துறை நிறுவனம் கேஜி-டி6ல் இருந்து எரிவாயு பெற வேண்டி வந்தது. தேசிய அனல் மின் நிலையக் கழகம் மும்பை உயர்நீதிமன் றத்தை இவ்விவகாரம் தொடர்பாக அணு கியது. இந்த வழக்கு நீதிமன்ற விசா ரணையிலேயே உள்ளது.


தற்போதைய உடனடி விவகாரத்தில் ஆர்ஐஎல் நியாயம் இல்லாத வகையில் இயற்கை எரிவாயு விலையை உயர்த்த போலியான உரிமையை காணும் மாற்று உரிமையை ஆர்ஐஎல் கண்டறிந்துள்ளது.


மேலும் இயற்கை எரிவாயு விலை அதிகரித்தால் பல லட்சம் மின் நுகர்வோர் களின் மின் கட்டணம் அதிகரிக்கும். இத னால் உரத்திற்கு அரசு கூடுதல் மானியம் தரவேண்டி இருக்கும். இந்த நிலையில் ஒப்பந்ததாரர், அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு 5 ஆண்டுகளுக்கு அதாவது 2014ம் ஆண்டுவரை 4.2 டாலர் என்ற விலையில் எம்பிடியு எரிவாயு வழங்க வேண்டும் என்ற முடிவை மறு பரி சீலனை செய்யக்கூறியுள்ளார். ஆர்ஐஎல் நிறுவனம் 2.3 டாலர் / எம் பிடியு அளவுக்கு தேசிய அனல் மின் நிலையங்களுக்கு 17 ஆண்டுகளுக்கு எரி வாயு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது. 


இந்திய உர நிறுவனங்கள், ஓமன் இந் தியா எண்ணெய் நிறுவனத்தில் இருந்து எரிவாயுவை 2006ம் ஆண்டு ஜனவரி 1ல் 0.77 டாலருக்கு பெற்று வருகின்றன. 6 ஆண்டுகளுக்குப் பின்னரே அதன் விலையில் 15 சதவீதம் தற்போது அதி கரிக்கப்பட்டுள்ளது.


எரிவாயு சப்ளை காலம் ஓமன் எண் ணெய் நிறுவனம் மற்றும் உர நிறுவனங் களுக்கு இடையே ஜனவரி, 2006 முதல் 2020ம் ஆண்டுவரை 15 ஆண்டுகளுக்கு உள்ளது. இதற்கிடையே ஆர்ஐஎல் தனது விலை உயர்வை ஒப்பந்தம் பெற்ற 3 ஆண்டுகளில் உயர்த்தப்பார்க்கிறது.


எனவே உள்நாட்டு எரிவாயு விலையை சர்வதேச விலை அளவிற்கு உயர்த்தக் கூறுவது தவறான நோக்கத்துடன் வைக் கப்பட்ட ஆலோசனையாகும். அரசு பொது நிதி மற்றும் மின்சாரம்/உர வாடிக்கை யாளர்கள் மதிப்பில் ஒப்பந்ததாரர் பலன டைய முயற்சி பெறும் சூழலாக உள்ளது.


இன்றைய நிலையில் கேஜி-டி6 வய லில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட (80 எம் எஸ்சிஎம்டி) அளவு உற்பத்திக்குப் பதிலாக பாதிக்கும் குறைவான உற்பத் தியே (34எம்எம்எஸ்சிஎம்டி) நடந்துள் ளது. திட்டமிட்டு வேண்டுமென்றே உற் பத்தி குறைக்கப்பட்டுள்ளது. 


இயற்கை எரிவாயுவை கேஜி-டி6 களத்தில் உற்பத்தி செய்வதற்காக உண் மையான மதிப்பீட்டை கட்டண ஆணை யம் மதிப்பீடு செய்ய வேண்டும். சிஏஜி எனப்படும் தலைமை கணக்கு தணிக்கை ஆணையத்திற்கு ஆர்ஐஎல் அனுப்பப்பட வேண்டும். 5 ஆண்டு ஒப்பந்தம் காலாவதி ஆவதற்கு முன் (2014) ஆர்ஐஎல்-ன் சட்ட ஆலோசனை அனுமதிக்கப்பட்டு, விலை உயர்த்தப்படக்கூடாது. கட்டண ஆணை யம் சிஏஜி அறிக்கைக்கு பின்னர் கேஜி-டி6 எரிவாயு விலை ஆய்வு செய் யப்பட வேண்டும். இவ்வாறு அவர் வலி யுறுத்தியுள்ளார்.

ஆங்கில பள்ளி திறப்பு இயக்குனர் செயல்முறை ந.க.எண் : 11640/E1/2012 நாள் : 12.05.2012


Go.23 உடனே செயல்படுத்த இயக்குனர் செயல்முறைகள் ந.க .எண் : 12956/E4/2011 நாள் : 15.05.12


சார்நிலை பணி காலி பணியிட பதவி உயர்வு பட்டியல்


ஆசிரியர் பொது மாறுதல் உத்தரவு தற்காலிக நிறுத்தம்


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான - மருத்துவ உதவி - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - தொடக்கக்கல்வி துறையில் நடைமுறைப்படுத்த இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 
ந.க.எண். 014210 / சி 3 / 2012, நாள். 12.06.2012
அரசாணை எண். 139 நிதித் (ஊதியப்பிரிவு) துறை நாள். 27.04.2012 ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டத்  தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அரசு அறிவித்துள்ள புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நடைமுறைபடுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளதையடுத்து ரூ.25/- ஆக இருந்த மருத்துவ காப்பீட்டுக்கான மாதசந்தா ஜூன் 2012 முதல் ரூ.75/- ஆக பிடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏ.இ.ஓ., - ஆசிரியர் "கைகலப்பு' சம்பவம்


கடலூர் : உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர் மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி கூறியுள்ளார்.
கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நேற்று முன்தினம் மாலை மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி., தொடக்கப் பள்ளியில் ஏ.இ.ஓ., வீரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் ஏ.இ.ஓ., வீரபாண்டியன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் புள்ளி விவரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அ.குறவன்குப்பம் தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் தீனதயாளன் ஏ.இ.ஓ.,விடம் சங்கம் தொடர்பான கோரிக்கை மனுவை கொடுத்து உடனே நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். அதற்கு ஏ.இ.ஓ., தற்போது அவசர வேலை உள்ளதாக கூறி நாளை அலுவலகத்திற்கு வருமாறு கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகார்களின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏ.இ.ஓ., வீரபாண்டியனைத் தாக்கிய பட்டதாரி ஆசிரியர் தீனதயாளன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 26 பேர் தனியாகவும், கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 100 தலைமை ஆசிரியர்கள் நேற்று கடலூரில் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி சாந்தி, இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தினமலர் 18.4.2012

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: இடதுசாரிகள் கோரிக்கை - சட்டசபையில் பேச்சு:


சென்னை, ஏப். 18: ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவையில் இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை வைத்தன.  இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதம்:  கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): எந்தெந்தப் பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தந்துவிடுகிறேன்.  ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும்போது முழு கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டத்தை காரணம் காட்டி மீண்டும் ஒரு தேர்வை திணிப்பது கூடாது.  மத்திய அரசின் நுழைவுத் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தமிழக அரசு எதிர்த்ததை போலவே இந்த கல்வி உரிமைச் சட்டத்திலும் மீண்டும் ஒரு தேர்வு என்பதை தவிர்த்திட தகுதித் தேர்வை ரத்து செய்ய குரல் கொடுக்க வேண்டும்.  அமைச்சர் என்.ஆர். சிவபதி: உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஆசிரியர் நியமனத்திற்கு கட்டாயக் கல்வி சட்டத்தின்படி தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதை ஏற்று இந்த அரசு நடைமுறைப்படுத்துகிறது.  குணசேகரன் (சிபிஐ): ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவதைத் தவிர்த்து தனியாகப் பயிற்சி தரலாம். பிறகு பதவி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதுதான் சரியாக இருக்கும்.  கே. பாலபாரதி (மார்க்சிஸ்ட்): நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆனால் மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போன்று ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கிடையாது. எனவே, அதை கணக்கில் எடுத்து கொண்டுதான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.  நமது மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் நல்ல பயிற்சி தரப்படுகிறது. மேலும், 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு முறையே கிடையாது. அனைவரும் தேர்ச்சியடைந்தவர்கள் என்று அறிவிக்கப்  படுகிறது. இத்தகையை சூழ்நிலையில் 40 வயதைக் கடந்த ஆசிரியர் பயிற்சி முடித்த இளைஞர்கள் வேலை கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஆனால், இந்த தகுதித் தேர்வு மூலம் அவர்களின் வேலை உரிமை பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய வேதனை குரலை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.  அமைச்சர் சி.வி. சண்முகம்: மற்ற மாநிலங்களிலும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அந்த மாநிலங்களிலும் இந்த தகுதித் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் வழிகாட்டியுள்ளது.  அந்த வழிகாட்டுதலை மத்திய அரசு, மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அதை ஏற்று இந்த அரசு நடைமுறைப்படுத்துகிறது.  கே. பாலகிருஷ்ணன்: உயிரி வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள், இளங்கலைப் பட்டத்துடன் ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவர்கள் ஆசிரியராகப் பணிபுரிய தகுதியற்றவர்கள் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் என பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே சான்று அளித்துள்ளது.  ஆகவே, ஆசிரியர் தேர்வாணையை உத்தரவை ரத்து செய்து உயிரி வேதியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாழ்வு அளிக்க வேண்டும்.

முப்பருவக் கல்விமுறை

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் மதிப்புமிகு தேவராஜன் அவர்களை சந்தித்து 2012-2013ம் கல்வியாண்டு முப்பருவமுறைக்கான பயிற்சிகளை கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு வழங்குவதை தவிர்க்கும் படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முப்பருவக் கல்விமுறை அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுவதால், ஆசிரியர்களை தயார்படுத்தி பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மே மாதத்தில் பயிற்சிகள் அளிக்கப்படவிருககிறது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளளது. பெரும்பான்மையான ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்பவர்களாக இருக்கின்றனர். தொலைநிலைக் கல்வி மூலம் B.A., B.Sc., M.A., M.Sc., B.Ed., M.Ed. போன்ற கல்வி பயில்வோருக்கு தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் பணியாற்றுவோர் விடுமுறைக்கு தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க  பயிற்சிகளை ஜூன் 2012 தொடக்கத்தில் நடத்திடவும் பயிற்சிகள் முழுவதும் நடத்தும் பொறுப்பு SCERT-யிடம் உள்ளதால் அனைத்து பயிற்சிகளையும் திட்டமிட்டு திறமை வாய்ந்த மாநில கருத்தாளர்களை கொண்டு முறையான அறிவிப்பு செய்து பயிற்சிகளை நடத்திடவும் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களையும் ஒரே நேரத்தில் அழைத்திடாமல் கற்றல் பணியில் பாதிப்பு ஏற்படாமல் நடத்திடவும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பயிற்சிகளையும் முடிக்கவும் கேட்டு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து இயக்குனர் திரு. தேவராஜன் அவர்கள் நமது நிர்வாகிகளிடம் கூறியதாவது:
கடந்த வாரம்தான் பயிற்சி தொடர்பான ஆணை வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து மாநில கருத்தாளர் தேர்வில் தாமதம் ஏற்படுகின்றது.
முடிந்த வரை ஏப்ரல் 28க்குள் பயிற்சி அளிக்கப்படும். தொடக்கக்கல்வி துறையில் 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாளும் 6,7மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு (பள்ளிக்கல்வித்துறை உட்பட) 2 நாள் மட்டுமே பயிற்சி நடத்தப்பட உள்ளது. வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் மே விடுமுறையில் இருந்தால் அங்கு நடக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம் பி.எட். பயிற்சி பட்டறை, பல்கலை கழக தேர்வு எழுதுபவர்கள், தவிர்க்க முடியாத குடும்ப விழாவில் இருப்பவர்கள் ஆகியோர் ஏதாவது ஒரு Batch-ல் கலந்து கொண்டால் போதும் அடுத்த பயிற்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு நல்ல தகுதி வாய்ந்த கருத்தாளர்களை கொண்டு முறையாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படும்
அனைத்து பயிற்சிகளும் டிசம்பருக்குள் நடத்திட திட்டமிடப்படும்
என்றும் உறுதியளித்துள்ளார்.
-க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க
பயிற்சிகளை ஜூன் 2012 தொடக்கத்தில் நடத்திடவும்
பயிற்சிகள் முழுவதும் நடத்தும் பொறுப்பு SCERT-யிடம் உள்ளதால் அனைத்து பயிற்சிகளையும் திட்டமிட்டு திறமை வாய்ந்த மாநில கருத்தாளர்களை கொண்டு முறையான அறிவிப்பு செய்து பயிற்சிகளை நடத்திடவும் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களையும் ஒரே நேரத்தில் அழைத்திடாமல் கற்றல் பணியில் பாதிப்பு ஏற்படாமல் நடத்திடவும்
டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பயிற்சிகளையும் முடிக்கவும்
கேட்டு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 
இது குறித்து இயக்குனர் திரு. தேவராஜன் அவர்கள் நமது நிர்வாகிகளிடம் கூறியதாவது:
கடந்த வாரம்தான் பயிற்சி தொடர்பான ஆணை வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து மாநில கருத்தாளர் தேர்வில் தாமதம் ஏற்படுகின்றது.
முடிந்த வரை ஏப்ரல் 28க்குள் பயிற்சி அளிக்கப்படும். தொடக்கக்கல்வி துறையில் 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாளும் 6,7மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு (பள்ளிக்கல்வித்துறை உட்பட) 2 நாள் மட்டுமே பயிற்சி நடத்தப்பட உள்ளது. வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் மே விடுமுறையில் இருந்தால் அங்கு நடக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம்
பி.எட். பயிற்சி பட்டறை, பல்கலை கழக தேர்வு எழுதுபவர்கள், தவிர்க்க முடியாத குடும்ப விழாவில் இருப்பவர்கள் ஆகியோர் ஏதாவது ஒரு Batch-ல் கலந்து கொண்டால் போதும்
அடுத்த பயிற்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு நல்ல தகுதி வாய்ந்த கருத்தாளர்களை கொண்டு முறையாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படும்
அனைத்து பயிற்சிகளும் டிசம்பருக்குள் நடத்திட திட்டமிடப்படும்
என்றும் உறுதியளித்துள்ளார்.
-க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க  பயிற்சிகளை ஜூன் 2012 தொடக்கத்தில் நடத்திடவும்  பயிற்சிகள் முழுவதும் நடத்தும் பொறுப்பு SCERT-யிடம் உள்ளதால் அனைத்து பயிற்சிகளையும் திட்டமிட்டு திறமை வாய்ந்த மாநில கருத்தாளர்களை கொண்டு முறையான அறிவிப்பு செய்து பயிற்சிகளை நடத்திடவும்  பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களையும் ஒரே நேரத்தில் அழைத்திடாமல் கற்றல் பணியில் பாதிப்பு ஏற்படாமல் நடத்திடவும்  டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பயிற்சிகளையும் முடிக்கவும்  கேட்டு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து இயக்குனர் திரு. தேவராஜன் அவர்கள் நமது நிர்வாகிகளிடம் கூறியதாவது:
கடந்த வாரம்தான் பயிற்சி தொடர்பான ஆணை வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து மாநில கருத்தாளர் தேர்வில் தாமதம் ஏற்படுகின்றது.
முடிந்த வரை ஏப்ரல் 28க்குள் பயிற்சி அளிக்கப்படும். தொடக்கக்கல்வி துறையில் 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாளும் 6,7மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு (பள்ளிக்கல்வித்துறை உட்பட) 2 நாள் மட்டுமே பயிற்சி நடத்தப்பட உள்ளது. வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் மே விடுமுறையில் இருந்தால் அங்கு நடக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம் பி.எட். பயிற்சி பட்டறை, பல்கலை கழக தேர்வு எழுதுபவர்கள், தவிர்க்க முடியாத குடும்ப விழாவில் இருப்பவர்கள் ஆகியோர் ஏதாவது ஒரு Batch-ல் கலந்து கொண்டால் போதும் அடுத்த பயிற்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு நல்ல தகுதி வாய்ந்த கருத்தாளர்களை கொண்டு முறையாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படும்
அனைத்து பயிற்சிகளும் டிசம்பருக்குள் நடத்திட திட்டமிடப்படும்
என்றும் உறுதியளித்துள்ளார்.
-க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.

DA 58% லிருந்து 65% ஆக உயர்வு:


அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி


ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
இராமம்பாளையம்,காரமடை ஒன்றியம்
மேட்டுப்பாளையம் வட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்.






பள்ளி பற்றிய தகவல்கள்:

1. அமைதியான கிராமச் சூழல்.
2. போதுமான கட்டட வசதி.
3. சார்வதேச தரத்திற்கு இணையான மாதிரி வகுப்பறை.
4. கணினி பயிற்சி வகுப்புகள்.
5. ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள்.
6. பயிற்சி பெற்ற ஆசிரியரால் நடத்தப்படும் யோகா பயிற்சிகள்.
7. ஓவியப் பயிற்சி வகுப்புகள்.
8. விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.
9. தலைமைத்துவப் பயிற்சி.
10. தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புப் பயிற்சிகள்.
11. மாணாக்கர் பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள்.
12. மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள்.
13.  வண்ணச் சீருடைகள் கழுத்தணி ( Tie) காலணி (Shoe), அரைக்கச்சை (Belt), அடையாள அட்டை (ID card),  ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு(Dairy).  (அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது).

மாதிரி வகுப்பறை (Model Classroom)

1. மாணவார்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள்.
2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள்.
3. தமிழ் - ஆங்கில நூல்கள்  அடங்கிய நூலகம்.
4. DVD - கள் அடங்கிய Digital நூலகம்.
5. கணினி.
6. தொலைக்காட்சி.
7. DVDPlayer.
8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள்.
9. கணித உபகரணங்கள்.
10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளஅலமாரிகள்.
11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள்.
12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை.
13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை.
14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி.
15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள்.
16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள்.
17. உயர் தர தள அமைப்பு.
18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை.
19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்.
20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி 

இப்பள்ளியின் தலைமையாசிரியை ,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ செல்வங்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி  ஆசிரியர்  கூட்டணி விருதுநகர் கிளை  மனதார பாராட்டுகிறது .

Popular Posts