ஆசிரியர் கவுன்சிலிங் நடைமுறைகளில், "ஸ்பவுஸ்' சான்றிதழ் முன்னுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
ஆசிரியர் கவுன்சிலிங், பலருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
• ராணுவத்தில் பணிபுரிவோரின் கணவன், மனைவி,
•கண்பார்வை இல்லாதவர்,
•விதவை,
•40 வயதுவரை மணமாகாத முதிர்கன்னி,
•மூன்று சக்கர வாகனம், ஊன்றுகோல் துணையுடன் நடக்கக் கூடிய மாற்றுத்திறனாளி,
•இதய, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்,
•மனவளர்ச்சி, உடல்நலம் குன்றிய குழந்தையின் பெற்றோர்
போன்றவற்றின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மேலும் 30 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் கணவர், மனைவி, தொடக்கக் கல்வி அதிகாரிகளிடம் (ஸ்பவுஸ்) சான்றிதழ் பெற்று சமர்ப்பிப்பதன் மூலம் சலுகை பெற முடியும். பலர் செல்வாக்கை பயன்படுத்தி, ஆண்டுதோறும் விரும்பிய பள்ளிகளுக்கு இச்சான்றிதழ் மூலம் இடமாறுதல் பெற்று வருகின்றனர்.
கடந்தாண்டு, பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் 2009(எண் 148) அரசாணையின்படி, மாறுதலுக்கான கட்டுப்பாடுகள் கையாளப்பட்டது. தற்போது இதில் சில திருத்தங்களை, தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் மேற்கொள்ள உள்ளது. "ஸ்பவுஸ்' முன்னுரிமையை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இடம்பெற உள்ளன.
நன்றி!