அரசு ஊழியர்க்கு பாராட்டும், பரிசும் அரசு அறிவிப்பு:

தகுதிகாண் பருவம்

1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்.


2. தகுதிகாண் பருவமானது பதவிகளின் தன்மையைப் பொறுத்து இரண்டாண்டு காலத்தொடரில் ஓர் ஆண்டு அல்லது மூன்றாண்டு காலத்தொடரில் இரு ஆண்டுகள் என இருக்கும்.

3. கடுமையான குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கைகள் நிலுவையிலிருப்பின் பழகு நிலை நிறைவு குறித்து தாமதப்படுத்தும் ஆணையை உரிய அலுவலர் வெளியிட வேண்டும்.

4. பணிக்காலமே தகுதி காண் காலமாகக் கொள்ளப்படும். சிறுவிடுப்புத் தவிர்த்து பிற அரசு விடுமுறைகள் அல்லாத விடுமுறைகளும் பிற விடுப்புகளும் (ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு) போன்றவை பழகு நிலையில் பணிக்காலமாக கொள்ளப்படமாட்டாது. பழகு நிலைக் காலத்தில் மேற்கூறியவாறு விடுப்புகளை எடுத்தால் பழகுநிளைக்காலம் விடுப்பு எடுத்த அளவிற்கு தள்ளி போகும்.

இவை தவிர

(அ) பழகு நிலைக் காலத்தில் எடுக்கப்படும் பணியேற்பிடைக் காலமும்

(ஆ) விடுப்புடன் இணைக்கப்படும் முன்,பின் அரசு விடுமுறை நாட்கள் அல்லது பதில் விடுப்பு போன்றவைகளும் பழகுநிலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாத காலமாகும்.

5. தற்காலிக பதவி உயர்வு, மற்றும் மேல்நிலை பதவியில் ஆற்றும் பணிக்காலமும் கீழ்நிலைப் பணியின் பழகுநிலைக்குகணக்கில் கொள்ளப்படும்.

6. பழகுநிலையில் இருப்பவருக்கு தற்காலிகமாய் பதவி உயர்வு அளிக்கப் படலாம். ஆனால் பதவி உயர்வுக்கு முன் இருந்த கீழ்நிலைப் பதவியில் பழகுநிலையை முடித்த பின்னரே உயர்நிலைப் பதவியில் பணி ஒழுங்கு படுத்தப்படும்.

7. ஒரு பணியில் பழகுநிலை முடித்தவர் அதே பணியில் பதவி உயர்வு செய்யப்பட்டால் மீண்டும் பழகுநிலை முடிக்கத் தேவையில்லை.

8. அலுவலக மெத்தனம் காரணமாக பழகுநிலை தாமதமாக நிறைவு செய்யப்படுமாயின் ஊதிய உயர்வு நிலுவையுடன் வழங்கப்படும். (Rule 23-A T.N.S.S.S.R)

9. பழகுநிலைக்காலத்தில் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலங்கள்:

அ) பணிக்காலம், சிறுவிடுப்பு, ஈடுகட்டும் விடுப்பு, அரசு விடுமுறைகள்,

ஆ) விடுமுறையுடன் தொடர்ந்து பணியேற்பு காலம் (Rule 3 Annex. F.R)

ஆ) பழகுநிலைக் காலத்தில் பயிற்சி பெறும் காலம். (G.O. Ms. No.610 P &A.R. DT. 28.6.82)

பணி ஒழுங்குபடுத்துதல்

1. தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிவிதிகள் (T.N.S.S.S.R) 23 ன் படி முதலில் பணி நியமனம் ஆன தேதியிலிருந்து நியமன அலுவலரால் பணி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். தாமதம் கூடாது. (அரசு கடித எண். 70916 மிசி 90 நாள். 04.10.90 )


2. பழகு நிலையில் இருக்கும் ஒருவர் பணிக்குரிய அனைத்துத் தகுதிகளையும் பெற்றவராக இருந்தால் அவரின் பணி ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் .

3. தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின் பணியை வரன்முறை படுத்துபவர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆவார்.

ஊக்க ஊதிய உயர்வுகள்

1.ஓர் இடைநிலையாசிரியர் B.Ed பட்டம் பெற்றால் அத்தகுதிக்கு ஓர் ஊக்க ஊதிய உயர்வு ( இரண்டு ஆண்டு ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது. அதன் பின்னர் M.A., M.Sc., M.Ed., போன்ற முதுகலை பட்டங்களில் ஒன்றைப் பெற்றால் அத்தகுதிக்காக மேலும் ஓர் ஊக்க ஊதிய உயர்வு ( இரண்டு ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது.



2. இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் B.Ed பட்டம் பெறாமல் முதுகலை பட்டம் பெற்று அதன் பின்னர் B.Ed பட்டம் பெற்றால் ஒரே நிகழ்வில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் ( நான்கு ஊதிய உயர்வுத் தொகைகள்)அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது.


3. இவ்வூதிய உயர்வுகள் உரிய தேர்வுகள் எழுதி முடித்த நாளுக்கு மறுநாள் முதல் வழங்கப்படுகின்றன.

4. அண்ணாமலை பல்கலைகழகத்தின் திறந்த நிலைப் பல்கலைகழகத் திட்டத்தில் (Open University System) வழங்கப்பெறும் பட்டங்கள் அனைத்தும் அப்பல்கலைகழகத்தின் முறையான திட்டத்தின் (Regular Stream) வழங்கப்பெறும் பட்டங்களுக்கு சமமானவையாகக் கருதி பொதுப் பணிகளில் வேலை வாய்ப்புக்கு அரசு ஏற்ப்பளிப்பு (Recognition) செய்துள்ளது. அரசு மடல் 1630/R/97-1 (சீரமைப்பு) நாள் 20.2.97 மற்றும் அரசாணை எண்.216 /நிலை/ ப.ம.சீ.துறை/நாள் 26.8.97

பதவி உயர்வுகள்.

பதவி உயர்வுகள்.

1. ஓர் இடைநிலை ஆசிரியர் ஓர் அலகின் (Unit) முன்னுரிமைப்பட்டியல் (Seniority) அடிப்படையில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வைப் பெறுகின்றார்.


2. ஓர் அலகிலுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஊதிய ஏற்ற முறையில் உள்ள ஆசிரியர்களின் கூட்டு முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலும் உயர்கல்வித் தகுதி அடிப்படையிலும் நடுநிலைப் பள்ளி பட்டநிலை ஆசிரியர் அல்லது தமிழாசிரியர் பதவியுயர்வு வழங்கப்படுகிறது.


3. ஓர் அலகின் கல்வியியல் பட்டத்தேர்ச்சி (B.Ed Degree) பெற்றுள்ள தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் / நடுநிலைப்பள்ளி பட்டநிலை ஆசிரியர் / தமிழாசிரியர் ஆகிய முவ்வகையினரின் ஊட்டுபதவி (Feeder Cadre) ஏற்ற நாளின் அடிப்படையிலான கூட்டு முன்னுரைப் பட்டியலின்படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இவ்வகையினரிடையே உள்ள அடிப்படை ஊதிய வேறுபாட்டை பொருட்படுத்தாமல் இப்பதவி உயர்வு வழங்கப்படும். அரசாணை நிலை எண் 166 ப.க.து. எண். 2 நாள்7.6.99

4. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டநிலை தலைமையாசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அல்லது கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு மாற்றத்தக்கப் பணியாக (Inter Changeable) வழங்கப்பெறுகிறது. இதற்கு துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. வெளி ஒன்றியத்துக்கோ , நகராட்சிக்கோ மாற்றலில் செல்லும் இடைநிலை ஆசிரியர், தகுதிகாண்பருவம் முடித்தவராயின் புதிய மேலாண்மை அழகின் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் தகுதிகாண்பருவம் முடித்தவர்களுக்கு இறுதியில் சேர்க்கப் பெற்று பதவி உயர்வு பெறுவார்.


6. தமிழாசிரியர் பதவியில் உள்ளவர் கல்வியியல் இளையவர் (B.Ed.) பட்டம் பெற்றிடாவிடினும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியுயர்வுக்கு தகுதியுடையவராவார். (தொ.க.இயக்குனரின் ந.க.எண். 3926 /ED/2000 நாள் 13.6.2000 )

7. ஓர் இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் / பட்டநிலை ஆசிரியர் / தமிழாசிரியர் பதவியுயர்வில் எதையேனும் விட்டுக் கொடுத்து விடுவதனால் மற்ற பதவியுயர்வை பெரும் தகுதியை இழந்தவர் ஆகார். அவருக்கு மற்ற பதவியுயர்வு முன்னுரிமைப்படி வழங்கப்பெறல் வேண்டும். (தொ.க.இயக்குனரின் ந.க.எண். 3926 /ED/ நாள் 23.12.1999)

8. Double Major, Trible Major பட்டம்பெற்றவர்களில் ,அவர்கள் பி.எட். பட்டம் பெற்றிருந்தால் , அவர்கள் படித்த முக்கிய பாடங்களின்படியும் உரிய முன்னுரிமையின்படியும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியலில் சேர்த்தல் வேண்டும். பி.எட். வுடன் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர் கூடுதலாக மற்றொரு பாடத்தில் ஒரு ஆண்டு படிப்பு முடித்து பட்டம் பெற்றிருந்தால் அந்தப் பாடத்திற்கும் அவரை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க வேண்டும். (தொ.க.இயக்குனரின் ந.க.எண். 36679 /D3/2008 நாள் 18.11.2008)

Popular Posts